ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
ரணதுங்கவினால் ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ஊடகவியலாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சி.எஸ்.என் நிதிமோசடி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட, தனது சகோதரரான நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான அமர்வுக்கு சமுகமளிப்பதற்காக, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்த தம்மிக்க ரணதுங்கவை, ஊடகவியலாளர்கள் படம்பிடிக்க முயன்றபோதே, அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், தம்மிக்க அச்சுறுத்தல் விடுத்ததைப் பதிவு செய்துள்ளதாகவும் அதனைக் கொண்டு அவருக்கெதிராக, பொலிஸில் மு…
-
- 0 replies
- 287 views
-
-
அலைபேசியில் உரையாடியவர் ரயில் மோதி படுகாயம்! தண்டவாளத்தில் நடந்துகொண்டு அலைபேசியில் உரையாடிச்சென்ற இளைஞன் மீது ரயில் மோதிய சம்பவமொன்று சாவகச்சேரி ஐயா கடையடியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தடியை சேர்ந்த துரைசிங்கம் ஜங்கரன் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். இதில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கியொன்றில் கடமையாற்றும் மேற்படி இளைஞன், தனது நண்பர்களுடன் ஐயா கடையடியில் நின்று கதைத்துக்கொண்டிருந்தார். இதன்போது, அவருக்கு அலைபேசி அழைப்பு வந்தவேளை உரையாடிக் கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோதே ரயில் இவரை மோதியுள்ளது. …
-
- 0 replies
- 381 views
-
-
இயற்கையினை வழிபட்ட மனிதன் பின்னர் தமது இறந்த முன்னோர்களின் ஆவியினை வழிபட்டு பின்னாளில் தற்பொழுது வழிபடுகின்ற தெய்வங்களை வழிபடலானான். இவற்றினூடாக ஆலயங்கள் தோற்றம் பெற்றன. இதனூடாக சமூகத்தினை நல்வழிப்படுத்துவதற்காக தமக்குள்ளே சமூக ஒன்றியங்களையும், சமூக நிறுவனங்களையும், சமூக மன்றங்களையும் நிறுவி அதனூடாக தங்களைக் கட்டுப்படுத்தி உயர்ந்த சிறந்த மனிதனாக வாழ வழியமைத்துக் கொண்டான். சமூகத்தினை நல் வழிப்படுத்தும், சமூகத்தோடு இணைந்த சங்கங்கள், சபைகள் போன்ற பல இந்நிலையில் தோற்றம் பெற்றன. பிற்காலத்தில் சாதிப்பாகுபாடு எனும் பயங்கர நோய் உருவாக ஆலயங்கள் காரணமாக அமைந்தமை என்பது மறுபக்கம். ஆலயங்களின் ஊடாக அறக்கருத்துக்கள், நல்வழிச் சிந்தனைகள், போன்றவற்றினைப் போதித்ததோடு அமைதி, மன ஒரு…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐ.நா உதவியுள்ளது [ Wednesday,16 March 2016, 06:29:14 ] ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பணிகள் ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் மனித உரிமைகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவியாக அமைந்துள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் நாயகம் பேன் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 10ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலகளாவிய ரீதியில் கடந்த பத்து வருடங்களாக மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மனித உரிமைகளை பாதுகாக்க, பேரவை அடுத்த தசாப்பதத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். க…
-
- 0 replies
- 323 views
-
-
யுத்தத்தை வெற்றி கொண்ட போதும் சமாதானத்தை வெற்றி கொள்ளவில்லை யுத்தத்தை வெற்றி கொண்ட போதிலும் சமாதானத்தை வெல்வதற்கு கடந்த அரசாங்கத்தினால் முடியாது போயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் உள்ள நல்லிணக்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற "தேசிய நல்லிணக்கத்திற்காக ஊடகங்களின் கூட்டுப்பணி" நிகழ்வில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறினார். யுத்தத்தை வெற்றி கொண்டாலும் அதன் பிரதிபலனாக இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், அதனை நடைமுறைப்படுத்தி செல்வதற்கும் முடியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைய காலங்களில் அதிகாரிகளினால், இனங்களுக்கிடையில் மனமுறிவு மற்றும் ஒற்றுமையின்ம…
-
- 1 reply
- 332 views
-
-
பலாலி விமான நிலையம் குறித்து ஆராய இந்தியக்குழு ஸ்ரீலங்காவிற்கு விஜயம் [ Wednesday,16 March 2016, 04:30:44 ] யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்காவை சென்றடைந்துள்ளது. பலாலி விமான நிலையம் புனரமைப்பு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்தானிகராலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் சாஷ்திரி ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் குறித்த குழுவினர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும், விமான நிலைய தொழில்நுட்ப ப…
