ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டதால் மகன் காணாமல் போனார் - கூட்டமைப்பும் எம்மை கைவிட்டுவிட்டது. குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் தீவகத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அலுவலகம் திறக்க முற்பட்ட தனது மகனை காணவில்லை எனவும் கூட்டமைப்புக்கு ஆதரவாக மகன் இருந்தார் எனும் காரணத்தால் தனது மகளுக்கான அரசாங்க வேலைவாய்ப்புக்கள் அரசியல் தலையீடு காரணமாக கிடைக்கவில்லை எனவும் தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். யாழில் நடைபெற்று வரும் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அந்த அமர்வில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தனது சாட்சியத்தில…
-
- 0 replies
- 270 views
-
-
வெளிநாட்டு வாழ் இலங்கையரின் கருத்துக்கணிப்புக்கு அனுமதி (எஸ்.ரவிசான்) தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்புக்கு வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் கருத்துக்கள் உட்பட யோசனைகளை பெறுவதற்கு பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதாக அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்தது. வெளிநாட்டு வாழ் இலங்கையரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை காணொளி அழைப்பு மூலமாக பெற்றுகொள்வதற்கு போதுமான வசதி எம்மிடம் காணப்படாத நிலையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/3689
-
- 0 replies
- 280 views
-
-
பல்கலைக்கழக செயன்முறை பரீட்சைகளில் இரண்டு முறை தேர்ச்சி பெற்று அந்த கனவு கலைந்து போன தம்புள்ளை சேர்ந்த ஜயமினி கௌசல்யா, கலை மற்றும் விவசாயத்தின் மூலம் தனது பெற்றோரை வாழவைத்து வருகிறார். தம்புள்ளை - மாத்தளை வீதியின் மொரகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் இந்த இளம் யுவதி தனக்கு தொழில் ஒன்றை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை பயிலும் போது ஓவியம், விளையாட்டு, சிற்பம் செய்தல் ஆகியவற்றில் திறமைகளை வெளிக்காட்டியுள்ள கௌசல்யா, பல விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார். இந்த விருதுகளும் பதக்கங்களும் பொலிதீன் பை ஒன்றில் போட்டு வீட்டில் உள்ள சிறிய அறையில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு முறை பல்கலைக்கழக நுழைவுக்கான செயன்முறை பர…
-
- 0 replies
- 310 views
-
-
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காட்டியமையால், அதனை ஏற்க மறுத்த பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நல்லூர் பகுதியில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் தரம் 11 ல் கல்வி கற்கும் நல்லூர் கொண்டலடி வைரவர் ஆலயத்திற்கு அண்மையாகவுள்ள ஐங்கரன் அனுசியா (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். நேற்று மாலையில் வீட்டில் யாரும் அற்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளார். இன்று மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம…
-
- 0 replies
- 492 views
-
-
பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுக்க முயன்று கைக்குண்டுடன் கைதான நபரை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸாரும் தேசிய புலனாய்வுப் பிரிவினரும் விசாரித்து வருகின்றனர் என கொடிகாமம் பொலிஸ் அதிகாரி சிந்திக்க என் பண்டார தெரிவித்துள்ளார். கொடிகாமம் இராமவில் தட்டான்குளம் பிள்ளையார் கோயிலடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வரணி கறுக்காயை சேர்ந்த 23 வயதான இளைஞரே கைதானவராவார். கைதான நபருக்கு இந்தக் கைக்குண்டு எப்படிக் கிடைத்தது?, ஆயுதக்குழுக்கள் ஏதாவதுடன் தொடர்புகள் உண்டா என்பன குறித்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பொலிஸாரும் தேசிய புலனாய்வுப் பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் குறித்த நபரிடம் இருந்து இதுவரை தெளிவான பதில்கள் எவையும் கிடைக்கவில…
-
- 0 replies
- 242 views
-
-
வடக்கில் ஜனநாயக செயற்பாடுகளை முன்னெடுப்பது பிரிவினை வாதத்தை ஏற்படுத்த அல்ல தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதும் வடக்கில் ஜனநாயக செயற்பாடுகளை பலப்படுத்துவதும் பிரிவினைவாத செயற்பாடுகள் அல்ல. முன்னைய அரசாங்கம் செய்யாததை நாம் செய்கின்றோம் என்பதற்காக தேசிய பாதுகாப்பில் சந்தேகம் கொள்ளத் தேவையும் இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் நாம் இடமளிக்க போவதில்லை. அதேபோல் இப்போதிருக்கும் நிலைமையில் நாட்டின் தேசிய பாதுகாப்பில் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். எந்த சந்தர்பத்திலும் சர்வதேச நீதிமன்றத்தின் மூலமாக எமது இராணுவத்த…
