ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
தமிழீழத்தை உருவாக்குவதற்கான சித்தாந்தம் இன்னமும் தோற்கடிக்கப்படவில்லை! : ஜனாதிபதி தெரிவிப்பு! புலிப்பயங்கரவாதம் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டபோதும் இந்த நாட்டில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான அவர்களது சித்தாந்தம் தோற்கடிக்கப்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போர் ரீதியில் தோல்வியடைந்த பயங்கரவாதிகளை சித்தாந்த ரீதியாக தோல்வியடையச் செய்யும் பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு புதிய அரசு பாடுபடுகிறது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பொறுப்பை உரியவாறு நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்போது, நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுவிழக்கச் செய்து இராணுவ வீரர்களை பலவீனமடையச் செய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக சில…
-
- 3 replies
- 460 views
-
-
சம்பந்தன் ஊடாகவே அதிகாரப் பகிர்வுக்கு முயற்சிகள் வேண்டும்- வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு எங்களுடைய சிறந்த தலைவர் இரா.சம்பந்தன். அவரின் ஊடாக அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசை முழுமையாக நம்ப முடியவில்லை. இப்போதும் மாகாண அரசின் அதிகாரங்களில் கொழும்பு அரசு தலையீடு செய்கின்றது. கடந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கையையே இப்போதைய அரசும் முன்னெடுக்கின்றது. எங்களுக்குத் …
-
- 2 replies
- 463 views
-
-
ஒற்றையாட்சி கோட்பாட்டை ஒருபோதும் ஏற்கப் போவதில்லை! ஒற்றையாட்சி எனும் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கிளிநொச்சியில் இன்று கூடியுள்ளது.கிளிநொச்சியில் அமைந்துள்ள கூட்டுறவாளர் மண்டபத்தில் காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. இக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என மக்களால் தெரிவு செய்யப்பட்ட உற…
-
- 6 replies
- 733 views
- 1 follower
-
-
கம்பவாரதியின் இந்த கட்டுரையை படிப்பதற்கு முன்னர் வாசகர்களுக்கு சிறுவிடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இதுவரைகாலமும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரையும் சுமந்திரனையும் போற்றி எழுதியும் நடாத்தியும் வந்த கம்பவாரதி கடந்த தேர்தலுக்கு பின்னர் கடந்த கம்பன் விழாவில் மைத்திரிபால சிறிசேனவையும் சுமந்திரனையும் அழைத்து கௌரவித்திருந்ததோடு தமிழ் மக்களுக்கான தமிழ்த் தலைமையின் பக்குவம் சுமந்திரனுக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த வகையில் இதுவரைகாலமும் முதலமைச்சரை சாடிவந்த கம்பவாரதி தற்போது சம்பந்தர்மீதும் குற்றச்சாட்டுக்களை அடுக்கி அடுத்தடுத்த அவரது கட்டுரைகளில் சுமந…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
பதின்மூன்றில் ஏறும் வேதாளம் அரசியலமைப்புத் திருத்த முயற்சிகள் ஆரம்பித்த பின்னர், 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வுக்குச் செல்லக் கூடாது என்ற கருத்துக்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான அமைச்சர் டிலான் பெரேரா தான் இதனை முதலில் தெரிவித்திருந்தார். வடக்கு, கிழக்கு இணைக்கப்படக் கூடாது என்றும், 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவரே முதலில் நிபந்தனைகளை விதித்திருந்ததார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அண்மையில் அதே கருத்தை முன்வைத்திருக்கிறார். 13ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டக் கூடாது, பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளு…
-
- 0 replies
- 443 views
-
-
எக்னெலிகொடவின் புலிகளுடனான உரையாடல்! ஒலிப்பதிவு நாடா பொலிசாரிடம் கையளிப்பு! [ வெள்ளிக்கிழமை, 22 சனவரி 2016, 04:27.39 AM GMT ] ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்ட உரையாடல்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடா பொலிசாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டு, காணாமல் போகச் செய்யப்பட்டுள்ள சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சம்பவம் தொடர்பில் ஏழு இராணுவத்தினரை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். எனினும் பிரகீத் எக்னெலிகொட பிரதீப் என்ற பெயரில் விடுதலைப் புலிகளின் உளவாளியாக செயற்பட்டதாகவும், அவர் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரை படுகொல…
-
- 0 replies
- 438 views
-
-
ஜெனிவா தீர்மானத்தை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்! - ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் [Friday 2016-01-22 07:00] ஐ. நா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை முழுமையாக அமூல்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை வரவேற்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய குழு தெரிவித்துள்ளது. ஐ. நா மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை முழுமையாக அமூல்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை வரவேற்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய குழு…
-
- 0 replies
- 326 views
-
-
மலையகத் தமிழர்களை ஏமாற்றி சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை [ Friday,22 January 2016, 04:13:50 ] மலையகத் தமிழ் மக்களை ஏமாற்றி மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மலையகத் தமிழ் மக்களை ஏமாற்றி பணம் கொடுத்து சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை நடத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 367 views
