Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாடசாலை மாணவிகள் இருவரை காணவில்லை பாடசாலை மாணவிகளான சகோதரிகள் இருவரை காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். சுழிபுரம் பண்டைவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சிந்துஜா (வயது 17) மற்றும் இளைய சசோதரியான சந்திரகுமார் நிவேதினி (வயது 14) ஆகிய இரு சகோதரிகளும் காணாமல் போயுள்ளனர். சந்திரகுமார் சிந்துஜாவின் சீருடை பெறுவதற்காக வட்டு இந்து கல்லூரிக்கு புதன்கிழமை காலை 9.30 மணியளவில் வீட்டில் இருந்து இருவரும் பாடசாலைக்கு சென்றுள்ளனர். பாடசாலைக்கு சென்ற இருவரும் மாலை ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என பெற்றோர் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை வட்டுக் கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செ…

  2. இலங்கை அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயனபடுத்தவுள்ளமை குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன மக்களின் நடமாட்டங்கள் நிதிபரிமாற்றங்கள் போன்றவற்றை கண்காணிப்பதற்காக இலங்கை அரசாங்கம் அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயனபடுத்தவுள்ளமை குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசாங்கம் தேசிய டிஜிட்டல் அடையாளம் மற்றும் பரிமாற்ற கட்டமைப்பொன்றை உருவாக்கதிட்டமிட்டுள்ளது,இது பயோமெட்ரிக் தரவுகளின் டிஜிட்டல் அடையாள தரவுகளை உள்ளடக்கியதாக காணப்படும். இது பின்னர் நிதிபறிமாற்றங்கள் நிதிசாராத பரிமாற்றங்களை கண்காணிக்க கூடிய அமைப்பொன்றுடன் இணைக்கப்படும். இவ்வாறான அமெரிக்கா பாணியிலான டிஜிட்டல் உட்கட்டமைப்பு காரணமாக உலகின் ஏனைய நாடுகளில் இடம்பெற்றதை …

  3. கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக சிறீலங்கா அரசால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனையானது இன்றுவரை தீர்க்கப்படாமலும் பல சவால்களை எதிர்நோக்கியவண்ணமும் உள்ளது. 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்ட ஆயுதங்களுடன் தமிழரின் பேரம் பேசும் சக்தியும் வஞ்சகமாய் நிர்மூலமாக்கப்பட்டு தமிழர்கள் தலைமையற்ற கையறுநிலைக்குள் தள்ளப்பட்டனர். ஒட்டுமொத்தமாக தமிழர்களை மந்தைகளாக முடக்கி தாம் தீர்மாணிக்கும் தீர்வொன்றை தமிழர்களின் தலையில் கட்டிவிடலாம் என்று இன்றுவரை கொழும்பு மையவாத சிங்கள பௌத்த பெருந்தேசியவாத இனவழிப்புச் சித்தார்ந்தத்தை வரித்துள்ள சிறீலங்கா அரசு கங்கணங்கட்டித் திரிகிறது. இந்நிலையில் தமிழர்கள் எதிர்…

  4. ஜாதிக ஹெல உறுமயவின் மேல் மாகாணசபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவிடம் உள்ள சுகாதார அமைச்சுப் பதவியை அடுத்தவாரம் தொடக்கம் தான் பொறுப்பேற்கவுள்ளதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேல் மாகாண சபையின் வரவு செலவுத்திட்டத்தின் போது மாகாண அமைச்சர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவின் சுகாதார அமைச்சுக்கான நிதியொதுக்கீடு தோற்கடிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. அரசியல் யாப்பு விதிகளின் பிரகாரம் அவரது அமைச்சுக்கான நிதியொதுக்கீடு தொடர்பில் இன்னுமோர் தடவை வாக்கெடுப்பு நடத்தலாம். எனினும் அதனை முதலமைச்சர் இசுர தேவப்பிரிய விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது. அதற்குப் பதிலாக நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவின்…

  5. சர்ச்சைக்குரிய படைத் தளபதி ஜெகத் டயஸுக்கு பதவி நீடிப்பு இல்லையாம்! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டவரும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருப்பவருமான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸுக்கு இராணுவ சேவையில் நீடிப்பை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என அறியமுடிகின்றது. இதனால், மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு இன்றுடன் ஓய்வு வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 1960ஆம் ஆண்டு பிறந்த ஜகத் டயஸுக்கு இன்றுடன் 56 வயது பூர்த்தியாகின்றது. இராணுவ சட்டதிட்ட…

