ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142773 topics in this forum
-
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் தனிமையில் இருந்த பெண்ணொருவரின் வீட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். சுவிட்சர்லாந்திலிருந்து வருகைதந்திருந்த குறித்த பெண்ணின் வீட்டை இன்று புதன்கிழமை (20) அதிகாலை 12.00 மணியளவில் உடைத்து உள்நுழைந்த நபர்கள், பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து இரண்டு கோடி 40 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள், 1 1/4 பவுண் தங்க சங்கிலி மற்றும் 29,000 ரூபா இலங்கை நாணயம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பியோடியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் . இது பற்றி தெரியவருவதாவது கல்லடி பேபிசிங்கம் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய சுப்பையாபிள்ளை கோ…
-
-
- 18 replies
- 812 views
- 1 follower
-
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது. தமிரசுக்கட்சி தலைவராக ஜனநாயக ரீதீயில் போட்ட…
-
-
- 26 replies
- 1.3k views
- 1 follower
-
-
பிரதி சபாநாயகராக முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு! பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியிருந்த நிலையில் சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல ( Asoka Sapumal Ranwala) நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து 10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் ரிஸ்வி சாலி தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1409273
-
-
- 2 replies
- 633 views
-
-
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸிடம் ஒப்படைத்த நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/199138
-
-
- 5 replies
- 263 views
- 1 follower
-
-
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று வெள்ளிக்கிழமை (15) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதோடு பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். …
-
- 4 replies
- 355 views
- 1 follower
-
-
21 NOV, 2024 | 10:25 AM புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு வைபவரீதியாக ஆரம்பமான நிலையில், பத்தாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார். இந்நிலையில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வெல சபாநாயகராக வாக்கெடுப்பின்றி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பதவி பிரமாணம் செய்துக் கொண்டனர். இதையடுத்து, புதிய சபாந…
-
- 3 replies
- 157 views
- 1 follower
-
-
பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக வடிவமைத்து மாணவிகளை அச்சுறுத்தி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மோசடி கும்பல் சமூக ஊடகங்களில் காணப்படும் பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிர்வாண புகைப்படங்களாக மாற்றி உரிய மாணவிகளிடம் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து அவர்களை அச்சுறுத்தி பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் இந்த மோசடி கும்பலுக்கு அஞ்சி தங்களது நிர்வாண புகைப்படங்களை…
-
- 1 reply
- 353 views
- 1 follower
-
-
இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் இன்று வியாழக்கிழமை (21) ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை 21 சர்வதேச மீனவர் தினமாகிய இன்று சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (ECDO) ஏற்பாட்டில் இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்பிற்குள் வரவிடாது தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரிய தபாலட்டைகள் முல்லைத்தீவு மக்கள், முல்லைத்தீவு மீனவர்களினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய மீனவர் தினத்தில் இலங்கை முழுவதுமாக விஷேடமாக முல்லைத்தீவு மாவட்டம் இந்திய மீனவர்களுடைய இழுவை படகுகளினுடைய அத்துமீ…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) ஐக்கிய மக்கள் சக்தியில் எஞ்சியுள்ள 4 தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்று பெண்ணொருவருக்கு வழங்கப்படும் என்று நம்புகின்றேன். அவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அதற்கு நானே பொருத்தமானவராக இருப்பேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியலுக்காக எனது பெயர் பல தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விவகாரம் செயற்குழுவில் கலந்துரையாடல் மட்டத்திலேயே காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் எஞ்சியுள்ள 4 ஆசனங்களில் பெண்னொருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ந…
-
-
- 2 replies
- 208 views
- 1 follower
-
-
