Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2016ம் ஆண்டில் தீா்வைப் பெற்றுத்தருவேன் என்று நான் கூறவில்லை” “அவ்வாறு வெளியான சுடரொளி பத்திரிகையின் தலைப்புச் செய்தியை நான் ஏற்றுக்கொள்வில்லை“ “2016ம் ஆண்டில் இந்தத் தீா்வு ஏற்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு..... அதைப் பெறுவதற்கு எம்மாலான அத்தனை முயற்சிகளையும் பெறுவோம் என்று உறுதியாகக் கூறியது உண்மை! நாங்கள் தீா்வைப் பெற்றுக்கொள்ள எம்மாலான அனைத்து நடவடிக்கை முயற்சிகளையும் மட்டுமே நாம் மேற்கொள்வோம்! (23.50ல் இருந்து கேளுங்கள்) ஐயா! என்னே உங்களின் ராசதந்திரம்! 2016ம் ஆண்டில் நாம் தீா்வைப் பெற்றுத்தருவோம். எமக்கு ஒரு சந்தா்ப்பத்தைத் தாருங்கள் என்ற தோ்தல்கால பிரசாரங்கள் என்னவாயிற்று! https://soundcloud.com/imurasuweb/i0wiuf6ehmt3

  2. 2016ம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக பெருநகர வேக ரயில் இலங்கையில் முதன் முறையாக அதிவேக பெருநகர வேக ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரை இந்த பெருநகர வேக ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. மலேசியாவை மையமாகக் கொண்ட விமான எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் கம்பெனி லிமிடெட் நிறுவனம் இத்திட்டத்திற்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதற்காக முதலீட்டாளர்கள் மலேசியா, அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து வருவார்கள் என விமான எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் கம்பெனி லிமிடெட் நிறுவன தலைவர் பரிமலன் ராஜோ இசா மைக்கல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். …

    • 3 replies
    • 1k views
  3. 2016ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு சரித்திரம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில். 2016 ஆம் ஆண்டிலே அரசியல் தீர்வு கிடைக்கும். அதற்கு ஜனாதிபதி அவர்களின் யோசனையின் கீழ் புதியதொரு அரசியல் சட்ட பொறிமுறையினை முன்வைக்க இருக்கின்றார். அந்த ஜனாதிபதி அவர்களின் யோசனையிலே மூன்று விடயங்கள் முக்கியமாக கூறப்பட்டிருக்கின்றது. அதில…

  4. 2016ம் ஆண்டுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இல்லை! – திட்டவட்டமாகத் தெரிவித்தார் மகிந்த. [Wednesday, 2014-03-26 17:51:44] 2016ம் ஆண்டுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். “ இதற்கு முன்னர் பதவிக் காலம் நிறைவடைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட்டது. எனினும், இம்முறை உரிய நேரத்தில் தான் தேர்தல் நடத்தப்படும். நாட்டின் சில அரசியல்வாதிகள் நாட்டை காட்டிக் கொடுக்கும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருகின்றனர். மக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடியாத தரப்பினர் சர்வதேச சக்திகளின் ஒத்துழைப்புடன் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கின்றனர். அரசியலைத் தாண்டி குரோத உணர்வுடன் நாட்டுக்க…

  5. 2016ல் அரசியல் புரட்சியை உருவாக்குவேன் - சீமான் February 14th, 2010 | Author: editor (புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்த) மே 18 ம் தேதி நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்க இருக்கிறேன். அதன் பின்னர் 2016 ல் மாபெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்துவேன் என்று கூறியுள்ளார் சீமான். ஈழ தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் சேலம் போஸ் மைதானத்தில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளரும், டைரக்டருமான சீமான் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அப்போது சீமான் பேசுகையில், வரும் மே 18 ம் தேதி நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் இயக்கமாக அறிவிக்க இருக்கிறேன். இதுதான் எனது…

    • 0 replies
    • 786 views
  6. 2016ல் இலங்கை இந்தியாவிற்கு இடையில் முக்கிய உடன்படிக்கை கைச்சாத்து - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 07 நவம்பர் 2015 இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக முக்கியமான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப் படவுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பிலான ஒத்துழைப்பு குறித்து இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்த உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். வர்த்தக நடவடிக்கைகள் மட்டுமன்றி முதலீட்த்துறை தொடர்பிலும் இந்த உடன்படிக்கையின் ஊடாக கவனம்செலுத்தப்பட உள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எசல வீரக்கோன் தெரிவித்…

