ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143439 topics in this forum
-
பாதுகாப்புப் படையைச் சேர்ந்த உறுப்பினர்களது மூன்றாவது குழந்தைக்கு வழங்கப்படும் ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இந்தக் கொடுப்பனவு வழங்குவதற்காக மூன்றாண்டுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளுக்கு மட்டுமே இவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பேச்சு நடத்தி தேவை என்றால் இந்த திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். htt…
-
- 0 replies
- 236 views
-
-
கே.கே.எஸ்-இல் 201.8 ஏக்கர் காணி நாளை ஒப்படைப்பு காங்கேசன் துறை ரயில் நிலையம் உள்ளிட்ட 201.8 ஏக்கர் பரப்பளவிலான நிலம், பொதுமக்களிடம் நாளை சனிக்கிழமை கையளிக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, குறித்த நிலத்தை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார். இந்நிகழ்வில், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி.சில்வா, யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/175456/க-க-எஸ-இல-ஏக-கர-க-ண-ந-ள-ஒப-பட-ப-ப-#sthash.g8RXinDc.dpuf
-
- 0 replies
- 269 views
-
-
இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் 2018இலேயே முழுமையாக மீள கையளிக்கப்படும்-நோர்வேயில் மங்கள வடக்கில் இராணுவத்தை குறைக்கும் செயற்பாடு இன்னும் முடிவடையவில்லை. எனினும் தற்போது பொதுமக்களின் காணிகளை மீள்வழங்க ஆரம்பித்துள்ளோம். இந்த வாரம் கூட 700 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளோம். அத்துடன் இன்னும் 4000 ஏக்கர்கள் அளவில் இராணுவத்துடன் காணப்படுகின்ற பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் 2018ம் ஆண்டுக்குள் விடுவிக்க வேண்டுமென இராணுவத்திற்கு கூறியுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நோர்வேக்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒஸ்லோவில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையா…
-
- 0 replies
- 153 views
-
-
இரு எம்.பிக்கள் காயம்: ஆஸ்பத்திரியில் அனுமதி மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டுள்ள இவ்வார்ப்பாட்டம், உலக வர்த்தக மையத்துக்கு முன்பாக இடம்பெற்றுகின்றது. முன்னாள் அமைச்சரும் எம்.பியுமான ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஸ்ரீயாணி விஜயவிக்ரம ஆகிய இருவருமே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/175453/இர-எம-ப-க-கள-க-யம-ஆஸ-பத-த-ர-ய-ல-அன-மத-#sthash.MUK…
-
- 0 replies
- 209 views
-
-
சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு கசிப்பு விற்ற அச்செழு பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை புதன்கிழமை (22) இரவு கைது செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு வாங்குபவர்கள் போல, சிவில் உடையில் பொலிஸார் சென்றுள்ளனர். 200 ரூபாய் பணத்தைக் கொடுக்க சந்தேகநபர், 750 மில்லிலீற்றர் கசிப்பை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். இதன்போது, அந்நபரை கைது செய்த பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்;ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/175440#sthash.iscBbZ1W.dpuf
-
- 0 replies
- 293 views
-
-
தென்னிந்திய திரைப்படங்களே ஆவா,ரொக்டீம் உருவாகக்காரணம் தென்னிந்திய திரைப்படங்களே யாழ்.குடாநாட்டில் "ஆவா குறூப்", "ரொக்டீம்" போன்ற குண்டர் குழுக்கள் உருவாக காரணமாக உள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாஹல ரட்நாயக்க தெரிவித்தார். 23 இன் கீழ் 2 இல் ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சபா பீடத்தில் சமர்பிக்கப்பட்ட நீண்ட பதிலில் அவர் தெரிவித்துள்ளதாவது, தென்னிந்திய திரைப்படங்களை அதிகமாக பார்க்கும் யாழ் குடாநாட்டு …
-
- 1 reply
- 411 views
-
-
