Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சிக்கும் பூநகரிக்கும் இடையிலான போக்குவரத்துப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்று பாதிக்கப்படும் மக்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியிலிருந்து பூநகரிக்கு செல்வது என்பது பெரும் நெருக்கடி மிக்க பயணமாகவே காணப்படுகின்றது. குறிப்பிட்ட சில பேருந்துகள் மாத்திரமே கிளிநொச்சிக்கும் பூநகரிக்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுகிறது. இதனால் அவசரத்திற்கு போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலையே கடந்த சில வருடங்களாக நீடித்து வருகிறது. அன்றாட தேவைகளுக்காக புறப்படும் மக்கள், அரச உத்தியோகத்தர்கள், ஏனைய தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் இதனால் சிரமங்களுக்கு உள்ளாகுவதாகவும் குறிப்பிடுகின்றனர். குறிப்பிடத்தக்க பேருந்துகளில் பெரும் நெரிசலி…

    • 0 replies
    • 300 views
  2. தமிழீழவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலம் புதைக்கப்பட்டது என முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரபாகரனின் சடலம் எரிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நந்திக்கடல் இறுதிக் கட்ட யுத்தத்தின் பின்னர் பிரபாகரனின் சடலம் மீட்கப்பட்டது எனவும் எனினும், பிரபாகரனின் சடலம் எரிக்கப்பட்டு அஸ்தி கடலில் வீசப்பட்டதாக மற்றுமொரு முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய இராஜதந்திரியுமான தயா ரட்நாயக்க கூறியதாக யாழ்ப்பாண பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பொட்டு அம்மானின் சடலமும் எரிக்கப்பட்டு அஸ்தில் கடலில் வீசப்பட்டதாகவும் தயா ரட்நாயக்கவின் தகவல்கள் பிழையானது என …

    • 0 replies
    • 516 views
  3. "ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்படுவது சர்வசாதாரண விடயம். ஆனால், சாவகச்சேரி சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், தமிழரின் ஆயுதப் போராட்டம் மீண்டும் தலைதூக்கப் போகின்றது என்றும் தெற்கில் உள்ள சிலர் ஊளையிடுகின்றனர். இது வேடிக்கையானது. மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடி உரிமைகளைப் பெறவே எமது மக்கள் விரும்புகின்றனர்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவத்தின் உண்மை நிலை விசாரணையின் பின் வெளிவரும் என்றும் அவர் குறிப்பிட்டார். யாழ். தென்மராட்சி, சாவக…

    • 0 replies
    • 422 views
  4. அண்மையில் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பகுதிகளான பலாலி வடக்கு, பலாலி கிழக்கு பகுதிகளில் சட்டவிரோத கல் அகழ்வு மற்றும் காட்டுமரங்கள் திருடப்படுவதாக அப்பகுதியில் குடியமர்ந்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். விடுவிக்கப்பட்ட பகுதிகள், பலாலி பொலிஸ் எல்லைக்குட்பட்டதாக காணப்படுகின்றது. பலாலி பொலிஸ் நிலையம் மக்கள் மீளக்குடியமர்ந்தும் தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் காணப்படுவதானால், தாம் பெரிதும் சிரமங்களை எதிர்;கொண்டு வருவதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அப்பகுதியில்; பொலிஸ் நிர்;வாக நடவடிக்கைகளுக்கான பொறுப்பினை அச்சுவேலி பொலிஸாரே மேற்கொண்டு வருகின்றனர்;. இப்பகுதி விடுவிக்கப்பட்ட போதும், இரவு நேரங்களில் பெறுமதியான வேம்பு, ப…

    • 0 replies
    • 396 views
  5. வடக்கில் படைமுகாம்கள் பற்றி அறிய பிரித்தானியா இரகசிய ஒப்பந்தம் வடக்கில் உள்ள முப்படை முகாம்கள் அமைந்துள்ள இடங்கள் குறித்து அறிய பிரித்தானிய அரசாங்கம், இலங்கையில் உள்ள அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கு இரகசியமான ஒப்பந்தத்தை வழங்கியிருப்பதாக சிங்கள வார பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்ததத்தின் அடிப்படையில், முப்படையினரின் முகாம்கள் அமைந்துள்ள அரச காணிகள் மற்றும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விடயங்களை கண்டறியப்பட உள்ளன. இதற்கான சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவனத்திற்கு மில்லியன் கணக்கிலான பவுண்ட் வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைககளுக்கு வடக்கில் நில அளவை பிரிவினரிடமும் உதவி பெறப்பட்…