  7. 2016ல் எனது கணிப்பின்படி பல கருமங்கள் நடைபெற்றுள்ளன – சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை ஒற்றுமையுடன் உறுதியாக உழைப்போம் என தமிழ் எதிர்க்கட்சித் தலைவரும் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் திருப்திகரமான முறையில் நடைபெற்றதாகவும் அனைவரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதாகவும் அ…

  8. 2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 110 மேலதிக வாக்குகளால் வெற்றி 2017 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்ட வாக்கெடுப்பு 110 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 165 வாக்குகளும் எதிராக 55 வாக்குகளும் பதியப்பட்டுள்ளது. இதேவேளை வாக்கெடுப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. குறித்த வாக்கெடுப்புக்கு நாமல் ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் கூட்டு எதிர்கட்சியின் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/14303

  9. 2017 ஆம் ஆண்டு தீர்­மா­ன­ம் மிக்கது அதிகாரப் பகிர்வு அழிவையே தரும் மக்கள் முகம் கொடுக்க தயாராக வேண்டும் என்கிறார் மஹிந்த (க.கம­ல­நாதன்) 2017 ஆம் ஆண்­டா­னது மிக தீர்­மா­னம் மிக்க ஆண்­டாகும், அதற்கு முகம்­கொ­டுப்­ப­தற்கு இலங்கை மக்கள் தயாராக இருக்க வேண்டும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். நாட்டின் தனிப்­பட்ட பகு­தி­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்ள அதி­கார பகிர்வு தொடர்­பி­லான பொதியும் இந்­தி­யர்­க­ளு­க்கு தொழில்­வாய்ப்பை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்கும் எட்கா ஒப்­பந்­தமும் அழிவின் ஒரு பகுதி மாத் திரமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் …

  10. இந்த வருடத்துக்கான பாடசாலை பரீட்சைகளின் நேர அட்டவணையை இன்றைய தினம் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. க.பொ.த உயர் தரப் பரீட்சை க.பொ.த உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. க.பொ. த சாதாரண தர பரீட்சை க.பொ. த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/s…

  11. 2017 இல் மாற்ற முடி­யா­விட்டால் 2018 இல் ஆட்­சியை மாற்­றுவோம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த கூறு­கின்றார் (க.கம­ல­நாதன்) நல்­லாட்சி அர­சாங்­கத்தில் உள்­ள­வர்கள் இவ்­வ­ரு­டத்­திற்குள் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்திக் காட்­டு­மாறு சவால் விடு­கி­றார்கள். மாற்ற வேண்­டு­மாயின் மாற்­றுவோம். இவ்­வ­ரு­டத்தில் இல்­லா­விடின் அடுத்த வரு­டத்தில் ஆட்­சியை மாற்­றுவோம் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்ளார். தெஹி­வளை ஜய­சிங்க மண்­ட­பத்தில் கூட்டு எதி­ர­ணியின் அரச சொத்­துக்­களை பாது­காப்­ப­தற்­கான ஏற்­பாடு செய்­தி­ருந்த நிகழ்­வொன்றில் கலந்­துக்­கொண்…

  12. 2017 மே வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிப்பு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த வருடத்தின் மே மாதம் வரையான காலப்பகுதியில் படையினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2021ஆம் ஆண்டிற்குள் வடக்கில் சுமார் 3,400 ஏக்கர் காணியும் கிழக்கில் 3000 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது. மீள்குடியேற்ற அமைச்சின் தரவுகளின் படி, நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இராணுவத்தினர் வசமிருந்த 32,745.97 ஏக்கர் காணி வடக்கு, கிழக்கில் விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிலுருந்த காணிகள…

  13. எதிர்வரும் 2017ஆம் ஆண்டளவில் இலங்கை மக்களின் மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றிய இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பில் முன்னேற்றத்தை பதிவு செய்ய முடியுமென அவர் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான அகில கால மீளாய்வு அமர்வுகளில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மேம்பாடு தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் தேசிய பொறிமுறைமையொன்று உருவாக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த அகில கால மீளாய்வு அமர்வுகளில் பாரியளவில் முன்னேற்றத்த…

  14. 2017ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களில் மீள்குடியேற்றம் முக்கியமானது – நா.வேதநாயகன் 2017ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு, ஊர்காவற்றுறை மற்றும் காரைநகருக்கிடையிலான பாலம் அமைப்பு என்பன முக்கியமானதாகுமென யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள், புதுவருடத்தில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான நிதி பங்களிப்பு என்பன குறித்து விளக்கமளிக்கும் வகையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் 2016ம் ஆண்டில் யாழ்…

