Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1.  மகனின் கடிதம் வந்தது, மகன் வரவில்லை 29-02-2016 04:18 PM Comments - 0 Views - 35 -எம்.றொசாந்த் இராணுவ முகாமில் இருந்து மகன் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைத்தது. ஆனால், மகன் இன்னமும் திரும்பி வரவில்லையென காணாமற்போன த.தவச்செல்வன் என்பவரது தாயார் சாட்சியமளித்தார். காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு, நேற்று திங்கட்கிழமை (29), சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர் கூறியதாவது, 'யாழ்ப்பாண மாநகர சபையில் …

  2. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரை காணவில்லை -எம்.றொசாந்த் யாழ்ப்பாணம், வட்டுவாகல் பகுதியில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது மகன் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, இன்று வரை காணவில்லையென கதிர்காமசேகரம் என்ற முதியவர், காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், இன்று (29) சாட்சியமளித்தார். சாவகச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற இந்த சாட்சியங்களைப் பதிவு செய்யும் நிகழ்வின் போது, தொடர்ந்து சாட்சிமளித்த அந்த முதியவர் கூறியதாவது, 'எனது மகன் சத்தியமூர்த்தி, மருமகள் கவிதா, பேரப்பிள்ளைகளான தமிழ் முகிலன், தமிழ் அன்டன், இறைநிலா மற்றும் நான், வட்டுவாகல் பகுதியிலுள…

  3. காணாமற்போன பெண்ணின் புகைப்படம் பேஸ்புக்கில் தரவேற்றம் -எம்.றொசாந்த் காணாமற்போன எனது மகள் சிவலிங்கம் அனுசியாவை வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஒருமுறை கண்டேன். அதன் பின்னர் முகப்புத்தகத்தில் இலக்கம் போடப்பட்டு, தரவேற்றியிருந்த படங்களையும் நான் பார்த்தேன் என, காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி அமர்வில் சாட்சியமளிக்கச் சென்ற தாயொருவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, 'கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிய எனது மகளை, 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதியன்று, விடுதலைப் புலி உறுப்பினர்கள் பிடித்துச் சென்றனர். தொடர்ந்து, ஸ்கந்தபுரம் பகுதியில் புலிகளில் சீருடை…

  4. காணாமற்போனோருக்கான மரணச்சான்றிதழ், நட்டஈடு பெறலாம் -எம்.றொசாந்த் 'காணாமற்போனோர் தொடர்பான மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும்' என காணாமல்போனோரின் உறவினர்களிடம், காணாமற்போனரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், சாவகச்சேரி அமர்வில் கலந்துகொண்ட காணாமற்போன உறவினர்களிடமே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவ்வதிகாரிகள், 'நீங்கள் விரும்பினால் மரணச் சான்றிதழ் எடுக்கலாம். அதன் மூலம் நட்டஈடும் பெற்றுக்கொள்ளலாம். அதற்காக நாங்கள் விசாரணையை கைவிடமாட்டோம். …

  5. இலங்கை தொடர்பில் எதுவும் பேசாத செய்ட் அல் ஹுஹசேன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31 ஆவது கூட்டத் தொடர் இன்ற திங்கட்கிழமை 29 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையில் முதலாவது அமர்வின்போது உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் எந்த விடயத்தையும் குறிப்பிடவில்லை. செய்ட் அல் ஹுசேன் தனது நீண்ட உரையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாகவும் இலங்கையின் மனித உரிமை நிலை குறித்தும் இலங்கை குறுகிய விளக்கத்தை அளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டபோதும் அவர் எதனையும் குறிப்பிடவில்லை. மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31 ஆவது கூட்டத்…

  6. தமிழ் கைதிகள் 63பேர் உண்ணாவிரதம்:- வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 63பேர், இன்று காலை முதல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களுக்கு எதிரான வழக்கை துரிதப்படுத்தி விடுதலைக்கு வழிசமைக்குமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர். ஏற்கெனவே, இந்த சிறைச்சாலையைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதிகள் 14பேர் உணவு தவிரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleTy…

