ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது தவறானதொரு முடிவு என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதானது தவறானதொரு முடிவானதாகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இவ்வாறான செயற்பாடானது புலிகளுக்கு கடும் கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. இது சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கு தடையாக இருந்தது. சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிப்பதில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் முக்கிய பங்காற்றியிருந்தார். கதிர்காமரின் இந்த நடவடிக்கை தவறானது என்றே கருதுகின்றேன். விடு…
-
- 3 replies
- 663 views
-
-
பௌத்த பிக்குகளை எவரும் கட்டுப்படுத்தக் கூடாது பௌத்த பிக்குகளை பௌத்த பிக்குகள் மட்டுமே கட்டுப்படுத்த வேண்டும்,அவர்களை வேறு எவரும் கட்டுப்படுத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகள் தொடர்பிலான ஒழுக்கக் கோவையொன்றை அரசாங்கம் சட்டமாக்கும் நோக்கில் உத்தேச சட்டமொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளது.இந்த உத்தேச சட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் உத்தேச சட்டமானது பௌத்த மதத்தின் தொடர்ச்சித்தன்மைக்கு அச்சறுத்தலாகவும், கலாச்சாரத்திற்கும் பாதகத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான ஒழு…
-
- 2 replies
- 481 views
-
-
சிங்களவர்களுக்கு 35000 ரூபா சம்பளம்! தமிழர்களுக்கு 6000 ரூபா சம்பளம்! இந்த இனப்பாகுபாடு மைத்திரி நல்லாட்சியிலும் மறையவில்லை? சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக தீர்ப்பதற்காக நல்லாட்சிக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்களுக்கமைவாக அங்குள்ள சிங்களவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணங்களுக்கமைவாக 35000 ரூபா சம்பளத்துடன் ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதேநேரம் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நீண்ட காலமாக ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்துவருகின்றன. அங்கு ஆசிரியராகக் கடமையாற்றுவதற்காக வெறும் 6000 ரூபா மாதச் சம்பளம் வழங்கி ஆசிரிய உதவியாளர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். …
-
- 4 replies
- 718 views
-
-
பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் இலங்கை வந்தடைந்துள்ளார் குளோபல் தமிழ்ச் செய்தியாளா் கொழும்பு பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய இராஜாங்க அமைச்சர் ஹியுகோசுவயர் மூன்று நாள் உத்தியோகபூர்வபயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார். பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்கள், அரசியல்தலைவர்களை சந்தித்து உரையாடவுள்ளதுடன்,நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள பொங்கல்நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை அமைச்சர் இலங்கைவிஜயத்திற்கு முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் நான் எனது இலங்கைவிஜயம்…
-
- 5 replies
- 380 views
-
-
மருந்து போல் விற்காதே எங்கள் மருத்துவ படிப்பை! : யாழ்.மருத்துவ பீட மாணவர்கள் யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி! தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கும் அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ். மருத்துவ பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஒன்றிணைந்து யாழில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதி அரசால் வழங்கப்படவுள்ளது. இச்செயற்பாடானது யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களை பெரிதும் பாதிக்கும் வகையில் இருப்பதால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர். …
-
- 7 replies
- 758 views
-
-
தொடரும் மர்மம்..? மைத்திரியுடன் புகைப்படத்தில் உள்ள இரு தமிழ் சிறார்களை கண்டுபிடிக்க நடவடிக்கை! [ வியாழக்கிழமை, 14 சனவரி 2016, 08:38.22 PM GMT ] [ பி.பி.சி ] காணாமற் போன இரு மாணவர் மைத்ரியுடன் கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் இருப்பதாக அவர்களின் தாயார் கூறுகிறார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் காணாமல் போயுள்ள இரண்டு பேரை தேடிக்கண்டுபிடிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயங்கரவாதப் புலனாய்வு காவல் துறையினர், காணாமல்போனவர்களின் தாய்மார்களும் உறுதியளித்திருப்பதாக அவர்கள் குடும்பத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா நெடுங்கேணி பெரியமடுவைச் சேர்ந்த காசி…
-
- 2 replies
- 496 views
-
-