பாதாள உலகத் தலைவர் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா என கூறப்படும் தமிழ் இளைஞர் ஒருவர், நேற்று புதன்கிழமை (20) பருத்தித்துறை நீதிமன்றில் பலத்த பாதுகாப்புடன் முற்படுத்தப்பட்டார். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேகநபர், மே 31 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. வடமராட்சியை சேர்ந்த இந்த சந்தேகநபர், தான் பாதாள உலகக் குழுவின் தலைவன் கஞ்சிப்பானை இம்ரானின் முன்னாள் சகா எனவும், அவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பிரிந்து பூக்குடி கண்ணா என்பவருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாகவும், கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மீது தாக்குதல் நடத்…
-
- 2 replies
- 161 views
- 1 follower
-
-
தற்போது வெற்றிக் களிப்பில் இருக்கும் திசைகாட்டி சிங்கள பௌத்த தேசத்தின் ஒற்றை ஆட்சிச்கான திசை காட்டியே தவிர தமிழர் தேசத்திற்கான திசை காட்டி அல்ல. எமக்கான தீர்வு இவர்கள் காலத்தில் கிட்டப்போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் இன்று வியாழக்கிழமை (21) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், அதன் தேசியம், சுய…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவும் இதன் போது கலந்து கொண்டார். பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு, 01. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ - பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் 02. நாமல் கருணாரத்ன - விவசாயம் மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் 03. வசந்த பியதிஸ்ஸ - கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பி…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக நடைபெறுவுள்ளது. அணிவகுப்பு ஏதுமில்லாமல் மிகவும் எளிமையான முறையில் இடம்பெவுள்ள பாராளுமன்றித்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைப்பார். 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு சம்பிரதாயபூர்வமான முறையில் ஆரம்பிக்கப்படும். பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட அரசியல்வாதியுமான நிஹால் கலப்பதியை நியமிப்பதற்கு ஆளும் தரப்பு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. அத்துடன…
-
- 4 replies
- 235 views
- 1 follower
-
-
சர்ச்சைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வில் ரவி கருணாநாயக்க! புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார். நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க, தேசிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக தனது நியமனம் சட்டபூர்வமானது என தெரிவித்தார். இந்த விடயம் ஒரு சிலருக்கு மாத்திரமே பிரச்சினை என்றும் முழு கட்சியினருக்கும் பிரச்சினை இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவதுடன், பலமான அரசியல் சக்தியாக அதனை சரியான பாதையில் வழிநடத்…
-
- 2 replies
- 628 views
-
-
இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி! இனவாத அரசியலுக்கு இனி நாட்டில் இடமளிக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரும் நாட்டின் பிரஜைகள். இந்த அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக மக்களின் அபிலாஷையாக இருந்த தேசிய ஐக்கியத்தை நாட்டில் கட்டியெழுப்புவதற்கான பாரிய சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது. நாட்டு மக்களுடனான உறவுகளை பாதிக்க தானும் அரசாங்கமும் இடமளிக்க மாட்டோம். இந்த ஆட்சியை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தாங்கள் கட்டுப்பட்டு அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 10 ஆவது நாடாளும…
-
- 0 replies
- 128 views
-
-
இலங்கைக்கான சீனத் தூதுவர் நாளை யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார். பாராளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக யாழ்ப்பாணத்துக்கு சீனத் தூதுவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொள்கின்றார். இதன்போது அவர் பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். https://thinakkural.lk/article/312232
-
-
- 14 replies
- 898 views
- 1 follower
-
-
சம்பந்தன் குடும்பத்தினருக்கும் டக்ளஸுக்கும் பறந்த எழுத்து மூல அறிவிப்பு! Vhg நவம்பர் 21, 2024 மறைந்த இரா.சம்பந்தனின் மகளுக்கும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் உடனடியாக அரசாங்க பங்களாக்களை ஒப்படைக்குமாறு நீதித்துறை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது குறித்த அறிவிப்பானது, எழுத்து மூலம் நேற்று (20-11-2024) விடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தனின் பங்களா கடந்த 12ஆம் திகதி கையளிக்கப்படும் என அவரின் மகள் அமைச்சுக்கு கடிதம் மூலம் அறிவித்த போதும் நேற்று (20) வரை அது கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தனின் குடும்ப உறுப்பினர்கள் அவர் இறந்த பிறகு, சம்பந்…
