Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவது குறித்து நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் விஜிதஹேரத் தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்காக தமிழ் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கைப்பற்றுவது குறித்து தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் எனினும் அரசியல் சூழ்நிலையை வலுப்படுத்துவதற்காக தனது கட்சி தமிழ் முஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் நாடளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கும் என தெரிவித்துள்ளார். எனினும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய தேசிய…

  2. யாழ். சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இரண்டு மாத குழந்தையின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் சிலரின் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு மாத குழந்தையை பற்றைக்குள் தூக்கியெறிந்த பொலிஸார் தாயையும் தந்தையும் கடுமையாக தாக்கினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாங்கள் வீதியால் சென்று கொண்டிருக்கும்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை முந்தி செல்ல முயன்று தாங்களே அடிபட்டு கீழே விழுந்தார்கள். நானும் எனது கணவரும் அக்காவும் எங்களது வாகனத்தில் வந்துகொண்டி…

  3. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையிலான விசேட படகு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. நாளை மறுதினம் வியாழக்கிழமை (14) காலை 06,30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு 07 படகு சேவைகள் இடம்பெறவுள்ளன. அதேபோன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி காலை 06.45 மணி முதல் மலை 04.30 மணி வரையிலும் படகு சேவைகள் இடம்பெறவுள்ளன என நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. அதேவேளை நெடுந்தீவுக்கான வாக்கு பெட்டிகளை நாளைய தினம் புதன்கிழமை படகுகள் மூலம் உத்தியோகஸ்தர்கள் எடுத்து சென்று, நாளை மறுதினம் வியாழக்கிழமை வாக்களிப்பு நிறைவு பெற்றதும் விமான படையினரின் உ…

  4. யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் வாக்களிப்பு நிலையங்களாக செயற்பட்ட 12 வாக்களிப்பு நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார். ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் வேலணை மத்திய கல்லூரி விடுதி வாக்களிப்பு நிலையம் சரவணை பள்ளம்புலம் முருகமூர்த்தி ஆலய நால்வர் மணிமண்டபத்திற்கும் நாரந்தனை தெற்கு பொது நோக்கு மண்டப வாக்களிப்பு நிலையம் நாரந்தனை தெற்கு கிராம சக்தி பொது மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலய மண்டப இல 1 வாக்களிப்பு நிலையம் வடலியடைப்பு சனசமூக நிலையத்திற்கும் அராலி வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலை வாக்களிப்…

  5. எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் பின்வருமாறு; வாக்கெடுப்பு நிலையத்தினுள் தங்களது வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல சட்டரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வரத் தேவையான போக்குவரத்து வசதிகளை தங்களது தேர்தல் மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலர் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும். வாக்கெடுப்பு நடைபெறுகின்ற கட்டிடத்தின் தூரம் 100 மீற்றருக்கும் அதிகமாக இருப்பின் வாக்கெடுப்பு நிலைய…

  6. றிசாட், மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் அடி தடி | அடித்து நொருக்கப்பட்ட றிசாட்டின் வாகனத்தொடரணி

  7. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது adminNovember 12, 2024 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் இன்று செவ்வாய்கிழமை (12) நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டக்களப்பு வேட்பாளருமான பிள்ளையான எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நாஷனல் ஸ்ரீலங்கா அமைப்பு , மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் …

  8. (இராஜதுரை ஹஷான்) விடுதலை செய்யும் தமிழ் அரசியல் கைதிகளின் பெயரை ஜனாதிபதி குறிப்பிட்டால் அவர்கள் செய்த பயங்கரவாத செயற்பாட்டை நான் குறிப்பிடுவேன். பிரபாகரனின் நோக்கத்தை புதிய அரசியலமைப்பால் நிறைவேற்ற இடமளிக்க முடியாது. நாட்டின் ஒற்றையாட்சியை கருத்திற் கொண்டு மக்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015 முதல் 2019 வரை ஆட்சியில் இ…

  9. தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் சர்வதேசத்திலும் குரல் கொடுக்க கூடியவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புதல் வேண்டும். அவ்வாறு அனுப்பினால் மட்டுமே தேசிய மக்கள் சக்தியினர் எமக்கு எதிராக தொடுப்பதற்கு ஆயத்தமாகி உள்ள போரை நாம் எதிர் கொள்ள முடியும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய மக்கள் சக்தியை கேடயமாகக் கொண்ட…

