ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143480 topics in this forum
-
சம்பூர் பள்ளிக்கூடங்களை கடற்படை இன்னும் விடுவிக்கவில்லை' பள்ளிக்கூடங்கள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி கடந்த அக்டோபர் மாதத்தில் உறுதியளித்திருந்தார் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றதிற்கு அனுமதி வழங்கப்பட்டு மாதங்கள் பல கடந்தும் கடற்படை வசமுள்ள அரசாங்க பாடசாலைகள் இதுவரை விடுவிக்கப்படாமை குறித்து கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். சம்பூர் பிரதேசத்தில் 818 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் கடற்படை பயிற்சி முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளது. கடற்படை பயிற்சி முகாம் அமைந்துள்ள எல்லைக்குள் தான் சம்பூர் மகா வித்தியாலயம் மற்றும் ஶ்ரீ முர…
-
- 9 replies
- 783 views
-
-
கவிஞர் புதுவை இரத்தினதுரைக்காக கவிஞர்கள், இலக்கியவாதிகள் குரல் கொடுக்க ஏன் தயக்கம் காட்டுக்கின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.யாழ். தியாகி அறக்கொடை நிலையத்திலுள்ள சொர்ணாம்பிகை மண்டபத்தில் நேற்று மாலை ஊடகவியலாளரும் கவிஞருமான செல்வக்குமாரின் ஊசல் கவிநூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ் விழாவுக்கு ஐங்கரநேசன் தலைமை தாங்கி நடாத்தி இருந்தார். அதன் போது தலைமை உரையாற்றும் போதே ஐங்கரநேசன் மேற்கண்டவாறு உரையாற்றி இருந்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், ஒரு இலக்கிய எழுத்தாளனிற்காக குரல்கொடுக்க இலக்கிய எழுத்தாளர்கள் சமூகம் தயாரற்ற சூழலே தமிழர் தேசத்தில் காணப்படுகின்றது. ஒரு ஆசிரியனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் நீதி கோரி ஆசிரி…
-
- 7 replies
- 887 views
-
-
வடக்குக்கு ஐயாயிரம் இராணுவம் போதும்! இலங்கையில் 2 இலட்சம் இராணுவம் இருக்கின்ற நிலையில் அதில் 1½ இலட்சம் இராணுவம் வடக்கில் நிலைகொண்டுள்ளது. 20 ஆயிரம் இராணுவம் மட்டக்களப்பிலும், 30 ஆயிரம் இராணுவம் ஏனைய மாகாணங்களிலும் நிலை கொண்டுள்ளனர். வடக்குக்கு 5 ஆயிரம் இராணுவத்தினர் போதும்' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீர்வேலியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், வடக்கில் அதிகளவான இராணுவம் இருப்பதால், தமிழ் மக்கள் நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழ முடியாதுள்ளது. அரசாங்கம்…
-
- 0 replies
- 455 views
-
-
வீட்டுத் திட்டத்தை மீள்பரிசீலனை செய்க! சபையில் கூட்டமைப்பு வலியுறுத்து! வடக்கு, கிழக்கில் அரசால் நிர்மாணிக்கப்படுகின்ற 65,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் நீண்டகால பாவனைக்குப் பொருத்தமற்றது என சபையில் சுட்டிக்காட்டிய பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இந்தத் திட்டத்தை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தற்போது அமைக்கப்பட்டுள்ள இருப்பு வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்த அவர் அது தொடர்பான புகைப்படங்களையும் சபா பீடத்தில் சமர்ப்பித்தார். இதேவேளை, இந்த வீட்டுத்திட்டத்தை நாம்…
-
- 0 replies
- 197 views
-
-
வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் புதிதாக திருமண பந்தத்தில் இணைந்து கொள்வோருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். தென் மாகாணம் அஹூன்கல்ல கல்வெஹர பௌத்த விஹாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அண்மையில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… இரசாயன உர பயன்பாட்டினால் வருடாந்தம் ஐயாயிரம் புற்று நோயாளிகள் புதிதாக உருவாகின்றனர் என தெரிவித்துள்ளார். சர்வதேச சர்வதேச வர்த்தகர்களினால் இவ்வாறு இரசாயன உர வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பிரச்சினையிலிருந்து நாட்டை மீட்டு எடுக்க விஹாரைகள் தலைமை ஏற்க வேண்டும். தெற்கி…
-
- 0 replies
- 317 views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அனைத்து விமானங்களையும் விமானப்படையின் விசேட அணியினர் பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிகை்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. பெல்ஜியம், பிரசல்ஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து உலக நாடுகள் பூராவும் விமான நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்கு நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளதையடுத்து இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்களில் வந்த பயணிகள் வெளியேறி சென்ற பின்னர் குறித்த சோதனை ந…
-
- 0 replies
- 353 views
-
-