25 ஆண்டுகளில் எந்த விசயத்துக்கும் சந்தோசப்பட்டிருக்காத மக்களின் முகங்களில், 2015 டிசம்பர் 20ஆம் திகதியன்று சந்தோசம் பெருக்கெடுத்து ஓடியிருக்கும் என்பது நிச்சயம். 25 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் மீண்டும் பூர்வீக நிலங்களில் குடியேறப்போகிறோம், தொழில்களைச் செய்யப்போகிறோம் என்ற நம்பிக்கைதான் அளவுகடந்த மகிழ்ச்சிக்கான காரணம்; கடந்த வருடம் டிசம்பர் 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிகாமத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிதான் இதற்கான காரணமாகும். தங்களுக்கு மீண்டுமொரு வாழ்க்கை – பழையபடி சீவியம் நடத்துவதற்கான வழி – பிறந்துவிட்டது என்ற நம்பிக்கை, சந்தோசம் அவர்களுள் எழுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால காரணமாக அமைந்தார். கால் நூற்றாண்டு காலமாக முகாம்களில் வாழ்…
-
- 0 replies
- 324 views
-
-
வலி. வடக்கில் 138 ஏக்கர் காணிகள் விடுவிப்பு? யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலய காணிகளை மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்காக நாளை 25ஆம் திகதி யாழ்ப்பாணம் வரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் 138 ஏக்கர் நிலத்தை மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதன்படி குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் முறையே ஜே-238, ஜே-242 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் சுமார் 126 ஏக்கர் நிலத்தையும், வறுத்தலை விளான் பகுதியில் (ஜே-241) 12 ஏக்கர் நிலத்தையும் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்…
-
- 0 replies
- 288 views
-
-
நீதியைப்பெற வெளிநாட்டு நீதிபதிகளே தேவையென மக்கள் நம்புகின்றனர் தகவல் அறியும் உரிமை சட்டமூலத்தின் உண்மையான நோக்கம் அடையப்படுவதை உறுதி செய்யவேண்டுமென வலியுறுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசியல்வாதிகளின் தலையீடுகளை தவிர்க்கவேண்டுமெனவும் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தன்மையும் பக்கச்சார்பின்மையும் அவற்றின் கௌரவமும் பாதுகாக்கப்படாத நிலை தொடர்வதன் காரணமாகவே தற்போதும் வெளிநாட்டு நீதிபதிகளினால் மட்டுமே நீதியை பெற்றுத்தர முடியும் என்று மக்கள் பலரும் நம்பிக்கை வை…
-
- 0 replies
- 278 views
-
-
1 கிலோகிராம் ஹெரோய்ன் சிக்கியது: 6 பேர் கைது வெல்லம்பிட்டிய மற்றும் கிரேண்ட்பாஸ் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 1 கிலோகிராம் 600 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்விரு சுற்றிவளைப்புகளின் போதும், 2 பெண்கள் உட்பட ஆறுபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட ஹெரோய்னின் பெறுமதி 12 மில்லியன் ரூபாவாகும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். வெல்லம்பிட்டிய வெல்லம்பிட்டிய பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், 1 கிலோகிராம் 50 கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது. அதன்போது …
-
- 0 replies
- 297 views
-
-
'மூளையை வைத்துவிட்டு சபைக்கு வந்த இருவர்' அழகன் கனகராஜ் இராஜாங்க அமைச்சர்களில் ஒருவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், தங்களுடைய மூளைகளை வீடுகளில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக ஒருவரை ஒருவர், சபையில் நேற்று வியாழக்கிழமை (23) குற்றஞ்சாட்டிக்கொண்டனர். நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில், நேற்றுக் காலை 10.30க்கு, நாடாளுமன்றம் கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்து, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பமானது. இதன்போது, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, 2013, 2014, 2015ஆம் ஆண்டுகளில்,…
-
- 0 replies
- 225 views
-
-
அவன்காட் கெப்டன் கைது அவன்காட் மெரின்டைம் நிறுவனத்தினால் காலி துறைமுகத்தில் நடத்திச் செல்லப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை கப்பலின் கெப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டதாக புலனாய்வு பிரிவு பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கெப்டன் உக்ரைன் நாட்டு பிரஜை ஆவார். - See more at: http://www.tamilmirror.lk/175432/அவன-க-ட-க-ப-டன-க-த-#sthash.lhZcQRsy.dpuf
-
- 0 replies
- 225 views
-
-
ஆனையிறவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! [Thursday 2016-06-23 18:00] ஆனையிறவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான காணியை தேர்வு செய்யும் நடவடிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்து வருவதாகவும் வட மாகாணத்தில் கிரிக்கெட் சங்கங்களை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கிளிநொச்சியில் விளையாட்டு தொகுதி…
