Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை மீது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், இங்குள் நிலை தொடர்பாக அவர் தன்னிடம் அடிக்கடி கேட்டு அறிந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அவர், கொழும்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் நல்லிணக்கம் இன்னும் முழுமை பெறவில்லை. 1960ஆம் ஆண்டு அரசியலில் காணப்பட்ட பெண்களின் சதவீதம் 2015ஆம் ஆண்டு ஆகும்போது வெறும் 2 சதவீதத்திலேயே அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தமிழ்ப் பெண்களின் பிரதிநிதித்துவத்தின் அதிகரிக்க வேண்டியது முக்கியமானது. அமெரிக்காவின் அரசியலில் பெண்களின் பங்கள…

  2. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள கச்சேரி நல்லூர் வீதியில், உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட காரினை புகையிரதம் மோதிய விபத்தில் காரில் சென்ற ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்து இருந்தனர். பொறியியலாளரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான வில்வராஜா சுதாகர் (வயது 41) என்பவர் உயிரிழந்துள்ளார். அவருடன் காரில் சென்ற அரவிந்தன் (வயது 28) , ஆதவன் (வயது 28 ) , கம்பதாஸன் (வயது 23) ஆகிய மூவரும் பாடுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள இந்த பாதுகாப்பு அற்ற கடவையின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள் , யாழ்.மாவட்ட செயலகத்தில் கடமையாற்றுபவர்கள் என பலர் சென்று வருகின்றனார். அக் கடவையி…

  3. பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படின் உடன் அறிவிக்கக் கோருகிறார் :வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பொலிஸாரினால் மனித உரிமைகள் மீறப்படுமாயின் உடன் தனக்கு அறிவிக்கும்படி வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 18.11.2015 புதன்கிழமை மானிப்பாய் நவாலி முருகமூர்த்தி கோவில் பகுதியில் நண்பகல் 12 மணியளவில இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டனர். அதில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவின் மகன். கைதுசெய்யபட்ட அவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையம் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு வைத்து அவர்க…

  4. மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டியது உதயன் நீங்கள் ( உதயன்) மக்களின் பிரச்சினைகளைப் பத்திரிகையில் வெளிக்கொண்டு வராமல் விட்டிருந்தால், இங்கு என்ன நடந்தது என்பது எங்களுக்கு - சர்வதேசத்துக்குத் தெரியவந்திருக்காது. அவ்வாறு தெரியவந்திருக்காவிட்டால், இந்தப் பகுதி எப்படியிருக்கும் என்பதைக் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது.இவ்வாறு ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்தார். உதயன் பத்திரிகை நிறுவனத்துக்கு வருகை தந்த, சமந்தா பவரை, உதயன் குழுமத் தலைவரும்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் வரவேற்றார். இதன் பின்னர், 2013 ஆம் ஆண்டு இனந்தெரியாத ஆயுததாரிகளினால் எரியூட்டப்பட்ட இயந்திரத்தை அவர் …

  5. சிரியா,ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் மேலும் 16 இலங்கையர்கள் இணைந்து கொண்டுள்ளதாக அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள பிரச்சார சஞ்சிகையில் குறிப்பிப்பட்டுள்ளது. ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்திருந்த கண்டியைச் சேர்ந்த சிலானி என்பவர் அமெரிக்க விமானத் தாக்குதலில் உயிரிழந்திருந்தார். அவரது பெற்றோர், மனைவி, ஆறு பிள்ளைகள் உள்ளிட்ட பதினாறு இலங்கை முஸ்லிம்கள் அந்த அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தீவிரவாதியின் நெருங்கிய உறவினர்களும் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=145444&category=TamilNews&language=…

