ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
குதிரை ஓடியவர் தொடர்பில் முழுமையான விசாரணை -நடராசா கிருஸ்ணகுமார் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் பாடசாலை உதவியாளர் ஒருவருக்கு பதிலாக பிறிதொருவர் 5 பாடங்களுக்கு பரீட்சை எழுதியமை தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பூநகரிப் பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் உதவியாளராகக் கடமையாற்றும் 39 வயதுடைய ஒருவர் க.பொ.சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளார். பரீட்சை ஆரம்பமான நாட்கள் தொடக்கம், கண்டாவளை, புளியம்பொக்கனைப் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபர் அவருக்குப் பதிலாக கடந்த 5 பாடங்களுக்கான பரீட்சைகளை எழுதியுள்ளார். தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கணித பாடப் பரீட்சையையும் இவ்வாறு எ…
-
- 5 replies
- 676 views
-
-
புலிகளால் சகோதரிகள் கடத்தப்பட்டனர் கடத்தப்பட்டவர்களின் சகோதரி சாட்சியம்:- குளோபல் தமிழ் செய்தியாளர்:- 12 டிசம்பர் 2015 யாழில் கடந்த 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் தனது இரு சகோதரிகளும் கடத்தப்பட்டதாக அவர்களின் சகோதரி வாக்கு மூலம் அளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்த சாட்சியமர்வில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மானிப்பாய் வீதி ஓட்டுமட பகுதியில் நாம் வசித்து வந்த வேளை 1990ம் ஆண்டு 2ம் மாதம் 22ம் திகதி விடுதலைப்புலி உறுப்பினர் நசீர் என்பவரின் தலைமையில் வீடு புகுந்த ஒரு குழுவினர் என…
-
- 27 replies
- 2.1k views
-
-
வடக்கு முதல்வர் தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் அதிருப்தி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் அமெரிக்காவும், இந்தியாவும் அதிருப்தியில் இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு புறம்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், இதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகர், சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், கடந்த நொவம்பர் மாதம் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஸ்வாலும், இது குறித்து அவருடன் பே…
-
- 5 replies
- 996 views
-
-
தமிழீழ விடுதலை இயக்கம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது – செல்வம் எம்.பி தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வரையில் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த நாடாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளப் போவதில்லையென தீர்மானித்துள்ளனர். தமிழீழ விடுதலை இயக்க தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் நேற்று மாவட்ட பொதுக்கூட…
-
- 5 replies
- 629 views
-
-
இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன : சுமந்திரன் [ Saturday,12 December 2015, 02:47:35 ] ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போரில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்று அரசாங்கம் நிராகரித்துவருகின்ற நிலையில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இனப்படுகொலை ஒன்று இடம்பெறவில்லை என்று தாம் எந்த இடத்திலும் கூறவில்லை என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக வெளியாகிய அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரித்தார்.…
-
- 58 replies
- 4.8k views
- 1 follower
-
-
'விசேட நீதிமன்றம் உருவாக்கப்படும்' -எம்.றொசாந்த் காணாமற்போனோர் தொடர்பில் விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணை செய்யப்படுவார்கள் என காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். ஆணைக்குழுவின் சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்டவர்களுக்கான அமர்வு சங்கானை பிரதேச செயலகத்தில் இன்று (15) நடைபெற்ற போது, ஆணைக்குழுவின் விசாரணையின் முடிவில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காணாமற்போனோரின் உறவினர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஆணைக்குழுவால் விசாரணைகள் மேற்கொள்ளப்…
-
- 2 replies
- 914 views
-
-
