Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அலரி மாளிகை சூழ்ச்சித் திட்டம் பற்றி நேரடியாக பதிலளிக்காத காவல்துறை மா அதிபர் கடந்த 2015 ஜனவரி மாதம் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினத்தில் அலரி மாளிகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சூழ்ச்சித்திட்டம் பற்றி நேற்றைய தினம் ஓய்வு பெற்றுக்கொண்ட காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நேரடியாக பதிலளிக்கவில்லை. ஓய்வு பெற்றுக்கொண்ட காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் நேற்றைய தினம் இறுதியாக ஓர் ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியிருந்தார். கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினத்தில் சூழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதன் போது, அந்தக் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காது மெல்லிய புன்னகையுடன் ஒரு நிமிடம…

  2. தமிழ் மக்கள் விழித்துக்கொண்டுள்ளனர் என்பதற்கான அடையாளமே தமிழ் மக்கள் பேரவை என்ற பேரலைதான் என வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கேட்போர் கூடத்தில் இணைத் தலைவர்கள் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன், வைத்திய நிபுணர் பூ.லக்ஷ்மன், த.வசந்தராசா ஆகி யோர் தலைமையில் நடைபெற்ற போது, அங்கு முதலமைச்சர் விக் னேஸ்வரன் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் மக்கள் பேரவை இது காறும் செய்த சேவை மகத்தானது. நாம் தொடங்கிய இந்தசெயற்பாட்டால் ஏற்பட்டுள்ள நன்மைகளை நாம் பரிசீலித்தோமானால் நில மட்ட மக்களுடன் கலந்துறவாடி அரசியல்தீர்வு சம்பந்தமான அறிவை அவர்களுக்குப் புகட்டி அதேநேரம் அவர்களிடம் இருந்து அவர்களின் அனுபவத்தின் வாயிலாக அவர…

    • 0 replies
    • 834 views
  3. யாழ்.தற்கொலை அங்கி மீட்பு : மேலும் ஒரு சந்தேகநபர் கைது யாழ்.சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி திருவையாற்று பகுதியினை சேர்ந்த 23 வயதான விஜயகுமார் கேதீஸ்வன் என்பவரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேக நபருடன் தொடர்புகளை பேணியவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வரும் நிலையில் குறித்த சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://onlineuthayan.com/news/12937

  4. சீனாவை கடுமையாக எதிர்த்தவர்கள் இன்று அதன் காலடியில் விழுந்துள்ளனர் சீனாவின் பொரு­ளா­தாரக் கொள்­கை­யை யும் வேலைத்­திட்­டங்­க­ளையும் எதிர்த்­த­வர்­க­ளுக்கு இன்று சீனாவின் கால­டியில் விழ­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. சீனாவை எதிர்த்தும் அவர்­களை நிரா­க­ரித் தும் தம்மால் எந்­த­வித பொரு­ளா­தார நட­வடிக்­கை­க­ளையும் கையாள முடி­யாது என்­பதை இன்று அர­சாங்கம் விளங்­கிக்­கொண்­டுள்­ளது என மஹிந்த ஆத­ரவு அணி­யினர் தெரி­வித்­தனர். எமது ஆட்­சியில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மேற்­கொண்ட வேலைத்­திட்­டங்­களை குறைகூறி­ய­வர்கள் இன்று அதே வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்­ததன் மூல­மாக மஹிந்த ராஜபக் ஷ சரியான திட்டங்களையே முன்னெடுத்தார் என்பது நிரூபித்­துள்­ளனர் எனவும் …

  5. விக்கினேஸ்வரனுக்கு தொடர்ந்து இடமளித்தால் நிலைமை மோசமாகிவிடும் புலி­க­ளு­டனும் புலம்­பெயர் புலி அமைப்­பு­க்க­ளு­டனும் இணைந்து தேர்­தலில் வெற்றிபெற்­ற­வர்­க­ளுக்கு எப்­போதும் புலி­களால் எந்த அச்­சு­றுத்­தலும் இல்லை. அந்த வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சரத் பொன்­சேகா ஆகி­யோரின் உயி­ருக்கு எப்­போதும் அச்­சு­றுத்தல் இல்லை. ஆனால் புலி­க­ளுக்கு எதி­ராகச் செயற்­படும் மஹிந்த ராஜபக் ஷவிற்கே இன்று உயி­ருக்கு அச்­சு­றுத்தல் உள்­ளது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான விமல் வீர­வன்ச தெரி­வித்தார். பொது எதி­ர­ணி­யி­னரால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண…

