ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
சர்வதேச நாணய நிதியத்திடம் ஸ்ரீலங்கா உதவி கோரியது [ Friday,5 February 2016, 02:46:35 ] சர்வதேச நாணய நிதியத்திடம் ஸ்ரீலங்கா உதவி கோரியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலக வங்கியிடம் ஒரு பில்லியன் நிதியுதவி கோரப்பட்டுள்ள நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமும் உதவி கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உள்ளக அபிவிருத்தி மற்றும் எரிபொருள் மானியம் ஆகிய தேவைகளை உள்ளடக்கி சர்வதேச நாணய நிதியத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது என்றும் அதற்கான பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் திறைசேரி அதிகாரி குறிப்பிட்டார். சென்மதி நிலுவை பற்றாக்குறை இடைவெளி அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனை கையாள்வதற்கு உதவியாக புதிய பிணை மீட்புப் பொதி…
-
- 0 replies
- 370 views
-
-
தமிழ் மொழியில் தேசிய கீதம் : அரசியல்வாதி ஆர்ப்பாட்டம் (க.கிஷாந்தன்) இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள அரசியல் வாதியொருவர் அட்டன்- கினிகத்தேனை நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எலபிரிய நந்தராஜ் என்பவரே கினிகத்தேன பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மலசலகூடமொன்றின் மேல் ஏறி இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். 'நல்லாட்சிக்காரர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தமிழிழ் தேசிய கீதம் பாடியுள்ளனர். நல்லாட்சி அரசில் சிங்களவர்களுக்கு எதிராக நயவஞ்சக அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்ற…
-
- 4 replies
- 749 views
-
-
எலிசபெத் மகாராணியின் சுதந்திர தின வாழ்த்து! இலங்கை, தனது 68ஆவது சுதந்திர தின நிகழ்வை கொண்டாடுவதற்கு இங்கிலாந்து நாட்டின் அரசியலான எலிசபெத் மகாராணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், 'இலங்கை ஜனாதிபதிக்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பதை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். இனிவரும் வருடங்களில் இலங்கை மக்கள் சந்தோசமாகவும் அதிஷ்டம் மிக்க ஆண்டாக இருப்பதற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, இலங்கை வாழ் மக்களுக்கு, 68ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 622 views
-
-
தமிழ் மக்களுக்கு கௌரவம் அளித்துள்ளோம் : நல்லிணக்கத்தை இழிவுபடுத்த வேண்டாம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நீண்ட வருடங்களுக்கு பின்னர் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மக்களுக்கு அரசாங்கம் அளிக்கும் கௌரவமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டமைக்கு எதிராக இனவாதிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. அரசின் நல்லிணக்க செயற்பாடுகளை இழிவுப்படுத்த வேண்டாம் எனவும் அவர் மேலும் கோரிக்கை விடுத்தார். இவ்வாறான போராட்டங…
-
- 0 replies
- 481 views
-
-
இலங்கையின் சுதந்திர தினம்! தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினம்! : சிறிதரன் எம்.பி இலங்கையின் சுதந்திர தினமானது தமிழ் மக்களுக்கு சுதந்திரமற்ற தினமாகவே பார்க்கப்படுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்த்தினால் இன்று காலை எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 09.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாடாளுமனற் உறுப்பினர் சிறிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறிதரன் இவ்வாறு கூறிய…
-
- 0 replies
- 425 views
-
-
யாழ்.குடாநாட்டில் பல பாகங்களிலும் தேசியக் கொடி பறக்கிறது! இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று பல்வேறு இடங்களில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு அனைத்து வர்த்தக, மற்றும் வியாபார, சந்தை நிலையங்கள், அரச நிறுவனங்கள், அரசார்பற்ற நிறுவனங்கள் போன்ற இடங்களில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அரச, தனியார் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் தேசியக்கொடியை பறக்க விடுமாறு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 559 views
- 1 follower
-
-