இராமேஸ்வரம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்கள் கடற்தொழிலுக்குச் சென்ற போது கடந்த 29 ஆம் திகதி முதல் காணாமல் பேயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த மீனவர்களை தொடர்ச்சியாக தேடி வந்த நிலையில் கடந்த 4 ஆம் திகதி (4-12-2015) இரவு தலைமன்னார் கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது. தலைமன்னார் கடற்படையினரின் உதவியுடன் குறித்த சடலம் மீட்கப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. குறித்த சடலத்தின் கை பகுதியில் ‘எச்.றுபினா’ என பச்சை குத்தப்பட்டிருந்தமை அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தினூடாக குறித்த தகவல் இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டதோடு சடலமாக மீட்கப்பட்ட மீனவரின் புகைப்படமு…
-
- 0 replies
- 626 views
-
-
எதிர்க் கட்சித் தலைவர்- தோமஸ் சந்திப்பு நாட்டிற்கு வருகை தந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் தோமஸ் ஷெனன் இன்று எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க இலங்கைக்கு இடையிலான நல்லுறவை பேணும் வகையில் திருகோணமலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போதே இருவரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஏ.புஸ்பகுமார உட்டப பலர் கலந்து கொண்டனர். http://www.virakesari.lk/article/1056
-
- 0 replies
- 847 views
-
-
கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன் தமிழர் வாழும் பகுதிகளில் அபிவிருத்தியை ஏற்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவே தாம் விரும்புவதாகவும், மாறாக அவர்களை புறந்தள்ளி செயற்படுவது தமது நோக்கமல்லவெனவும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற காணி அபிவிருத்தி அமைச்சு மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின்போது, வடக்கு கிழக்கு விடயத்தில் அமைச்சர் சுவாமிநாதன் கூட்டமைப்பை பு…
-
- 1 reply
- 934 views
-
-
'முஸ்லிம்களை பலவந்தப்படுத்தி குடியமர்த்த முடியாது' -ரஸீன் ரஸ்மின் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை எவராலும் பலவந்தப்படுத்தி குடியமர்த்த முடியாது என வவுனியா மாவட்ட இள நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.ஏ.அப்துல் பாரி தெரிவித்தார். 'தற்போது வடபுல முஸ்லிம்களும் சவால்களும்'; எனும் தலைப்பில் நேற்று (14) வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு என்பது முஸ்லிம்களின் பாரம்பரிய பூமியாகும்.முஸ்லிம்களை வந்தேறு குடிகளாக பார்ப்…
-
- 1 reply
- 856 views
-
-
'ஊடகவியலாளர்கள் என்னை ஏசினர்' -எம்.றொசாந்த் நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்கள் தன்னை ஏசியதாக புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் 4ஆவது சந்தேகநபர் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, சந்தேகநபர் இவ்வாறு முறைப்பாடு தெரிவித்துள்ளார். கடந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிமன்றத்துக்கு வெளியில் சென்ற போது, ஊடகவியலாளர்கள் தன்னைப் புகைப்படம் எடுத்ததாகவும் தான் எடுக்க வேண்டாம் எனக் கூறியதும் அவர்கள் தன்னை ஏசியதாகவும் நீதவானிடம் முறையிட்டார். - See more at: http…
-
- 0 replies
- 740 views
-
-
வித்தியா படுகொலை ; மேலும் ஒருவர் கைது : மூவர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 10ஆவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஒன்பது பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்தநிலையில் வித்திய…
-
- 0 replies
- 573 views
-
-
தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக அரசின் மாயமான்கள் துள்ளி வரலாம் [ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2015, 05:22.52 AM GMT ] இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி நாம் அனைவரும் பேசித் கொள்கின்றோம். அதேநேரம் தமிழ் மக்கள் வேறுவிதமான கஷ்டங்களை அனுபவித்தால் இனப்பிரச்சினை ஒன்று இருப்பதாக அவர்கள் உணர மாட்டார்கள் என்ற அடிப்படையில், இனப்பிரச்சினைக்கான தீர்வை வலுக்குறைப்புச் செய்வதில் அரசு தீவிரமாக உள்ளது. அதிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தை நலினப்படுத்தும் வகையில் புதுப்புதுக் குழப் பங்களைக் கொண்டு வருவதிலும் அரசு தீவிரமாக உள்ளது. இந்த இராஜதந்திரம் இன்று நேற்று அல்ல நீண்டகாலமாக இலங்கை ஆட்சியாளர்களால் பிர யோகிக்கப்பட்டு வருவது தெரிந்ததே. எந…
-
- 0 replies
- 322 views
-
-