இராணுவத் தலைமையகத்தைப் பாதுகாக்க முடியாத இராணுவத் தளபதி பொன்சேகா, தானே போரை முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்று எவ்வாறு கூற முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. நேற்று நிதி மோசடி விசாரணைப் பிரிவில் சாட்சியம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். இராணுவத் தலைமையகத்துக்குள் நுழைந்து இராணுவத் தளபதி மீது தாக்குதல் நடாத்தும் அளவுக்கு பலவீனமடைந்திருந்த பாதுகாப்பை சரி செய்ய முடியாமல் போன ஒருவர் தான் இந்த சரத் பொன்சேகா. யுத்தத்தைக் கொண்டு வருவதற்கு விமானப்படை, கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை போன்ற அமைப்புக்கள் பாரிய பங்களிப்பை வழங்கினர். இவற்றை மறந்து எப்படி ஒருவர் மாத்திரம் இதனை…
-
- 0 replies
- 330 views
-
-
மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் எம்.பிக்கள், மற்றும் அமைச்சர்களின் பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள அமச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர் கோரியுள்ளார். நேற்று முன்தினம் ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் நூறு பேருக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் உண்டு என வெளியான தகவல்களை அடுத்து இந்த அறிக்கையை கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அமைச்சரவைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அம…
-
- 0 replies
- 274 views
-
-
யாழ்.நகர சந்திகளில் 8 குவிவு வில்லைகள்! விபத்துக்களைக் குறைக்கப் பொருத்தியது மாநகர சபை! யாழ்.குடாநாட்டில் விபத்துக்கள் வகை தொகையின்றி அதிகரித்துள்ள நிலையில், யாழ்.நகரில் அபாயம் மிகுந்த இடங்களைச் சாரதிகள் அவதானிக்கும் வகையில், பொது வீதிகளில் முதன் முதலாகப் பெரிய குவிவு வில்லைகள் பொருத்தப்பட்டுள்ளன. யாழ்.மாநகர சபையால், குறித்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாரதிகளுக்குப் போக்குவரத்தின் போது ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கும், பொதுமக்களின் அசௌகரியங்களைப் போக்கும் முகமாகவும், இந்தக் குவிவு வில்லைகள் பொருத்தப்பட்டுள்ளன என்று யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். இதன் உபயோகம் க…
-
- 1 reply
- 328 views
-
-
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது? ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச பாதுகாப்பு நிலைமைகள், யுத்த மோதல்கள் தொடர்பில் ஆய்வு நடத்தும் அமெரிக்க நிறுவனமான சர்வதேச யுத்த ஆய்வு நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் தாக்குதல் நடத்துவது தொடர்பில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு புதிதாக வெளியிட்டுள்ள உலக வரைபடத்தில் இலங்கையும் குறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டிருந்த வரைபடத்தில் இலங்கை உள்ளடக்கப்பட்டு இருக்கவில்லை எனத்…
-
- 1 reply
- 355 views
-
-
கொழும்பில் இம்முறை வரலாறு காணாத வெப்ப நிலை நிலவும் அதே நேரம், இந்த வெப்பத்தின் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னை உள்ளிட்ட பிரதேசங்களில் வருடந்தோறும் நிலவும் கத்திரி வெயில் என்றழைக்கப்படும் உயர்வெப்ப நிலைக்கு சமாந்தரமான முறையில் கொழும்பிலும் தற்போது வெப்ப நிலை அதிகரித்துள்ளது. கொழும்பில் தற்போது 33.3 செல்சியஸ் வெப்பநிலை நிலவுகின்றது. பொதுவாக மனித உடல் 31 செல்சியஸ் வரையான வெப்ப நிலையை மட்டுமே தாங்கிக் கொள்ளும் சக்தி கொண்டது.அதற்கு கூடிய வெப்ப நிலை நிலவும் போது சிறுநீரகங்கள், இருதயம் மற்றும் மூளையின் செயற்பாடுகள் பாதிப்படையாம் என்று கூறப்படுகின்றது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய வான் வெளியின் உயர்அடுக்கில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
கேலிக்கூத்தாகி வரும் உண்ணாவிரதம்! ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் என்பவை தற்போது பகிடியாகவும், கேலிக்கூத்தாகவும் மாறிவருவதாக பிரதி அவைத்தலைவர் எம்.அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கேப்பாப்புலவில் பெரிய காணிகளைப் பிடித்துள்ள விமானப்படை, பாரிய இராணுவ முகாமை நிலையாக அமைத்துள்ளது. இனி அவர்களை வெளியேற்ற முடியும் என்று தோன்றவில்லை. முன்னரே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வவுனியாவில் இராணுவக் குடியிருப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றோம். கட்…
-
- 0 replies
- 207 views
-
-
