ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது adminDecember 19, 2024 இந்திய பிரதமர் நரேந்திர மோடி – இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் குறித்த மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் வினவவுள்ளேன் என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக…
-
-
- 8 replies
- 674 views
- 1 follower
-
-
12 Dec, 2024 | 05:29 PM வீட்டுப்பணிப்பெண் ஒருவரின் உரிமைகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டமைக்காக அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம்117,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. குறிப்பிட்ட வீட்டுப்பணியாளருக்கு செலுத்தாத சம்பளங்கள் மற்றும் அதற்கான வட்டியாக 500,000 அமெரிக்க டொலர்களை ஹிமாலி அருணதிலக செலுத்தவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தநிலையிலேயே இந்த அபராதத்தை விதித்துள்ளது. 2015 முதல் 2018 வரை அவுஸ்திரேலியாவிற்கான பிரதிஉயர்ஸ்தானிகராக பணியாற்றியிருந்த அவர் இலங்கையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயரான பிரியங்க தனரட்ணவை டீக்கினில் உள்ள தனது இராஜதந்த…
-
- 3 replies
- 347 views
- 1 follower
-
-
21 DEC, 2024 | 08:53 AM (இராஜதுரை ஹஷான்) மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தால் மாகாண சபைத் தேர்தலை தாராளமாக நடத்தலாம். காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரை…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
மக்களின் பணத்தை கொள்ளையடித்தோரின் தகவல் வெளியானது – 300 இலட்சம் பெற்று முதலிடத்தில் முன்னாள் பிரதமர். வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்கள் தங்களுக்கான மருத்துவ சிகிச்சைக்காகவும், மாணவர்கள் தங்களின் கல்வியறியை வளர்த்தெடுக்கவும் நிதியுதவிகள் தேவைப்பட்டால் நாடும் முதல் இடமாக ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் காணப்படுகிறது. ஆனால், இப்படியான இந்த நிதியத்திலிருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டுவரை இலட்சக்கணக்கிலும், கோடிக் கணக்கிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நிதி வழங்கப்பட்டுள்ளது என்றால் ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆம். அவ்வாறு பாரிய நிதிகளைப் பெற்றுக் கொண்டவர்களின் பெயர் பட்டியல் இன்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்ப…
-
- 3 replies
- 339 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 20 DEC, 2024 | 05:48 PM (எம்.மனோசித்ரா) இந்திய கடலோர பாதுகாப்பு படையின் 4 கப்பல்கள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுக்கு விஜயம் செய்யவுள்ளன. இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல்களான வைபவ் மற்றும் அபிராஜ் திங்கட்கிழமை (23) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன. இக்கப்பல்கள் 23 - 27 வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருக்கும் என்பதோடு, ஏனைய இரு கப்பல்களும் 29ஆம் திகதி முதல் ஜனவரி 2ஆம் திகதி வரை காலி துறைமுகத்துக்கும் செல்லவுள்ளன. இக்கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் இலங்கை கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர். மேலும் தீயணைப்பு, அனர்த்தங்கள், கடல்…
-
-
- 2 replies
- 344 views
- 1 follower
-
-
எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 2028 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு முதல் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜன…
-
-
- 29 replies
- 1.4k views
- 1 follower
-
-
20 DEC, 2024 | 04:54 PM (எம்.மனோசித்ரா) சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கை மது ஒழிப்பு பேரவையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் இன்று வெள்ளிக்கிழமை (20) கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். நாட்டின் சமூக ஒழுங்கு குறித்து உண்மையான …
-
- 3 replies
- 332 views
- 1 follower
-
-
தமிழரசுக்கட்சியின்(Itak) பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தை தேசிய பட்டியலினூடாக தெரிவுசெய்தமையானது சுமந்திரனை(M.A.Sumanthiran) நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான தந்திரோபாயமாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் மதன் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தேசிய பட்டியலுக்கான பெயர் பட்டியல் உறுப்பினர்களை முன்னதாகவே கொடுக்காதது சுமந்திரனை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கான உத்தியாக கூட இருக்கலாம். தற்போது தெரிவுசெய்யப்பட்டிருக்கும், சத்தியலிங்கம் நடுநிலையானவர் அல்ல, அவர் ஒரு குழு சார்ந்து செயற்படக் கூடியவர். சுமந்திரன் மீதா…
-
- 1 reply
- 373 views
-
-
முன்னாள் எம்.பி திலீபன் கைது முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் இன்று(20) காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளாரும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி(EPDP) சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான கிறிஸ்டோபர் டினேஸ் என்பவரை நேற்றைய தினம் (19) இரவு வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினர் காசோலை மோசடி முறைப்பாட்டில் கைது செய்திருந்தனர். வர் வழங்கிய வாக்குமூலத்தை தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்ற…
-
- 3 replies
- 359 views
-
-
மருத்துவர்களின் ஓய்வு வயது 63ஆக அதிகரிப்பு! அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு வயதை 63 வயது வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார, ஊடகத்துறை அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக, மாகாண மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர்கள், தர மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் மருத்துவ அலுவலர்கள், அனைத்து பல் அறுவை சிகிச்சை அலுவலர்கள் மற்றும் நிர்வாக மருத்துவ அலுவலர்கள் உட்பட அனைத்து அரசு பதிவு மருத்துவ அலுவலர்களின் ஓய்வு வயது 63 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக இருந்த…
-
-
- 4 replies
- 384 views
-
-
மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது, அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்தில் 361மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக, இவ்வாறான மதுபான சாலை உரிமைப்பத்திரங்கள் வழங்குவதில் அரசியல் லஞ்சம் இருப்பதாக சொ…
-
-
- 8 replies
- 659 views
- 1 follower
-
-