சிசிலியா கொத்தலாவல கைது செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவல, கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். கோல்டன் கீ நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு பிறகு அதன் நிரந்தர வைப்பாளர்கள், தமது வைப்பு பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர் இலங்கையிலிருந்து தப்பிச்சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். அவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரினால் (இன்டர்போல்) பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு இவர் இலங்கையிலிருந்து சென்ற நிலையில், இங்கிலாந்திலிருந்து கட்டார் வழியாக இலங்கைக்கு…
-
- 0 replies
- 397 views
-
-
யோசித்த ராஜபக்ச ஒரு அரசியல் கைதியா? ஒரு படை அதிகாரியாக இருந்த போதிலும், தந்தையின் பதிவிக் காலத்தின் பின்னால், ஆட்சி அதிகாரம் தமது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற கனவுடன், இலங்கை சுதந்திரக் கட்சியின், இரு இளைஞர் பிரிவுகளில் (தருன்யட்ட ஹெடக், நில் பலகைய) தனது இரு சகோதரர்களுடன் சேர்ந்து கலந்து கொண்டார். இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதை கடற்படை விதிகள் தடுத்தாலும், எந்த ஒரு அதிகாரிக்கும், இது குறித்த கேள்விகள் கேட்கும் துணிவுகள் இருந்ததில்லை. சகோதரர்களுக்கு பிடித்தமான ரக்பி விளையாட்டுகளில் கூட, யோசித்த பங்குகொண்ட கடற்படை அணியே வெல்ல வேண்டும் என்பது எழுதப் படாத விதி. கடற்படையில் இல்லாத இரு சகோதரர்கள் கூட இந்த அணியில் விளையாடினார்கள். எதிர் அணி, மத்திய…
-
- 0 replies
- 564 views
-
-
முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம் -சண்முகம் தவசீலன் இலங்கையின் 68ஆவது சுதந்திரதினமான இன்று, முல்லைத்தீவில் காணமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை பத்துமணியளவில் முல்லைத்தீவு கச்சேரிக்கு அருகிலுள்ள மக்கள் வங்கிக்கு முன்னால் ஒன்று கூடிய உறவினர்கள் அவ்விடத்திலிருந்து கச்சேரிவரை ஊர்வலமாக சென்று கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். - See more at: http://www.tamilmirror.lk/165342/%E0%AE%AE-%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE…
-
- 1 reply
- 497 views
-
-
வவுனியாவில் கறுப்புக் கொடி போராட்டம் -நவரத்தினம் கபில்நாத் வவுனியா நகரசபைக்கு முன்பாக உளள் பொங்குதமிழ் தூபிக்கு அருகில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் வவுனியா பிரஜைகள் குழுவின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள், தமது வாயை கறுப்புத் துணியால் கட்டியவாறும் கறுப்பு நிறக்கொடிகளையும் பதாதைகளையும் ஏந்தியவாறும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர். - See more at: http://www.tamilmirror.lk/165343/%E0%AE%B5%E0%AE%B5-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B1-%E0%AE%AA-%E…
-
- 1 reply
- 504 views
-
-
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக் கொடி! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கையின் சுதந்திர தினமான இன்று கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்தைக் காணக்கூடியதாக இருந்தது. கைலாசபதி கலையரங்கு மற்றும் நூலகப் பகுதி ஆகிய இடங்களிலேயே கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டதை அடுத்து பல்கலைக் கழகத்திற்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆயுதம் தாங்கிய நிலையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 1 reply
- 627 views
-
-
பருத்தித்துறை நீதிவானின் வாசஸ்தலத்தில் கைக்குண்டு! பருத்தித்துறை நீதவான் நீதpமன்ற நீதpவான் பெ.சிவகுமாரின் வாசஸ்தலத்தில், நேற்று பொலித்தீன் பையில் கட்டிய நிலையில் வெடிக்கக் கூடிய கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கைக்குண்டு, இராணுவத்தினரால் பயன்படுத்தப்படுவது என்ற தகவல் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். பருத்தித்துறை நீதpவானின் உத்தியோகபூர்வ இல்ல வளாகத்தில் உள்ள கிணற்றடியில் இருந்தே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். http://onlineuthayan.com/news/8178
-
- 0 replies
- 461 views
-
-
'அரசே! கண்டிக்கிறோம் உம்மை கண்டிக்கிறோம்' (பழுலுல்லாஹ் பர்ஹான்) இலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவின் அருகாமையில் இடம்பெற்றது. தாயக மக்களின் விடுதலையை வலியுறுத்தியும் மற்றும் காணாமல் போனோரை கண்டறியும் நோக்கோடும் மேற்கொள்ளப்பட்ட குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் போனோரின் குடும்ப உறவினர்கள் காணமால் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்திய வண்ணமும் “எனது பிள்ளை எனக்கு வேண்டும்”, “அரசே! எனது கணவரை விடுதலை செய்” “தமிழர்களுக்கு ஒரு நியாயமா? மற்றவர்களுக்கு வேறு நியாயமா?” “அரசே…