  6. தமிழ் மக்கள் பேரவையின் அபத்தமான ஜனநாயக முலாம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில், யாழ்ப்பாணத்தில், உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவை, தமிழ் அரசியல், ஊடகப் பரப்பில், வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருக்கிறது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்ட விதம், இந்த அமைப்பை உருவாக்கியுள்ளவர்களின் பின்னணி, இதன் அடிப்படை நோக்கம் என்பன நீண்ட விவாதங்களுக்குரிய விடயங்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. திரைமறைவாக - முதலமைச்சரின் மொழியில் சொல்வதானால், 'கரவாக' நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பு தமக்குத் தாமே ஜனநாயக முலாம் பூசிக்கொள்வது அபத்தமானது. ஜனநாயகம் என்பது, மூடிய அறைக்குள்,…

  7. நத்தார் கொண்டாட்டம்... இயேசு, பிறப்பையொட்டிய நத்தார் பண்டிகையை நாடளாவிய ரீதியில் கிறிஸ்தவ மக்கள், இன்று வெள்ளிக்கிழமை (25) கொண்டாடுகின்றனர். தேவாலயங்களில் விசேட ஆராதனைகளும் இடம்பெறுகின்றன. கொழும்பு : பிரதீப் பத்திரண அம்பாறை : ஏ.எஸ்.எம்.முஜாஹித், நடராஜன் ஹரன் மட்டக்களப்பு: எஸ். பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ் புஸ்ஸல்லாவ : பா.திருஞானம் வவுனியா: நவரத்தினம் கபில்நாத் - See more at: http://www.tamilmirror.lk/162358/%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%9F%…

  8. மேஜர் ஜெனரல் ஜகத் டயசுக்கு எதிராக சுவிஸ் நீதிமன்றம் பிடியாணை! [Friday 2015-12-25 08:00] இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவராக கருதப்படும் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸுக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது. இதற்கான பின்னணி உதவிகளை சுவிஸ் ஈழத் தமிழர் பேரவை வழங்கியுள்ளது. அத்துடன் சுவிஸ் நாட்டின் நீதித்துறைப் பணிப்பாளர் அலுவலகம் மேஜர் ஜெனரல் ஜகத் டயசுக்கு எதிராக பிடியாணை உத்தரவொன்றையும் பிறப்பித்துள்ளது. இராணுவ சேவையிலிருந்து இன்று தொடக்கம் ஓய்வுபெறவுள்ள நிலையில் இனிவரும் காலங்களில் ஜகத் டயசுக்கு எதுவித வரப்பிரசாதங்களோ, இராஜதந்திர பாதுக…

  9. புதிய அரசாங்கமும் வடமாகாண சபையை புறந்தள்ளுகின்றது: சி.வி - எஸ்.ஜெகநாதன் நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் புதிய அரசாங்கமும் வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து ஒத்துழைத்து செயற்படாமல், முன்னைய அரசாங்கம் போன்று தனித்து முடிவெடுத்து வடமாகாணத்தில் செயற்றிட்டங்களை செய்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடிகயில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண சபைக்கு தெரிவிக்காமல் பல்வேறு விடயங்கள் நடைபெறுவதை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா எடுத்துக்கூறினார். அதாவது, மாவட்ட ஒருங…

    • 12 replies
    • 1.2k views
  10. இந்திய மீனவர்கள் யாழில் உண்ணாவிரதம் இந்திய மீனவர்கள் 51 பேர் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று காலை முதல் யாழ்.சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். கடந்த தினங்களில் பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட குறித்த 51 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், பண்டிகைக் காலங்கள் வருகின்ற காரணத்தினால் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தினை இவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள். இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் நடராஜா மற்றும் இந்திய துணைத் தூதுவர் அலுவலக அதிகாரிகள்…

    • 5 replies
    • 547 views
  11. யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுஷ்டிப்பு (படங்கள்) தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 28-வது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, எம்.ஜி.ஆரின் நண்பனும் தீவிர ரசிகருமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் ஆ.கேதீஸ் மற்றும் முன்னாள் வர்த்தக சங்க தலைவர் ரவி ஆகியோரும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் தனது சொந்த நிதி…

    • 3 replies
    • 600 views
  12. . Published on December 15, 2015-2:03 pm · No Comments நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு ஒரு பகிரங்க மடல்….. ஈழத்தமிழர்களின் அரசியல் நெருக்கடிக்கான தீர்;வானது தமிழ்த்தலைமையில் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டி காரணமாக இந்த தடவையும் கிட்டாது போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் விக்னேஸ்வரன் ….. சுமந்திரனுக்கு இடையோன உச்ச கட்ட முறுகல் நிலையும் இது விடயத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனின் காட்டும் தொடர் மௌனமும் இந்த அச்சத்தை அதிகரிக்கின்றன. ஈழத்தமிழினத்தின் தற்போதைய தலைமையான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்க முற்படுவதன் மூலம் நீண்ட கால அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது கடினமாகலாம் என்று உலக தலைமை நாடான அமெர…