    • 0 replies
    • 347 views
  6. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் திடீரென இலங்கை வந்த இவர், இன்று காலை முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பில் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதேவேளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, பாதுகாப்புச் செயலர் கரணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் …

    • 2 replies
    • 702 views
  7. அச்சவேலி- நவக்கிரி பகுதியில் இன்று அதிகாலை தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 100 பவுணுக்கும் அதிகமான நகைகளும் 25 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் கொள்ளையர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர் எனக் கருதப்படும் வாகனச் சாரதி ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் கொள்ளையர்கள் பறித்துச் சென்ற இரு சைக்கிள்களும் ஆவரங்காலில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:- வெளிநாட்டில் இருந்து வந்து அச்சுவேலி கிழக்கில் தங்கிநின்ற ஒருவரின் வீட்டில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை தாக்கியும் வாள் முனையில் அச்சுறுத்திய…

    • 2 replies
    • 518 views
  8. நீர்வேலி தெற்கில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் குழுவொன்று மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர். சுமார் 10 பேர் கொண்ட இளைஞர் குழு குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வீட்டு உரிமையாளரை பொல் மற்றும் வாள்களால் ஓடஓடத் தாக்கியுள்ளது. இதனைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் உதவிக்குச் சென்ற வேளை தந்தையும் 2 மகன்களும் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பா. தயாளன், எஸ். செல்வராசா, செ.ஜெயக்குமார், செ.சிவகுமார் எஸ். பெரியதம்பி, கே. குகா ஆகியோரே வாள்வெட்டுக்கு இலக்காகி கிகிச்சை பெற்று வருகின்றனர். வாள்வெட்டுக்கு இலக்கான பா.தயாளன் என்பவருடைய வ…

  9. நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஒற்றுமை என்பவற்றிற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் அண்மையில் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட தற்கொலை குண்டு அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் என்பன தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். …

  10. வடமாகாண தமிழ் மக்களால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதால் அவர்களின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்குமே பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளதென முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அண்மையில் ஹிக்கடுவயில் இடம்பெற்ற 32வது முதலமைச்சர்கள் மாநாட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்ளாமை தொடர்பாக ஜாதிக ஹெலஉறுமயவின் தேசிய அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். முதலமைச்சர் பிரிவினைவாத மற்றும் இனவாத நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாகவும், இவை தேசிய நல்லிணக்கத்திற்கு தடங்கலாக இருப்பதாகவும், வடமாகாணசபை 2015ஆம் ஆண்டில் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20 வீதமான நிதியை மட…

  11. தற்காலத்தில் தொழில் நிமிர்த்தம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வது மிகவும் ஆபத்தான விடயமாக உள்ளது. வறுமையால் தமது பொருளாதார நிலையினை உயர்த்திக்கொள்ளவும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டும் குறிப்பாக தாய்மார்கள் வெளிநாடு செல்வதால் அவர்களின் பிள்ளைகள் அநாதரவாக்கப்படுகின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். கித்துள் பிரதேசத்தில் வியாழக்கிழமை (31) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இதனால், 'பிள்ளைகள் பாடசாலையை விட்டு இடைவிலகுவதுடன் துஷ்பிரயோகங்களுக்கும், உளவியல் ரீ…

    • 0 replies
    • 326 views
  12. வவுனியாவின் கொக்கெலிய பகுதியில், சத்விருகம என்ற பெயரில், புதிய கிராமம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவிருக்கும் விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது. சத்விருகம என்பது, நல்லிணக்கக் கிராமம் என்று தமிழில் அழைக்கப்படுகிறது. ஆனால், தமிழில் அந்தப் பெயர் நிலைக்கப் போவதில்லை. ஏனென்றால், ஏற்கெனவே, கொக்குவெளி என்று தமிழில் அழைக்கப்பட்ட கிராமம் தான், தற்போது கொக்கெலிய என்று சிங்களப் பெயரில் அழைக்கப்படுகிறது. மாமடு குளத்தைச் சுற்றி உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள், இப்போது புதிய சிங்களக் கிராமங்களாகப் பிறப்பெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழர்களின் பாரம்பரிய நிலப்பகுதிகளும் காணிகளும் இதற்குள் விழுங்கப்படும் நிலை தொ…

    • 0 replies
    • 552 views
  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணிப் பொறுப்பாளர் தமிழினியின் சுயசரிதை நூல் இராணுவத்தினர் மீதான போர்க்குற்றங்களை மறுதலிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது. குறித்த கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிரணி பொறுப்பாளர் தமிழினியின் நூல் இறுதிப் போர் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக விடுதலைப் புலிகள் பொதுமக்கள் மத்தியில் பீரங்கிகளை நிலைநிறுத்தி இராணுவத்தினர் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பான பதில் தாக்குதல்களின் போது பொதுமக்களும் காயமடைந்ததாக தமிழினி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறாக இறுதிப் போர் குறித்து மேலும் பல தகவல்கள் தமிழினியின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