-
- 0 replies
- 235 views
-
-
கைதிகள் தொடர்பில் செவ்வாயன்று விசேட கூட்டம் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்கும் வகையில் விசேட கூட்டமொன்று நாளை மறுதினம் (செவ்வாய்கிழமை) நடைபெறவுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் புதிய சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான குழுவினர் சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். அநுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த இரு கைதிகளும் தமது போராட்டத்தை இடைநிறுத்தியுள்ள நிலையில் மகசின் சிறைச்சாலையில் உள்ள ப…
-
- 0 replies
- 244 views
-
-
தங்கம் இருப்பதாக கூறினார்கள், இறுதியில் சொப்பின் பையொன்றைதான் மீட்க முடிந்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிலிருந்து வெளியேறி புதியதொரு கட்சியை மஹிந்த ஆரம்பிப்பார் என பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், சுதந்திரக்கட்சிலிருந்து நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்தார். தலதா மாளிகையில் இன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர்த இதனைத் தெரிவித்தார். எனது பாதுகாப்பு தலைமை அதிகாரியாக இருந்தவரின் வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. தங்கம் இருப்பதாக கூறினார்கள், இறுதியில் ஒரு சொப்பின் பையொன்றை தான் மீட்க முடிந்துள்ளது. ஆனால், அங்கிருந்…
-
- 0 replies
- 358 views
-
-
பிறப்புப்பத்திரம் இல்லாததால் அடையாள அட்டை பெறாதோருக்கு புதிய ஏற்பாடு பிறப்பத்தாட்சிப்பத்திரம் இல்லாததன் காரணமாகவே பெரும்பாலானோர் நாட்டில் அடையாள அட்டையை பெறாமலிருக்கின்றனர் என்பது ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது. எனவே, வாக்காளர் இடாப்பில் பெயர் இருந்தும் பிறப்பத்தாட்சிப் பத்திரம் இல்லாத காரணத்தினால் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளாதிருக்கின்ற வாக்காளர்களுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொடுக்க புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார். இது தொடர்பான சுற்றுநிருபத்தை இலங்கை ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சகல பிரதேச செயலகங்களுக்கும்…
-
- 0 replies
- 178 views
-
-
கிளிநொச்சியில் நிரந்தக் காணியற்ற 4,220 பேர் மீள்குடியேற்றம் கிளிநொச்சி மாவட்டத்தில் சொந்தமாக காணியில்லாத 4,220 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தில் மொத்தமாக மீள்குடியேறிய 41,893 குடும்பங்களில் 4,220 பேருக்கு காணிகள் இல்லை எனவும் அவர்களுக்கு காணிகள் வழங்க வேண்டும் எனவும் குறித்த புள்ளிவிபரத் தகவல்களில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கிளிநொச்சியிலுள்ள நான்கு பிரதேச செயலக பிரிவுகளின் படி கரைச்சியில் 3160 குடும்பங்களும், கண்டாவளையில் 956 குடும்பங்களும், பூநகரியில் 72 குடும்பங்களும், பச்சிலைப்பள்ளியில் 32 குடும்பங்களும் சொந்தக் காணியின்றி காணப்படுகின்றன…
-
- 0 replies
- 290 views
-
-
தமிழ் பௌத்தர்கள் குறித்து வழங்கப்பட்ட புள்ளி விபரம் தவறானது! தமிழ் பௌத்தர்கள் தொடர்பில் தௌிவான புள்ளிவிபரம் முன்வைக்கப்படவில்லை என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அண்மையில் அமைச்சர் கயந்த கருணாதிலக, இலங்கையில் 20,000க்கும் அதிகமான தமிழ் பௌத்தர்கள் உள்ளதாக பாராளுமன்றத்தில் வழங்கிய புள்ளிவிபரம் தவறானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்கள். அத்துடன் இந்துக்கள் மற்றும் பௌத்தர்களிடையே பரஸ்பர ஒற்றுமைகள் பல காணப்படுவதாகவும் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=77473
-
- 1 reply
- 291 views
-
-