முதல்முறையாக, உலகில் மிகப்பெரிய இராணுவ பயிற்சி..! இலங்கையை தவிர்த்த இந்தியா..?? [ வியாழக்கிழமை, 14 சனவரி 2016, 07:51.16 PM GMT ] 18 ஆசியான் பிளஸ் நாடுகளின் ராணுவப்படை பங்குபெறும் வகையில் முதல்முறையாக, உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கூட்டு ராணுவ பயிற்சியை வரும் மார்ச் மாதம் புனேயில் நடத்துகிறது. இந்திய ராணுவம். 'எக்ஸ்சர்சைஸ் போர்ஸ் 18' என்ற பெயரில் இந்த பயிற்சி உலகில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்படுகிறது. நட்பு நாடுகளின் ராணுவத்திடம் இருந்து பல நுட்பங்களை கற்றுக்கொள்வதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் இந்த பயிற்சி ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் 10 தெற்காசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, பிலிப்ப…
-
- 0 replies
- 623 views
-
-
தமிழர் தைத்திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளர். அவரது வாழ்த்துச் செய்தியில், இன்றைய தினம் பொங்கிப் பிரவாகிக்கும் பாற்குடத்தைப் போன்று மற்றவர் மீதான மானிட அன்பும் எம்மக்களின் உள்ளங்களில் பொங்கிப் பிரவாகிக்கவும். ஏற்றப்படும் ஒளி விளக்குகள் இருளை நீக்கி உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கவும் எனது பிரார்த்தனைகளை தெரிவிப்பதோடு அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=149280&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 541 views
-
-
ஐ.நா மனித உரிமைப் பேரைவயினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னதாக அமுல்படுத்தப்பட வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை உள்ளிட்ட நாடுகள் இணை அணுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானம், மனித உரிமைப் பேரவையின் ஜூன் மாத அமர்வுகளுக்கு முன்னதாக அமுல்படுத்தப்படும் என பிரித்தானிய எதிர்பார்ப்பதாக அந்நாட்டுக்கான வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார். நாட்டில் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் காட்டி வரும் சிரத்தை பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஸ்வயர் இன்று இலங்கைக்கு வந்த…
-
- 0 replies
- 316 views
-
-
உள்நாட்டுப் போரால், தூதரக சேவை அதிகாரிகள் லிபியா மற்றும் உகண்டா நாடுகளில் பணிபுரிய விரும்புவதில்லை என்பதால், இந்நாடுகளில் உள்ள தூதரகங்களை மூட தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். யுத்தம் நடைபெற்று வரும் சிரியா, உகண்டா, ஈராக், லிபியா போன்ற நாடுகளுக்கு தூதரக சேவை செல்ல அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனினும் தொடர்ந்தும் அந்நாடுகளில் இலங்கை தூதரகங்கள் இயங்கி வருகின்றன. ஈராக், இலங்கையுடன் நீண்டகாலமாக உறவுகளை கொண்டுள்ள நாடு என்பதால், அங்குள்ள தூதரகம் மூடப்படாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள…
-
- 0 replies
- 547 views
-
-
திருவள்ளுவராண்டு 2047 இல் நம்பிக்கையோடு எடுத்து வைப்போம். நக்கீரன் தலைவர், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட சிறப்பு பொங்கலுக்குக் கொடுக்கப்படவில்லை. செய்தித்தாள்கள், கிழமை, மாத சஞ்சிகைள் தீபாவளி மலர் வெளியிடுவதை மட்டும் வழக்கமாகக் கொண்டிருந்தன. பொங்கல் மலர் வெளியிடுவதில்லை. ஆனால் திராவிட தேசியத்தின் வளர்ச்சி காரணமாக இன்று பொங்கல் விழா தமிழர்களின் தனிப் பெரும் விழாவாக பரிணமித்துள்ளது. இன்று உலகளாவிய அளவில் பொங்கல் சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இன்று தமிழ்மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றின் மீதுள…
-
- 0 replies
- 1.1k views
-
-
பொங்கல் கொள்வனவு... உழவர் தினமான தைப்பொங்கல், நாளை வெள்ளிக்கிழமை (15) கொண்டாடப்படவுள்ள நிலையில் பொங்கல் மண்பானைகள், அலுமினியப் பானைகள் மற்றும் பழவகைகள் என்பவற்றை கொள்வனவு செய்வதில் மக்கள் மிக ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். தமிழர்களின் விழாக்களில் தைப்பொங்கல் முக்கியமான பண்பாட்டு விழா என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம்: சொர்ணகுமார் சொரூபன் கிளிநொச்சி: நடராசா கிருஸ்ணகுமார் அம்பாறை -நடராஜன் ஹரன் திருகோணமலை -அப்துல்சலாம் யாசீம் மட்டக்களப்பு -வடிவேல் சக்திவேல், எஸ்.பாக்கியநாதன்,பேரின்பராஜா சபேஷ் - See mor…
-
- 1 reply
- 606 views
-
-
வண. இராயப்பு ஜோசப் பதவி துறப்பு மன்னார் ஆயர் அதி. வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பதவித்துறப்பை திருச்சபை சட்ட எண் 401 பகுதி 1க்கு அமைவாக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளதையடுத்து இலங்கைக்கான அபோஸ்த்தலிக்க தூதுவர் இந்த அறிவிப்பை உத்தியோக பூர்வமாக இன்று அறிவித்தார். மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வரை திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் அதி. வணக்கத்திற்குரிய ஜோசப் கிங்ஸிலி சுவாம்பிள்ளை ஆண்டகையை மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்த்தலிக்க பரிபாலகராக பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்துள்ளார். இலங்கை நேரப்படி இன்று மாலை 4.30 மணி அளவில் வத்திகானில் இருந்து பரிசுத்த…
