Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ராமாயணத்தில் சுமந்திரன் ஒரு சாதாரண பாத்திரம். ராமன் வனவாசம் போகும்போது துக்கத்துடன் தேரோட்டுவார் அந்தச் சுமந்திரன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் சுமந்திரனும் ஒரு தேரோட்டிதான். மகாபாரதத்தில் வருகின்ற தேரோட்டி பார்த்திபனைப்போல, மிகக் கடினமான பாத்திரத்தை வகித்துத் தன்னுடைய தரப்பின் வெற்றிக்காக பல காரியங்களைச் செய்யும் பாத்திரம். அதனால்தான் அவருக்கு இப்பொழுது மிகத் தீவிரமான விமர்சனங்கள் வருகின்றன. பொன்வாத்துகள் தமக்காக முட்டையிடும் என்று நம்பும் தரப்புகள்தான் இந்த விமர்சனத்தை ஒரு படையணியைப் போலத் திரண்டு வைக்கின்றன. உண்மையில் இவை விமர்சனங்களே அல்ல. வெறும் குற்றச்சாட்டுகளே. இன்னும் சொல்லப்போனால் வெறும் எதிர்ப்புணர்வு மட்டுமே. காற்றிலே வாளைச் சுழற்றும் வீர வித்தை…

  2. இராணுவ உயரதிகாரிகள் விடயத்தில், தீர்க்கமான முடிவை எடுப்பதில், தற்போதைய அரசாங்கம் கடுமையான நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளுடன் போர் நடந்த காலத்தில், அரசாங்கம் எதிர்கொண்டதை விடவும் சிக்கலான நிலையை இப்போதைய அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது. உயர்மட்ட இராணுவ அதிகாரிகளின் நியமன விடயத்தில் முன்னர் இராணுவ மட்டத்தில் தான், சலசலப்புகளையும் எதிர்ப்புகளையும் முன்னைய அரசாங்கங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது. இப்போது, இத்தகைய நியமன விடயங்களில், புற அழுத்தங்களையும் அரசாங்கம் சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் அரசாங்கம் இத்தகைய புற அழுத்தங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேவேளை, திடீரென …

  3. கனடா அமெரிக்காத் தமிழர்களிற்கு காத்திருக்கும் செய்தி என்ன? விடுதலைப்புலிகளுடன் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஐ தொடர்பு படுத்த முயற்சியா? Peter December 12, 2015 Canada இன்று உலகின் பிரபல தொலைக்காட்சி ஊடகமொன்று ஐ.எஸ்.ஐ.எஸ் எவ்வாறு ஆயுதங்களைப் பெறுகின்றது என்பது பற்றி செய்தியை ஒளிபரப்பியது. அந்த ஒளிப்பதிவு அவர்களது இணையத்தில் உள்ளீடு செய்யப்பட்ட போது அதனை பார்த்தவர்களிற்கு அங்கு குழப்பமான ஒரு செய்தி காத்திருந்தது. அந்தச் செய்திக்கான குரல் விவரணம் ஒலி வடிவில் வந்து கொண்டிருக்க வீடியோவிற்கு பதிலாக அங்கு இரண்டு புகைப்படங்கள் இடம்பெற்றன. அதில் ஒரு புகைப்படம் பல நபர்களின் முகங்கள் கலந்ததாக இருந்தது. அந்தப் புகைப்படம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக வந்த புகைப்படமும் இத…

  4. புகையிரதம் - முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் சாவு யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தளை நோக்கி பயணித்த புகையிரதத்தில் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை சாவகச்சேரி மீசாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர வண்டி சாரதி புகையிரத கடவையின் சமிஞ்ஞையை கவனிக்காது புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோது எதிரே வந்த புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி சாவகச்சேரி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://onlineutha…

  5. கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், ஊடகப் பணியாளர்களுக்கு நட்டஈடு: குளோபல் தமிழ் செய்தியாளர்:- 13 டிசம்பர் 2015 பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். கடமையில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட உள்ளது. இந்த யோசனையின் அடிப்படையில் சுமார் 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு நட்டஈடு வழங்கப்பட உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் வடக்கைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நட்டஈட்டுத் திட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதியும் உதவி வ…

  6. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோர்வேயின் அரசியலமைப்பு நிபுணரான கெவன் வெலான்கேவின் ஆலோசனையின் அடிப்படையில், வரையப்படும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும் எனவும் அரசியலமைப்புச் சட்டம் குறித்து வடக்கு, கிழக்கு மக்களின் கருத்தை அறிய வேண்டும் எனவும் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கேட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழு நோர்வேயின் அரசியலமைப்புச் சட்ட நிபுணரிடமும் இந்தக் கோரிக்கையை முன்வைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அ…