-
- 2 replies
- 557 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஐந்து வருடங்களில் 74 கொலைகள்; 184 பாலியல் துஷ்பிரயோகங்கள் [ Friday,24 June 2016, 03:11:39 ] 2016 ஜனவரி முதல் மே19 வரை யாழ்ப்பாண குடாநாட்டில் மூன்று கொலைகளும் 14 பாலியல் துஷ்பிரயோகங்களும் 16 வழிப்பறிக் கொள்ளைகளும், 23 வீடுடைப்பு கொள்ளைகளும் இடம்பெற்றதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ். குடாநாட்டில் 74 கொலைகளும், 184 பாலியல் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு நேற்றுச் சபையில் சமர்ப்பித்திருந…
-
- 0 replies
- 350 views
-
-
கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறைகளில் இருந்த ஹேண்ட்பவர் (சுத்தப்படுத்தும் உபகரணம்) தொகுதிகள் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக டொய்லட் ரிசு, எனப்படும் கழிப்பறைக் கடதாசிகளே வைக்கப்பட்டுள்ளன. நீரை பாவிப்பதன் காரணமாக விமான நிலைய கழிப்பறைகள் எந்தநேரமும் ஈரமான நிலையில் காணப்பட்டன. இதனால், சிங்கபூரில் நடைமுறையில் உள்ளதைபோல டொய்லட் ரிசு, சகல கழிப்பறைகளிலும் வைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். டொய்லட் ரிசு பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிராத இலங்கையர்கள், இந்த புதிய நடைமுறை காரணமாக அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=160108&category=TamilNews&language=tamil
-
- 6 replies
- 673 views
-
-
வடமாகாணம் தொடர்பில் பாரிய சதி நடந்து வருகின்றது என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை யாழில் கொடையாளி ஒருவரின் நிதியில் அமைக்கப்பட்ட 15 வீட்டுத் திட்டங்களை கையளிக்கும் கூட்டத்திலேயே முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், சென்ற திங்கட்கிழமை மத்திய அமைச்சரவை அமைச்சர்களுடன் மற்றைய முதலமைச்சர்களுடன் அதிமேதகு ஜனாதிபதி முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. பல சவால்களை எதிர்கொண்டு முதல் நாளிரவு நான் கொழும்புக்கு ரயிலில் சென்றேன். கூட்டத்திற்குச் சென்றதுந் தான் தெரிந்தது வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது. நான் சென்றதால் சத…
-
- 0 replies
- 485 views
-
-
வவுனியாவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் வேறுமாவட்டத்திற்கு மாறிச் சென்றால், அதற்கான முழுப்பொறுப்பையும் வட மாகாண முதலமைச்சரே ஏற்கவேண்டுமென, வவுனியா மாவட்ட உள்ளூர் உற்பத்திப்பொருள் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டம் வேறு மாவட்டத்திற்கு சென்றால், வடக்கு முதல்வருக்கு எதிராக போராட்டம் வெடிக்குமென குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கம் இன்று விடுத்துள்ள ஊடக செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘வவுனியாவில் விவசாயிகள் நீண்ட நாட்களாக தமது உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனினும் சிறிய ஒரு இடத்தில், மக்களுக்கான சேவையை உள்ளுர் உற்பத்தி …
-
- 5 replies
- 964 views
-
-
மன்னார் திருக்கேதீச்சரத்து சிவன் ஆலயத்துக்குச் சொந்தமான காணியில் சொரூபம் நிறுவுவதற்கு எதிர்ப் புத் தெரிவித்து நாளை புதன்கிழமை அடையாள ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்துக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி சொரூபம் நிறுவும் முயற்சிக்கு இந்துக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் ஆலய நிர்வாகம் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. நாளைய தினம் சொரூபம் நிறுவப்படவுள்ள இடத்தில் இந்துக்கள் கூடி தமது அகிம்சை வழி எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர். http://www.valampurii.lk/valampurii/content.php?id=10593&ctype=news
-
- 7 replies
- 728 views
-
-
