Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மைத்திரி கொடுத்த ஆணை! நிதி மோசடி விசாரணை பிரிவிடம் சிக்கிய 10 வர்த்தகர்கள் [ சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2016, 10:28.05 AM GMT ] அதிகளவான வர்த்தகர்கள் எதிர்வரும் வாரம் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொலிஸ் நிதி குற்ற புலனாய்வுப் பிரிவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதனால், 10 வர்த்தகர்களை அழைத்து விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வர்த்தகமானி மூலம் ஜனாதிபதியினால் குற்றம் சுமத்தப்படுகின்ற எந்தவொரு நபரின் வங்கி கணக்குகளை நீதிமன்றி…

  2. லங்காபுத்ர வங்கியும், மஹிந்தவின் மோசடியும் - ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் ரஞ்ஜன் ராமநாயக்க [ சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2016, 12:49.35 PM GMT ] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமது உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்காக லங்காபுத்ர வங்கியிலிருந்து சுமார் 7 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக சமூக நலன் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமது உறவினர்கள் மற்றும் நெருங்கியவர்களுக்கு உதவிகளை வழங்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் 2006ஆம் ஆண்டு லங்காபுத்ர வங்கி ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். …

  3. ஸ்ரீலங்கா துணை ஜனாதிபதிகள் சிறுபான்மை இனங்களை பிரதிநித்துவப்படுத்த வேண்டும் [ Sunday,21 February 2016, 05:08:20 ] ஸ்ரீலங்காவின் துணை ஜனாதிபதிகளாக மலையகத் தமிழர் உட்பட மூன்று சிறுபான்மை இனங்கள் சார்பிலும் மூன்று பேர் தெரிவாகக் கூடிய வகையில் அரசியல் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தொடர்பாக மக்களின் கருத்தறியும் செயற்திட்டம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மலையக ஆய்வகத்தினால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதான செயற்பாட்டாளரான ஏ. லோறன்ஸ் தெரிவித்தார். அத்துடன் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை நீக்கப்பட வேண்டும் …

  4. புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஜேர்மன் தலைநகர் பேர்லினில் புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் தொடர்ந்தும் தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதாகக் கண்டித்தும், ஜேர்மன் அரசாங்கம் எந்தவகையான உதவிகளையும் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக் கூடாது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கறுப்புக் கொடியை தாங்கியவாறு ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கலந்து கொண்டனர். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கும் மைத்திரிபால சிறிசேன அர…

  5. கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய்? ஆய்வுக்குத் பிரான்ஸ் பல்தேசிய நிறுவனம் தயார் [ Saturday,20 February 2016, 03:21:47 ] தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு கடற்பரப்பில், எண்ணெய் வள ஆய்வில் பிரான்ஸை தளமாகக்கொண்ட (Total) டோட்டல் என்ற பல்தேசிய எண்ணெய் நிறுவனம் ஒன்று ஈடுபடவுள்ளது. இதற்கான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். பிரான்ஸின் பல்தேசிய நிறுவனத்துக்கும், ஸ்ரீலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திச் செயலகத்துக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இது தொடர்பான கூட்டு ஆய்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இந்தக் கூட்டு ஆய்வு உடன்பாடு குறித்த ப…

  6. திடீரெனத் திசை மாறுகின்றது வடக்கு, கிழக்கு வீட்டுத் திட்டம்! [ சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2016, 03:47.10 AM GMT ] வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில், தற்போது அநுராதபுரம், பொலநறுவை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியேற்ற அமைச்சினால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2.1 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களுக்கே இந்த வீட்டுத் திட்டம் முழுமையாக வழங்கப்படும் என்றும் …

  7. முல்லை வட்டுவாகலில் மக்களின் காணிகளில் பனைமரங்களை அழிக்கும் இராணுவம்! 20 பெப்ரவரி 2016 முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகலில் இலங்கை கடற்படையினர் பனை மரங்களை அழிக்கும் செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குளோபல் தமிழ் செய்தியாளர் குறிப்பிடுகின்றார். குறித்த பகுதியில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டே இவ்வாறு பனைமரங்களை அழித்து வருகின்றனர். வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான .379 ஏக்கர் நிலமும் மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணியுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்களின் கீழ் அபகரிக்கப்ப…

    • 3 replies
    • 738 views
  8. சாவகச்சேரியில் தமிழீழ வடிவில் காட்சி கொடுத்த மீனாட்சி அம்மன்! [Friday 2016-02-19 20:00] சாவகச்சேரி ஈழவாரியம்பதியுறை சிறி மீனாட்சி அம்மன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருகிறது. இதன் ஆறாம் நாள் திருவிழா நேற்று மாலை ஆலயத்தில் இடம்பெற்ற போது தமிழீழ வடிவில் வடிவமைக்கப்பட்ட மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வீதியுலா வருகை தந்தார். இதில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=151744&category=TamilNews&language=tamil