  7. பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வி; நூறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் [ Sunday,13 December 2015, 05:19:53 ] பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தையின் போது தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு பிரதமர் சாதகமான பதிலை வழங்கவில்லையென ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். நூறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், பிரதமருக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. …

  8. அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை : பாதுகாப்புச் செயலாளர் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் இல்லையென, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கைதிகள் குறித்து பலர் பல தகவல்களை வெளியிட்டு வந்தாலும், அரசியல் கைதிகள் என எவரும் இல்லையென அவர் இதன்போது குறிப்பிட்டார். தமிழ் அரசியல்வாதிகள் கூறி வருவதைப் போன்று அவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்லர் எனவும், குண்டுகளை வெடிக்கச் செய்து மனித கொலைகளுக்கு உதவிய குற்றவாளிகள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். அவ்வாறானவர்களை நீதிமன்றின் மு…

  9. வரி ஏய்ப்புக்கு உதவிய மஹிந்த! [Sunday 2015-12-13 09:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்கு தமது சகாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமது சகாக்காள், 211 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியதாகவும் இதற்காக வரிச் செலுத்தப்படவில்லை. மஹிந்த ராஜபக்ஸ தனது நண்பர்கள் மற்றும் நெருங்கிய சகாக்களுக்கு இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்து கொள்ள அனுமதியளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரி ஏய்ப்பில் ஈடுபடுவதற்கு தமது சகாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமது சகாக்காள், 211 வாகனங்களை இறக்க…

  10. இறுதிப் போரில் வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து மீள விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் [ Sunday,13 December 2015, 05:05:47 ] இறுதிக்கட்டப் போரில் வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து மீள விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழுவின் விசாரணைகளைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், வெள்ளைக்கொடி விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் க…

  11. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு தலைக் காதல்? 13 டிசம்பர் 2015 மாவட்ட அபிவிருத்திக்குழுக்களின் தலைவர்கள் நியமனத்தில் அரசாங்கத்தின் செயற்பாடு கூட்டமைப்புக்கு முகத்திலறைந்தது போலாகிவிட்டது. வழமைபோல இந்த முறையும் கூட்டமைப்பு தனது முகத்தை மறைத்துக்கொண்டுவிட்டது. இறுதியாக நடைபெற்ற கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் தலைமைப் பதவி குறித்துத்தான் முக்கியமாக ஆராயப்பட்டதாம். வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களின் குழுத் தலைமைப் பதவிகள் தமக்குத்தான் கிடைக்கும் என்பதுபோல இங்கு தெரிவுகள் இடம்பெற்றன. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி ஒன்றின் தலைவராகவுள்ள புத்தரின் இளைமைக்காலப் பெயரைக் கொண்டுள்ளவர் தனக்கு பதவி எதுவும் வேண்டாம் என்று சொ…

  12. புதுவை இரத்தினதுரை உயிருடன் இருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன - குளோபல் தமிழ் செய்தியாளர்: 13 டிசம்பர் 2015 காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவில் சகோதரி சாட்சியம்:- விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கலை பண்பாட்டுக் கழக பொறுப்பாளராக செயற்பட்ட கவிஞர் புதுவை இரத்தினதுரை காணாமல் போகச் செய்யப்பட்ட பின்னரும் உயிருடன் இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுமுள்ளதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியம் வழங்கியபோது அவரது சகோதரி மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார். கவிஞர் புதுவை இரத்தினதுரை 2009 இறுதிப்போரின் போது 2009மே 18 அன்று தனது குடும்பத்துடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார். இதன்போது இர…

  13. நாட்டுக்கு நல்லது செய்தால் சிறைக்கு செல்ல நேரிடும்!- மஹிந்த [ ஞாயிற்றுக்கிழமை, 13 டிசெம்பர் 2015, 04:00.51 AM GMT ] நாட்டுக்கு நல்லது செய்பவர்கள் இறுதியில் சிறைக்கு செல்ல நேர்வதாக முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று தெஹிவளையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இது தொடர்பாக தெரிவித்துள்ளார். அத்துடன் தான் அண்மையில் தான் தமிழ் திரைப்படம் ஒன்று பார்த்ததாகவும் அதில் கதாநாயகன் சிறையில் இருப்பதாகவும் சிறைக்குள்ளே இடம்பெறும் உரையாடலில் கதாநாயகனைப் பார்த்து நீ கொலை செய்து விட்டா அல்லது திருடிவிட்டா சிறைக்கு வந்தாய் எனும் வினவும் போது தான் நாட்டுக்கு நல்லது செய்தேன் என தெரிவிப்பதாக…