  15. 2017ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் 24 நாட்கள் சிவப்பு 2017ஆம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் வங்கி விடுமுறைத் தினங்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு, புதன்கிழமை (01) வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், 2017ஆம் ஆண்டில், 24 நாட்கள் மாத்திரமே பொது விடுமுறைத் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் வருடம் ஒன்றுக்கு பொது விடுமுறை நாட்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் ஏற்கெனவே கருத்து வெளியிட்டிருந்தனர். ஆசிய நாடுகளில், இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரில் 13 நாட்களும் ஜப்பானில் 17 நாட்களும், இந்தோனேஷியாவில…

  16. 2017ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே எனது திட்டம் என சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று சிறீலங்காவில் பணியாற்று வெளிநாட்டு ஊடகங்களுடனான ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்புத் தொடர்பில் அரசாங்கம் கருத்து வெளியிட்ட பின்னர் தான் தனது கருத்தை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்த அவர், சீன அரசாங்கத்துக்கு தற்போதைய அரசாங்கம் காணிகளை வழங்குவதற்கு தான் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு மகிந்த ராஜபக்ஷ அப்பம் வழங்கியிருந்தார். ஏனென்றால், 2015ஆம் ஆண்டு விருந்தொன்றில் மைத…

  17. 2017க்கு முன்னர் அனைவருக்கும் புதிய அடையாள அட்டைகள் [ வியாழக்கிழமை, 15 ஒக்ரோபர் 2015, 12:45.41 AM GMT ] 2017ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் நாட்டின் உள்ள அனைவருக்கும் புதிய தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்யப்படவுள்ளன. இந்த அடையாள அட்டைகளுக்கு புதிய இலக்கங்களும் வழங்கப்படவுள்ளன. இந்தநிலையில் புதிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்ட பின்னர் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருக்கும் செயற்பாடுகளுக்கு முடிவு ஏற்படுத்தப்படும். புதிய அடையாள அட்டைகள் இலத்திரனியல் முறையில் தயாரிக்கப்படவுள்ளன. http://www.tamilwin.com/show-RUmtzASZSVgpyJ.html

  18. 2017ம் ஆண்டுக்கான சமாதான தூதுவர் விருது இம்முறை வீ.ஆனந்த சங்கரிக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊழரnஉடை ழக துரளவiஉந ழக Pநயஉந வின் 2017ம் ஆண்டுக்கான சமாதான தூதுவர் விருது இம்முறை வீ.ஆனந்த சங்கரிக்கு வழங்கப்பட்டது. கடந்த 14.10.2017 அன்று மாலை அக்கரைப்பற்று மெங்கோ கார்டன் ஹோட்டலில் இடம்பெற்ற தேசகீர்த்தி விருதுகள் வழங்கும் நிகழ்வில் குறித்த விருது அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது. நல்லிணக்க மற்றும் சமத்துவத்துக்காக பாடுபட்ட ஏனைய 30க்கும் மேற்பட்ட சமாதான நீதவான்களுக்கும் கவுன்சிலின் தலைவர் மஹேஸ்வரன் ஆகியோருக்கும் தேசகீர்த்தி விருதுகள் வழங்க்கப்பட்டது. நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட கூலியற்று வேலைசெய்யும் சமாதான தொண்டர்களான (…

  19. 2017ல் அனைத்து அரச நிறுவனங்களிலும் இலவச wifi 2016ஆம் ஆண்டில் அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், 2016ஆம் ஆண்டில் 3500 அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் இலவச wifi வலயங்களை ஸ்தாபிப்பதே தமது எதிர்பார்ப்பு என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகக் கட்டடங்களில் இந்த இலவச wifi வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப…

  20. 2017ம் ஆண்டு வடமாகாணத்தில் போதைப் பொருள்பாவனை மற்றும் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முதலமைச்சரின் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில், வட மாகாணத்தில், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதற்கான சூழலை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டு ஒன்றிணைந்த பொலிஸ் - சிவில் பாதுகாப்புகுழுவினை அமைப்பதற்கான முயற்சிகள் 2015ம் ஆண்டிலிருந்து எடுக…