வவுனியாவில் 14 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சா பொதிகளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை யில் இருந்து ஹயஸ்ரக வாகனம் ஒன்றில் 14 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சாவுடன் வந்த இளைஞனே வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வைத்து நேற்றுக் காலை 9.00 மணியளவில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவ லின் அடிப்படையில் குறித்த நபரின் வாகனத்தை மறித்து சோதனை செய்த போது அதில் இருந்து பெறுமதி வாய்ந்த கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞனை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.…
-
- 0 replies
- 328 views
-
-
தமிழ் மக்களுக்கு என்ன தீர்வைத்தான் சொல்கிறது ஜே.வி.பி? இலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்ளான தீர்வைக்கூட ஏற்க மாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குள் தீர்வை எதிர்பார்க்கவில்லை. குறைந்த பட்சம் சமஷ்டித் தீர்வையாவது முன்வைக்க வேண்டும் என்பதுதான் கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய ஆணை. தமிழ் மக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைப் பிரச்சினையை தன்னுடைய இனவாத ஆதிக்க சிந்தனையின் அடிப்படையில்தான் எல்லாக் கட்சிகளைப் போலவும் ஜே.வி.பி நோக்குகிறது என்பதையும் இன்னும் அந்த நிலைப்பாட்டில்தான் அக்கட்சி இன்னமும் இருக்கிறது என்…
-
- 0 replies
- 403 views
-
-
வடக்கு, கிழக்கில் அரசால் நிர்மாணிக்கப்படுகின்ற 65,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் நீண்டகால பாவனைக்குப் பொருத்தமற்றது என சபையில் சுட்டிக்காட்டிய பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இந்தத் திட்டத்தை அரசு மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், தற்போது அமைக்கப்பட்டுள்ள இருப்பு வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்த அவர் அது தொடர்பான புகைப்படங்களையும் சபா பீடத்தில் சமர்ப்பித்தார். இதேவேளை, இந்த வீட்டுத்திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், குறைபாடுகளை எடுத்துக் கூறாமல் இருக்கமுடியாது என்றும், வீடுகளின் பெறுமதி குறித்துப…
-
- 0 replies
- 266 views
-
-
மைத்திரி சிங்கள மக்களை கவனிப்பதில்லை.! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தமிழ் உறவினர்களை பார்க்க மாதம் ஒருமுறை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டு வருகின்றார்.வடக்கு மக்கள் மீதான நல்லாட்சி அரசாங்கத்தின் கவனிப்பும் அமோகமாகவுள்ளது. ஆனால் நாட்டில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்கள் தொட ர்பில் அவர் சிறிதும் அக்கறை கொள்ளாதிருக்கின்றாரென பொது பல சேனா அமை ப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா போகஸ்வெவ பகுதியில் சிங்கள குடியிருப…
-
- 0 replies
- 370 views
-
-
'மஹிந்தவைப் பொறுக்காது கல்லும் வெடித்தது' 'மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்துக்குச் சென்றதைப் பொறுத்துக்கொள்ளாது, குருநாகலில் உள்ள யானைக்கல்லும் வெடித்து விட்டது' என்று இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாட்டையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்த மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் வெறுத்துவிட்டனர். எனினும், அவர் குருநாகலுக்குச் சென்றார். அதனைப் பொறுத்துக் கொள்ளாது, அங்குள்ள யானைக்கல்லும் வெடித்துவிட்டது. எ…
-
- 0 replies
- 284 views
-
-
யாழில் 8 கிலோகிராம் கஞ்சா மீட்பு -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம், இராசபாத வீதியில் நேற்று வியாழக்கிழமை (24) இரவு பொலிஸ் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 8 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கஞ்சாவைக் கொண்டு சென்றவர் தப்பியோடியுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கஞ்சா கடத்தப்படுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இராசபாத வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துள்ளனர். பொலிஸாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தான் வைத்திருந்த பொதியை கீழே எறிந்துவிட்டு மோட்டார் சைக்கிளைத் திருப்பிக்கொண்டு தப்பித்துச் சென்றுள்ளார். பொலிஸார், பொதியை எ…
-
- 0 replies
- 267 views
-
-
'தகவல்களை மறுக்கலாம்' தேசிய பாதுகாப்பு தொடர்பான இறைமைக்கு பங்கமானது பொருளாதாரத்துக்கு பங்கம் விளைவிக்கும் சர்வதேச உறவைப் பாதிக்கும் குற்றவழக்குத் தொடுப்பதை தடுக்கும் நீதிமன்றத்தை அவமதிக்கும் அழகன் கனகராஜ் தகவலறியும் உரிமைச் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (24), நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்க முதற்கோலாசானுமான கயந்த கருணாதிலகவினால் சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 9.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னரே இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.இதற்கு, மக்கள் விடுதலை முன்னணி தமத…