  7. வேடர் சமூகத்தினை தனி இனமாக அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் ஆதிவாசிகள் சமூகமான வேடர் சமூகத்தினை தனி இனமாக இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென கிழக்கு மாகாண ஆதிவாசிகளான வேடர் சமூகத்தின் தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தெரிவித்தார். அவர் ஊடகங்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாங்கள் இலங்கையில் பழங்குடி மக்களாகும் ஆதிவாசிகள் வேடர் சமூகமான எங்களை தனி இனமாக இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும். எங்களுடைய பிறப்பு பதிவுகளில் இலங்கை தமிழர் என போடப்பட்டுள்ளது. நாங்கள் இலங்கை தமிழரல்ல. நாங்கள் இலங்கை வேடர்களாகும். இலங்கை வேடர் என்றே எங்களை அழைப்பதுடன் எங்களது பதிவுகளில் இலங்கை வேடர் என போட்டு அத்தாட்சிப்படுத்த வேண்டும். அதே போன்று தேசிய அடையாள அட்டையிலும் வேடர்சம…

  8. உறவைச் சொல்லி கடல்வளத்தை சுரண்டாதே! இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தங்களது வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர கோரியும் வடமாகாண மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டிருந்தனர். உறவைச் சொல்லி கடல்வளத்தை சுரண்டாதே!, இலங்கைத் தீவு என்ன? உனக்கு கச்சதீவா?, இருநாட்டினதும் மீனவர் மோதலை நிறுத்த அரசு உடனே முன்வருக!, போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்ன…

  9. பருத்தித்துறையில் பள்ளிவாசல் திறப்பு. பருத்தித்துறை ஜும் ஆ மஸ்ஜித் தற்போது'அவ்னுல் ஹைரில் இஸ்லாமி சிறீலங்கி' என்னும் அமைப்பு நிதஉல் ஹைர் நிறுவனத்துடன் இணைந்து மஸ் அத் குலைப் என்பவரின் சதகதுல் ஜாரியா நிதிப்பங்களிப்போடு தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி புனர் நிர்மானம் செய்யப்பட்ட பள்ளிவாயலை இன்று (26-02-2016) வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையினைத் தொடர்ந்து பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. நீண்டகால வரலாற்றைக் கொண்ட இப்பள்ளிவாசல் 1990ல் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் சுமார் 25 வருடங்களின் பின்னர் தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதனை குறித்த பங்காளர்களுடன் இணைந்…

    • 17 replies
    • 1.6k views
  10. கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண் இன்று பட்டப்பகலில் அலுவலகத்துக்குள் வைத்து கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 1.30 மணிக்கும் 2.30 மணிக்குமிடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் கூறினர். குளோரி வீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்ஷனா (வயது 33) என்ற பெண்ளே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 'அலுவலகத்துக்குள் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது. அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவருடன் கடமையிலிருந்த மற்றொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல் உ…

  11. இறுதிப்போரின் போது மக்கள் நிறைந்திருந்த பகுதிகளை இலக்கு வைத்து இராணுவத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான கிபீர் குண்டுத் தாக்குதலில் 500 ற்கும் மேலான பொது மக்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்நிலையில் என்னோடு ஒன்றாக நின்ற எனது மகன் காணாமல்போயிருந்தார். அவர் எங்கே என தேடியபோதும் காணவில்லை என்று பரணகம ஆணை க்குழு முன் தாய் ஒருவர் சாட்சியமளித்தார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் நேற்றைய தினம் வேலணைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஐந்து பிரிவுகளாக இடம்பெற்றன. இதன்போது அல்லைப்பிட்டியை சொந்த இடமாகக் கொண்ட திருமதி. சுமனதாஸ் யேசுரட்ணம் என்னும் தாயார்…

  12. மன்னார் கடற்பரப்பில் மீனவர்களின் வலைகளின் பிடிபடும் கடல் உணவுகளை தொடர்ச்சியாக கடற்படையினர் திருடி வருவதாக மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பாப்பாமோட்டை கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கடற்பரப்பிலேயே தொடர்ச்சியாக மீனவர்களின் கடல் உணவுப்பொருட்கள் திருடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பாப்பாமோட்டை, பள்ளிமுனை, பனங்கட்டுக்கொட்டு, தோட்டவெளி, விடத்ததல் தீவு போன்ற கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பாதிப்படைகின்றனர். குறித்த கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பாப்பாமோட்டை கடற்படையினரின் கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் உள்ள கடற்பரப்பில் நண்டுக்கூடு,இறால் கூடு மற்றும் பட்டி வலைகளை பயன்படுத்தியே கடல் உணவுப்பொருட்களை பிடித்து வருகின்றனர். கு…

