Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'பிரபாகரன் இல்லாமல் விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்க முடியாது!' கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இல்லாததால், அந்த இயக்கம் மீண்டும் தலைதூக்க முடியாது என்று இலங்கை அரசின் வடக்கு மாகாணக் கவுன்சில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்து உள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து வெடிபொருள்கள், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் பயன்படுத்தும் மேல் சட்டைகள், தோட்டாக்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை சமீபத்தில் கைப்பற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் இலங்கையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வந்தன. மேலும், கைப்பற்றப்பட்ட வெடிபொருள்கள…

    • 0 replies
    • 451 views
  2. Views - 114 அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்குமிடையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் வைத்து, பிக்கு ஒருவர் தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்த கருத்துக்கு, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மன்னிப்புக் கோரியமைக்கு, சரத் பொன்சேகா எதிர்ப்புத் தெரிவித்தையடுத்தே, இந்தத் தர்க்கம் ஏற்பட்டது. கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில், நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சர் சரத் பொன்சேகா, ஓர் அமைச்சர், அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புணர்ச்சியை மீறுவதாகத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்தத…

    • 0 replies
    • 397 views
  3. வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பிரிவிவைச்சேர்ந்த இரு இளம் பெண்கள் சிறிய ரக சொகுசு வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டு துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது. கலாசாரத்தினை சீரழிக்கும் வகையில் மக்களின் வறுமையை காரணமாக பயன்படுத்தி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் அறியமுடிகின்றது. இது தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர். http://www.tnnlk.com/?p=3410

    • 1 reply
    • 1.3k views
  4. போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கில், 65,000 இரும்புப் பொருத்து வீட்டுத் திட்டத்தை மாற்றி கல் வீடுகளை வழங்குமாறு கோரியும், சம்பூர் அனல் மின்நிலையத் திட்டத்தை நிறுத்தி மாற்றுத் திட்டத்தைச் செயற்படுத்த வலியுறுத்தியும், சுன்னாகம் நிலத்தடி நீரில் கலந்துள்ள கழிவு எண்ணெயால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கக் கோரியும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தவுள்ளது. இதில் ஏனைய சமூகமட்ட அமைப்புக்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், சமூக அக்கறை கொண்ட மக்கள் சார்பு அரசியல் செயற்பாட்டாளர்களையும், பிரச்சினைகளை எதிர்நோக்கி நிற்கும் மக்களை…

    • 3 replies
    • 678 views
  5. புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட புலிகளின் சீருடைத் தொப்பி ஒன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் விரைவு அஞ்சல் நிலையம் (கூரியர்) ஒன்றிலிருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. இந்த பொதியில் இருந்து ரின் மீன், ஆடைகள் மற்றும் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பொதி வவுனியாவில் இருந்து மோதறைக்கு வந்திருந்த அந்தப் பொதியில் எந்தவிதமான பதிவு இலக்கங்களும் இல்லாத காரணத்தினால் நாரஹேன்பிட்டியில் உள்ள தலைமை காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது. குறித்த பொதியில் பதிவு இலக்கங்கள் காணப்படாத காரணத்தினால் அப் பொதியை தலைமை காரியாலய அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்வையிட்டுள்ளனர். இதன்போதே குறித்த பொருட்களுடன் புலிச்சி…

  6. மட்டு மாவட்டத்தில் சிங்கள வீராங்கனைகளுக்கு மத்தியில் ஒரு தமிழ் பெண் - வறுமையிலும் ஒரு சாதனை மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த இராசா கஜேந்தினி (வயது 19) என்ற பெண் தேசிய கபடி அணிக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பெண்கள் கபடி அணியில் இடம் பிடித்த ஒரே ஒரு தமிழ் பெண் ஆவார். கிரான் மத்திய கல்லூரியின் மாணவியான இவர், 12 பேர் கொண்ட கபடி அணியில் 11 சிங்கள பெண்களுக்கு மத்தியில் ஒரே ஒரு தமிழ் பெண்ணாக தெரிவாகியுள்ளார். எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் தனது முதலாவது கபடி போட்டியில் பங்குபெறுவதற்காக ஈரான் பயணமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்(அ…