-
- 1 reply
- 479 views
-
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றார்? [ புதன்கிழமை, 16 மார்ச் 2016, 12:00.03 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் எனப்படும் சண்முகலிங்கம் சிவசங்கர், உயிருடன் இருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வன்னிப் போரின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் இந்தியாவின் தமிழகத்தில் மறைந்து வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. “குருடீ” என்ற பெயரில் தமிழகத்தில் பொட்டு அம்மான் மனைவியுடன் மறைந்து வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. நந்திக்கடல் போரின் போது பொட்டு அம்மான் கொல்லப்பட…
-
- 2 replies
- 715 views
-
-
ஸ்ரீலங்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவு புத்துயிர் பெற்றுள்ளது [ Wednesday,16 March 2016, 04:00:50 ] ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றத்தை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட ஜனநாயக ஆட்சி தேசிய நல்லிணக்கம் மற்றும் சர்வதேசத்துடனான உறவை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச ஒத்துழைப்புடனான அபிவிருத்தி விவகாரங்களுக்கான உயர்ஸ்தானிகர் நிவேக் மிமிகா உள்ளிட்ட பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்ரீலங்காவிற்கான காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றிய நிவேக் மிமிகா, இந்த விடயத்தை தெரி…
-
- 0 replies
- 250 views
-
-
கால நிலை மாற்றத்தால் தேயிலைச் செடிகளுக்குப் பாதிப்பு; சம்பளத்தில் வீழ்ச்சி இலங்கையில் மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற பனியும் வெயிலும் கொண்ட கால நிலை காரணமாக தேயிலை செடிகள் கருகி வருவதால், தேயிலைத் தொழிலாளர்களின் சம்பளத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பனியும் வெயிலும் மாறிமாறி வருவதால் தேயிலைச் செடிகள் கருகிவிட்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலையின் தாக்கம் காரணமாக நாளாந்தம் பறிக்கப்படும் தேயிலை கொழுந்தின் அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் வேலைநாட்களும் குறைந்துள்ளதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர். இரவு நேரங்களில் பனி, பகலில் வெயில் என்பது போன்ற காலநிலை தற்போது மலையகத்தில் காணப்படுகின்றது. தேயிலை செடிகளில் காணப்படும் பனியில…
-
- 0 replies
- 234 views
-
-
நிதி நிறுவனங்களுக்கு கீழ் சட்டவிரோத கும்பல் - நடவடிக்கை எடுக்க வேண்டும் நிதி நிறுவனங்களின் கீழ் இயங்கும் சட்ட விரோத கும்பல்களை கட்டுப்படுத்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழில் நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மேல் நீதிமன்ற நீதிபதி கடும் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். அதேபோன்று யாழில் இயங்கும் சில நிதி நிறுவனங்கள் தமக்கு கீழ் சில சட்டவிரோத கும்பல்களை வைத்து தமது வாடிக்கையாளர்களை மிரட்டி வருவதாக தெரிவிக்க படுகின்றது. அவ்வாறன நிதி நிறுவனங்கள் மீதும் அந்த நிதி நிறுவனங்களுக்கு கீழ் இயங்கும் சட்ட விரோத கும்பல…
-
- 0 replies
- 284 views
-
-
யாழ். இந்துவின் கௌரவத்தைக் கெடுக்கும் ரவுடிகளை உடன் கைது செய்யுங்கள்! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மிகச் சிறந்த கல்விக் களஞ்சியம். ரவுடிக் கும்பல்கள் அதன் கௌரவத்தைக் கெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். இத்தகைய ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர் குழுக்கள், பழைய மாணவர் குழுக்களை இனங்கண்டு, உடனடியாகக் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் வீரசிங்கவிற்கு நேற்று திறந்த நீதிமன்றத்தில் அவர் நேரடியாக உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் ஞாயிறன்று பட்டப்பகலில் 10, 15பேர் மோ…
-
- 29 replies
- 2.1k views
-
-
வடக்கு மாகாணத்தில் கணவனை இழந்த பெண்களிடம் இராணுவத்தினர் மட்டுமன்றி தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோரும் ஈனச் செயல்கள் நடப்பதாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க. நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று நடத்திய செயலமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 'நீண்டகாலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் பொற்காலம் உதயமாகியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து செயற்படும் இந்த தருணத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படலாம். ஆனால் இன மத ரீதியில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரிவினை, முரண்பாடுகள்…
