Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்: கூட்டாட்சிக்கு வலியுறுத்தல். ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பொலிஸார் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால், இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள பௌத்த பேரினவாதிகள் புத்தர் சிலையை அப்புறப்படுத்திய நடவடிக்கையைக் கண்டித்ததுடன், உடனே அதனை அங்கே நிறுவிட வேண்டுமென கொக்கரித்துள்ளனர். அதனையடுத்து மீண்டும் அதேசிலையை அதே இடத்தில் நிறுவியுள்ளனர். இடதுசாரி பாரம்பரியத்தைச் சார்ந்தவர்களென காட்டிக் கொள்ளும் ஜேவிபி அரசு , வழக்கமான ‘சிங்கள பேரினவாத அரசு’ தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது…

  2. ஜனாதிபதியை சந்தித்தது இலங்கை தமிழரசுக்கட்சி. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது தமிழரசுக் கட்சியின் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் நடாளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன் ஞா.ஸ்ரீநேசன் எஸ் ஸ்ரீதரன் உள்ளிட்ட 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் அரசியல்தீர்வு மாகாண சபை தேர்தல் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தமிழரசுக் கட்சியினர் இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர…

  3. நாமலின் பட்டச் சான்றிதழ் தொடர்பில் கேள்வி! ஸ்ரீலங்கா பொதுஜனர பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, 2009 ஆம் ஆண்டில் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைவதற்கான தகுதிகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் இருப்பினும் அவர் சட்டக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ இங்கிலாந்தில் இருந்து சட்டப் பட்டம் பெற்ற விதம், அவரது சான்றிதழ் மற்றும் சட்டக் கல்லூரியில் இணைவது தொடர்பான தகவல்கள் பல வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்று (19) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார். அது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உற…

  4. 19 Nov, 2025 | 04:14 PM என்னிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞன் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்த இலங்கை பொலிஸாருக்கு நன்றி என பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுலா வந்த 24 வயதுடைய நியூசிலாந்துப் பெண் ஒருவர் கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அறுகம்குடா பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் குறித்த வெளிநாட்டு பெண்ணிடம் தனது அந்தரங்க உறுப்பை காண்பித்து பாலியல் சேட்டையில் ஈடுபடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. பாதிக்கப்பட்ட நியூசிலாந்துப் பெண் இது தொடர்பில் கடிதம் ஊடாக பொலிஸில் முறைப்பாடு அளித்தார். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான இளைஞன் கைதுசெய்யப்பட்டு…

  5. இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்! யாழ்ப்பாணம் - வடமராட்சி கரணவாய், கூடாவளவு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர் 29 வயதுடைய ராஜகுலேந்திரன் பிரிந்தன் என்றும் அவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் நேற்றிரவு 12:00 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரை பின்தொடர்ந்து சென்ற கொலையாளிகள் அவர் மீது கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் தப்பிக்க இளம் குடும்பஸ்தர் போராட…

  6. ”திருகோணமலையை நேசிப்பவர்களுக்கு மட்டுமே திருகோணமலை சொந்தமாகும்” : ரொஷான் அக்மீமன திருகோணமலைக்கு வெளியே இருந்து வந்த சிறு குழுவொன்று திருகோணமலைக்குள் இனவாத மோதலை ஏற்படுத்த முயற்சித்தனர். இனவாத தீயால் எரிந்து இன்னும் அந்த காயங்களால் துடித்துக்கொண்டிருக்கும் திருகோணமலை மக்கள், அந்த முயற்சியை ஒன்றாக சேர்ந்து தோற்கடித்தனர். எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே நாம் இந்த தீயை அணைப்பதற்காக போராடினோம். எங்கள் ஆட்சியின் கீழ் மீண்டும் இனவாதம் என்ற தீயை எரிய அல்லது அதனை பயன்படுத்த ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டோம் என திருகோணமலை மாவட்டத்தின் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தெரிவித்தார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தையடுத்து திருகோணமலை மாவட…

  7. நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம்! adminNovember 19, 2025 தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும் நாட்டுபற்றாளர்களையும் மற்றும் பல ஆவணப்படுத்தல்களையும் கொண்டு அமைக்கின்றது இம்முறை நல்லூர் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமுறைகள் கடந்து வாழும் எம் மாவீரச் செல்வங்களின் நினைவாலயத்திற்கு உங்கள் இளைய தலைமுறையினரையும் அழைத்து வந்து வரலாற்றினைக் கடத்துங்கள்.உங்கள் மனப்பதிவுகளைப் பதிந்து விட்டுச் செல்லுங்கள் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. அதேவேள…

  8. போதைப்பொருளுடன் கைதான பிரபல தவில் வித்துவான் adminNovember 18, 2025 யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பிரபல தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார் . இணுவில் பகுதியை சேர்ந்த தவில் வித்துவான் , யாழ் நகர் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடுவதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரசிய தகவலின் அடிப்படையில் குறித்த வித்துவானை கைது செய்து சோதனையிட்ட வேளை அவரது உடைமையில் இருந்து 490 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை காவல்துறையினா் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , குறித்த நபருக்கு போதைப்பொருளை யாழ் . நகர் பகுதியில் வைத்து விற்பனை செய்த நபர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெற…

  9. தங்காலையில் துப்பாக்கிச்சூடு – தம்பதியர் உயிரிழப்பு! தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர். இன்று (18) மாலை 6.15 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுடன் சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1453164

  10. 18 Nov, 2025 | 05:22 PM இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளுக்கு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சார்பில் இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத…

  11. Published By: Digital Desk 3 18 Nov, 2025 | 05:20 PM தெளிவுத்தன்மை தான் நம்பிக்கையை உருவாக்கும் அடித்தளம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் மொண்டானா தேசிய காவல் படைக்கும இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான பாதுகாப்பு பங்காண்மையினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், (State Partnership Program – SPP) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) நவம்பர் 14ஆம் திகதி கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இரு தரப்புகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான எங்க…