-
- 0 replies
- 645 views
-
-
விடுதலைப் புலிகளின் கறுப்புப்பணமே நிழல் முதலீடுகளாக இலங்கைக்கு வருகின்றது என்கிறார் : ஜீ.எல்.பீரிஸ் விடுதலைப் புலிகளின் கறுப்புப்பணமே நிழல் முதலீடுகளாக இலங்கைக்கு வருகின்றது. நாட்டை பிரித்து புலிகளை பலப்படுத்தும் நோக்கத்திலேயே கறுப்புப்பணம் இலங்கையில் குவிக்கப்படுகின்றது என்று மகிந்த ஆதரவு அணியினர் குற்றம் சுமத்தினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சியில் அதிகாரப் பகிர்வை கேட்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை பிரிக்க முயற்சிக்கின்றது. ரணிலுக்கே இன்று புலிகளின் முழுமையான ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் அவ்வணியினர் தெரிவித்தனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அந்த அணியினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். …
-
- 3 replies
- 531 views
-
-
புலிகளின் தங்கத்தை பீகொக் மாளிகையில் மறைத்து வைத்தாரா மகிந்த? மகிந்த ராஜபக்ச மோசடி செய்து பெற்றுக்கொண்ட பெருந்தொகையிலான தங்கம் பீகொக் மாளிகையில் நீச்சல் தடாகத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து அவர் அலரிமாளிகையினை விட்டு வெளியேறியிருந்தார். கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சுகபோக வாழ்க்கை நடாத்திவந்த மகிந்த குடும்பம் அதன் பின்னர் சிறிய வீடு ஒன்றில் வசித்து வருவதாகவும், இதன் காரணமாக பல இன்னல்களை எதிர்நோக்கியிருந்தாகவும் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து பிரபல வர்த்தகரான ஏ.எஸ்.பி லிய…
-
- 5 replies
- 997 views
-
-
ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அண்மையில் உள்ள படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கை அப்பகுதியை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது நிகழ்வு நடக்கும் பகுதியை படைமுகாங்கள் அற்ற பகுதியாக காட்டுவதற்கு எடுக்கப்படும் இரகசிய முயற்சியா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி கண்ணார் வயல் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலையத்தில் தேசிய பொங்கல் விழாவினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்றம் மற்றும் …
-
- 2 replies
- 378 views
-
-
இலங்கை விமானப்படைக்கு விரைவில் புதிய ரக போர்விமானங்கள் [ வியாழக்கிழமை, 14 சனவரி 2016, 04:52.12 AM GMT ] இலங்கை விமானப்படைக்காக போர்விமானங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு வருவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவி்த்துள்ளார். இலங்கை விமானப்படையில் காணப்படும் போர் விமானம் 30 வருடங்கள் பழைமையானது எனவும் அதன் பாவனைக்காலம் முடிவடைந்துள்ளதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனால் விமானப்படைக்கு புதிய ரக போர் விமானங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்காகவே போர்விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. ஆனால் எந்த நாட்டிலிருந்து போர் விமானங்கள் கொள்வனவு செய்வது என்பது பற்றி இதுவரை தீர்மானிக…
-
- 0 replies
- 402 views
-
-
பிரபாகரனின் புதல்வர் கொலை செய்யப்பட்டமை ஒர் யுத்தக் குற்றச் செயலாகும் - சரத் பொன்சேகா:- 14 ஜனவரி 2016 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் கொலை செய்யப்பட்டமை ஒர் யுத்தக் குற்றச் செயலாகும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், பிரபாகரனின் புதல்வரை இராணுவத்தினர் கொலை செய்தனர் என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை யுத்தக் குற்றச் செயல்; என்ற போதிலும் படையினர் அதனை மேற்கொண்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாலசந்திரன் தொடர்பில் ஒரு வீடியோவும் இரண்டு புகைப்படங்களும் காணப்படுவத…
-
- 0 replies
- 362 views
-
-
போர்க்குற்ற விபரங்களை அறிந்த ஜெனரலுக்கு இராஜதந்திரப் பதவி! - இராணுவத் தரப்புக்குள் பதற்றம் [Thursday 2016-01-14 07:00] போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்துள்ள மேஜர் ஜெனரல் ஒருவருக்கு வெளிநாடொன்றில் இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளது இராணுவத்தினர் மத்தியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் போர் விதிகள் கடுமையாக மீறப்பட்ட நிலையிலேயே புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினர் வெற்றிகளைப் பெற்றிருந்தனர். போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்துள்ள மேஜர் ஜெனரல் ஒருவருக்கு வெளிநாடொன்றில் இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்ட…