-
- 0 replies
- 578 views
-
-
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது! 68ஆவது சுதந்திர தின நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழில் தேசியகீதம் பாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. http://onlineuthayan.com/news/8163
-
- 1 reply
- 643 views
-
-
நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீக்கப்பட வேண்டும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்பது தேவையற்ற ஒன்றாகும் என்பதுடன் சட்டவிரோதமான அந்த நிறுவனம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். குறிப்பிட்ட சிலரை இலக்காக கொண்டு இயங்கி வரும் நிதி மோசடி விசாரணை பிரிவு (FCID) சட்டவிரோதமான ஒன்றாகும் என குறிப்பிட்ட அவர்,நாடாளுமன்றத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்று…
-
- 0 replies
- 283 views
-
-
யாழ்.மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு! இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய யாழ். மாவட்ட செயலகத்தில் 68ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வு கொண்டாடப்பட்டது. இதன்போது, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் யாழ். மாவட்ட செயலக முன்றலில் தேசிய கீதம் ஒலிக்க தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகளின் ஒரு அம்சமாக மரநாட்டு நிகழ்வும் மாவட்ட செயலக முன்றலில் மாவட்ட அரச அதிபரால் நாட்டி வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். …
-
- 0 replies
- 369 views
-
-
ஒற்றுமை, சகோதரத்துவம் சரியாக இருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது! : சுதந்திர தினத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு! ஜாதி, மத, பேதமின்றி போராடி சுதந்திரம் பெற்றோம், எனினும் ஒற்றுமை, சகோதரத்துவம் சரியாக இருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது, பயங்கரவாதம் உருவாகியிருக்காது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் 68ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்று வருகின்றன. இதில் சற்று முன்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது, 1948ஆம் ஆண்டுகளில் பெற்ற சுதந்திரத்தை நாம் இப்போது கொண்டாடுகிறோம், 1948 முதல் 2012ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 276 views
-
-
சிறுபான்மையினர் ஆதரவின்றி எதையுமே செய்ய முடியாது: லக்ஷ்மன் யாப்பா [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 04:30.37 AM GMT ] சிறுபான்மை மக்களது ஆதரவின்றி ஜனாதிபதியாகவோ, அரசு அமைக்கவோ, நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தவோ எவருக்கும் முடியாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அத்துடன், கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிப்பவர்கள் எண்ணுபவர்கள் கட்சித் துரோகிகள் என்றும் அவர் சாடினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது:- "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதற்கு கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் விரும்பவ…
-
- 1 reply
- 309 views
-
-
பேருந்துகளுக்கு இடையில் போட்டி. உயிரை பணயம் வைத்து பயணிக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துக்கும் தனியார் பேருந்துக்கும் இடையில் நடைபெறும் போட்டிகளை கட்டுபடுத்த யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளன. யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் பதவியேற்றதன் பின்னர் யாழில் நடைபெற்று வந்த பல குற்ற செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. கடந்த காலத்தில் யாழில் அதிகரித்து காணப்பட்ட வாள் வெட்டு சம்பவங்கள் , குழு மோதல்கள் , கொள்ளை சம்பவங்கள் என்பன வெகுவாக குறைந்தன. அண்மையில் மது போதையில் வாகனம் ஓடுபவர்களை கட்டுப்படுத்த மதுபான சாலைக்கு …
-
- 5 replies
- 464 views
-
-