எமது அரசாங்கம் நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறோம் - வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ Published By: VISHNU 20 DEC, 2024 | 06:10 PM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் கடுமையாக உழைப்பதோடு அர்ப்பணிப்புடனும் செயற்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பத்தரமுல்லையில் பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) சுகாதார அமைச்சின் தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு, சீன விஞ்ஞானக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆய்வு அறிக…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில், சில நிறுவனங்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. ஏனைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நோக்கில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியால் வௌியிடப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பின்வருமாறு... 01. Tiens Lanka Health Care (Pvt) L…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பத…
-
- 1 reply
- 151 views
- 1 follower
-
-
Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம் December 18, 2024 12:32 pm பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் போது Paye tax தொடர்பில் அவர் வௌியிட்ட விடயம் கீழே தரப்பட்டுள்ளது. "நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது. மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது. மேலும், தனிநபர் வருமான வரியின் 1ஆவது வகையின் திருத்தத்தை 500,000 முதல் 10 இலட்சம் ரூபா வரையில் 6% வரிக்கு உட்பட்டதாக மாற்ற முடிந்தது. அதன்படி, மாதம் 150,000 ரூபா சம்பளம் பெறுபவர் 100% வரி விலக்கு. 200,000 சம்பாதிக்கும் நப…
-
- 4 replies
- 518 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு(Mahinda Rajapaksa) எதிராக டயஸ்போராக்கள் செயற்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளில் இருக்கும் பிரிவினைவாத கொள்கையுடையவர்களால் அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார். ராஜபக்சர்களை பழிவாங்கும் வகையில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்ந்தும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு முறையற்ற வகையில் குறைக்கப்பட்டுள்ளது. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபத…
-
- 6 replies
- 582 views
- 1 follower
-
-
Published By: VISHNU 20 DEC, 2024 | 08:09 PM உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (20) கண்டிக்கு விஜயம் செய்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடத்திற்குள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
19 DEC, 2024 | 01:50 PM வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு தேவையான ஆலோசனை வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்காவிலிருந்து பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டதாக விவசாய கால்நடை அபிவிருத்தி மிருகவள நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தர். இன்றைய தினம் (19) ஊடகங்களுக்கு அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கான அமெரிக்க உயர் ஸ்தானிகர் ஜூலி சங் உடன் தாம் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் அமெரிக்காவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறினார். தேசிய விவசாய அமைப்புக்கள் தொடர்பான எண்ணக…
-
-
- 13 replies
- 858 views
- 1 follower
-
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன் December 17, 2024 11:35 am பார் போமிட் வழங்குவதற்குச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகர் பதவி விலகியது போன்று பதவி விலக வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சபாநாயகர் கலாநிதிப் பட்டம் தனக்கு இருக்கின்றது, அதனை தற்போது நிரூபிக்க முடியாது என்பதால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அது நல்லதொரு விடயம். அதை நான் வரவேற்கின்றேன். இத…
-
-
- 47 replies
- 3k views
- 1 follower
-
-
20 DEC, 2024 | 03:54 PM எம்.எம்.பி.எல் - பாத்ஃபைன்டர் நிறுவனக்குழுமம் மற்றும் எச்.சி.எல் எட் டெக் இலங்கை தொழில்நுட்ப மற்றும் வர்த்தக நிறுவனத்துக்கும் இடையில் இலங்கையில் தொழில்நுட்பக்கல்வியை மேம்படுத்துவதில் ஒன்றிணைந்து பணியாற்றுவதை இலக்காகக்கொண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று வியாழக்கிழமை (19) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது. (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/201736
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
17 DEC, 2024 | 07:39 PM யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில்…
-
-
- 4 replies
- 439 views
- 1 follower
-
-
20 DEC, 2024 | 02:58 PM பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்து எனும் தொனிப்பொருளில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய போராட்டம் கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்றது. (படப்பிடிப்பு – ஜே. சுஜீவ குமார்) https://www.virakesari.lk/article/201730
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
20 DEC, 2024 | 12:56 PM (எம்.மனோசித்ரா) பொதுமக்களுக்கு தற்பாதுகாப்பிற்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மட்டுமே வழங்கப்படும். மேலும் அது புலனாய்வவுத்துறை அறிக்கைகளுக்கமைய மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை தற்காலிகமாக மீளப்பெறுதல் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை கடந்த நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் அளவு மதிப்பாய்…
-
- 0 replies
- 227 views
- 1 follower
-
-
யாழ். மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் பாதிப்பு! யாழ். மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும் இந்நோய்க்காக சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக…
-
- 2 replies
- 165 views
- 1 follower
-
-
20 DEC, 2024 | 03:16 PM சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 05 கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்று சந்தேக நபர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 38, 25 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவார். சந்தேக நபர்களில் இருவர் இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மற்றைய சந்தேக நபர், இன்றைய தினம் காலை 09.45 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடை…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-