    • 0 replies
    • 535 views
  13. தமிழ் மக்கள் பேரவை மக்களின் ஜனநாயக வெளியைத் திறந்துள்ளது. – ந.சிவசக்தி ஆனந்தன் தமிழ் மக்கள் இதுவரை அறியாதிருந்த அல்லது மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக வெளி, தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தின் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானதல்ல என்பதை அதன் இணைத்தலைவர்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ் மக்கள் பேரவையின் உதயம் குறித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ந.சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: தமி…

  14. நாம் ஒரே தலைமையின் கீழ் ஒற்றுமையாகச் செயற்பட்டால் தான் தேவையானதைச் சாதிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?. பொதுத்தேர்தலில் தான் தலைமையை உருவாக்கலாம். புதிய தலைமையை உருவாக்க அடுத்த பொதுத் தேர்தல்வரை காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போதுதான் உள்நாடிலும் சர்வதேசத்திலும் நமக்குச் சாதகமான காற்றுப் பலமாக வீசுகின்றது. இந்தச் சந்தர்ப்பம் பின்னர் நீடிக்கும் என்பது மிக மிக அருமை. எனவே இப்போதுள்ள தமிழர் தலைமையில் தவறுகள் இருப்பின் முடியுமானவரை அவர்களோடு கலந்துரையாடி தேவையானமட்டும் விவாதித்து நமது பெரும்பான்மை எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு அந்த முடிவின் வெற்றிக்கு அனைவருமே அல்லும் பகலும் உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். நாம் நமது ஈழத்தமி…

  15. எக்காரணம் கொண்டும் வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது எம்.எஸ்.சுபைர் வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் எக்காரணம் கொண்டும் வடக்கு கிழக்கு இணைக்கப்படக் கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். ஏறாவூர் ஸாறா முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சுபைர் 1988ம் ஆண்டு .இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் படி இரவோடு இரவாக அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்த்தன அவர்களினால் வடக்கும் கிழக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்தியாவின் அழுத்தத்தினால் இந்த இரண்டு மாகாணங்களும் இணைப்பட்டது. இந்த இணைப்…

  16. நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் முயற்சிக்கு இலங்கையின் கத்தோலிக்க சமூகம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற நத்தார் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கொழும்பு மாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தினால் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற நத்தார் தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தார். நத்தார் பண்டிகையானது அன்பையும் சமானத்தையும் கற்பிப்பதாக ஆயர் இதன்போது நினைவூட்டினார். சிங்களவர், தமிழர், மற்றும் முஸ்லீம்கள் என்ற பேதங்களை விடுத்து இந்த நத்தார…

  17. கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்த பின்னர் அரச சேவைக்காக புதிய சம்பள கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை உருவாக்கவில்லை என்றால் சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டு மீண்டும் சிக்கலான நிலைமை ஏற்படக் கூடும் என அமைச்சின் செயலாளர் ஜினசிறி தடல்லகே கூறியுள்ளார். அரச ஊழியர்களுக்கு இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்ட 10 ஆயிரம் கொடுப்பனவு மூன்று கட்டங்களாக அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்தது. இந்த கொடுப்பனவு அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் போது தற்போது காணப்படும் சம்பள வீதம் மாறக்கூடாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியிருந்தது. எவ்…

  18. நத்தார் பண்டிகையை கொண்டாட யாழ். மக்கள் தயார் நாளைய தினம் மலரவிருக்கும் நத்தார் பண்டிகையை வரவேற்கும் முகமாக இன்று யாழ். நகர பிரதான கடைத் தொகுதிகள், மற்றும் அங்காடி கடைத்தொகுதிகளில் நத்தாரை கொண்டாடுவதற்காக மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர் நத்தார் பண்டிகை மிக ஆரோக்கியத்தையும், ஒரு மூவீன மக்களின் சமாதானத்தையும் காட்டுகின்ற தினமாக இந்த கிறிஸ்மஸ் அமைந்துள்ளதாக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர். …

  19. இலங்கை: 'பொலித்தீன் தடையை அரசு முறையாக அமல்படுத்த வேண்டும்' இலங்கையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பொலித்தீன் பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக ஜனவரி மாதம் முதல் கடுமையான நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. 20 மைக்ரோனுக்கு குறைவான அடர்த்தியைக் கொண்ட பொலித்தீனை தயாரிப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது மற்றும் வைத்திருப்பது போன்றவை 2007ஆம் ஆண்டே தடை செய்யப்பட்டுவிட்ட நிலையில், அந்த சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தப் பின்னணியிலேயே பொலித்தீன் பாவனை மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தற்போது கூறுகின்றது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாக பிபிசியி…