தமிழகத்தில் உள்ள அகதிகளை திருப்பி அழைக்க நடவடிக்கை! - அமைச்சர் சுவாமிநாதன் தகவல் [Tuesday 2015-12-15 08:00] தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப சந்தாப்பம் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படும். அவ்வாறு நாடு திரும்புவோருக்கு வாழ்வாதார வழிகள் உருவாக்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப சந்தாப்பம் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படும். அவ்வா…
-
- 1 reply
- 936 views
-
-
பாராளுமன்றம் அரசியல் சாசனப் பேரவையாக மாற்றப்படவுள்ளது 15 டிசம்பர் 2015 பாராளுமன்றம் அரசியல் சாசனப் பேரவையாக மாற்றப்பட உள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது குறித்த உத்தேச பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளார். நேற்றைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமயில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றை அரசியல் சாசன பேரவையாக மாற்றி அதன் ஊடாக புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றிற்கு பொறுப்புக் கூறக்கூடிய அரசாங்க ஆட்சிப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட உள்ளத…
-
- 1 reply
- 456 views
-
-
நாடளாவிய ரீதியில் அரச,தனியார் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் [ Tuesday,15 December 2015, 03:20:13 ] நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரையின் பின்னரும் 20 வங்கிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதாகவும், இதில் அரச, தனியார் வங்கிகளில் பணிபுரியும் 30 ஆயிரம் பேர் கலந்துகொள்வதாகவும் அச்சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி சபிக கேசர கொட்டேகொட தெரிவித்துள்ளார். பிரதமரின் விசேட அ…
-
- 0 replies
- 310 views
-
-
வடக்கு - கிழக்கு மக்களுக்கு 3400 வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து [ Tuesday,15 December 2015, 05:36:28 ] யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 3,400 வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. Habitat for humanity நிறுவனத்துனேயே இந்த ஒப்பந்தம் கடந்த 7ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். 'வீடுகளிலிருந்து இல்லங்களை நோக்கிய அபிவிருத்தி' எனும் தொனிப்பொருளில் இக்கருத்திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின…
-
- 0 replies
- 216 views
-
-
12 மாதங்களில் 36 ஆயிரம் விபத்துகள்! 2,676 பேர் பலி [ செவ்வாய்க்கிழமை, 15 டிசெம்பர் 2015, 01:33.08 AM GMT ] 2014 ஜூன் 30ஆம் திகதி முதல் 2015 ஜூன் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 36 ஆயிரத்து 46 விபத்துகள் இடம்பெற்றுள்ளன என்றும், மேற்படி விபத்துகளின்மூலம் 2 ஆயிரத்து 676 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கா தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது புத்திக பத்திரண எம்.பி. எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். பாதுகாப்பற்ற விதத்தில் மற்றும் கவனயீனமாக வாகனம் செலுத்தியதாலேயே அதிகப்ப…
-
- 0 replies
- 469 views
-
-
இந்தியாவிடம் வாங்கக் கூடாது, தடை விதித்தார் மைத்திரி! இந்தியாவில் இருந்து, தொடருந்து இயந்திரங்கள் மற்றும் பேருந்து இயந்திரங்கள் போன்றவற்றை இந்தியாவிடம் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார். தொடருந்து இயந்திரங்கள், பெட்டிகள் மற்றும் பேருந்து இயந்திரங்கள், மற்றும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட திட்டத்தை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தி வைத்துள்ளார். எனினும், இந்தியாவிடம் இருந்து தொடருந்து இயந்திரங்கள், பெட்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையில…
-
- 1 reply
- 526 views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் கட்டுமாணப்பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆலயத்தின் பிரதம குரு கருணானந்தக்குருக்கள் தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் 320 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த கட்டுமாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆலய கட்டுமாணப்பணிகள் இந்தியாவின் மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளை கொண்ட கருங்கல்லை பயண்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பணிகளை முன்னிட்டு கடந்த யூன் மாதம் 7ஆம் திகதி திருக்கேதீஸ்வரம் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஆலயத்தினுள் வைக்கப்பட்டிருந்த விக்கிரகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய திருத்தலம் அமைப்பத…
