Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 18 DEC, 2024 | 05:19 PM (நமது நிருபர் ) இந்தியாவுக்கான விஜயத்தினை அடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளதாக 'தி ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கம் 'இருதரப்ப-கூட்டுவெற்றி' என்ற கோட்பாட்டுடன் அனைத்து நாடுகளுடன் உறவுகளை பேணவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது. டில்லியில் உள்ள இந்தியன் பவுண்டேசனில் ஒழுங்கப்பட்ட நிகழ்வென்றில் பங்கேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு நாங்கள் ஒரு புதிய அரசாங்கமாக, சீனா…

  2. 18 DEC, 2024 | 04:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ். வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து சபைக்கு முரணான வகையிலும் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகவும் உரையாற்றியதால் அவரின் உரை சபாநாயகரால் ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கப்பட்டது. பாராளுமன்றம் புதன்கிழமை (18) சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. இதனையடுத்து நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா வேளையின்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் வைத்தியசாலை தொண்டர் அடிப்படையிலான ஊழியர்கள் தொடர்பில் விசேட கூற்றை முன்வைக்க சபாநாயகர் அனுமதியளித்தார். முதலில…

  3. 18 DEC, 2024 | 05:22 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கொடிய யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட தேவைக்கு உட்பட்டுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ளன. பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான விசேட திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக விசேட திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (18) நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்த…

  4. 18 DEC, 2024 | 03:31 PM நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (18) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, கடந்தகால கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், அடுத்த காலாண்டுக்கு மேற்கொள்ளப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும், சரியான முறையில் கணக்காய்வு விடயங்களை முகாமை செய்யும்போது ஐய வினாக்களைத் தவிர்க்கலாம் எனவும், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் நடைமுறை ரீதியில் சமூக நலன் கருதி அபிவிருத்தித் திட்டங்களுக்காக சில முடிவுக…

  5. 18 DEC, 2024 | 01:42 PM கிளிநொச்சியில் சைகை மொழியை அரச மொழியாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்த வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும் இன்று புதன்கிழமை (18) கிளிநொச்சி நகர விளையாட்டு மைதான முன்றலில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் 5,000க்கும் மேற்பட்ட சைகை மொழி பேசுபவர்கள் இருக்கின்ற போதும் அந்த மொழிகள் அங்கீகரிக்கப்படாது இருக்கின்றது. அவர்கள் அரச தினைக்களங்களிலும் ஏனைய இடங்களிலும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என கோரி பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டார் தொடர்ந்து ஜனாதிபதிக்கான …

  6. எதிர்வரும் 2028 ஆம் ஆண்டும் தமது அரசாங்கமே ஆட்சியை அமைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். விசேட அறிக்கையொன்றை நாடாளுமன்றிற்கு விடுத்து இன்று பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 2028 ஆம் ஆண்டுக்குள் வெளிநாட்டு கையிருப்பை 15.1 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் வாகன இறக்குமதிக்கான அனுமதி மூன்று வழிமுறைகளில் வழங்கப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டு முதல் உழைக்கும் போது செலுத்தும் வரி திருத்தம் செய்யப்படும் என்றும் ஜன…

  7. தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் 11 வீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்க முடியும் என ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனைகள் குறித்த பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்த யோசனை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்னுற்பத்திக்காக வழங்கப்படும் எரிபொருளுக்கான விலை தொடர்பான அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொட…

  8. நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தியாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டால், ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சியாக இருக்கும்போது தேசிய மக்கள் சக்தி கூறியது. எனினும், தற்போது, இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்த எட்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டார். இந்தநிலையில், இந்தியா தொடர்பிலும், எட்கா தொடர்பிலும் முன்னதாக தெரிவித்த கருத்தைத் தேசிய மக்கள் சக்தி தற்போது மீளப் பெறுமா என ஐக்கிய மக…

  9. இந்தியா உட்பட 39 நாடுகளுக்கு இலவச விசா – விரைவில் வர்த்தமானி வெளியாகும் December 18, 2024 11:03 am இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”புதிய அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் சாதகமான உறவுகளை விரும்புகிறது ஒரு புதிய அரசாங்கமாக சீனாவுடனும், இந்தியாவுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இந்தியாவும் இலங்கையும் பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தக உறவுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளன. இலங்கையின் முதல் முன்னுர…

  10. Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம் December 18, 2024 12:32 pm பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் போது Paye tax தொடர்பில் அவர் வௌியிட்ட விடயம் கீழே தரப்பட்டுள்ளது. "நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது. மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு மேல் காணப்பட்டது. எங்களால் அதை 150,000 ஆக உயர்த்த முடிந்தது. மேலும், தனிநபர் வருமான வரியின் 1ஆவது வகையின் திருத்தத்தை 500,000 முதல் 10 இலட்சம் ரூபா வரையில் 6% வரிக்கு உட்பட்டதாக மாற்ற முடிந்தது. அதன்படி, மாதம் 150,000 ரூபா சம்பளம் பெறுபவர் 100% வரி விலக்கு. 200,000 சம்பாதிக்கும் நப…