  13. பிரதான வைத்தியசாலைகளில் 120 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் 60 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே அது குறித்து சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது. எனினும், இதுவரையில் மருந்துப் பொருட்களை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். எனினும் மருந்துப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு கிடையாது என சுகாதார அமைச்சின் மருந்துப் பொருள் விநியோகப் பிரிவு பணிப்பாளர் டொக்டர் லால் பனாபிட்டிய தெர…

  14. ராஜீவ் காந்தி சமஸ்டி தீர்வொன்றை இலங்கையிடம் வலியுறுத்தவில்லை! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1984- 1989ம் ஆண்டு காலப்பகுதியில், சமஸ்டி தீர்வு ஒன்றை இலங்கையிடம் கோரவில்லை என்று வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா, இலங்கையில் சமஸ்டி தீர்வை கோராது எனினும் தமிழர்கள் விரும்பும் யோசனைகளை அவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்க முடியும் என்று ராஜீவ் காந்தியை நாம் சந்தித்த வேளை அவர் குறிப்பிட்டார் என, வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். ஏன் ராஜீவ் காந்தி சமஸ்டியை வலியுறுத்துவதில் இருந்து நலுவினார் என இதன்போது வரதராஜ…

  15. யோஷிதவின் பிணை மனு ஒத்திவைப்பு நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் லெப்டினன் யோஷித ராஜபக்ஷ, உள்ளிட்ட குழுவினரின் பிணை மனுக்கள் மீதான விசாரணை மார்ச் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. - See more at: http://www.tamilmirror.lk/167117/%E0%AE%AF-%E0%AE%B7-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.TAX9yTR5.dpuf

  16. யோசித இடைநீக்கம் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் லெப்டினன் யோசித ராஜபக்ச, நேற்று ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வரும் வகையில், கடற்படை சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கப்பட்டள்ளார். சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு அமைச்சு, அவரை இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://onlineuthayan.com/news/9671

  17. பலாலி ஆசிரியர் கலாசாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை! பலாலி ஆசிரியர் கலாசாலையை உடனடியாகத் தற்காலிக இடத்திலாவது மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பலாலி ஆசிரியர் கலாசாலையின் சொந்த நிலத்தை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் எனக்கோரியும் இரண்டு தீர்மானங்கள், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் கல்வி தொடர்பான விடயம் ஆராயப்பட்டபோது, ஆசிரியர் கலாசாலை தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது. இதன்போது பலாலி ஆசிரியர் கலாசாலையில் தற்போதைய அதிபரினால் …

  18. குடிதண்ணீரால் எம்மினத்தை நாமே அழித்து வருகின்றோம்! குடிதண்ணீர்ப் பிரச்சினையில், எமது இனத்தை நாமே அழித்துக் கொண்டிருக்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இணைத் தலைவர்களுள் ஒருவருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இறுதி விடயமாக, இரணைமடுக் குடிதண்ணீர் விநியோகத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் இரணைமடுக் குடிதண்ணீர்த் திட்டப் பொறியியலாளர் பாரதிதாசன் கருத்துத் தெரிவிக்கையில், எமது அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் இது தொடர்பில் ஆராயப்பட்ட குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது என்றார். …

  19. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செத்தல் மிளகாயில் நச்சு இரசாயனம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக அவுஸ்திரேலிய அரசாங்கம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அபிவிருத்தி சபைக்கு அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் மிளகாய் பேஸ்ட்டில் இவ்வாறு நச்சு இரசாயனம் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சோதனையின் போது நச்சுப் பொருள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டதனைத் தொடர்ந்து, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மிளகாய் பேஸ்ட் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போதியளவு மிளகாய் உற்பத்தி செய்யப்படாத காரணத்தினால் இந்தியாவிலிருந்து செத்தல் மிளகாய் இறக்குமதி செய்ய…

    • 2 replies
    • 1.2k views
  20. மட்டக்களப்பில் இஸ்லாத்துக்கு மாறும் இளம் தமிழ் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. (கரும் புயல்)மட்டக்களப்பில் புனித இஸ்லாத்துக்கு மாறும் இளம் தமிழ் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக மட்டக்களப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக்காரணம் வறுமையே எனத்தெரியவருகின்றது. வறுமையின் நிமித்தம் காரணமாக கடைகளில் வேலை செய்யும் யுவதிகள் முஸ்லிம் இளைஞர்களை காதலிப்பதுடன் அவர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயம் புனித இஸ்லாத்தை தழுவவேண்டியேற்படுவதாக அண்மையில் ஏறார் கடையொன்றில் வேலைசெய்துஇஸ்லாத்துக்கு மாறிய பன்குடாவெளியைச்சேர்ந்த 22 வயது யுவதியொருவர் தெரிவித்தார். அத்துடன் நாம் வறுமையிண் வாடுகின்றோம் எமது ஆலயங்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன இ…