-
- 1 reply
- 213 views
-
-
இலங்கை, இந்திய மீனவர் விவகாரம் - ஆரம்பத்திலேயே நேரடி தலையீடுகள் இல்லை - சந்திரசேகரன் இலங்கை, இந்திய மீனவர் விவகாரத்தை சுமுகமாக தீர்க்கவே சமகால அரசாங்கம் விரும்புகிறது. அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெறும் பேச்சுகளில் இணக்கப்பாட்டுக்கு வரமுடியும் என எதிர்பார்க்கிறோம். அதனால் ஆரம்பத்திலேயே அரசாங்கத்தின் உயர்மட்ட நேரடி தலையீடுகள் இந்த விடயத்தில் இருக்காது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இலங்கை கடல்வளத்தையும், மீன்வளத்தை பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் உறுதியாக எடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்திய, இலங்கை மீனவர்கள் விவகாரத்தில் சமகால அரசாங்கத்தின் ஆரம்பகட்ட நகர்வுகள் எவ்…
-
- 0 replies
- 142 views
-
-
எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன்! - கோவிந்தன் கருணாகரன் November 19, 2024 05:49 pm இனி வரும் காலங்களில் எந்த ஒரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன் புதிய அமைச்சரவையில் வீண் விரயங்களை குறைப்பதற்காக அவை மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது நாட்டிற்கு நல்லது இது ஒரு வரவேற்கத்தக்கது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். செவ்வாய் (19 நவ) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த பாராளுமன்ற தேர்தலிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட எனக்கும் என்னுடைய குழுவினருக்கும் ஆ…
-
- 1 reply
- 225 views
-
-
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு ஆரம்பமாகியிருக்கும் நிலையில், ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகை தந்து தனது கொள்கைப் பிரகடன உரையை உரையாற்றி வருகிறார். https://thinakkural.lk/article/312474
-
- 3 replies
- 224 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (17) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இவர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையிலான குழுவொன்று நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான கடன் நிதி வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இந்தக் குழு நாட்டுக்கு வரவுள்ள நிலையில், இந்த மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் அடுத்த கடன் தவணையை இலங்கைக்கு வழங்கவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=196011
-
- 2 replies
- 242 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் கியு சென்ஹொங் இற்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதியில் ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், மேலும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா தலைமையில் தூதுவரை சந்தித்த குழுவினர் மாவட்டத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளான மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை, உள்ளிட்ட அனைத்து துறைசார் அபிவிருத்தி விடயங்கள் தொ…
-
- 1 reply
- 149 views
- 1 follower
-
-
மின்னணுத் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் பார்வை குறைபாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் வைத்தியர் அனுஷா தென்னெக்கும்புர தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மத்தியில் குறும்பார்வை அல்லது நீள்பார்வை பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுயுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199299
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்விற்கு முன்னதாக பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்றிருக்ககூடாது அவர்களது நியமனம் சட்டவிரோதமானது என சில தரப்பினர் தெரிவிப்பது எந்த ஆதாரமும் அற்ற விடயம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார். முகநூல் பதிவில் இதுகுறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர் நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு வரை பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்பதற்பகாக காத்திருக்கவேண்டும் என்பது தவறான கருத்து என தெரிவித்துள்ளார். வரலாற்றுரீதியில் புதிய நாடாளுமன்றத்தின் அமர்விற்கு முன்னரே பிரதமரும் அமைச்சரவையும் பதவியேற்பது வழமை என சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார். ஜேர்ஆர் ஜெயவர்த்தன, டிபிவிஜயதுங்க, சந்திரிகா குமாதரதுங்க ஆகி…
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.” – இவ்வாறு நேற்று யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ்ப்பாணத்துக்கு வந்ததுள்ளமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதிலும் அனைவரும் எதிர்பார்க்கின்ற ஊடக அமையத்துக்கு வந்துள்ளமை மேலும் சந்தோசமாக உள்ளது. வட…
-
- 0 replies
- 113 views
-