  14. தேசிய பாதுகாப்பு அதிமுக்கியம்-மஹிந்த வலியுறுத்தல் இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் வட பகுதியில் மீட்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் பழயவையாக இருக்க வாய்ப்பு இல்லை எனவும் மஹிந்த கண்டியில் கூறியுள்ளார். போர் முடிவடைந்துவிட்டாலும் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விழ்ப்புடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் எனக் கூறிய அவர், தற்போது புலனாய்வு பிரிவு முறையாக செயல்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். வடக்கில் வெடிபொருட்கள் மீட்கப்படும் சம்பவங்களை சிறு விடமாக எடுத்துக்கொள்ளாமல், அது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ள …

    • 1 reply
    • 421 views
  15. யாழ்.திறந்த நீதிமன்றத்தில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது! ஐந்நூறு ரூபாய் நோட்டில் ஆப்பு! யாழ். திறந்த நீதிமன்றத்தில் வைத்து 500ரூபா லஞ்சம் வாங்கிய பொலிஸார் கடமையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் பிரச்சினையில் தடுமாறிக்கொண்டிருந்த போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 500 ரூபா தருமாறும், அந்த வேலையை முடித்துத் தருவதாகவும் நபரிடம் கேட்டுள்ளார். பொலிஸாருக்கு பணத்தினை கொடுத்த நபர், பணத்தில் உள்ள இலக்கத்தினை பதிவு செய்து விட்டு, யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். நீதிமன்றில் நின்ற அனைத்துப் பொலிஸாரையும் நீதிப…

  16. இலங்கையில் அரசு-தனியார் இணைந்து தொடங்கிய முதல் ஆடைத் தொழிற்சாலை திறப்பு இலங்கையில் அரசாங்கமும் தனியார் துறையும் இணைந்து தொடங்கிய முதலாவது ஆடைத் தொழிற்சாலை கிழக்கு மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில் திறக்கப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலையில் 300 பேருக்கு வேலை வாய்ப்பு போரினால் பாதிக்கப்பட்ட அல்லது கணவனை இழந்த பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் இப்படியானத் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதாக மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் திறக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலையில் தற்போது 300 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் புதிய ஆடைத் தொழிற்சாலைகள் மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்-முஸ்லிம் பெண்களி…

  17. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மேற்கொண்ட விமானப் பயணங்களுக்கு திவிநெகும நிதியம் ஊடாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. விமானப் படைக்குச் சொந்தமான விமானங்களைப் பயன்படுத்தி பசில் ராஜபக்ச உள்நாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தார். இதற்காக பல கோடி ரூபா செலுத்தப்பட்டுள்ளது. பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இந்த விசாரணைகளின் போது பசில் பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=154638&category=TamilNews&am…

  18. முல்லைத்தீவு மாவட்டத்தின், சுதந்திரபுரம், வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் இனந்தெரியாத நபர்கள் இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிள்களில் நள்ளிரவில் உலாவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுக்குடியிருப்பில் இருந்து குறித்த பிரதேசங்கள் நீண்ட தூரம் என்பதினால் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகள் குறைவாக உள்ளன. மர்ம நபர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். குறித்த பிரதேசத்தில் அண்மையில் வர்த்தக நிலையம் ஒன்று உடைத்து பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=154637&category=TamilNews&language=tamil

  19. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை முன்னிட்டு, வவுனியா மாவட்டத்தில் சந்தேகப்படும் இடங்கள், சந்தேகத்திற்கிடமான வாகனங்களை, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து சோதனை செய்து வருகின்றனர். அத்தோடு ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வுப் பிரதேசங்கள் மற்றும் அதனை அண்டிய பிரதேங்கள் என்பனவும் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது. நாளை வடக்கு மாகாணத்திற்குச் செல்லும் ஜனாதிபதி வவுனியாவுக்கும் செல்லவுள்ளார். வவுனியாவில் இராணுவக் குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்ட வீட்டுதிட்டத்தைத் திறந்துவைத்து அவர்களிடம் கையளிக்கவுள்ளார். இந்நிகழ்வை முன்னிட்டு பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார், இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்…