-
- 0 replies
- 414 views
-
-
யாழ்.ஓட்டுமடம்- தட்டாதெரு பகுதியில் பாடசாலை சிறுவன் மீது இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட குழு ஒன்றினால் மேற் கொள்ளப்பட்ட குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மேற்படி பகுதியல் உள்ள மரக்காலை ஒன்றில் இன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் கே.கேமராஐன்( வயது17) என்ற சிறுவன் நின்றிருந்த நிலையில், இச் சிறுவனை இலக்கு வைத்தே மேற்படி கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. சிறுவன் மரக் காலையில் நின்றவேளையில் அங்கு வந்த இளைஞர்கள் வாள், பொல்லுகள், கைக் கிளிப்புகள் சகிதம் வந்த சுமார் 15 பேர் கொண்ட குழு சிறுவனைத் த…
-
- 13 replies
- 933 views
-
-
நாட்டுக்கும், பொலிஸ் சேவைக்கும், பொலிஸாரின் அபிமானத்துக்கும் ஏற்ற பொலிசாருக்கு கௌரவமான சீருடை ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் விரைவில் பேச்சு நடத்தவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். பொலிஸ் திணைக்களத்தின் வெளியீடான 'கௌரவம்' எனும் பத்திரிகையின் வெளியீட்டு நிகழ்வு இன்று காலை பொலிஸ் தலைமைகயத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்வைத்து வருகிறது. சட்டமும் ஒழுங்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்காற்றுகிறது. எனவே அதனை அமுல்ப…
-
- 0 replies
- 655 views
-
-
வட மாகாண போக்குவரத்து அமைச்சால் மன்னார் - பேசாலை முருகன் கோவில் பகுதியில், அமைக்கப்பட்ட பேரூந்து நிழற்குடையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வைபவ ரீதியாக திறந்து வைத்தார். வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் தலைமையில் நேற்று நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடக்கு முதல்வர் கலந்துகொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார். மேலும் அங்கு கடந்த ஆண்டு கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு வழங்கப்பட்ட அரைக்கும் ஆலையையும் முதலமைச்சர் பார்வையிட்டதோடு, கிராமத்து மக்களுடன் அவர்களது தேவைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலும் இடம்பெற்றது. நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சட்டத்தரணி பிரிமுஸ் சிறாய்வா, மன்னார் ப…
-
- 0 replies
- 441 views
-
-
யாழில் மின்பிறப்பாக்கிக்கு கிராக்கி! திடீர் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் நிலையில், யாழ்ப்பாணத்தில் சுய தேவைக்கான மின்பிறப்பாக்கிகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் வசிப்போர் மின்சாரமின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் மின்பிறப்பாக்கிகள் விற்பனை செய்யும் கடைகளில் கடந்த இரு நாட்களாக மின்பிறப்பாக்கிகள் விற்பனை சடுதியாக அதிகரித்துள்ளது. வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் 650 வாற் மின்சக்தியை வெளியிடும் மின்பிறப்பாக்கி யாழ்ப்பாணத்திலுள்ள மின்பிறப்பாக்கி விற்பனை நிலையங்களில் முடிவடைந்துள…
-
- 0 replies
- 347 views
-
-
மன்னாரில் 187 கிலோ கிராம் கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு! மன்னார் - முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாபத்துறை, முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கிராம் எடை கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையிலான மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் இணைந்து தேடுதலை நடத்தியுள்ளனர். இதேவேளை, சிலாபத்துறை கடற்படையினரின் உதவியும் கிடைக்கப்பெற்றுள…
-
- 0 replies
- 252 views
-
-
அரசுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். http://www.tamilwin.com/show-RUmuyDSZSXnxyD.html
-
- 2 replies
- 298 views
-
-
போதை தலைக்கேறும் வரையிலும் நன்றாக மதுபானம் கொடுத்தோம். அனைவரும் மயங்கிய பின்னர், இரும்புக் கம்பிகளினால் மண்டைகளில் மடார் மடாரென போட்டு, பெற்றோல் ஊற்றி எரித்தே கொன்றோம்' என ஐந்து சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான வர்த்தகர் வாக்குமூலமளித்துள்ளார். கடந்த 12ஆம் திகதி, புத்தளம், தங்கொட்டுவ பகுதியில், கருகிய நிலையில் சடலங்கள் ஐந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐவர், ஞாயிற்றுக்கிழமை (13) கைதுசெய்யப்பட்டனர். 'கப்பம் பெறுவதை அடிப்படையாக வைத்தே இந்த ஐந்து படுகொலைகளும் புரியப்பட்டுள்ளன எனத் தகவல்கள் கிடைத்துள்ளன' என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கோனகல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான அமி…