  14. அரசியல் கைதிகளையே விடுதலை செய்யாத அரசாங்கம் காணாமல் போனவர்களை கண்டறியுமா ? 12 டிசம்பர் 2015 தமிழ் அரசியல் கைதிகளையே விடுதலை செய்யாத இந்த அரசாங்கம் காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறிந்து தரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை என காணமலாக்கபடவரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த சாட்சி அமர்வில் சாட்சியம் அளிக்க வந்தவர் ஒருவரே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிளையே விடுதலை செய்யாத இந்த அரசாங்கம் காணாமல் போன எமது உறவுகளை கண்டறிந்து தரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. இதுவரை காலமும் மனிதர்களை நம்பி நம்பி ஏமாற்று வ…

  15. ஆயர் இல்லத்தில் ஓய்வெடுத்து கொண்டிருக்கின்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையைப் பார்க்க வருவதை தற்போதைக்கு தவிர்க்குமாறு மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அ.விக்டர் சோசை அடிகளார் தெரிவித்தார். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, நாடு திரும்பியுள்ள நிலையில் மன்னார் ஆயர் இல்லத்தில் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறினார். மன்னார் ஆயரின் உடல்நலம் குறித்து அவர், தெரிவிக்கையில், மன்னார் ஆயர் இல்லத்திலேயே ஆயர் தற்போது தங்கியுள்ளார்.அவர் நல்ல சுகத்தோடு உள்ளதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். இருந்த போதிலும் தனது பணியினை உ…

  16. காணாமற்போன ஒருவரைக் கண்டறிவதற்காக பலாலி மற்றும் அச்சுவேலி இராணுவ முகாம்கள் சோதனையிடப்பட வேண்டும் என ஜனாதிபதி விசாரணைக்குழுவுக்கு பரிந்துரை செய்வதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்டவர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் நர்மிதா என்பவர் சாட்சியமளித்தார். ‘தனது கணவர் ஜெயகாந்தன், (காணாமற்போகும் போது வயது 32) கோண்டாவிலுள்ள எமது வீட்டிலிருந்து கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி அதிகாலை 3.30 மணிக்கு இராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்…

  17. கூட்டமைப்புக்கு வழங்கிய மற்றொரு வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டார் மைத்திரிD யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினரான அங்கஜன் இராமநாதனை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார். அதிபர் செயலகத்தில் வைத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதற்கான நியமனக் கடிதத்தை, நேற்று வழங்கினார். ஏற்கனவே, யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக, பிரதிஅமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சிறிலங்கா அதிபர் நியமித்திருந்தார். யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கூடுதல் ஆசனங்களை வென்ற நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர பதவி, கூட்டமைப்புக்கு வழங்கப்படும் என்று சிறிலங்கா அரசாங…

  18. என்னை வாழ விடுங்கள்! ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் யசாரா வேண்டுகோள் அநாவசிய தொந்தரவுகள் இன்றி தன்னை, தன்பாட்டில் வாழவிடுமாறு யசாரா அபேநாயக்க ஊடகங்களிடமும், பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாம் புதல்வன் யோசித்த ராஜக்ச மற்றும் படுகொலை செய்யப்பட்ட றக்பி வீரர் வசீம் தாஜுடீன் ஆகியோரின் முன்னாள் காதலி என்று அறியப்பட்டுள்ள யசாரா அபேநாயக்க, இது தொடர்பாக தனது பேஸ்புக் ஊடாக ஒரு வேண்டுகோளை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் ஒருவிடயம் குறித்து உங்களுடன் கருத்துப் பரிமாறிக் கொள்ள விரும்புகின்றேன். …

    • 4 replies
    • 1.5k views
  19. கடத்தப்பட்டவர்களை அசோஹா ஹோட்டலில் பார்த்தோம் எனது சகோதரன் கடத்தப்பட்டு யாழ்.அசோஹா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ளார் என சகோதரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு சனிக்கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்த சாட்சியமர்வில் முருகேசு வசந்தகுமாரி என்பவர் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எனது அண்ணனான அருச்சுனாராஜா ஜெயக்குமார் (கடத்தப்படுகையில் வயது 31) என்பவர் மேசன் வேலை முடித்து வீடு திரும்பும் வேளை 1992 ம் ஆண்டு 7ம் மாதம் 3ம் திகதி ஈச்சமோட்டை குளத்தடியில் வைத்து கடத்தப்பட்டார். பின்னர் கடத்தப்பட்டவர் யாழ்.அ…