இலங்கையில் 50,000 ஹெரோயின் போதைப் பொருள் அடிமையாளர்கள் இலங்கையில் 50,000 ஹெரோயின் போதைப் பொருள் அடிமையாளர்கள் வாழ்கின்றார்கள் என தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. 200,000 பேர் கஞ்சாப் போதைப் பொருளை பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரையில் ஆண்டு தோறும் போதைப் பொருள் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருள் பயன்படுத்துவோர் பற்றிய சரியான புள்ளி விபரத் தகவல்கள் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து மீட்கப்படும் அதிகளவான போதைப் பொருட்கள் உள்நாட்டு நுகர்விற்கானது அல்ல எனவும் அவை வெளிநாட்டில் பயன்படுத்துவதற்கா…
-
- 1 reply
- 331 views
-
-
புகையிரதம் முன் பாய்ந்து இளம் பெண் தற்கொலை:- யாழ்.கொடிகாமம் பகுதியில் இளம் பெண்ணொருவர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதம் முன்பாக இன்று இரவு 8 மணியளவில் குறித்த பெண் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொடிகாமம் புத்தூர் சந்திக்கு அருகில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் மிருசுவிலை சேர்ந்த செல்வரட்ணம் புனிதா (வயது 20) எனும் பெண்ணே தற்கொலை செய்து கொண்டவர் ஆவார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133408/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 449 views
-
-
திருகோணமலை- குச்சவௌி பொலிஸாரினால் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று (22) உத்தரவிட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கேகாலை பகுதியைச்சேர்ந்த ஜே.ஏ.துஸ்வந்த கயான் ஜயவீர (46 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கேகாலை பகுதியைச் சேர்ந்த இச்சந்தேக நபர் நிலாவௌி பகுதியிலுள்ள பெண்ணொருவருடன் ஹோட்டலொன்றில் தங்கியிருந்த வேளை சுற்றுலா வந்த கேகாலை பகுதியைச்சேர்ந்தவர்கள் இவர் பற்றிய விடயங்களை தெரியப்படுத்திய போது அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். …
-
- 0 replies
- 440 views
-
-
பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் தனியார் பல்கலைக்கழக திட்டத்தை தோல்வியடைய செய்யதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார், கண்ணீர்புகை குண்டுகளை வீசியுள்ளனர். ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் இருந்து கால்நடையாக வந்த வைத்தியபீட மாணவர்களின் பேரணியின் மீது, கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துள்ளனர். அத்துடன் மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.tamilmirror.lk/175399/பல-கல-க-கழக-ம-ணவ…
-
- 1 reply
- 284 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஷ்டி ஆட்சி முறையை அமுல்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். தென் பகுதியிலுள்ள தீவிர போக்குடையவர்களின் கண்ணோட்டத்தில், தமிழ் மக்களின் பிரச்னைகளை அரசாங்கம் அணுகக் கூடாது. யுத்தக்குற்ற விசாரணையில், சர்வதேச நீதிபதிகள் இடம்பெறாத எந்த பொறிமுறையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்காது.என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=160066&category…
-
- 0 replies
- 256 views
-
-
உக்கிர போருக்கு முகம் கொடுத்த வன்னி மக்களை மறவாதீர்கள். சி.வி. கோரிக்கை திரைமறைவில் தமிழர்களுக்கு எதிரா நடவடிக்கை. சி.வி குற்றச்சாட்டு.- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வன்னி மக்கள் போரின் உக்கிரத்திற்கு முகங் கொடுத்தவர்கள். போர் வடுக்களைச் சுமப்பவர்கள். எனவே எங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் உரியவர்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். யாழ்ப்பாணம் புத்தூர் தெற்கு , நவக்கிரி பகுதியில் வர்த்தகர் ஒருவரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட 15 வீட்டுத்திட்டங்களை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்…
-
- 0 replies
- 386 views
-
-
யாழில் ஒன்றரை கிலோ கேரள கஞ்சா மீட்பு யாழ்ப்பாணம் இளவாளை பகுதியில் ஒன்றரை கிலோகிராம் கேரள கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இன்றைய தினம் காலை கஞ்சா கடத்தப்படுவதாக மாதகல் கடற்படையினரால் தகவலொன்று கிடைக்கப்பெற்றது. இதனையடுத்து இக் கடத்தல் நிகழ்வை முறியடிக்கும் வகையில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையிலேயே இளவாலையிலுள்ள சிவன் ஆலயத்திற்கு அண்மையிலுள்ள காட்டு பகுதியில் இருந்து இந்த கஞ்சா பொதி மீட்கப்பட்டது. இதனை வேறொருவருக்கு கைமாற்றுவதற்காக காட்டுக்குள் மறைத்து வ…
-
- 1 reply
- 267 views
-