மலையக மக்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் X எழுத்து குறியீட்டின் அர்த்தம் என்ன? திலகர் எம்.பி கேள்வி மலையக மக்களின் பெரும்பாலானோரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் X எழுத்து குறியீட்டின் அர்த்தம் என்ன? அரசியலமைப்பு சபை விவாதத்தில் திலகர் எம்.பி கேள்வி மலையக மக்களின் பிரச்சினைகளை நாங்கள் இந்த சபையிலே முன்வைத்து உரையாற்றுகின்றபோது சக ஆளும்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் உங்கள் மக்களுக்கு இந்தளவு பிரச்சினை இருக்கிறதா என எம்மிடம் கேள்வி எழுப்புகின்றனர். மலையக மக்களின் பேசப்படாத பல விடயங்கள் உண்டு. குறிப்பாக தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் நாட்டின் ஏனை…
-
- 0 replies
- 290 views
-
-
இரண்டுபட்டது ஈரோஸ்! - ஈரோஸ் ஜனநாயக முன்னணி உதயம் [Sunday 2016-02-28 07:00] மட்டக்களப்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஈரோஸ் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இணைந்து இந்த கட்சியை ஆரம்பித்துள்ளனர். இதன் அங்குரார்ப்பண நிகழ்வும் கொள்கைப்பிரகடனம் செய்யும் நிகழ்வும் நேற்றுக் காலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் ஈரோஸ் இயக்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் செயலாளர் ரி.இராஜேந்திரா உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள், அதரவாளர்கள் கலந்துகொண்டனர். …
-
- 1 reply
- 918 views
-
-
ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோடி வாங்கிய கருணா குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்வதற்கு 5 கோடி ரூபா பணம் வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரவி கொலை செய்வதற்காக கருணா தரப்பிற்கு இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப்பிரிவின் முன்னாள் அதிகாரி ரியனாச்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கொலை கடந்த அரசாங்கத்தின் சூழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் வசந்த ஊடாக கருணா தரப்பிற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
-
- 0 replies
- 292 views
-
-
பொட்டு அம்மானின் உதவியாளர் எனக் கூறி மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் விடுதலை
-
- 0 replies
- 359 views
-
-
மனைவி, மகனை கைதுசெய்யவும்: மஹிந்த தன்னுடைய மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவையும் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவையும், கைதுசெய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி தலதா மாளிகைக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த அவர், அந்த விசேட பூஜைவழிபாடுகளில் கலந்துகொண்டதன் பின்னர், மாளிகைக்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/167059/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%95-%E0…
-
- 1 reply
- 505 views
-
-
திருகோணமலையில் பிடிபட்ட இராட்சத திருக்கை திருகோணமலை சண்டிபே (மனையாவெளி) கடற்பரப்பில் 1500 கிலோகிராம் நிறையுடைய இராட்சத திருக்கை மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.அப்பகுதி மீனவர் ஒருவரது வலையில் குறித்த திருக்கை மீன் பிடிபட்டுள்ளது. நேற்று மாலை 6.00 மணி அளவில் கடலில் வலையை வீசிவிட்டு இன்று காலை வலையை எடுக்கச் சென்ற போது குறித்த மீன் வலையில் சிக்குண்டிருந்ததாகவும் அதனை கரைக்கு கொண்டு வருவதற்கு மற்றைய சக மீனவர்களின் உதவியைப் பெற்றதாகவும் அந்த மீனவர் தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/news/9615
-
- 0 replies
- 302 views
-
-
நல்லிணக்கத்தை அடைவதற்கு நீண்ட பயணம் தேவை! - நிஷா பிஸ்வால் [Sunday 2016-02-28 08:00] நல்லிணக்கம் மற்றும் நீதி என்பவற்றுக்காக இலங்கை இன்னும் அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சமாதானத்துக்கான நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர்- இலங்கையால் இந்த பணிகளை தனித்து நிறைவேற்ற முடியாது. எனவே அமெரிக்க நண்பனாகவும் பங்களாராகவும் இலங்கைக்கு உதவும் என்று அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார். போரினால் பிளவுப்பட்டிருந்த இலங்கையில் தற்போது ஜனநாயகம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மக்கள் பழைய ஆட்சியை…
-
- 0 replies
- 398 views
-
-
காலை சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி இரவே நாடு திரும்பினார் நேற்று காலை சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவே நாடு திரும்பியுள்ளார். சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் நலன் விசாரிப்பதற்காக நேற்று காலை ஜனாதிபதி சிங்கப்பூருக்கு சென்றார். இதனையடுத்து நேற்று இரவு விமானத்தில் அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=77470