      • Thanks
      • Like
    • 14 replies
    • 696 views
  10. தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பை கொடுத்துப் பார்த்தால் என்ன என்று சிலர் கருதுகின்றனர். இப்போதுள்ள அரச தரப்புக்கு வாக்களித்து விட்டு ஆறு மாதங்களின் பின்னர் யோசிப்பீர்கள். ஆகவே ஆறு மாதங்கள் வரை காத்திருங்கள். இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்த ஜனாதிபதி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதி அனுர குமா…

  11. (எம்.ஆர்.எம்.வசீம்) தேர்தலில் எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி ஏற்படலாம். ஜனாதிபதி முதல் திசைகாட்டியில் இருக்கும் ஆட்சியாளர்கள் யாருக்கும் அனுபவம் இல்லை என்பது தற்பாேது நிரூபணமாகியுள்ளது. அதனால் ஆட்சி செய்த அனுபவமுள்ள சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகம் பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து திங்கட்கிழமை (10) மருதானையில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடந்து தெரிவிக்கையில், …

  12. தேர்தல் பிரச்சார நடவடிக்கை நிறைவு; அமைதியான காலம் அமுலில்! 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதியான காலம் அமுலில் இருக்கும். குறித்த காலப் பகுதியில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் வேட்பாளர்கள், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார். நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்…

  13. சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவிக்கின்றார். இந்த காய்ச்சல் ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். அண்மைய நாட்களாக குழந்தைகளுக்கு இடையில் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இது இருமல் மற்றும் சளியுடன் கூடிய காய்ச்சலாகும். மேலும், டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே இருமல், சளி, காய்ச்சல், உடல்வலி, வாந்தி இருந்தால் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறியாகும். எனவே, மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், உரிய…

  14. எதிர்வரும் நவம்பர் 14ம் நாள் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் எடுக்கப்பட்ட தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் 1972, 1978ம் ஆண்டுகால அரசியலமைப்புக்களுக்கு தமிழ்மக்கள் சம்மதம் கொண்டிருக்கவில்லை. இரண்டு அரசியலமைப்புக்களும் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டதாகும். எனவே அந்த அரசியலமைப்பின் கீழ் நடத்தப்படும் ஆட்சி சட்டரீதியான ஆட்சியல்ல. நிராகரிக்கப்பட்ட அந்த அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றமும், நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் கீழ் நடைபெறுகின்ற தேர்தல்களும் தமிழ்மக்கள் தொடர்பாக சட்ட அதிகார…

  15. தமிழ் தேசியத்தை, தமிழை தங்களது பெயரில் கொண்டுள்ள கட்சிகள் மாத்திரமல்ல, அரசு சார்புக் கட்சிகளின் வேட்பாளர்கள் கூட தமிழ் தேசியம் பற்றி முழங்கி வருகிறார்கள். தமிழ் தேசியத்தை இன்று உச்சரிப்பவர்கள் பலரும் தமிழ் தேசியத்தைக் கைவிட்டவர்களாகவும், தமிழ் தேசியத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் பயணிப்பவர்களாகவுமே உள்ளார்கள் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் நெஞ்சில் தமிழ் தேசியம் இன்றும் அடைகாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இதனால்தான் ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்தன. நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியத்தில் தடம் மாறாது பயணிக…

  16. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் மோதுண்டு பல அணிகளாக பிரிந்து நின்றாலும் தமிழ்த் தேசியம் எனும் கோட்பாட்டுச் சித்தாந்தத்தை நாம் இழக்க முடியாது எனவே அனைவரும் தமிழ்த் தேசியத்திற்கு வாக்களியுங்கள் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் இன்று திங்கட்கிழமை (11) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மாற்றம் ஊழலற்ற புதிய அரசியல் கலாசாரத்தை கட்டமைப்போம் இலங்கையராக ஒன்றிணைவோம் என கவர்ச்சிகரமாக பன்மைத்துவ இலங்கை தேசியவாதம் பேசி முற்போக்கு இடதுசாரி சிந்தனை தத்துவ ஆட்சி கட்டமைப்பு என வெற்றுக் கோசத்தையும், போலி முக மூடியையும், அணிந்து கொண்டு ஜே வி பி தனது இனவாத …