  6. கிறிஸ் பூதத்தால் சவாலை எதிர்கொண்டேன்! ஓய்வுபெறும் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு! தனது பதவிகாலத்தின்போது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என்றும், பொலிஸ் சேவையிலிருந்து தான் திருப்தியுடனேயே ஓய்வுபெறுகிறார் என்றும் பொலிஸ்மா அதிபர் எம்.கே. இலங்ககோன் தெரிவித்தார். 1990ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்த என்.கே. இலங்ககோன் அத்துறையில் 36 வருடங்கள் சேவையாற்றின பின்னர் நேற்று ஓய்வுபெற்றார். இவர் 2011ஆம் ஆண்டு பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் ஓய்வுபெறுவதற்கு முன்னர் பொலிஸ் தலைமையகத்தில் அவர் நேற்று விசேட செய்தியாளர் …

  7. இராணுவத்துக்கு எதிராக கிராம சேவகர்கள் ஆர்ப்பாட்டம்! கிராம சேவையாளர்களை அவர்களது கடமையை மேற்கொள்ளவிடாது இடையூறு விளைவித்த இராணுவத்தினரைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட கிராம சேவையாளர்களால் நேற்று கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் கிராம சேவையாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கில், தென்னிலங்கை மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் வாடிகள் அமைத்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் அந்தப் பகுதியிலுள்ள தனியார் காணி உரிமையாளர் கிராம சேவையாளருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இதன…

  8. வடக்கு மாகாணசபை அமைச்சரவையில் மாற்றம்? - சம்பந்தன் தலைமையில் சனியன்று ஆலோசனை! சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இதன்போது, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வடமாகாண சபையால் முன்வைக்கப்பட்ட வரைவுத் திட்டம் சம்பந்தனிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், வடமாகாண சபை அமைச்சரவையை மாற்றியமைப்பது தொடர்பில் பேச்சுக்களும் இடம்பெறவுள்ளது. சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தீர்வுத்திட்ட முன்வரைவு ஒன்றைத் தயாரிப்பதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.வி…

  9. இலங்கையின் மூன்று ட்ரில்லியன் டொலர் கறுப்பு பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த ஊழல்மிக்க அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், குற்றவாளிகள் இலங்கையில் இருந்து 2 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள குளோபல் பைனான்ஷியல் இண்டர்க்ரீட் என்ற நிறுவனமே இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தொகையானது மூன்று ட்ரில்லியன்கள் அமெரிக்க டொலர்களை எட்டும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இருந்து திருட்டு வழியில் இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. …

    • 0 replies
    • 748 views
  10. ஜூன் மாதத்திற்குப் பின், இராணுவத்திற்கு தேவையான இடங்கள் போக, ஏனையஇடங்கள் மக்களுக்கு வழங்க நடவடிக்கை: "இலங்கையில், மீள் குடியமர்த்தல் பணிகள் நன்றாக நடந்து வருகின்றன. 3,500 ஏக்கர் நிலத்தை திருப்பி அளித்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்கு, ஆறு மாதத்தில், 65 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். இலங்கையில், 32 முகாம்களில் உள்ள மக்களையும் விடுவித்து, அவர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்." என, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகம் சென்றுள்ள டீ.எம்.சுவாமிநாதன் நேற்று (10.04.16), சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியின் போது, இந்தியாவில், 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர். அதில் சிலர் இ…

    • 0 replies
    • 503 views
  11. -ரீ.கே.றஹ்மத்துல்லா திருகோணமலை, மூதூர் கங்குவேலி பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் ஸ்தாபனத்தின் கட்டுமான பணிகள் அப்பகுதியில் இருக்கும் புத்த பிக்குவின் தலைமையில் வந்த குழுவினரின் தலையீட்டினையடுத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து சனிக்கிழமை(19) கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணி, கிழக்குமாகாண சபை உறுப்பினர்களான ஜெ.ஜெனார்த்தனன், கு.நாகேஸ்வரன், முற்றும் மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் சென்று நிலைமையினை பார்வையிட்டனர். தற்போது இந்தப் பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-…