  7. இனப்பிரச்சனைக்கான தீர்வு கேள்விக்குறியே எனவும், பேரினவாத சக்திக்குட்டப்பட்ட அரசியலே தற்போது நடைபெறுகின்றது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனைச் சந்தித்ததன் பின்னரே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் தற்கொலை அங்கி வெடிபொருட்கள் மீட்டமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும். சிங்கள ஊடகங்கள் இதனைப் பிழையான முறையில் வெளிப்படுத்தி வருகின்றன. இதிலுள்ள விளைவுகள் குறித்து நன்கு விளங்கி கருத்துக்களை வெளியிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். என்ன நடந்ததென்று விரிவாக ஆராயாது பேசுவது நாட்டிற்கு உகந்ததல்ல. …

    • 0 replies
    • 494 views
  8. “போராட்டத்தை அங்கீகரித்தல்: காணாமல்போகச் செய்யப்பட்டோரின் குடும்பங்களை மீதான அரசாங்கத்தின் பொறுப்புக்கள்” என்ற தலைப்பில் ருக்கி பெர்னாண்டோவால் சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் (Law & Society Trust) ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் ஆற்றப்பட்ட உரையின் மொழிபெயர்ப்பாகும். முதலில் கிரவுண்விவ்ஸ் தளத்தில் இல் வெளியிடப்பட்டது). ### சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்ச்சியொன்றில் சிவில் சமூகத்தின் வகிபங்கு பற்றி உரையாற்றியமை எனக்கு குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும். ஏனெனில் சட்டம் மற்றும் நம்பிக்கை நிதியத்தினால் காணாமல்போகச்செய்யப்பட்டோரின் குடும்பங்களுடன் பணியாற்றும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருந்தது. காணாமல்போகச் செய்தல்களுக்கு எதிர…

    • 0 replies
    • 557 views
  9. யாழ். வடமராட்சிக் கிழக்கு பகுதி தேசிய பூங்கா எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமராட்சிக் கிழக்கு போக்கறுப்பு, சுண்டிக்குளம், கட்டைக்காடு, முள்ளியான், நிச்சியவெட்டை ஆகிய பிரதேசங்களை வனஜீவராசிகள் திணைக்களம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால், இப்பகுதிகளில் மக்களின் காணிகள், விவசாய நிலங்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பிரதேசங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதால் இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் பிரதேச செயலர் எஸ்.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பி…

    • 0 replies
    • 446 views
  10. சிறிலங்கா அரசாங்கம், வடக்கு மாகாணத்தை ‘அதிகாரத்துவ, மேலாதிக்க, அராஜக’ மனப்பாங்குடன் நடத்துவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தி ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பாக சிறிலங்காவின் மத்திய அரசாங்கமானது மாகாண மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் விரிவாகக் கலந்துரையாடவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு 65,000 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான திட்டம் ஒன்று தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீட்டுத் திட்டம் தொடர்பாக சிறிலங்காவின் மத்திய அரசாங்கமானது மாகாண …

    • 0 replies
    • 307 views
  11. எதுவும் அறியாத ஜனாதிபதி நாட்டுக்கு தேவையா.? பாராளுமன்றத்தில் சண்டித்தனமாக நடந்துகொள்ளும் பிரதமரும் நாட்டில் நடக்கும் விடயங்கள் எதுவும் அறியாத ஜனாதிபதியும் நாட்டுக்கு தேவைதானா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்தார். சரத்பொன்சேகாவை கொலைசெய்ய திட்டமிட்ட மொரிஸை விடுதலை செய்வது நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் எனவும் தெரிவித்தார். புத்திஜீவிகள் மற்றும் நிபுணத்துவர்களின் குரல் அமைப்பு நேற்றைய தினம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்த கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/4872

    • 3 replies
    • 562 views
  12. வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் வருடாந்த வருடப்பிறப்பு விளையாட்டு நிகழ்வு, வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று இடம்பெற்றது. புனர்வாழ்வு அமைச்சின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுக்கொண்டிருக்கும் முன்னாள் போராளிகள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு நிலையத்தின் வவுனியா பணிப்பாளர் உட்பட புனர்வாழ்வு திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். http://www.tamilmirror.lk/169693/%E0%AE%AA-%E0%AE%A9%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%…