  17. தேர்தல் பரப்புரைக்காக ஜனாதிபதி வடக்குக்கு பயணம் தேர்தல் பரப்புரை நடவடிக்கைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று வடமாகாணத்துக்கு பயணித்துள்ளார். பொதுத்தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் பிரதான தேசியக் கட்சிகள் தீவிரமான பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறாக தமிழர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தேசிய மக்கள் சக்தி பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது. பிரதமர் ஹரிணி, ஜனாதிபதியின் ஆலோசகர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் இதற்கு முன்னர் வடக்குக்குச் விஜயமாகி பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே, ஜனாதிபதி அநுர வடக்கில் இன்று தீவிர பரப்புரைகளை முன்னெடுத்துள்ளார…

  18. பலமான எதிர்க்கட்சியும்; ஜேவிபியின் கட்டமைப்பு மாற்றமும் இலங்கையின் அரசியல் இலக்கு ஒன்றை நோக்கிய திசையில் செல்வதை தற்போது உணர முடிகின்றது. கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அரசாங்கத்தை நடத்துவதற்கு தேவையான நாடாளுமன்ற அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென அவரது கட்சியும் சில விமர்சகர்களும் கூறுகின்றனர். முரண்பாட்டில் உடன்பாடாக இந்த அங்கீகாரம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சில எதிர்க்கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் கூட இந்த அரசாங்கம் அதிக அதிகாரத்தைப் பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று வெளிப்படுத்துகின்றனர். தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை சமர்பி…

  19. தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு! 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவ‍ேளை, தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளானது இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை (12) நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களினால் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார அலுவலகங்கள் நாளை நள்ளிரவுக்குள் அகற்றப்படாவிட்டால் அவற்றை உடனடியாக அகற்றுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்…

  20. சீரற்ற வானிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை (7) முதல் சேவை நிறுத்தப்பட்டதனால் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுச் சேவைக்கான கட்டணத்தை முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுத் தொகையும் மீள செலுத்தப்பட்டது. இலங்கை - இந்திய கப்பல் சேவை தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளதாவது, மழையுடனான வானிலையினால் கப்பல் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. “கடந்த வெள்ளிக்கிழமை (8), சனிக்கிழமை (9) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (10) ஆகிய நாட்களில் மழையுடனான வானிலையினால் கப்பல் சேவையை இயக்க முடியவில்லை. நாளையதினமும் (12) கப்பல் சேவை வானிலை சார்ந்து தீர்மானிக்கபடும். எனவே நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு …

  21. கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் ! November 10, 2024 கடந்த தேர்தலில் கருணா செய்தது தவறு. அவர் தெரியாமல் அதை செய்தார்.ஆனால் இம் முறை தமிழருக்கான ஒரேஒரு பிரதிநிதித்துவம் ஊசலாடுகிறது என்று தெரிந்தும் இங்கு வரிந்து கட்டிக் கொண்டு சங்கு போட்டியிடுவது மகாதவறு. எனவே அம்பாறைத்தமிழர்களுக்கு கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்கின்ற துரோகம் மகா துரோகம் ஆகும். இவ்வாறு காரைதீவில் தனது பிரச்சார அலுவலகத்தை நேற்று (9) சனிக்கிழமை மாலை திறந்து வைத்து பேசிய அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார் . இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 60 ஆயிரம் வாக்குகளை பெற்று…

  22. ஒருமாத காலத்துக்குள்ளேயே அநுர அரசாங்கம் சறுக்க ஆரம்பித்துள்ளது - சுமந்திரன் SayanolipavanNovember 10, 2024 ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் ஒருமாதகாலத்துக்குள்ளேயே சறுக்குவதற்கு ஆரம்பித்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பாராளுமன்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? எனும் தொனிப்பொருளில் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மக்கள் மன்றம் நேற்றைய தினம் (9) யாழ். கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  23. ரவிராஜின் நினைவேந்தல் adminNovember 10, 2024 சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் ரவிராஜ் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இந்நிகழ்வில் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2024/208152/

  24. இலங்கை வந்த இந்திய கடற்படை கப்பல்! இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐஎன்எஸ் வேலா” என்ற நீர் மூழ்கிக் கப்பல், உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்பு அளித்தனர். ஐஎன்எஸ் வேலா என்பது 67.5 மீ நீளமுள்ள நீர்மூழ்கிக் கப்பலாகும், 53 பேர் கொண்ட பணியாளர்களை கொண்ட இதற்கு கமாண்டர் கபில் குமார் தலைமை தாங்குகிறார். நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் போது, இரு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் அதன் குழுவினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீர்மூழ்கிக் கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.