மகனைக் காட்டிக் கொடுத்தவர்களைக் கண்டு பிடித்தார் மகிந்த [ புதன்கிழமை, 03 பெப்ரவரி 2016, 09:53.15 PM GMT ] யோஷித்த ராஜபக்ச உட்பட சிலர் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெறும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாளைய தினம் கொண்டாடப்படவிருக்கும் தேசிய சுதந்திர தினத்தை முன்ணிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார். யோஷித்த ராஜபக்ச உட்பட சிலர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் சில அரசசார்பற்ற நிறுவனங்கள் தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களை சந்தித்துள்ளனர். எனது அரசாங்கத்தின் உறுப்பினர்களை ஊழ…
-
- 0 replies
- 496 views
-
-
ஜெனீவா தீர்மானத்தை அமுல்படுத்தினால் நமக்கே கௌரவம் ; சுதந்திர தின உரையில் ஜனாதிபதி [ Thursday,4 February 2016, 05:25:48 ] ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதால் நாட்டிற்கு எந்தவித தீங்கும் ஏற்படாது என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனூடாக சர்வதேசத்தின் முன் நாட்டின் கௌரவமே காக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தினார். சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். சில இனவாதக் குழுக்களும், ஆட்சியை கைப்பற்றும் குறிக்கோள் உடையவர்களும் ஜெனீவா தீர்மானம் குறித்து பிழையான கருத்துக்களை மக்கள்…
-
- 0 replies
- 363 views
-
-
கொக்கிளாயில் விகாரை அமைக்கும் காணிக்கு மாற்றுக் காணி வழங்க முற்படுவதற்கு முதலமைச்சர் கண்டனம்! [Thursday 2016-02-04 07:00] கொக்கிளாய் பகுதியில் விகாரை அமைப்பதற்காக தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றை பௌத்த பிக்கு ஒருவர் அபகரித்துள்ள நிலையில், காணி உரிமையாளருக்கு மாற்றுக் காணி வழங்க அதிகாரிகள் எடுத்த முடிவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கண்டித்துள்ளார். சட்டத்திற்கு முரணான செயற்பட்ட பௌத்த பிக்குவிற்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவி அரசாங்க அதிபர் தவறியிருப்பதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார். கொக்கிளாய் பகுதியில் விகாரை அமைப்பதற்காக தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றை பௌத்த பிக்கு ஒருவர் அபகரித்துள்ள நிலையில், காணி உரிமையாளர…
-
- 0 replies
- 361 views
-
-
இலங்கையைப் பொறுப்புக்கூற வைத்த பான் கீ மூனுக்கு கேம்பிரிஜ் பல்கலைக்கழக கலாநிதி பட்டம் [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2016, 02:19.57 AM GMT ] ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு, பிரித்தானியாவில் புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம், ஐ.நா பொதுச்செயலராக பணியாற்றியுள்ள காலத்தில், அவர் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள், பெண்கள் உரிமைக்கான ஆதரவு, உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்காக அளித்த பங்கு என்பனவற்றுக்காகவே ஐ.நா பொதுச்செயலருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இவரது காலத்தில், போரின் போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அது த…
-
- 0 replies
- 489 views
-
-
(2ம் இணைப்பு) சுதந்திர தினத்தில் இம்முறையும் தமிழ் மொழியில் தேசிய கீதம் புறக்கணிப்பு [ Thursday,4 February 2016, 03:18:36 ] ஸ்ரீலங்காவின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று பெரும் எதிர்பார்ப்புக்கள் காணப்பட்ட போதிலும் இம்முறையும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. சுதந்திர தின நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களால் தேசிய கீதம் சிங்கள மொழியில் இசைக்கப்பட்டதோடு, தமிழ் மொழியில் பாடப்படவில்லை. இதேவேளை தமிழில் தேசிய கீதம் இம்முறையும் இசைக்கப்படக்கூடாது என்று ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தில் …
-
- 0 replies
- 432 views
-
-
'20 ஆண்டுகளுக்கு யாரும் அசைக்க முடியாது என்று நினைத்தே நானும் ஆட்சி செய்தேன்' 04 பெப்ரவரி 2016 'எனக்கே சுதந்திரமில்லை' என முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களிடம் புலம்பத் தொடங்கியுள்ளார். தமக்கு சுதந்திரமில்லாத நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரம் காணப்படுவதகத் தெரிவித்த போதிலும் உண்மையில் சுதந்திரம் கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தாமும் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். புதிதாக அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். புதிதாக ஆரம்…
-
- 0 replies
- 326 views
-