-
- 0 replies
- 269 views
-
-
யாழில் விடுமுறை விடுதி திறப்பு விழா பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள விடுமுறை விடுதி இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்.அல்லைப்பிட்டி குறிகட்டுவான் வீதியில் அமைக்கப்பட்டுள்ள 25 அறைகளுடன் சகல வசதிகளையும் உள்ளடக்கிய இக்கட்டடத்தை பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உத்தியோகபூர்வமாக இன்று திறந்து வைக்கவுள்ளார். இந்நிகழ்வில் பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் பிரதி அமைச்சர் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, எதிர் கட்சித்தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர். …
-
- 0 replies
- 193 views
-
-
மிருக மனிதர்கள் சமூகத்தில்; பண்பாடுள்ள சந்ததி உருவாக பாடசாலைகள் மிக முக்கியம்! கொடூரமான தன்மைகளுடன் மனிதாபிமான மற்றவர்களாக மனிதர்கள் வாழந்து வருகின்ற சமூகத்தில் பண்பாடுள்ள எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கு பாடசாலைகள் முன்னின்று செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கேகாலை புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று முற்பகல் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். பிள்ளைகளதும் தாய்மார்களினதும் உயிர்களுக்கு விலைபேசும் ஒரு காலகட்டத்தில் அப்பாவி மிருகங்களின் தோல்களை கொடூரமாக உயிருடன் அகற்றும் மிருகத்தனமான மனிதர்கள் …
-
- 0 replies
- 250 views
-
-
ஸ்ரீலங்காவிற்கு கடனுதவி வழங்கும் உடன்படிக்கையில் குவைத் கைச்சாத்து [ Friday,25 March 2016, 03:44:32 ] ஸ்ரீலங்காவிற்கு 34 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவது தொடர்பான உடன்படிக்கையில் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் கையெழுத்திட்டுள்ளது. கிழக்கு பல்கலைகழகத்தின் உடல்நல விஞ்ஞான பீட கட்டட நிர்மாணத்திற்கான நிதி உதவியை வழங்கும் வகையில் இந்த உடன்படிக்கை உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கைத் தரங்களை மேம்படுத்துதல் மற்றும் தரமான சுகாதார சேவைகளை வழங்குவதை இலக்காக கொண்டு மட்டக்களப்பில் புதிய உடல்நல விஞ்ஞான பீடத்தை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இறுதிக்கு…
-
- 0 replies
- 294 views
-
-
900 பேருடன் ஸ்ரீலங்கா செல்கின்றது அமெரிக்க கடற்படை கப்பல் [ Friday,25 March 2016, 03:11:55 ] அமெரிக்க கடற்படை கப்பலொன்று 900 கடற்படை பணியாளர்களுடன் நாளைய தினம் ஸ்ரீலங்காவை சென்றடையவுள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் முதல்முறையாக அமெரிக்க கப்பலொன்று ஸ்ரீலங்காவிற்கு செல்லவுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க - ஸ்ரீலங்கா பங்காளித்துவ பேச்சுவார்த்தையை தொடர்ந்து குறித்த கப்பல் ஸ்ரீலங்காவிற்கு செல்கின்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்து சமுத்திரக் கடற்பரப்பில் கடற்கொள்ளையை தடுத்தல், மனிதாபினமான உதவிகளை வழங்கல், முக்கிய கடற்போக்குவரத்து மார்க்கங்களில் சுதந்திரமானதும் பாதுகாப்பானதுமான …
-
- 0 replies
- 383 views
-
-
பெரிய வியாழனை மறந்த சி.வி.கே -எம்.றொசாந்த் கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் தினமான இன்று (24), வடமாகாண சபை அமர்வை நடத்தியமைக்காக பிரதி அவைத்தலைவர் எம்.அன்ரனி ஜெயநாதனிடம் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மன்னிப்புக்கோரினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு மன்னிப்புக்கோரினார். 'அன்ரனி ஜெகநாதன், உங்களைப் பார்த்த பின்னரே பெரிய வியாழன் ஞாபகம் எனக்கு வந்தது. அத்தினத்தில் அமர்வை வைத்தமைக்கு மன்னிக்கவும்' என்றார். - See more at: http://www.tamilmirror.lk/168764#sthash.rj4P4J90.dpuf
-
- 2 replies
- 539 views
-
-
நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆட்சியில் இருக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆட்சிப்பொறுப்பைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரும் வழமை உலகில் எங்கும் இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நேற்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் இந்நாட்டில் தேசிய பொருளாதார திட்டம் இருக்கவில்லை. இதன் காரணமாகவே தற்போது பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை படுகொலை செய்தார்கள். ஆசியாவின் ஆச்சரியம் எனக் கூறினார்கள். அதனை நோக்கிச் செல்லவில்லை. மக்களை கடின வாழ்க்கைக்குள்ளேயே கொண்டு சென்றார்கள். …
-
- 1 reply
- 499 views
-