    • 35 replies
    • 2.5k views
  12. இறுதிப்போரில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை ஐ.நா முன்கூட்டியே அறிந்திருந்தது! இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை அறிந்து வைத்திருந்தமை குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது. இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்கூட்டியே அறிவித்திருந்ததாக ஐ.நா வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். கனடாவின் ரோரன்டோ நகரிலுவுள…

  13. வட மாகாணசபை அமைச்சர்கள் அனைவரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரும் மனுவில், இதுவரை 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் 4 அமைச்சர்கள் நீங்கலாக மொத்தம் 24 உறுப்பினர்கள் இதில் கையெழுத்திடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைப் பொருளாளரும், வடமாகாண சபை பிரதி அவைத்தலைவருமான அன்ரனி ஜெகநாதன் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி வட மாகாண சபைக்கான தேர்தல் முதன்முறையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தெரிவான உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதோடு, அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். அம…

    • 4 replies
    • 779 views
  14. பிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும் டக்ளஸ் தேவானந்தா நான் கூறுவது உங்களிற்கு கொஞ்சம் ஓவராகக்கூடத் தெரியலாம். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில நடந்த சண்டையில் எல்லாளன் கொல்லப்பட்டபிறகு துட்டகைமுனு எல்லாளனுடைய சிலைய நிறுவி அதற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஒரு சட்டத்தை அன்று கொண்டு வந்திருந்தான். அது வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது. அதுபோல இங்கும் செய்யப்படவேண்டும் என நான் எதிர்வரும் 6ம் திகதி பாராளுமன்றில் கொண்டுவரவிருக்கும் எனது தனிநபர் பிரேரணையில் தீர்மானம் நிறைவேற்றவிருக்கிறேன் என ஈபிடிபி கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதில் யார் துட்டகைமுனு, யார் எல்லாளன் என ஊடகவியலாளர்கள் கேள்வி …

  15. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார்.

    • 41 replies
    • 4.6k views
  16. யாழ் அரசாங்க அதிபர் அலுவலகத்தை பூட்டி முற்றுகை போராட்டம் யாழில் சுவீகரிக்கப்படவிருந்த காணிகளை சுவீகரிக்காது தடுத்து நிறுத்துமாறு வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் யாழ். அரசாங்க அதிபர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். யாழ். ஆணைக்கோட்டை, கூழாவடி இராணுவ முகாம் பகுதியிலுள்ள ஐந்து தனிநபர்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு காணிகளை இன்று திங்கட்கிழமை நில அளவையாளர்கள் அளப்பதற்கு முற்பட்டனர். இந்தநிலையில், இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி, வட மாகாண சபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராச கஜேந்திரன் ஆகியோர் ஆர்ப்ப…

  17. மட்டக்களப்பில் 70ரூபா இளநீருக்கும் தட்டுப்பாடு! இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவிவரும் அதிக வெப்ப நிலைமை காரணமாக பொது மக்கள்,பாடசாலை மாணவர்கள்,அங்காடி வியாபாரிகள் ,மீனவர்கள் என பல தரப்பினர் பல்வேறு அசௌகரியங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் வெப்பத்தை தணிக்கும் இளநீர் மற்றும் வெள்ளரிப்பழம் என்பவற்றை அதிகமாக வாங்கி வருவதால் அதற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட இளநீர் ஒன்று தற்போது 70 ரூபாய் முதல் 80 ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்படுவதோடு நேற்று முதல் அந்த விலைக…

  18. யாழில் புத்தாண்டுச் சந்தை! யாழ். மாவட்ட செயலகம் மற்றும் யாழ். சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் யாழ். சிறு முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தல் நோக்குடனான புத்தாண்டு சந்தையும், விற்பனையும் நேற்று யாழ். மாநகர சபையின் திறந்த வெளி மைதானத்தில் அரசாங்க அதிபர் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. இச்சந்தை விற்பனை நிலையத்தினை ஆரம்பிப்பதற்காக பிரதம அதிதியாக சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் சுதீர ஜயரத்ன கலந்து கொண்டு புத்தாண்டு சந்தை, விற்பனையை ஆரம்பித்து வைத்தார். …