  9. யாழ்ப்பாணத்தில் மங்கள சமரவீர முன் ஆவேசமாகப் பேசிய மூத்த இராணுவ அதிகாரி! - நல்லிணக்க முயற்சிகளுக்கு சவால் [Saturday 2016-02-20 19:00] வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்தவாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது, இராணுவத்தின் கீழ்ப்படியாமை நிலையை நேரடியாக எதிர்கொள்ள நேரிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழமையாக பதற்றமடையாத மங்கள சமரவீர சிரேஸ்ட இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கலகே தெரிவித்த ஆவேசமான கருத்துக்களால் அதிர்ச்சியடைந்தார். படையணியொன்றின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சாகி கலகே சீற்றத்துடன் கூடிய கருத்துக்களை வெளியிட்ட வேளை இராணுவத் தளபதி, மற்றும் பாதுகாப்புச் செயலாளரும் அங்கு பிரசன்னமாகிய…

  10. ராஜபக்ஸ குடும்பத்துடன் ஜனாதிபதி எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளத் தயாரில்லை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குடும்பத்துடன் எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ள தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.ராஜபக்ஸ குடும்பத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்களிலிருந்து அவர்களை விடுவித்தால் அதற்கு ஈடாக அரசியலிலருந்து ஓய்வு பெறுவதற்கோ அல்லது வேறும் எந்தவொரு விட்டுக்கொடுப்யேயோ மேற்கொள்ளத் தயார் என மஹிந்த தரப்பு, மைத்திரிக்கு தகவல் அனுப்பி வைத்துள்ளது. …

  11. போரினால் ஏற்பட்ட வடுக்களைச் சீராக்க ஒஸ்திரியாவின் உதவி அவசியம் : ஜனாதிபதி வேண்டுகோள் போரினால் ஏற்பட்ட வடுக்களையும், இழப்புக்களையும் சீராக்கி நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் சக வாழ்வையும் மேம்படுத்துவதற்கு நட்பு நாடுகளின் உதவி, ஒத்தாசை மிக அவசியமானதாகும். அந்தவகையில் இலங்கையின் நட்பு நாடான ஒஸ்திரியா எமக்கு உதவ வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்திரிய ஜனாதிபதி ஹெய்ன்ஸ் பிஸ்கரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஒஸ்திரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதியுடன் மேற்கொண்ட உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதிய…

  12. திசைமாறும் வடக்கு - கிழக்கு வீட்டுத்திட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட 65,000 வீட்டுத்திட்டத்தில் அநுராதபுரம், பொலனறுவை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரினால் வீடுகளை இழந்த மக்களிற்கு வடக்கு, கிழக்கில் வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. 2.1 மில்லியன் ரூபா செலவில் ஒவ்வொரு வீடுகளும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களிற்கே இந்த வீட்டுத்திட்டம் முழுமையாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்ப…

  13. ஒரே இரவில் ஏழு வீடுகளில் கொள்ளை;யாழில் சம்பவம் யாழ். கோப்பாய்- பூதர்மடம் மற்றும் நீர்வேலி- கரந்தாய் பகுதிகளில் ஒரே இரவில் 7 வீடுகள் உடைத்து பெருமளவு நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது . கோப்பாய்- பூதர்மடம், நீர்வேலி- கரந்தாய் பகுதிகளில் இன்றைய தினம் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களில் வந்த கொள்ளையர்கள் முதலில் இந்து குரு ஒருவருடைய வீட்டுக்குள் புகுந்து இந்துமத குருவை தாக்கி காயப்படுத்தி விட்டு வீட்டுக்குள் இருந்த பொருட்கள் நகைகளை கொள்ளையிட்டுள்ளனர். தொடர்ச்சியாக நீர்வேலி -கரந்தாய் பகுதியிலும் அதே கொள்ளையர் குழு 6 வீட…

  14. ஜனாதிபதி யாழிற்கு விஜயம் : வடக்கு முதல்வர், ஆளுநருடன் சந்திப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மன் மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இன்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பும் அதேவேளை யாழ்ப்பாணத்திற்காக விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். h…

  15. 'சுன்னாகம் குடிநீர் பிரச்சினையில் அரசியல் முறைகேடு' -சண்முகம் தவசீலன் சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினையில் ஓர் அரசியல் முறைகேடு நடந்திருக்கின்றது. உண்மையில் அந்த மக்கள் கழிவு ஒயில் பிரச்சினை காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயமானதொரு தீர்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு மல்லாகம் நீதிமன்றத்தால் …

  16. மூன்றாம் நிலைத் தலைமைப் பதவிக்கு இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படுவர் ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்றாம் நிலைத் தலைமைப்பதவிக்கு இளைஞர்கள் பயிற்றுவிக்கப்படுவர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இளைய திறமையான தலைவர்களுடன் கட்சியை முன்னோக்கி நகர்த்த வேண்டும். இது தொடர்பிலான கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.இதற்காக இளைஞர் யுவதிகளின் கருத்துக்கள் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. கட்சியை மறுசீரமைக்கும் போது கட்சிக்கு புதிதாக உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க…