  21. அல்லைப்பிட்டியில் இராணுவத்தால் கைதான 600 பேருடன் கொண்டு செல்லப்பட்ட மூன்று பிள்ளைகளை காணவில்லை அல்லைப்பிட்டி சுற்றிவளைப்பில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 600 பேருடன் கொண்டு சென்ற எமது மூன்று மகன்களை காணவில்லை என பெற்றோர் சாட்சியம் அளித்துள்ளனர். மேலும் தமது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், அல்லைப்பிட்டியில் நாம் வசித்து வந்த வேளை 1990ம் ஆண்டு 8ம் மாதம் 25ம் திகதி எமது பிரதேசத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்து எம்மை ஒருஇடத்திற்கு அழைத்து சென்று அனைவரையும் ஒன்றாக கூட்டினர். அங்கு 14 வயது முதல் 45 வயது வரையிலான அனைவரையும் வேறாக நிற்குமாறு கூறி அவர்களை வேறு படுத்தி அவர்களில் 600 பேரை இராணுவத்…

  22. கனவில் வரும் மகனை நிஜத்தில் கொண்டு வாருங்கள் கனவில் வரும் என் மகனை நிஜத்தில் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தாய் ஒருவர் கண்ணீருடன் கோரியுள்ளார். யாழில் நடைபெற்று வரும் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அந்த அமர்வில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில், எனது மகனான ராஜாஜி தவராஜ் ( காணமல் போகையில் வயது 25 ) காரைநகரில் உள்ள எமது வீட்டில் இருந்து வேலை காரணமாக யாழ்ப்பாணம் சென்ற வேளை 2…

  23. மண்டைதீவில் மூடப்பட்டுள்ள மூன்று கிணறுகளை தோண்டினால் பலரின் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் வெளிவரும் மண்டைதீவில் மூடப்பட்டுள்ள மூன்று கிணறுகளை தோண்டினால் தீவகத்தில் காணாமல் போன பலரின் மனித எலும்புக்கூட்டு எச்சங்களை வெளிவரும் எனவே மூடப்பட்டு உள்ள கிணறுகளை மீள தோண்ட நடவடிக்கை எடுக்குமாறு கணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் மண்டைதீவை சேர்ந்த ஒருவர் கோரியுள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அல்லைப்பிட்டியை 90ம் ஆண்டு இராணுவத்தினர் சுற்றி வளைத்ததன் பின்னர் அங்கிருந்தவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து மண்கும்பான் சின்ன பள்ளிவாசலில் தங்கி இருந்தோம். அக் கால பகுதியில் மண்டைதீவு பாடசாலையில் இராணுவத்தினர் முகாம் அமைத்து இருந்தனர…

  24. சமஷ்டி முறையிலான தீர்வுக்கு இந்தியா உதவ விக்னேஸ்வரன் கோரிக்கை இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காண்பதற்காகத் தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமானது என தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர். வட மாகாண ஆளுநர் ரெஜினால்டு குரே மற்றும் முதல்வர் விக்னேஸ்வரன் அந்தப் பேரவையின் வல்லுநர் குழுவின் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றபோதே இக்கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அதற்கன திட்ட வரைவு ஒன்றை தமிழ் மக்கள் பேரவை தயாரித்து, அதனைப் பொதுமக்கள் மத்தியில் வைத்திருக்கின்றது என்று ஞாயிறன்று வவுனியாவில்இடம்பெற்றக் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்கிடையில் குறைபாட…

  25. உள்ளகப் பொறிமுறை சிறிலங்கா இராணுவத்தை இலக்கு வைக்காது – ருவான் விஜேவர்த்தன FEB 28, 2016 சிறிலங்கா இராணுவம் செய்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றாலும் அது எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தை இலக்குவைக்கும் பொறிமுறையாக இருக்காது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். “தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதும் வடக்கில் ஜனநாயக செயற்பாடுகளை பலப்படுத்துவதும் பிரிவினைவாத செயற்பாடுகள் அல்ல. முன்னைய அரசாங்கம் செய்யாததை நாம் செய்கிறோம் என்பதற்காக தேசிய பாதுகாப்பில் நாம் அக்கறையற்றிருப்பதாக யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.