    • 0 replies
    • 585 views
  13. நாட்டில் திடீரென 3000 பேர் செல்வந்தர்களாகியுள்ளனர் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்களில் அரசியல்வாதிகளும் அரச உயர் அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தகவல்களின் பிரகாரம் அரச உயரதிகாரிகள் 250 பேரும் உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளில் பெரும்பான்மையானவை கல்வி, பொலிஸ், மோட்டார் வாகனப் போக்குவரத்து உட்பட பல்வேறு பிரிவுகள் தொடர்பாகவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அரசியல்வாதிகள் உட்பட அரசின் உயர் அதிகாரிகள் 5 பேருக்கு எதிராக தற்போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …

  14. பிளவடைகின்றது கூட்டமைப்பு ; மூன்று மேதினக் கூட்டங்கள் நடைபெற வாய்ப்பு [ Wednesday,6 April 2016, 03:54:25 ] கூட்டு எதிர்க்கட்சியினர் மே தினத்தை தனித்தே நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் பங்கேற்பார்கள் என அமைச்சரும், கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர நேற்றைய தினம் கூறியுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் பங்கேற்காமல் வேறுகூட்டங்களில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள…

    • 8 replies
    • 1.4k views
  15. பொன்னகரை அண்மித்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கிளிநொச்சி பொன்னகரை அண்மித்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, கிராம சேவையாளர், கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றை உள்ளடக்கிய குழுவினர் குறித்த பகுதியை பார்வையிட்டுள்ளனர். அதன்படி குறித்த பகுதியில் மது அருந்தப்பட்ட தடயங்கள் மற்றும் பாலியல் செயற்பாடுகள் இடம்பெற்றமைக்கான சான்றுகளும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் உடனடியாக பிரதேச செயலாளர் ஊடாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், உடன் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. கிளிநொச்…

    • 0 replies
    • 323 views
  16. ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் ஐ.எஸ் ஆயுததாரிகளாக மாறுவதை தடுக்க நடவடிக்கை [ Wednesday,6 April 2016, 03:00:32 ] ஸ்ரீலங்காவில் ஐ.எஸ் ஆயுததாரிகள் தலைதூக்குவதைத் தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் தீவிரவாதம் செயற்படுகின்ற வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் மற்றும் உள்நாட்டில் இனங்காணப்பட்டுள்ள கடும்போக்காளர்களின் குடிவரவு குடியகல்வு செயற்பாடுகளை கண்காணிக்கவுள்ளதாகவும் அவர் நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார். ஐ.எஸ் ஆயுததாரிகள் தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், உள்…

    • 1 reply
    • 548 views
  17. இலங்கை விமானப்படை தளபதி ககன் புலத்சிங்கலவை பாதுகாக்கும் நோக்கில் நான்கு மெய்பாதுகாவலர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக ஒரு கோடி 63 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவார கால பயிற்சிக்காக பெருமளவு மக்களின் பணத்தை செலவிடப்பட்டமை ஆச்சரியமான விடயமாக பார்க்கப்படுகிறது. விமான படை தளபதியின் மெய்பாதுகாவலர்களான விங் கொமாண்டர் மூவருக்கும் உள்ளிட்ட நால்வருக்கு பயிற்சி வழங்குவதற்காக இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதற்காக செலவிடப்பட்ட பணத்தின் பெறுமதி 163 இலட்சமாகும். அந்த பிரமாண்டமான செலவு பயிற்சியினை நிறைவு செய்துகொண்டு கடந்த மார்ச் மாதம் 30ம் திகதி அவர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இலங்கை வரலாற்றில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவ தளபதியி…

    • 1 reply
    • 398 views
  18. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை, முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலத்திலேயே இச்சந்திப்பு, சுமார் 20 நிமிடங்கள் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பொலிஸாரை பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது. மஹிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சென்றிருந்ததுடன்; பிரதமர் ரணில்…

    • 2 replies
    • 583 views
  19. ஜப்பான் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரிய விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரை பலவந்தமாக நாடு கடத்தியமைக்கு அந்நாட்டு சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஜப்பான் சட்டத்தரணிகள் சங்க வலையமைப்பு கடந்த மார்ச் 2ஆம் திகதியன்று அந்தநாட்டின் நீதியமைச்சரிடம் ஆட்சேபனை கடிதம் ஒன்றை கையளித்துள்ளது. இந்த செயற்பாடு, ஜப்பானிய குடிவரவுத் திணைக்களத்தின் ஆளுமையற்ற செயற்பாடு என்றும் சட்டத்தரணிகள் வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் பல்வேறு தடவைகள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த புலி உறுப்பினர் தொடர்பில் சர்வதேச அகதிகள் சட்டத்துக்கு இணங்க பல மனிதாபிமான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். அத்துடன் ஒரு நாட்டில் குற்றச்சாட்டுக்குள…