  20. விடுதலைப் புலிகள் மீள் ஒருங்கிணைக்கப்படுகின்றார்களா என்பதை அறிவதற்கான உரிமை மக்களுக்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி தெரிவித்துள்ளார். சாவகச்சேரி பகுதியில் தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி தனது ரூவிட்டர் வலைத்தளத்தில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் மீள் எழுர்ச்சி பெறாது என நினைத்தவர்கள் அது தொடர்பில் மீள சிந்திக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பின்னடைவிற்கு மாத்திரமன்றி நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமைக்கு அரசாங்கமே கட்டாயம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=154468&categor…

    • 4 replies
    • 841 views
  21. சிறுமியை தாயாக்கிய வயோதிபர் சாவு! பதினான்கு வயது பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வயோதிபரான கந்தையா சித்திவிநாயகம் என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபருக்கு நேற்று முன்தினம் 15 ஆண்டுகள் கடூழியச் சிறையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 லட்சம் ரூபா நட்டயீடு செலுத்துமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி இந்த வல்லுறவு சம்பவம் நடைபெற்றது. அப்போது பாதிக்கப்பட்ட பெண் 14 வயது பாடசாலை மாணவியாக இருந்தார். அவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய எதிரி 62 வயதுடைய …

  22. சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி 2008ம் ஆண்டு பத்திரிகையில் சுற்றப்பட்டிருந்தது – ரணில் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி 2008ம் ஆண்டு செய்தித்தாள் ஒன்றிலேயே சுற்றப்பட்டிருந்தது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பழைய தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்படுவது வழமையான ஒன்றே என அவர் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலக யுத்தத்தில் மறைத்து வைக்கப்பட்ட அல்லது பயன்படுத்தபட்ட ஆயுதங்கள் சில நாடுகளில் இற்றை வரையில் மீட்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தொலைபேசி அழைப்பின் மூலம் தம்மிடம் கோரியதாகத் தெர…

    • 1 reply
    • 661 views
  23. முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சற்றுமுன்னர் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வில் ஆஜராகியுள்ளார். கடந்த புதன்­கி­ழ­மை­யன்று சாவ­கச்­சேரி மற­வன்­பு­லவு பகு­தியில் உள்ள வீடொன்­றி­லி­ருந்து தற்­கொலை குண்டு அங்­கியும் வெடி­பொ­ருட்­களும் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. இது­தொ­டர்­பாக ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் கலந்­து­கொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் அப்­பொ­ருட்கள் வௌ்ளவத்தைப் பகு­திக்கு எடுத்­து­வ­ரு­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­தாக குறிப்­பிட்டு கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கேள்­வ…

    • 3 replies
    • 466 views
  24. அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாக உள்ள நயினாதீவில் அமைக்கப்படவுள்ள அறுபத்து ஏழு அடி புத்தர் சிலை தமிழர்களை வலிந்து யுத்தத்திற்கு இழுக்கும் செயலாகவே அமையும், இது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் ஒரு வடிமாகவே உள்ளது. மகிந்த இராணுவத்தால் செய்ததை மைத்திரியும் ரணிலும் சமாதானம் பேசிக்கொண்டு செய்கின்றனர் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடுமையாக சாடியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கையில்;, வடக்கு கிழக்கில் இன்று ஒரு புதிய கலாசாரம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. எந்தவொரு சிங்களவரும் வாழாத தமிழர் வாழும் இடங்களில் புத்தர் சிலைகளை, விகாரைகளை அமைத்து. இது பெரிய வடிவமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மாங்குளத்தில் அமைக்கப…

  25. கஞ்சா வேட்டையில் சிக்கிய கிளைமோர் குண்டுகள்; சாவகச்சேரியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட விதம் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பின் தற்­கொலை படை­யணி பயன்­ப­டுத்தும் தற்­கொலை அங்கி உட்­பட வெடிப்­பொ­ருட்கள் யாழ். சாவ­கச்­சேரி பகு­தியில் கடந்த செவ்வாய்க்கிழமை 29ஆம் திகதி மீட்­கப்­பட்ட நிலையில், குறித்த வீட்­டுக்கு பொலி­ஸாரும் இரா­ணு­வத்­தி­னரும் தொடர்ந்து பாது­காப்பு வழங்­கி­யுள்­ளனர். மீட்­கப்­பட்ட வெடி­பொ­ருட்­களில் தற்­கொலை அங்கி, 4 கிளைமோர் குண்­டுகள் - 12 கிலோ கிராம் நிறை­கொண்ட வெடி­பொ­ருட்கள் அடங்­கிய மூன்று பொதிகள், 9 மில்­லி­ மீற்றர் ரவைகள் அடங்­கிய இரண்டு பொதிகள் (அந்தப் பொதி­களில் 100 ரவைகள் இருந்­தன) கிளைம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.