  12. Nov 18, 2025 - 06:07 PM நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்தார். தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு 2014 போன்ற காலப்பகுதியில் ஒரு பழைய அனுமதிப்பத்திரம் உள்ளது. ஆனாலும், இது ஒரு விகாரை எனக் குறிப்பிடப்பட…

  13. திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள்.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது .அதற்கு இடமும் கிடையாது என ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். அத்துடன் திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை பகுதி இவ்வளவு காலம் விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் இதனுள் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில்…

  14. வடமராட்சிக் கடற்பரப்பில் நூற்றுக்கணக்கில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகுகளால் வடமராட்சி மீனவர்களின் பல இலட்சம் ரூபாபெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளன. இந்தவிடயம் தொடர்பில் வடமராட்சி மீனவர்கள் தெரிவித்ததாவது: வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த சில நாள்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் வடக்கு மீனவர்களின் வலைகள் வகைதொகை இன்றி அழிக்கப்படுகின்றன. இதனால், பல லட்சம் ரூபா நிதி இழப்பு ஏற்படுவதுடன். உயிர் பயத்தில் கடற்றொழில் நடவடிக்கையையும் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரக்க வரும் இந்தியப் படகுகளைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் சொல்கின்ற போதிலும்,…

  15. 17 Nov, 2025 | 04:58 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வகையிலான எச்.ஐ.வி தொற்று போக்கு காணப்படுகிறது. இவ்வாண்டில் புதிதாகப் பதிவான பெரும்பாலான எச்.ஐ.வி. தொற்றாளர்களில் ஆண்கயே அதிகளவில் காணப்படுவதாக தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய பாலியல் தொற்றுகள்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தரவுகளுக்கமைய, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) மாத்திரம் 200 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். முதல் காலாண்டில் இந்த எண்ணிக்கை 230ஆகப் பதிவாகியுள்ளது. இது 2009ஆம் ஆண்டிலிருந்து ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பதிவான புதிய தொற்றாளர்களில், 15–24 வயதுக்கு…

  16. 18 Nov, 2025 | 12:31 PM இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மேலும் செவ்வாய்க்கிழமை (18) வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப்…

  17. (இணையத்தள செய்திப்பிரிவு) APEX 2026 விருது வழங்கும் விழாவில் மத்திய/தெற்கு ஆசியப் பிராந்தியத்துக்கான சிறந்த உணவு மற்றும் பானங்களுக்கான விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்படும் சுவையான உணவு மற்றும் பானங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி பயண ஏற்பாட்டுச் செயலியான ‘ட்ரிப்இட் பை கான்கர்’ (TripIt by Concur) மூலம் சரிபார்க்கப்பட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. உலகலாவிய ரீதியில் உள்ள 600க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இந்த விருதுக்காக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்கள் பயணிகளின் மன…

  18. 18 Nov, 2025 | 04:05 PM திருகோணமலை சம்பவம் பௌத்த மதத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார தேரர் செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறுகையில், திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) இரவு வைக்கப்பட்ட புத்தர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பின்னர் திங்கட்கிழமை (17) பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்ட நிலையில் பொ…

  19. 18 Nov, 2025 | 05:18 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகாணத்தில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்க கூடாது.நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெறாத வகையில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகள் முறையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.தனிப்பட்ட பாதுகாப்பினை காட்டிலும் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு…

  20. யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்! யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர் கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது, வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் இன்றைய தினம் யாழ் .சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப்…

  21. 18 Nov, 2025 | 12:31 PM இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மேலும் செவ்வாய்க்கிழமை (18) வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப…

  22. பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது Nov 18, 2025 - 12:02 PM சமீபத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (18) பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தத் தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவா…

  23. பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்! அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பது உள்ளிட்ட கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் போதுமான ஆலோசனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கல்வி அமைச்சு, தொழிற்சங்கங்களுக்குத் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கப் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் சில சங்கங்கள் விவாதங்களில் ஈடுபடாமல் புறக்கணித்தன என்றும் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சுச் செயலாளர் நளக்க கலுவெவ கூறுகையில், அனைத்துச் சங்கங்களையும் பலமுறை அழைத்தும் சில பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்காமல் விலகிச் சென்றதாகவும், இது தங்கள் தரப்பில் உள்ள குறைபாடு அல்ல என்றும் திட்டவட்டமாகக்…

  24. யாழ். பல்கலைக்கழகத்தின் இலக்கு மக்களைச் சென்றடையவேண்டும்! கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தெரிவிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உண்மையான இலக்கை அடையவேண்டுமானால் அதனை ஒரு சமூக நிறுவனமாக மாற்றியாக வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மக்களைச் சென்றைடைகின்றபோது தான் சிறந்த மாற்றத்தைப் பெறமுடியும் என்று கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார். பருத்தித்துறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பெயர்த்தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழின் ஒரு அடையாளமாகும். அது ஒரு சமூக நிறுவனமாக மாற்றப்படவேண்டும். அவ்வாறு அது ஒரு சமூக நிறுவனமாக மாற்றப்படும் போதுதான் யாழ்ப்பாணப் பல்கலைக…

  25. யாழில். அதிக மழை – 14 பேர் பாதிப்பு 04 வீடுகள் சேதம்! adminNovember 18, 2025 கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் , மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும், யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை பதிவான மழை வீழ்ச்சியில் யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சியாக 101.7 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. அதேவேளை மழை காரணமாக 04 குடும்பங்களை சேர்ந்த 14 பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களின் நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன மேலும் கடந்த நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் மழை இன்றைய தினம் செவ்வாய்க்கிழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.