  6.  மாணவர்களைப் பற்றி பெற்றோர் அறிந்துக்கொள்ள புதிய முறைமை - குணசேகரன் சுரேன் மாணவர்களின் பாடசாலை தொடர்பான செயற்பாடுகள் குறித்து பெற்றோர்; வீடுகளில் இருந்தவாறே அறிந்துகொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வகையில் முறையொன்றை கொக்குவில் இந்துக் கல்லூரி அறிமுகப்படுத்தியுள்ளது. பெற்றோருக்கு மாணவர் சார்பாக பதிவு பெயர் மற்றும் கடவுச்சொல் என்பன வழங்கப்படும். அதனைக் கொண்டு, பாடசாலையின் இணையத்தளத்துக்குச் சென்று தங்கள் பிள்ளை அன்றைய தினம் பாடசாலைக்கு சென்றுள்ளாரா? என்பதை அவதானிக்கலாம். இந்த முறையின் கீழ் பதிவுகளை மேற்கொள்ளும் அனைத்து பெற்றோர்களின் அலைபேசிக்கும்…

  7. கிழக்கு விவசாய அமைச்சருக்கு பிரதேச மக்கள் எடுத்துரைப்பு- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்:- கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் தென்னைமரவாடிக் கிராமத்தில் பெரும்பான்மையின மக்களின் அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்வதால் பிரதேச மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் பிரதேச மக்களை சந்தித்து அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைரசலிங்கம் கலந்துரையாடினார். திருகோணமலை மாகாண விவசாய அமைச்சில் நடந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கமும் கலந்து கொண்டார். தென்னைமரவாடி தமிழ் மக்கள் காலம…

  8. புங்குடுதீவு மாணவி படுகொலை : சந்தேகநபர்கள் மன்றில் மன்றாட்டம் நாங்கள் குற்றம் செய்யவில்லை. எங்களை விடுதலை செய்யுங்கள் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று மன்றாட்டமாகக் கேட்டக்கொண்டனர். கொலை செய்தீர்கள் என்பதற்கு அப்பால், கொலையுடன் தொடர்புபட்டுள்ளீர்களா என்ற ரீதியிலும் விசாரணைகள் இடம்பெறும் என நீதவான் செல்வநாயகம் லெனிக்குமார் இதன்போது கூறினார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபர்களின் மரபணுப் பரிசோதனை அறிக்கை இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. சம்பவம் நடைபெற்ற தினத்தில் கொழும்பில் நின்றதாகக் கூறிய சந்தேகநபர், அதனை த…

  9. போரில் மடிந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்க வேண்டும்! - நாடாளுமன்றத்தில் சுமந்திரன் கோரிக்கை [Sunday 2015-11-22 09:00] போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். போரில் மடிந்த புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு அவர்களது உறவுகள் அஞ்சலி செலுத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நேற்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்…

  10. இராஜதந்திர அப்பம் சமந்தா பவருக்கும் ஐநாவுக்கான அமெரிக்கத் தூதுவரான சமந்தா பவருக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் வழங்கப்பட்ட விருந்துபசாரத்தில் அப்பம் முக்கிய இடத்தை வகித்திருந்தது. இதனை இலங்கையின் அப்ப இராஜதந்திரம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராஜதந்திரிகள் மத்தியில் இலங்கையின் அப்ப இராஜதந்திரம் வெகுவாக பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. மைத்திரிபால ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக கடந்த பெப்ரவரியில் வருகை தந்திருந்த தெற்குஇ மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுக்கும் அப்ப விருந்து…

  11. அவன்ட் கார்ட் நிறுவன தலைவர்மேஜர் நிசாங்க சேனாதிபதி முன்னாள் அமைச்சர் ஒருவருக்குசொகுசு படகு ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். கடந்த காலங்களில் துறைமுக அமைச்சராக கடமையாற்றிய ஒருவருக்கே இவ்வாறு படகு ஒன்றை வழங்கியுள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு செய்பய்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணைகளின் போது குறித்த முன்னாள் அமைச்சரின் சொந்தப் பாவனைக்காக சொகுசு படகு ஒன்று வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த படகினை அவன்ட் கார்ட் தலைவர் பரிசாக தமக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் உண்மையா என அறிந்து கொள்ள அவ்னட் கார்ட் நிறுவனத் தலைவரை அழைத்து விசாரணை …