-
- 0 replies
- 333 views
-
-
காணாமற் போனோர் தொடர்பான விசாரணை இன்று வேலணையில் காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் கட்ட விசாரணைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வேலணைப் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளன. ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வேலணைப் பிரதேச செயலகத்திலும் நாளை மற்றும் நாளை மறுதினமும் சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் நடைபெறவிருக்கின்றன. யாழ். மாவட்டத்தில் விசாரணைகள் இடம்பெறாத பிரதேச செயலக பிரிவுகளில் தற்போது குறித்த அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தலைமையில் கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட 232 பேருக்கான விசாரணைகள் யாழ்.கோப…
-
- 0 replies
- 339 views
-
-
கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதம்! தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் சில வருடங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ள 14 கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த நிலையில், அவர்களுள் ஒருவர் அண்மையில் விடுவிக்கப்பட்டார். எஞ்சிய 13 பேரில் நால்வர், உடல் நலம் குன்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிறைச்சாலைக்கு திரும்பி மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். http://onlineuthayan.com/news/9579
-
- 0 replies
- 184 views
-
-
இறுதி யுத்தத்தில் கணிசமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது உண்மை. – பரணகம இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான இறுதி அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பித்து விட்டதாக ஜானதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்து உள்ளார். யாழில் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. குறித்த அமர்வு நிறைவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , காணாமல் போனோர் தொடர்பில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்க பெற்று உள்ளன. ஆனால் அவற்றில் சில ஒருவர் காண…
-
- 1 reply
- 352 views
-
-
தங்கையை கிண்டல் செய்த நபரைத் தட்டிக்கேட்ட வேளை கத்திக்குத்துக்கு இலக்கான அண்ணன், தம்பி இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் காலை 9.15 மணியிளவில் புத்தூர் மருதடி வடக்கில் இடம்பெற்றது. அதேயிடத்தைச் சேர்ந்த மாணிக்கம் மலரவன் (வயது-21), மாணிக்கம் மதுசன் வயது 19) ஆகியோரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாக தமது தங்கையை கேலி கிண்டல் செய்து வந்த மேற்படி நபரிடம் அண்ணன் தம்பி ஆகிய இருவரும் இது தொடர்பில் விசாரிப்பதற்காக அந் நபரது வீட்டுக்கு சென்றவேளை அங்கு மூண்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது. அவ்வேளை தொல்லை கொடுத்த …
-
- 2 replies
- 452 views
-
-
யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு கட்டுபாடு யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும். தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன. யாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ம் திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த …
-
- 21 replies
- 1.6k views
-
-
இன அடையாளத்தை காப்பற்றுமாறு பறங்கியர் கோரிக்கை இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பறங்கியர் இனத்தின் அடையாளமும் தனித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமது மொழி, கலாச்சாரம் ஆகியவை புதிய அரசியல் சாசனத்தில் உறுதிப்படுத்தபப்ட வேண்டும் என பறங்கியர் கோரிக்கை புதிய அரசியல் சாசனம் ஒன்றை இயற்றுவது தொடர்பிலான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரச குழுவினர் கிழக்கு மாகாணத்தில் தமது அமர்வைகளை நடத்தியபோது, பறங்கியர் சமூகத்தினர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினராக இருக்கும் பறங்கியர் போன்றவர்களின் அபிலாஷைகள், தேவைகள், அடையாளங்கள் ஆகியவை உரிய முறையின் கவனத்தில் எடுக்கப்பட்…
-
- 2 replies
- 834 views
-