  20. கணவர் உயிருடன் இருப்பார் என்பதில் நம்பிக்கை இல்லை : நஸ்டஈடு கோரும் மனைவி வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் காணாமல் போன எனது கணவர் முஹமட் ஹமல் அஜ்மீன் இன்னமும் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை மரணச்சான்றுதலும் பெற்றுவிட்டேன் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பது கடினமாக உள்ளது. எனவே எனக்கு நஸ்டஈடு வேண்டும் என மனைவி காணாமல் போனோரை கண்டறியும் விசாரணை ஆணைக்குழு முன் கேட்டுக்கொண்டார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் பங்கேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்…

  21. மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 19 பேர் சுகாதார அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாநகர சபை உணவு கட்டளை சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு முரணான முறையில் போலி லேபல்கள் பொறிக்கப்பட்டு பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லடி பகுதியில் வர்த்தக நிலையங்கள் நேற்று மாலை திடீர் சுற்றி வளைப்புக்கு உட்படுத்தப்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வர்த்தக நிலையங்களில் இருந்து சட்டவிரோதமான முறையில் போலி லேபலுடன் பொதி செய்யப்பட்ட 6 வகையான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவர…

  22. பலவந்தமாக காணாமல்போவதை தடுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சாசனத்தில் இலங்கை நேற்று முன்தினம் கைச்சாத்திட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டுமுதல் இந்த சாசனத்தின் பிரகாரம் இலங்கை செயற்படவேண்டும். எதிர்காலத்தில் ஏதேனும் காணாமல் போதல் சம்பவங்கள் இலங்கையில் இடம்பெறும் பட்சத்தில் இந்த சாசனத்தின் சட்டதிட்டத்துக்கு அமைய அரசாங்கமே முழுமையான பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதேபோல் சர்வதேச மட்டத்திலும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகத்தில் செயற்படும் இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நேற்று முன்தினம் பலவ…

  23. இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவுகளில் கடமையாற்றும் ஆண்கள் மட்டுமன்றி பெண் சிப்பாய்களும் சைபர் குற்றங்களில் தொடர்புபட்டிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. அண்மையில் கொழும்பின் தனியார் வங்கியொன்றில் பணியாற்றும் 23வயதான யுவதியொருவர், தனது முன்னாள் காதலனான விமானப்படை பொறியியலாளர் ஒருவர் தனது நிர்வாணப் படங்களை வைத்து மிரட்டிக் கொண்டிருப்பதாக குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த விமானப்படை பொறியியலாளரிடம் சுமார் 30க்கும் மேற்பட்ட அழகான யுவதிகளின் அரைநிர்வாண, நிர்வாணக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டிருந்தது. இவ்வளவுக்கும் குறித்த விமா…

  24. நத்தார் பண்டிகையை கொண்டாட மட்டக்களப்பு தயாராகி வருகிறது. மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் 40 அடி உயரம் கொண்ட நத்தார் மரம் வியாழன் இரவு திறந்து வைக்கப்பட்டது, கழிவுப் பொருட்களினால் உருவாக்கப்பட்டுள்ள ஒளியூட்டப்பட்ட இந்த நத்தார் மரம் காண்போரை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது http://www.seithy.com/breifNews.php?newsID=146791&category=TamilNews&language=tamil

    • 1 reply
    • 723 views
  25. ( ஏ.எல்.நிப்றாஸ் ) மரணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டும் என்று ஆன்மிகம் சொல்கின்றது. அது வரைக்குமான போராட்டம்தான் வாழ்க்கை என்பது. மரணம் நிச்சயக்கப்பட்டதொன்று. அதனை உலகத்தில் நியாயப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படுபவைதான் விபத்துக்கள், நோய்கள், முதுமை, மரண தண்டனைகள், கொலைகள், யுத்தங்கள் எல்லாம். இருப்பினும் மறதிக்கும் தவறுக்கும் மத்தியில் படைக்கப்பட்ட மனிதனுக்கு மரணம் என்பது தண்டனையாக விதிக்கப்படும் போது, அதிலிருக்கின்ற வலி முன்கூட்டியே உணரப்படத் தொடங்குகின்றது. மெல்ல மெல்ல வலி அதிகரித்து ஒரு உச்சப் புள்ளிக்கு சென்று, மூச்சடங்குகின்றது. இவ்வாறான ஒரு உணர்வை இலங்கைப் பெண்ணொருத்தி இன்று அராபிய தேசத்தில் உணர்ந்து கொண்டிருக்கின்றாள். வேறொரு ஆணுடன் தகாத உறவு வைத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.