  20. தனக்கு எதிராக எத்தனை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தாலும் தான் பயப்படப் போவதில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற உற்சவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் பத்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு சென்றாலும் நான் பயப்படும் பெண் இல்லை. நாங்கள் பணத்திற்கு விலை போகாதவர்கள். நாங்கள் பணத்தை எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பணத்திற்காக வேலை செய்பவர்கள் யாரென்று எனக்குத் தெரியும். இது சம்பந்தமாக அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பேன். ஏனெனில் எனக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் நிறையவுள்ளதாகவும் தலதா அத்துகோரள தெரிவித்த…

  21. புலம்பெயர்ந்தோர் மீதான தடைநீக்கத்தின் விளைவே தற்கொலை அங்கி மீட்பு (க.கமலநாதன்) ஆட்சி மாற்றத்தின் பின்னர் 12 புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டது. அதன் விளைவாகவே இன்று நாட்டில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்களை விசாரணை செய்யும் புலணாய்வு பிரிவினர் சிவாஜி லிங்கம், வடமாகாண முதலடைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் போன்ற பிரிவினை வாதிகளை ஏன் விசாரணை செய்யவில்லை என தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர கேள்வி எழுப்பினார். மத்திய அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களிலும் மாகாண சபையின் சட்டத்திட்டங்களில…

    • 1 reply
    • 426 views
  22. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் தலைமைத்துவத்திலான தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக விமல் வீரவங்ச பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தான் எழுத்துமூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவித்திருந்த போதிலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை அவர் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என விமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டு அறிவிக்கப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய இதன்போது அறிவித்துள்ளார். http://www.tamilwin.com/show-RUmuyETZSXlw1I.html

  23. வடமராட்சி மணற்காடு பிரதேசத்தில் 4 ஏக்கர் சவுக்கு காடுகள் திங்கட்கிழமை (04) மாலை ஏற்பட்ட தீ விபத்தால் அழிவடைந்துள்ளதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கே.கனகேஸ்வரன், செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தார். சவுக்கு காட்டில் ஏற்பட்ட தீயை யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து அணைத்தமையால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் விசமிகள் சிலர் வேண்டுமென்றே தீ வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. சவுக்கு விறகுகள் எடுப்பதற்காக சவுக்கு காடுகளை தீவைத்து எரிக்கும் சம்பவம் அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்குப் பகுதியில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/169563#sthash.4y…

    • 0 replies
    • 373 views
  24. சம்பூர் மீள்குடியேற்றத்தில் மக்கள் மத்தியில் எல்லைப் பிரச்சினை இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள சம்பூர் பிரதேச மக்கள் தங்கள் காணிகளின் எல்லைகளை அடையாளம் காண்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்படை முகாம் அமைக்கப்பட்டிருந்த தமது குடியிருப்பு காணிகளில் 10 ஆண்டுகளின் பின்னர் மக்கள் கடந்த மாதம் 25ஆம் தேதி மீளவும் குடியேற்றப்பட்டிருந்தனர். மீள் குடியேறியுள்ள மக்கள் தமது காணிகளையும் குடியிருப்புக்களையும் அடையாளம் கண்டுள்ள போதிலும் தமது எல்லைகளை அமைத்துக்கொள்வதில் முரண்பாடுகள் காணப்படுவதாக கூறப்படுகிறது. காணி எல்லைகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட கைகலப்புகளில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்த நிலையில் சிகிச…

  25. மூன்று வருட காலப்பகுதிக்குள், இந்தியப் பிரஜைகள் 1,200 பேர், இலங்கையில் சிறுநீரகத்தைத் தானம் வழங்கியுள்ளதாக, வழக்குரைஞர் லக்ஷான் டயஸ், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று கொண்டுவந்தார். விசா சட்டங்களை மீறியமைக்காக அண்மையில் கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜைகளுக்கு எதிரான வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில், நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த வழக்குரைஞர் லக்ஷான் டயஸ், ஒவ்வொரு சிறுநீரகமும் தானமாகவே வழங்கப்பட்டுள்ளது. இந்த 1,200 பேரும், இலங்கையில் உள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரின் ஆலோசனைக்கு அமையவே, சிறுநீரகத்தைத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.