  17. மார்ச்சில் காத்திருக்கிறது அதிர்ச்சி! மோசடி விசாரணை அறிக்கை மைத்திரியிடம் கையளிப்பு [ Saturday,20 February 2016, 03:15:12 ] பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்னர், கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்துவதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவொன்றை அமைத்தார். இதன்படி முக்கிய பல அரசியல் பிரமுகர்களிடம் இந்தக்குழு விசாரணை நடத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடமும் பலதடவைகள் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன. …

  18. கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று மாலை 4.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. நாளை காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத் தொடர்ந்து, அதிவணக்கத்திற்குரிய யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருவிழா கூட்டுத்திருப்பலி பூசையும் இடம்பெறவுள்ளன. இந்த வருடம் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களும், இலங்கையில் இருந்து 3 ஆயிரம் யாத்திரிகர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. யாத்திரிகர்களுக்கான குடிநீர், உணவு மற்றும் ஏனைய வசதிகள் அனைத்திற்குமான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. யாத்திரிகர்களுக்கான போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்துச் சபையினரும்…

  19. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை செப்டம்பரில் கிடைக்கும் ; அமைச்சர் சமரவிக்ரம தகவல் [ Saturday,20 February 2016, 04:24:59 ] ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் ஸ்ரீலங்காவிற்கு மீண்டும் வழங்கப்படும் என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் ஜேன்மன் மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்த விஜயத்தின்போது ஜேர்மன் அதிபர் ஏஞ்ஜலா மெர்கலை சந்தித்த ஜனாதிபதி, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை குறித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறியுள்ள…

  20. ராஜபக்சக்களினால் எனது உயிருக்கு ஆபத்து ; சந்திரிகா குமாரதுங்க தகவல் [ Saturday,20 February 2016, 03:29:43 ] தனக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ராஜபக்சக்களினால் ஆபத்து இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், சுதந்திரக் கட்சியை விட்டு மஹிந்த ராஜபக்ச பல தடவை வெளியேறியிருந்தார். ஆனால் அவற்றை அவர் இன்று மறைக்கின்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீர்குலைப்பதற்கு சிலர் முயற்சி செய்து வருகின்றனர். எமது கட்…

  21. ஐஸ்லாந்தில், பெண்களை அடிமையாக வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கையர் கைது:- 20 பெப்ரவரி 2016 ஐஸ்லாந்தில் இரண்டு இலங்கைப் பெண்களை அடிமையாக வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தென் ஐஸ்லாந்தின் விக் என்னும் நகரில் இவ்வாறு பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டு இருந்தனர். சட்டவிரோத ஆட்கடத்தல் பிடியில் இந்த இரண்டு பெண்களும் சிக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐஸ்லாந்து அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் குறித்த பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து அவரது பணி இடைநிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவி;க்கப்படுகிறது. http://www.…

  22. ராஜபக்சவின் மோசடி குறித்து ஆராய ஹம்பாந்தோட்டைக்கு ரணில் விஜயம் [ Saturday,20 February 2016, 03:11:23 ] ராஜபக்சக்களின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார். ஹம்பாந்தோட்டைக்கு பிரதமர் ரணில் இன்று சனிக்கிழமை விஜயம் செய்கின்றார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் அங்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முழுமையாக ஆராயவுள்ளார். யோஷித்த ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவின் அபிவிருத்தித் திட்டங்களை பிரதமர் நேரில் சென்று ஆராயவுள்…

  23. தமிழரினது எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் எமக்கு கிடைத்துள்ளார்: வடக்கு முதல்வர் பெருமிதம்! தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றக்கூடிய ஆளுநர் ஒருவர் வட மாகாணத்திற்கு கிடைத்துள்ளார். அதற்கு நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் தெங்கு பயிர்ச்செய்கைக்கான இராஜாங்க அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வடமாகாணத்திற்கான ஆளுநராக இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  24. யாழ். வான் பரப்பில் போர் விமானங்கள் பயிற்சி! மக்கள் அச்சப்படத் தேவையில்லை! கடற்படையினரும், விமானப்படையினரும் இணைந்து பருத்தித்துறைக் கடற்பரப்பில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றமையினால் இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, யாழ். குடாநாட்டு வான்பரப்பில் மிகை ஒலிபபோர் விமானங்கள் அடிக்கடி வந்து செல்வதாகத் தெரிவித்துள்ள விமானப்படையினர், இது தொடர்பில் பொதுமக்கள் எவரும் அச்சமடையத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். யாழ். குடாநாட்டு வான்பரப்பில் நேற்றுக் காலை 6.15 மணிக்கு திடீரென மிகைஒலிப் போர்விமானம் ஒன்று நுழைந்து நான்கு தடவைகளுக்கு மேல் வட்டமடித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.