  11. ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு மாற்றும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிய வருகிறது. கடந்த அரசாங்கம் இந்த அலுவலகங்களை இடமாற்றம் செய்ய திட்டமிட்டதுடன், இதன் மூலம் அவற்றின் தற்போதைய கட்டிடங்கள் கொழும்பு பாரம்பரிய கட்டிடங்களாக சுற்றுலாத்துறைக்காக அபிவிருத்தி செய்யப்படுவதற்காக எத்தனிக்கப்பட்டது. கடந்த அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த திட்டம் தற்போதைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்ட…

  12. யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் விபத்து - ஐவர் படுகாயம்! கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து ஒன்று, சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4மணியளவில் ஏ-9 வீதி, மிருசுவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்; கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பேருந்தும், அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சென்ற சிறிய ரக உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்று…

  13. யாழில். தனியார் கல்வி நிலைய வாசலில் கூடி நிற்கும் பெற்றோரால் வாகன நெரிசல்! adminDecember 18, 2024 யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் , அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என தனியார் கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போது, மாவட்டச் செயலகத்தில் கடந்த11 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மான…

      • Like
      • Haha
    • 8 replies
    • 591 views
  14. கோப் குழு தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம்! adminDecember 18, 2024 பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக SJB நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். https://globaltamilnews.net/2024/209401/

  15. 2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது பாடசாலை மாணவர்களில் 55 வீதத்திற்கும் அதிகமானோர் அதிக பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். கிராமிய மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/313867

  16. இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் பூர்த்தி! இலங்கை தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்த்துள்ள தந்தை செல்வா சிலைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன் நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா,சி.வி.கே. சிவஞானம்,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் …

  17. 2024 மூன்றாம் காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.5% வளர்ச்சி! 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் நேர்மறை வளர்ச்சி விகிதத்தில் 5.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, நிலையான விலையில் (2015) 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,987,544 மில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 3,151,941 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5.5 சதவீத நேர்மறையான வளர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் மூன்றா…

  18. நாடு திரும்பினார் ஜனாதிபதி! இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி, இவர்கள் நேற்றிரவு (17) 10.00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 மூலமாக அவர்கள் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 15 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டார். இந்தச் சுற்றுப் பயணத்தின் போது இந்திய பிரதமர் நர…

    • 2 replies
    • 438 views
  19. நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையில்! கொழும்பு, கண்டி, காலி மற்றும் வடமாகாணத்தில் காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மைய மோசமான வானிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் சாதகமற்ற நிலையில் உள்ளது. இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பரிசோதனைகளின் போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீங்கு…

  20. சவதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை திருத்த சந்தர்ப்பம் கிடைத்தும் அரசாங்கம் ஒரு வசனத்தையேனும் திருத்தவில்லை - ஹர்ஷடி சில்வா Published By: Vishnu 18 Dec, 2024 | (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சவதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தும் அரசாங்கம் ஒரு வசனத்தையேனும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்தியாவுக்கு விஜயம்…

  21. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போர் எத்தனை பேர்? - தகவல் கோரிக்கைக்கு அமைய தரவுகளை வெளியிட்டது சட்டமா அதிபர் திணைக்களம் Published By: Vishnu 18 Dec, 2024 | (நா.தனுஜா) சட்டமா அதிபர் திணைக்களத்தின் தரவுகளின்படி கடந்த ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 6 பேரும், உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக 24 பேரும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்குப் புறம்பான பயங்கரவாதத்தடைச…

  22. இமாலயப் பிரகடனத்தினை முன்னெடுக்கும் பணிக்காக மக்கள் இயக்கமொன்றை உருவாக்குங்கள்; பலதரப்பட்ட பங்கேற்பாளர்களும் வலியுறுத்தல் Published By: Vishnu 18 Dec, 2024 | இமாலயப் பிரகடனத்தினை தொடர்ந்தும் தேசிய உரையாடலாக முன்னெடுத்துச் செல்வதற்கான பணியை மக்கள் இயக்கமொன்றை உடனடியாக உருவாக்கி ஒப்படையுங்கள் என்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட மட்டத்திலான உரையாடல்களில் ஆணித்தனமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணகத்தை நோக்கிய இமாலயப்பிரகடனம் பற்றிய உரையால் கடந்த 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த…

  23. 17 DEC, 2024 | 06:58 PM (எம்.மனோசித்ரா) இந்து - லங்கா ஒத்துழைப்பினை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கூட்டு அறிவிப்பை வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று எட்கா ஒப்பந்தத்துடன் முன்னோக்கி செல்வதற்கான தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை (17) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரால் திங்…

  24. 17 DEC, 2024 | 09:02 PM முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்புதொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2024 நவம்பர் 27நாளில் எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளைச்செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர். அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது ந…

  25. தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சிதா சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய நிலையில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த காலங்களில் வடக்கு மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், அதற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். குறிப்பாக இந்தியாவின் தமிழக மாநிலத்தில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.