  12. வவுனியா நகரப் பகுதியில் நேற்றுக் காலை மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டு காணப்பட்டன. “எம் தேசத்தின் வீர மறவர்களின் நினைவு வாரம்” என தலைப்பி டப்பட்டு ஒட்டப்பட்டிருந்த இச்சுவரொட்டிகளை அகற்றும் பணியில் வவுனியா பொலிஸார் ஈடுபட்டிருந்தனர். http://www.seithy.com/breifNews.php?newsID=145409&category=TamilNews&language=tamil

  13. வடமாகாண சபைக்கும் மாண்பு மிகு அமைச்சர்களுக்கும் சமர்ப்பணம் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மயூரப்பிரியன்:- வடமாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள முன்பள்ளி பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிறார்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியிலும் தொற்று நோய் அபாயத்திற்கு மத்தியிலும் கல்வியை தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். யாழ்.ஆடியபாதம் வீதி நல்லூரில் அமைந்துள்ள நல்லூர் முத்தமிழ் முன் பள்ளி பாலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதனால் சிறார்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் தமது கல்வி நடவடிக்கையினை தொடர்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பாடசாலை மதில் ஓரமாக வீட்டுக் குப்பைகள் , மிருக கழிவுகள் , மற்றும் பழுதடைந்த உணவு வ…

  14. ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட எழுவைதீவு இறங்கு துறைமுகம், இலங்கை மின்சார சபையினால் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். நீண்ட காலமாக புனரமைப்பின்றி உடைந்த நிலையில் காணப்பட்ட இவ் இறங்குதுறையூடாக பயணிகள் வந்து செல்வதில் பல இடையூறுகள் காணப்பட்டன. மேலும், நோயாளர்களை படகுமார்க்கம் ஊடாக ஏற்றி இறக்குவதில் பல அசௌகரியங்கள் காணப்பட்டதுடன், ஆபத்து நிறைத்த இறங்குதுறையாகவும் காணப்பட்டது. குறித்த இறங்கு துறையினை திருத்தித்தருமாறு அப்பகுதி மக்கள் பல முறை பிரதேச செயலரிடம் கோரிக்கை விடுத்திருந்த போதும் நிதி வளங்கள் இல்லாத காரணத்தினால் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது மின்சார சபையின் புதிய …

  15. யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது இனப்பாதுகாப்பு என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் தெரிவித்த கூற்றுக்களுக்கு மறுதலிக்கும் வகையில், நேற்று திங்கட்கிழமை, தமிழ்மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கும் போத…

    • 41 replies
    • 5.7k views
  16. தளபதிக்கு தெரியாமல் இரகசிய முகாமா? முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ, கடற்­ப­டைத்­த­ள­பதி கரு­ணா­கொட ஆகி­யோ­ருக்கு தெரி­யாது எவ்­வி­த­மான இர­க­சிய முகாம்­களும் இருந்­தி­ருப்­ப­தற்­கான வாய்ப்­பில்­லை­யெனத் சுட்­டிக்­காட்­டி­யுள்ள தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­திரன் முழு­மை­யான விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­பட்டு அனைத்து விட­யங்­களும் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்ளார். …

  17. இதுவரை காலமும் எந்த அரசும் ஒதுக்காத நிதி கல்விக்கு இதுவரை காலமும் எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத அளவுக்கு அதி கூடியளவு நிதியை நாம் கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் தெரிவித்தார். கடந்த பல தசாப்தங்களாக வருடா வருடம் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடவும் நான்கு மடங்கு நிதியை நாம் இவ்வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு ஒதுக்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார். மாலபே முன்மாதிரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திர…

  18. யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டம் [ Monday,23 November 2015, 05:41:04 ] யாழ். மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு நாடளாவிய ரீதியில் 25000 வீடமைப்புத் திட்டங்களுக்கான உதவி வழங்கலின் ஆரம்ப நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டு 115 குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்காக பூச்சுவேலைகளுக்கான சீமெந்து பைக்கற்றுக்களை வழங்கி வைத்தார். இதன் முத…

  19.  42 அகதிகள் நாளை நாடு திரும்புவர் தமிழ்நாட்டுள்ள அகதிகளில் இலங்கை தமிழ் அகதிகள் 42 பேர், நாளை 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைஇலங்கையை வந்தடையவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார். அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய (UNHCR) வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புடன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் வழிகாட்டலுடன் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். இவர்களுக்கு இலங்கையை வந்தடைவதற்கு இலவசமாக வி…