  21. Thursday, March 10th, 2011 | Posted by thaynilam 2017வரை அரசுத்தலைவர் தேர்தல் இல்லை- மகிந்த அறிவிப்பு 2017ஆண்டுக்கு பின்னரே அரசு தலைவர் தேர்தல் நடத்தப்படும் என்றும் எக்காரணம் கொண்டும் அதற்கு முதல் தேர்தல் நடத்தப்படமாட்டாது என சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இன்று தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் மகிந்த ராசபக்ச இதனைத்தெரிவித்தார். பொதுத்தேர்தல் 2016ஆம் ஆண்டுதான் நடைபெறும் என்றும் யாருக்காவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என விரும்பம் இருந்தால் அவர்கள் 2016ஆம் ஆண்டுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டு அரசுத்தலைவர் தேர்தலிலும் தான் போட்டியிடப்போவதாகவும் அதிலும் தானே வெற்றிபெறுவேன் என தெரிவித…

  22. 2018 – புத்தாண்டும் காணாமல் போன எம் உறவுகளை தேடி வீதியில் அலையும் ஆண்டாகவே மலர்ந்துள்ளது… “நல்லிணக்க அரசாங்கமும் எங்களை வீதியில் அலைய விட்டு துன்பங்களை அனுபவிக்குமாறு, வேடிக்கை பார்க்கின்றது” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை வெளியிட்டு உள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக, காணமல் போன, தமது உறவுகளை மீட்டுத்தரக்கோரி 316 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இறுதியுத்தத்தின் முன்னரும், அதற்கு பின்னரான காலப்பகுதிகளிலும், கைது செய்யப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும், கடையினரிடம் சரணைடைத்தும் உள்ள, தமது உறவுகள் தொடர்பில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித…

  23. 2018 ஆம் ஆண்டில் பாரிய பொரு­ளா­தார பாய்ச்­ச­லுக்கு தேசிய அர­சாங்கம் தயார் (லியோ நிரோஷ தர்ஷன்) இவ்­வ­ரு­டத்தில் தேசிய மற்றும் சர்­வ­தேச முத­லீ­டுகள் ஊடாக பாரிய பொரு­ளா­தார பாய்ச்­ச­லுக்கு தேசிய அர­சாங்கம் தயா­ரா­கி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்ள பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க , அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலைகள் இன்னும் சில மாதங்­களில் மேலும் குறை­வ­டையும் எனவும் குறிப்­பிட்­டுள்ளார். ச.தொ.ச .மெகா வர்த்­தக நிலைய அங்­கு­ரார்ப் பண நிகழ்வு நேற்று வெள்­ளிக்­கி­ழமை வெலி­சறையில் இடம்­பெற்­றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும்போதே பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யா…

  24. 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரே பார்வையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. சுதந்திர இலங்கையின் 71 ஆவது வரவு- செலவுத் திட்டமும் நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு - செலவுத்திட்டமுமாக அமைந்த வரவு-செலவுத்திட்டத்தின் விபரம் வருமாறு, வரவு - செலவுத் திட்ட சமர்ப்பிப்பில் பங்குகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிரணியினர் சைக்கிளில் பாராளுமன்றிற்கு வருகை தந்தனர். நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றிற்கு வருகை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபை கூடியது 2018 ஆண்டுக்கான தேசிய …

  25. [ புதன்கிழமை, 09 நவம்பர் 2011, 01:21 GMT ] [ தா.அருணாசலம் ] 2018 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை அம்பாந்தோட்டையில் நடத்தும் கனவை நனவாக்க சிறிலங்கா அரசாங்கம 60 பேர் கொண்ட பலமான அணியொன்றை கரிபியன் நாடான சென்.கிற்ஸ் மற்றும் நெவிசுக்கு அனுப்பியுள்ளது. 2018 கொமன்வெல்த் போட்டியை நடத்துவதற்கு அம்பாந்தோட்டையும் அவுஸ்ரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரும் கடும் போட்டியிட்டு வருகின்றன. சென்.கிற்ஸ் மற்றும் நெவிசில் உள்ள கொமன்வெல்த் விளையாட்டுச் சம்மேளனத்தின் தலைமையகத்தில் இந்தப் போட்டியை நடத்தவுள்ள நாடு எது என்பதைத் தீர்மானிப்பதற்கான வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. கொமன்வெல்த் விளையாட்டு சம்மேளனக் கூட்டம் நேற்றுமுன்தினம் இங்கு ஆரம்பமாகியுள்ள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.