-
-
யாழ்ப்பாண காவல்துறையினருக்கு பிரித்தானியா உதவி- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 22 ஜனவரி 2016 யாழ்ப்பாண காவல்துறையினருக்கு பிரித்தானியா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து நிறுத்த பிரித்தானியா, யாழ்ப்பாண காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த உதவிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த யாழ்ப்பாண காவல்துறையினருக்கு சாத்தியங்கள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleT…
-
- 0 replies
- 322 views
-
-
காணாமல் போன சகலருக்கும், மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை! அமைச்சர் ராஜித [ வெள்ளிக்கிழமை, 22 சனவரி 2016, 01:38.17 AM GMT ] காணாமல் போன சகலருக்கும், மரணச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். காணாமல் போனவர்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர், நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ய…
-
- 0 replies
- 203 views
-
-
தமயந்தி ஜயசூர்ய இலங்கையிலிருந்து தப்பியோடியுள்ளார்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 22 ஜனவரி 2016 அவன்ட் கார்டே மற்றும் ரக்னா ஆரக்சக லங்கா மோசடிகளில் முக்கிய சாட்சியாக விளங்குபவர் என கருதப்படும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயசூர்ய இலங்கையிலிருந்து தப்பியோடியுள்ளார். பாரிய மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பல தடவைகள் விசாரிக்கப்பட்டுவந்த நிலையிலேயே இவர் இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்த இவர் ஜனவரி தேர்தலிற்கு பின்னர் உள்நாட்டு விவகார அமைச்சிற்கு மாற்றபட்டிருந்தார்,இதேவேளை விசாரணைகளின் முக்கிய தருணத்தில் இவர் இலங்கையைவிட்டு வெளியே…
-
- 0 replies
- 455 views
-
-
அரசியல் கைதிகள் எவருமே இல்லை: சுவிற்சர்லாந்தில் ரணில் தெரிவிப்பு! இலங்கையில் இனி தமிழ் அல்லது சிங்கள அரசியல் கைதிகள் என எவரும் இல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிற்சர்லாந்தில் ஆரம்பமாகியுள்ள உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள அங்கு சென்றுள்ள, ரணில் விக்ரமசிங்க, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போட் சிட்டி எனப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துடன் இலங்கை முன்னோக்கி செல்ல எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சீனாவின் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். …
-
- 1 reply
- 388 views
-
-
செந்தூரனின் சகோதரிக்கு உதவி! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன் செந்தூரனின் சகோதரிக்கு, மடிக்கணினியும், பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்காக ஆரம்பக்கட்ட நிதியுதவியும் இன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனால் மாணவியின் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது. குறித்த மாணவி சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, அவரின் முயற்சியால் மடிக்கணினியும், பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கான ஆரம்பகட்ட நிதி உதவியாக 31ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, மாணவியின் எதிர்கால பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதற்கு தேவையான நிதி உதவியை வழங்குவதற…
-
- 2 replies
- 585 views
-
-
வேனில் வந்தவர்களால் கடத்தப்பட்ட யாழ். பெண் கிராம சேவையாளர் மீட்கப்பட்டார் ; மூவர் கைது 2016-01-21 20:41:32 யாழ்ப்பாணம், வரணி -இயற்றாலை பிரதேசத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டபெண் கிராம சேவையாளர் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டதுடன் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 9.00 மணியளவில் குறித்த கிராம சேவையாளர் தனது அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கையில் இயற்றாலை பிரதேசத்தில் வைத்து வேன் ஒன்றில் வந்த குழுவினரால் கடத்தப்பட்டிருந்த நிலையிலே பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக 2 மணி நேரத்துக்குள் மீட்கப்பட்டுள்ளார்…
-
- 1 reply
- 607 views
-
-
'சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு' கூட்டமைப்பு வலியுறுத்தல் இலங்கையில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வின் அடிப்படையின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், கூட்டமைப்பின் இந்தக் கருத்து வந்துள்ளது. கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெறப்பட்டு, அதையும் உள்ளடக்கி அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகள் முன் வைக்கப்படும் என கூட்டமை…
-
- 3 replies
- 603 views
-
-
தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களதும் கருத்துகளும் பெறப்பட்டு அரசியல் தீர்வுத்திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தீர்வுத் திட்ட உருவாக்கத்தின் போது தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களதும் கருத்துகளும் பெறப்படும். மக்களுடனும் ஆலோசிக்கப்படும். ஆனால் இறுதி முடிவு மக்களின் ஆலோசனையின் அடிப்படையில் நாங்கள் எடுப்போம்; என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருட…
-
- 2 replies
- 820 views
-
-