-
- 0 replies
- 313 views
-
-
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட 4 பேர் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்படவிருப்பதாக திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொடவை காணாமல் போக செய்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறவே இவர்கள் அழைக்கப்படவுள்ளனர். இவர்களில் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் அமல் கருணாசேகரவும் அடங்குவார். அத்துடன் புலனாய்வுப் பிரிவின் தற்போதைய பணிப்பாளர் சுரேஷ் சலேவிடம் வாக்குமூலம் ஒன்று பெறப்படவுள்ளது. இவர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, கடந்த அரசாங்கதிலும் தற்போதைய அரசாங்கத்திலும் முக்கிய அமைச்சு பதவியை வகித்…
-
- 0 replies
- 321 views
-
-
காணாமல் போன விடுதலைப்புலிகளின் தளபதிகள் குறித்து உறவுகள் சாட்சியம் இறுதி யுத்தத்தின் போது பாதிரியார் தலைமையில் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய போராளிகள் தொடர்பில் ஜானதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியங்கள் வழங்கப்பட்டு உள்ளன. யாழில் நான்காவது நாளாக நடைபெற்றுவரும் காணாமல் போனரை கண்டறியும் ஜானதிபதி ஆணைக்குழுவின் விசாரணை இன்றைய தினம் (திங்கட்கிழமை) பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. அச் சாட்சியமர்வுகளின் போது விடுதலை புலிகளின் முக்கிய போராளிகளின் உறவினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். கடற்புலிகளின் முக்கிய போராளி நரேன். விடுதலைப்புலிகளின் கடற்புலியை சேர்ந்த நரேன் எனப்படும் திருஞானசுந்தரம் ஜனார்த்தன் என்பவர் 2009 ம் ஆண்ட…
-
- 0 replies
- 568 views
-
-
மனித உரிமை விவகாரங்களில் இலங்கை அரசுக்கு முழு ஆர்வமில்லை போர்க் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை விவகாரங்களை கையாளுவது ஊக்கமளிக்கும் சமிக்கையாகத் தென்படுகின்ற போதிலும், இலங்கையின் புதிய அரசாங்கம் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். நீதிக்குப் புறம்பான, எதேச்சதிகார அல்லது பலவந்தமான படுகொலைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், 2015ல் வழங்கப்பட்ட ஆணையை இலங்கை நிறைவேற்றும் போது அதுவே என்னைப் பொறுத்தளவில் மிகவும் முக்கியமான ஒரு தருணமாக இருக்கும். என்னைப் பொறுத்தளவில் இலங்கையின்…
-
- 0 replies
- 541 views
-
-
தமிழகம்: வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகளுக்கு 'உதவி தேவை' தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக நீடித்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் இலங்கை அகதிகளின் சில முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கடலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சில முகாம்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடந்துவருவதாகவும் ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தினர்(ஆஃபர்) பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி முகாமில் 200க்கும் அதிகமான வீடுகள் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் சிவகுமார் தமிழோசையிடம் தெரிவித்…
-
- 0 replies
- 501 views
-
-
வடக்கில் 5 ஆண்டுகளில் புதிதாக 18 விகாரைகள் போருக்குப் பின்னரான கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தில் புதிதாக 18 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 29 விகாரைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு அந்த எண் ணிக்கை 47 ஆக அதிகரித்துக் காணப்படுகின்றன. வடக்கில் இவ்வாறு வடக்கு மாகாண புள்ளிவிபரக் கையேட்டின் விபரங்கள் தெரிவிக்கின்றன.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 2009 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் 2 ஆயிரத்து 373 இந்து ஆலயங்கள் காணப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு அது 2 ஆயிரத்து 541 ஆக அதிகரித்துள்ளன. 221 தேவாலயங்கள் காணப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு அது 260 ஆக அதிகரித்துள்ளன. மசூதிகள் 11 ஆக 2009 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலையில் தற்போத…
-
- 3 replies
- 633 views
-