-
- 0 replies
- 294 views
-
-
அடுத்த சில தினங்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் இடைக்கிடை மின்சாரத் தடை ஏற்படக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் எதிர்வரும் 3 அல்லது 4 நாட்களுக்கு மின்சாரத் தடை ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு இடையிடையே மின்சாரம் தடைப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை வழமைக்கு கொண்டுவர குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தேவைப்படும் எனவும், நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த் தேக்கங்களில் நிலவி வரும் வரட்சி நிலைமையும் மின் தட்டுப்பாட்டுக்கான ஒரு காரணமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயழில…
-
- 0 replies
- 281 views
-
-
Read more at: http://tamil.oneindia.com/news/international/killing-rajiv-gandhi-was-ltte-s-biggest-mistake-248701.html லண்டன்: விடுதலைப் புலிகள் செய்ததிலேயே மிகப் பெரிய தவறு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்ததுதான் என்று ஆண்டன் பாலசிங்கம் தன்னிடம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதாக நார்வே முன்னாள் சிறப்புத் தூதர் எரீக் சோல்ஹீம் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர் சோல்ஹீம். அவர் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து மார்க் சால்டர் என்பவர், 549 பக்கங்களைக் கொண்ட புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். "To End A Civil War" என்ற பெயரில் அந்த நூல் வெளியாகியுள்ளது. அந்த நூலில் விடுதலைப் புலிகள் இயக்கத…
-
- 103 replies
- 8k views
- 1 follower
-
-
சேயா கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரணத்தண்டனை கம்பஹா, கொட்டதெனியாவ பகுதியில், ஐந்து வயதுச் சிறுமியான சேயா சந்தவமியை படுகொலை செய்தார் என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமன் ஜயதிலக்கவை குற்றவாளியாக இனங்கண்ட நீர்கொழும்பு மேல் நீதிமன்றம், அவருக்கு மரணதண்டனை விதித்து இன்று செவ்வாய்க்கிழமை (15) தீர்ப்பளித்தது. இந்த வழக்குக்கான தீர்ப்பு கடந்த 3ஆம் திகதி வழங்கப்படவிருந்த நிலையில், தீர்ப்பு இன்று 15ஆம் திகதிக்கு தள்ளிப்போடப்பட்டிருந்தது. சிறுமியான சேயா சந்தவமி பக்மீதெனிய, கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதியன்று, வீட்டிலுள்ள கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த போது கடத்தப்பட்டார். …
-
- 1 reply
- 471 views
-
-
ஷிரந்தியின் வீட்டில் சோதனை? கொழும்பு - காலி வீதியின் கல்கிஸை, மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்று, பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷவின் உறவினொருவருக்குச் சொந்தமானதென கூறப்படுகிறது. - See more at: http://www.tamilmirror.lk/168227/%E0%AE%B7-%E0%AE%B0%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%A…
-
- 0 replies
- 386 views
-
-
எம்பிலிபிட்டிய இளைஞனது உள்ளுறுப்புகளை காணவில்லை எம்பிலிபிட்டிய விருந்துபசார நிகழ்வொன்றின் போது உயிரிழந்த சுமித் பிரசன்ன என்ற இளைஞனின் சடலம், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இன்று முற்பகல் தோண்டப்பட்ட போதிலும், அவரது உடல் மாத்திரமே அங்கு காணப்பட்டதாகவும், உள்ளுறுப்புகள் அதில் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/168211/%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%B1-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%B2-#sthash.0FKHrIng.dpuf
-
- 0 replies
- 295 views
-
-
விடுதலைப் புலிகளின் பயண அனுமதி விண்ணப்ப படிவங்களில் யாழில் கச்சான் விற்பனை! விடுதலைப் புலிகளின் பயண அனுமதி விண்ணப்ப படிவங்களில் யாழ்ப்பாணத்தில் கச்சான் விற்பனை இடம்பெறுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் முகமாலை, ஓமந்தைச் சோதனைச் சாவடிகளை தாண்டிச் செல்லும் அனுமதிக்காக பயன்படுத்தப்படும் விண்ணப்பத்தில் தயார் செய்த பைக்கற்றில் கச்சான் விற்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் புலிகளின் முன்னரங்கப் பகுதிகளாக விளங்கிய முகமாலை மற்றும் ஓமந்தைச் சோதனைச் சாவடிகளை தாண்டிச் செல்லும் பயணிகள் அனுமதிக்காக ஓர் படிவம் பயன்படுத்தியது வழமையானது. இவ்வாறு பயன்படுத்தப்படும்…
-
- 0 replies
- 426 views
-