-
- 0 replies
- 523 views
-
-
உலக உணவுத்திட்டத்திடம் இருந்து ஸ்ரீலங்காவுக்கு 20 மில்லியன் டொலர் [ Thursday,14 January 2016, 03:14:22 ] ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் ஸ்ரீலங்காவிற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க தீர்மானித்துள்ளது. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளுக்கான உதவியாக இத்தொகையை வழங்க தீர்மானித்திருப்பதாக உலக உணவுத் திட்டத்தின் ஸ்ரீலங்காவுக்கான கிளை தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் ஸ்ரீலங்காவிற்கான உயரதிகாரிகள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவரது அமைச்சில் வைத்து நேற்று புதன்கிழமை சந்தித்துள்ளனர். இதன்போதே இந்த விடயத்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இயற்கையாக ஏற்படுகின்ற பாதிப்புக்களின்போது உணவு பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளக…
-
- 0 replies
- 238 views
-
-
இந்திய வெளிவிவகார செயலாளருடன் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் சந்திப்பு இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்ஷங்கருடன் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தினார். இச் சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. http://www.virakesari.lk/article/1992
-
- 6 replies
- 558 views
-
-
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பண்புகளை எடுத்துக்காட்டும் மனப்பாங்கு தொடர்பில் இந்திய அரசும் இந்திய மக்களும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு.எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் இன்று (13) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி, அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின்போது பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக காட்டிய சாதகமான மனப்பாங்கு இந்திய அரசாங்கத்தின் விசேட அவதானத்தைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன்போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாறு மற்றும் நட…
-
- 0 replies
- 413 views
-
-
ஜனாதிபதியின் தலைமைத்துவ பண்புகளுக்கு இந்தியா பாராட்டு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டும் சிரேஷ்ட தலைமைப் பண்புகளை எடுத்துக்காட்டும் மனப்பாங்கு தொடர்பாக இலங்கை மாத்திரமன்றி இந்திய அரசும் இந்திய மக்களும் தெளிவாக புரிந்துகொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் திரு.எஸ்.ஜெயசங்கர் குறிப்பிட்டார். இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் இன்று (13) முற்பகல் ஜனாதிபதியின் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி, அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின்போது பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக காட்டிய சாதகமான மனப்பாங்கு இந்திய அரசாங்கத்தின் விசேட அவதானத்தைப் ப…
-
- 0 replies
- 355 views
-
-
மிகப்பெரிய வாகன போக்குவரத்து கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துள்ளது ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள இக்கப்பலில் 7,700 வாகனங்களை கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. Hyperion Highway எனப்படும் இக்கப்பலிலிருந்து இலங்கையின் வாகனத் தேவைக்காக இறக்குமதி செய்யப்பட்ட 553 வாகனங்கள் அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டன. கடந்த 3 மாதங்களுக்கு முன் தனது பயணத்தை ஆரம்பித்த இக்கப்பல் ஜப்பானிலிருந்து உலகின் பல்வேறு துறைமுகங்களுக்குச் சென்றுள்ளதோடு, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான அதன் வருகையையிட்டு சிறிய வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதன்போது இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கும் குறித்த கப்பலின் அதிகார…
-
- 0 replies
- 401 views
-
-
ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக யாழில் கறுப்புக் கொடி போராட்டம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு எதனையும் பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். இன்று காலை யாழ். மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டத்தில் ஈடுபட்டார். இனப்படுகொலை போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுத்தல், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை கொண்டு நிரந்தரத் தீர்வை பெறல், இராணுவத்தினர் வச…
-
- 1 reply
- 366 views
-