  20. ? -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உ உண்மை வெளிவந்துவிட்டது. கூட்டமைப்பின் எதிரிகள் ஒன்றுசேர்ந்து, மாற்றுத்தலைமைக்கான ஆயத்தத்தை, ‘தமிழ்மக்கள் பேரவை’ என்ற பெயரில் ஆரம்பித்துவிட்டனர். எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான். ☛☛☛ கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த தேர்தலில் முதலமைச்சரின் மறைமுக ஆதரவுடன் குதித்தும், முற்றுமுழுதாய் மக்களால் நிராகரிக்கப்பட்ட, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தேர்தல் தோல்வியின் பின், தேசியப்பட்டியலில் இடம் எதிர்பார்த்து, கிடைக்காமல் போனதில் கோபமுற்றிருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், தனது மூத்த உறுப்புரிமையை வைத்து, தேசியப்பட்டியலில் இடம் எத…

    • 2 replies
    • 1.1k views
  21. விக்­கியின் சுனாமி பேர­லையில் சிக்­கித் தவிக்கிறார் சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் விக்­கி­னேஸ்­வரன் எனும் சுனாமி பேர­லையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சம்பந்தன் சிக்கி தவிக்­கிறார். இந்த சுனாமி பேர­லை­யி­லி­ருந்து சம்பந்­தனால் மீண்டு வர முடி­ய­வில்லை என்று மகிந்த அணியின் முக்­கி­யஸ்­தரும் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்­பித்­துள்­ளதன் மூலம் கூட்­ட­மைப்­புக்குள் சிக்­கல்கள் ஏற்­பட்­டுள்­ளன. சம்பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்­தும்­கூட விக்­கி­னேஸ்­வ­ரனே…

  22. போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நாளையுடன் ஓய்வு Dec 24, 2015 | 2:04by கார்வண்ணன் in செய்திகள் போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் 33 ஆண்டு கால இராணுவ சேவையை நாளையுடன் முடித்துக் கொள்ளவிருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. நாளையுடன், 55 வயதை எட்டும் நிலையிலேயே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஓய்வு பெறவிருக்கிறார். கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த இவர், 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை – விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த சிறிலங்கா இராணுவத்தின…

  23. புங்குடுதீவு விவசாயிகளுக்கு முட்கம்பிச் சுருள்கள் புங்குடுதீவில் நெல்வயல்களுக்குப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்காக வடக்கு விவசாய அமைச்சு முட்கம்பிச் சுருள்களை வழங்கியுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புங்குடுதீவு கமநல சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இன்று விவசாயிகளைச் சந்தித்து முட்கம்பிச் சுருள்களை வழங்கி வைத்துள்ளார். புங்குடுதீவில் கட்டாக்காலி மாடுகளால் நெற்செய்கை பாதிக்கப்படுவது விவசாய சம்மேளனங்களால் வடக்கு விவசாய அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதையடுத்தே புங்குடுதீவு கிழக்கு,பெருங்காடு தெற்கு, வல்வன், மடத்துவெளி ஆகிய பகுதிகளில் நெற்செய்கையை மேற்கொள்ளும் 37 விவசாயிகளுக்கு முட்கம்பிச் சுருள்கள் வழங்க…

  24. நாளைக்கு நத்தார்... நத்தார் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு, புறக்கோட்டை மற்றும் ஹவ்லோக் வீதி ஆகிய இடங்களில் அலங்காரப் பொருட்கள் மற்றும் சைப்பிரஸ் மரக்கிளைகளைக் கொள்வனவு செய்வதில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண) - See more at: http://www.tamilmirror.lk/162289/%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-#sthash.Oy9Sfh4q.dpuf

  25. பாதகமானதா வடமராட்சி கிழக்கு நன்னீர்த் திட்டம்? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா கடல் நீரை நன்னீராக்குவதென்பது, கனவுத் திட்டம் போன்றது. உலகில், மூன்றிலிரெண்டு பகுதிக்கும் அதிகமாகக் கடல் நீர் காணப்படும் நிலையில், அதை நன்னீராக்க முடியுமானால், உலகிலுள்ள நீர்ப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று நினைக்கையில், அதை இன்னும் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை எனக் கேள்வியெழுப்பத் தோன்றுகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எப். கென்னடி, 'எப்போதாவது நாங்கள், பாரியளவில், குறைவான விலையில், உப்பு நீரிலிருந்து நன்னீரைப் பெற முடியுமானால், மனிதத்துக்குச் செய்யப்பட்ட மாபெரும் சேவையாக அது இருக்குமென்பதோடு, ஏனைய எல்லா விஞ்ஞான அடைவுகளையும் அது …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.