பேரவை சர்ச்சை: கூட்டமைப்பின் முக்கிய கூட்டத்துக்கு சி.வி. இன்னும் வரவில்லை வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்காக தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் விஷேட அமர்வுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சமூகமளிக்கவிலை. தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டிருப்பதையடுத்து உருவாகியுள்ள சர்ச்சைக்கு முடிவைக்காணும் வகையில் வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான விஷேட அமர்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் அவர் இன்று சமூமளித…
-
- 5 replies
- 1.1k views
-
-
கொழும்புத் துறைமுகத் நகரத் திட்டம் உறுதி: ரணில் அறிவிப்பு இலங்கையில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிஸர்லாந்து டவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிஸர்லாந்து டவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் பல நடைமுறையிலுள்ள நிலையில், போர்ட் சிட்டி என்றழைக்கப்படும் துறைமுக நகரத் திட்டம் அதில் ஒன்றாக இருப்பத…
-
- 0 replies
- 393 views
-
-
ஆர்ப்பாட்டத்தின் எதிரொலி : காணாமல் போனோரின் உறவினர்களும் கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் பங்கேற்பு! ஆர்பாட்டத்தினைத் தொடர்ந்து காணாமல்போனோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூட்டமைப்பின் சந்திப்பு இடம்பெறும் மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய தமிழர் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர…
-
- 1 reply
- 499 views
-
-
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் நாளை வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா 'வன்னி இன்' விருந்தினர் விடுதியில் இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இந்த மத்தியகுழுக் கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் தலைமையில் மத்திய குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடுகின்றனர். இதன்போது புதிய அரசியலமைப்பு திட்டத்தில் அதிகாரப்பகிர்வு, மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளன. இன்று வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்ட…
-
- 0 replies
- 240 views
-
-
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று காலையில் தமிழ் மக்கள் பேரவையினருடான இரகசிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அவர் மாலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். தன்னை முதலமைச்சராக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பதில் சொல்ல முடியாமல் இருப்பதாகவும் தன்னை சிலர் தவறாக பயன்படுத்தி விட்டனர் என்றும் அவர் கவலை கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://www.whathits.com/thinakkathir
-
- 0 replies
- 454 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் தலைமையிலிருந்து விலகேன்!: விக்கி திட்டவட்டம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார். தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டிருப்பதையடுத்து உருவாகியுள்ள சர்ச்சைக்கு முடிவைக் காணும் வகையில் வடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான விசேட அமர்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில், மாகாண சபை உறுப்பினர்களான ஆனோல்ட், பரஞ்சோதி, அஸ்மின், சுகிர்தன், சயந்தன் ஆகியோர், பேரவையின…
-
- 1 reply
- 367 views
-
-
வடுவின் சின்னமாயிருக்கும் வட்டுவாகல்! முல்லைத்தீவு மாவட்டத்தில் ஈழ இறுதிப்போர் நடந்த கிராமங்களில் ஒன்று வட்டுவாகல். இன்னமும் போரின் வடுக்கள் ஆறாதிருக்கும் அந்தக் கிராமத்தின் ஒரு பகுதி இராணுவ அடையாளத்தோடு காணப்படுகிறது. மாபெரும் இராணுவ முகாம். அதன் பெயர் இலங்கை கடற்படை கப்பல் கோத்தபாய. மிகப் பெரும் ஆக்கிரமிப்பாய் இருக்கும் இந்த முகாமினால் இப் பிரதேசம் உறங்கிக்கிடக்கிறது. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அடங்கும் வட்டுவாகல் 2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதி. பின்னர் அது யுத்தத்ததால் மேலும் பாதிக்கப்பட்டது. யுத்தம் என்றால் இறுதி யுத்தம். ஈழத் தமிழ் இனம் சந்தித்த மாபெரும் இனப்படுகொலை யுத்தம். பேருழியின் இரத்தக்கறை…
-
- 0 replies
- 467 views
-
-
இனவாதமும் கருத்துச் சுதந்திரமும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா வெறுப்புப் பேச்சுக்கெதிரான சட்டங்களை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட முயற்சி, சிவில் அமைப்புகளினதும் சிறுபான்மைக் கட்சிகளினதும் கடும்போக்குச் சிங்களக் கட்சிகளினதும் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டது அல்லது பிற்போடப்பட்டது. ஆனால், சிங்க இரத்தம் எனும் அர்த்தப்படும் சிங்க லே எனும் பிரசார இயக்கத்தின் எழுச்சியைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சுத் தொடர்பான கவனம், மீண்டும் எழுந்துள்ளது. சிங்க லே பிரசார இயக்கத்தை ஆதரிப்போர், தங்களுடைய இன அடையாளத்தைக் கொண்டு கருத்துகளை வெளிப்படுத்துவது தங்களது உரிமை எனத் தெரிவிக்க, குறித்த இயக்கம், வெறுப்பூட்டும் ந…
-
- 0 replies
- 347 views
-
-
வடக்கில் உபயோகிக்கப்படாமல் இருக்கும் காணிகளை கையேற்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது அரசு!: வடக்கு முதல்வர் சாடல்! வடமாகாணத்தில் உபயோகிக்கப்படாமல் இருக்கும் காணிகளை கையேற்க வேண்டுமென்று அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பொதுநூலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற 2016-2018 காலப்பகுதியில் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் தன்னிறைவு காணும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்;ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடகிழக்கு மாகாணங்கள் நாட்டின் உணவு உற்பத…
-
- 0 replies
- 299 views
-