  20. ஆட்கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் திருமலை கடற்படையில் பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வான் ஒன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். திருகோணமலை கடற்படை முகாமிற்கு காணாமல் போனோர் தொடர்பிலான ஐ.நா வின் விசாரணைக்குழு அண்மையில் சென்றிருந்ததோடு, குறித்த முகாமில் குறித்த வான் அடையாளம் காணப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் கடற்படையை குறிக்கும் இலக்கத்தகடுடன் காணப்படும் இந்த வான், பல கடத்தல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் கட்டுப்பாட்டிலேயே வேன் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு…

  21. முதற்கட்ட புனர்வாழ்வு குழுவில் 20பேர் : சட்டமா அதிபரின் அறிவிப்பால் சர்ச்சை தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் பொறிமுறையின் கீழ் சட்டமா அதிபர் முதற்கட்ட குழுவினர் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் அது பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக இக்குழுவினரில் உள்ளடங்குவோர் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு சிறிய தண்டனைக் காலம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்தே புனர்வாழ்வுக்குச் செல்ல முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு பல வழக்குகள் காணப்படுகின்றமையால் ஒரு வழக்கின் அடிப்படையில் புனர்வாழ்வு பொறிமுறைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்ற போதும் ஏனைய வழக்குகள் தொடர்ப…

  22. இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சமந்தா பவர், இன்று யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது, யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் விஞ்ஞான ஆய்வுகூடக் கட்டடத்தை திறந்து வைத்தார். இதையடுத்து, ஒஸ்மானிய கல்லூரி மாணவிகளுடன் இணைந்து சமந்தா பவர் பேஸ்போல் விளையாடி மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தினார். மழை பெய்து கொண்டிருந்த போதும், அதனைப் பொருட்படுத்தாமல் நனைந்து கொண்டே சமந்தா பவர் பேஸ்போல் விளையாடியது குறிப்பிடத்தக்கது. …

  23. ஜனாதிபதியின் புதல்வர் தஹம் சிறிசேன முன்னணி வர்த்தகர்களுடன் கைகோர்த்து உலகம் சுற்றிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அண்மையில் இலங்கையின் மருந்துப் பொருட்கள் விநியோகக் கம்பெனியொன்றின் உரிமையாளர் தனது சொந்த செலவில் தஹம் சிறிசேனவை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றிருந்தார். இதற்குப் பிரதி உபகாரமாக குறித்த மருந்துக் கம்பனிக்கு ஐம்பது வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியைப்பெற்றுக் கொடுப்பதில் தஹம் சிறிசேன தலையிட்டுள்ளார். அத்துடன் சிறுநீரக நோயாளிகள் தொடர்பில் தஹம் சிறிசேன மேற்கொண்டுள்ள சமூக சேவை விடயங்களில் உதவும் வர்த்தக நிறுவனங்களுக்கும் அவர் தனிப்பட்ட ரீதியில் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்காவும் …

  24. நூறாண்டுகள் தாக்குப் பிடிக்கும் என்று வர்ணிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்த்தது தாங்களே என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க உரிமை கோரியுள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் அவர், முன்னொரு காலத்தில் ஒரு குடும்பத்தின் கையில் மட்டும் ஆட்சி அதிகாரம் தங்கியிருந்தது. ஆனால் இன்று இரண்டு கட்சிகளின் தலைவர்கள் புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து நல்லாட்சியின் மூலம் மக்களை அதிகாரம் கொண்டவர்களாக மாற்றியுள்ளார்கள். மஹிந்தவின் ஆட்சியில் ஊழல், மோசடி, லஞ்சம் என்பன சட்டரீதியாக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக பொதுமக்கள் அந்த ஆட்சியை வெறுத்தார்கள். எங்களது அரசாங்கம் பொதுமக்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வகையிலான எந்தவித செயற்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை. சு…

  25. உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின்போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சரை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் வடக்கு மாகாண ஆளுநர், எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப், யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.