  19. எதிர்க்கட்சித் தலைவர் யாழ் விஜயம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வடமாகாணசபை அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபடுவாரென தெரிவிக்கப்படுகின்றது. எதிர்கட்சித் தலைவரின் இந்த விஜயத்தின் போது வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை அவரிடம் கையளிக்கப்படுமென தெரியவருன்றது. வடமாகாண சபையின் முதல்வரும் மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து குறித்த யோசனையை சமர்ப்பிப்பார்களென தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய மாகாணசபை உறுப்பினர்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் இ…

  20. யாழில் உச்சத்தை தொடும் இளநீர் விலை! குடாநாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலையை அடுத்து இளநீரின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. தற்போது நிலவும் கடும் வெப்பம் காரணமாக பாதசாரிகள், பயணிகள் முதல் வீட்டினில் உள்ளோரும் இளநீரை நாடுகின்றனர். இதன் காரணமாக கடந்த வாரங்களில் 60ரூபா முதல் 70ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர் தற்போது 100ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. …

  21. யாழில் கொளுத்தும் வெய்யில்! அரிய வகை தொப்பி அறிமுகம்! கொளுத்தும் வெய்யிலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வாழை இலையில் தொப்பி அணிந்து யாழ். நகரில் பணியாற்றும் ஒரு தொழிலாளி. தற்போது வெப்பத்தின் கொடுமை அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புத்தாண்டன்றும் மறுநாள் தற்போதுள்ள வெப்ப நிலையை விட மேலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என்று ‪யாழ்‬. திருநெல்வேலியியுள்ள‬ வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி ‪ரி பிரதீபன்‬ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/12873

  22. வித்தியா படுகொலை! 13ஆவது சந்தேகநபரும் சிக்குவார்! புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குத் தொடர்பில் 13ஆவது சந்தேகநபரை கைது செய்யவுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில், இன்று தெரிவித்தனர். குறித்த வழக்கு, நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னதாக கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, 'கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களுக்கு மேலதிகமாக 13ஆவது சந்தேகநபரையும் எதிர்வரும் நாட்களில் கைது செய்யவுள்ளோம்' என குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 12 சந்தேகநபர்களில்…

  23. தமிழ் மக்கள் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிப்பதற்குரிய காரணம் சரியானதாகவே இருந்ததாக, தமிழ்த்;தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்

    • 0 replies
    • 308 views
  24. இலங்கையின் கடல் உணவு ஏற்றுமதி தடை நீக்கம்? இலங்கையில் இருந்து கடல் உணவுகள் ஏற்றுமதி தடையை நீக்குவதற்கான ஆரம்ப ஒப்புதலை ஐரோப்பியஒன்றியம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சு தரப்புக்களை கோடிட்டு அரசாங்க பத்திரிகை இந்தசெய்தியை பிரசுரித்துள்ளது. இந்தநிலையில் இந்த தடையை நீக்குவதற்கான யோசனை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்ட பின்னர் அது குறித்து ஒன்றியம் இலங்கைக்குஅறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இலங்கையின் தூதுக்குழு ஒன்று பிரசல்ஸுக்கு சென்று இது தொடர்பில் பேச்சுக்களைநடத்தியுள்ளது. http://www.tamilwin.com/development/01/101002

    • 2 replies
    • 419 views
  25. ஒருநாள் கூத்துக்காக பழமையான பூநகரிக் கோட்டையை உடைத்த இராணுவத்தினர்! [Sunday 2016-04-10 08:00] கலாசார நிகழ்வு ஒன்றுக்காக தொன்மை மிக்க பூநகரி கோட்டையின் சில பகுதிகளை இராணுவத்தினர் நேற்று உடைத்துள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் கோட்டையின் சில பகுதிகளை உடைத்து தங்களது நிகழ்வு ஏற்பாட்டு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பூநகரி-வாடியடிச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கோட்டையின் சில பகுதிகளே இராணுவத்தினரால் உடைக்கப்பட்டுள்ளது. கலாசார நிகழ்வு ஒன்றுக்காக தொன்மை மிக்க பூநகரி கோட்டையின் சில பகுதிகளை இராணுவத்தினர் நேற்று உடைத்துள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் கோட்டையின் சில பகுதிகளை உடைத்து தங்களது நிகழ்வு ஏற்ப…

    • 2 replies
    • 590 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.