Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம் [ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 06:57.46 AM GMT ] விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான சில அமைப்புகள் மற்றும் அந்த அமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் இலங்கைக்கு வருவதை தடை செய்து ராஜபக்ச அரசாங்கம் வெளியிட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு நேற்று வெளியிடப்பட்டது. 2014 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச 1854/41 என்ற இலக்கத்தை கொண்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் என சந்தேகிக்கப்படும் 17 அமைப்புகள் தடை செய்யப்பட்டதுடன் 424 நபர்கள் இலங்கைக்கு வருவது தடை செய்யப…

  2. 'நாகதீப' என்ற பெயரை 'நயினாதீவு' என பெயர் மாற்றும் வடக்கு மாகாண சபையின் தீர்மானம் முட்டாள் தனமானது. நாகதீப என்பதை நயினாதீவு என மாற்றக்கூடாது. இதற்கு நானும் எதிர்ப்பே. - இப்படித் 'திவயின' சிங்கள வார இதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். நயினாதீவின் சில பகுதிகள் தமிழில் நாகதீப எனப் பெயர் மாற்றப்பட்டது. இதையடுத்து தமிழில் நாகதீப எனப் பெயர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அதனை மீண்டும் நயினாதீவு என மாற்ற வேண்டும் என வடக்கு மாகாண சபையில் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கொண்டு வந்த பிரேரணை தீர்மானமாக நிறைவேறியது. இந்தத் தீர்மானம் தென்னிலங்கையில் பூதாகாரமாக திரிபுபடுத்தப்பட்…

  3. யாழில் கோர விபத்து : ஒருவர் சாவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த அதிவேக புகையிரதம் கச்சேரியிலிருந்து யாழ்.நகர் நோக்கி சென்ற காரை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலும், மற்றுமொருவர் காயங்களுடனும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த அதிவேக புகையிரதம் ஒன்று கச்சேரியிலிருந்து யாழ்.நகர் நோக்கிச் சென்ற காரை மோதி 100 மீற்றர் தூரம் வரை காரை இழுத்துச்சென்று தூக்கி வீசியது.காரில் இருந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டியில் அனுப்ப…

  4. புலம்பெயர் அமைப்புகள் மீதான 'தடை நீக்கம்': நல்லிணக்க செய்தியா? இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது தடைசெய்யப்பட்டிருந்த பல புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும் பல தனிநபர்களையும், புதிய அரசாங்கம் தடைப் பட்டியலிலிருந்து நீக்குவதாக வெள்ளியன்று இரவு அறிவித்திருந்தது. '8 அமைப்புகளுக்கும் 267 நபர்களுக்கும்' எதிரான தடையை நியாயப்படுத்தக்கூடிய ஆதாரங்களோ புலனாய்வுத் தகவல்களோ இல்லை என்று தமது ஆய்வுகளுக்குப் பின்னர் முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தது. ஆனால், மேலும் 8 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் அடங்கலாக பிரிவினைவாதத்தை ஆதரிக்கின்ற குழுக்களும் 157 தனிநபர்களும் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருப்பார்கள்…

  5. 2016ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய நன்மைகள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் ஒப்பிடுகையில் அதிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரவுசெலவுத் திட்டத்தில் மஹிந்தவுக்கு 4.17மில்லியன் ரூபா ஓய்வூதிய நன்மைகள் கிடைத்துள்ளன. எனினும் சந்திரிகாவுக்கு 3.3 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைதவிர முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மூலதன செலவாக தலா 5 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் மனைவி ஹேமாவுக்கு 275,000 ரூபா ஓய்வூதிய நன்மையாக ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு மூலதன செலவாக 4 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் மனைவிமாருக்கு 9.345 மில்லியன் ரூபா ஒதுக…

  6. தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் எதிர்வரும் ஜனவரி மாதம் பதவி இழக்கும் நிலைமை உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, திறமையற்ற அமைச்சர்களிடமிருந்து அமைச்சு பதவிகளை மீளப் பெற்றுகொள்வதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரிய அளவிலான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள அமைச்சர்கள் மற்றும் காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவி இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=145397&category=TamilNews&language=tamil

  7. இலங்கை மனித உரிமைகள் நிலவரம்:மோடியிடம் மலேசிய எதிர்கட்சிகள் பேச்சு ஐ நா மனித உரிமைகள் தீர்மானத்தின்படி இலங்கை நடந்துகொள்ள இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என மலேசிய எதிர்கட்சித் தமிழ் உறுப்பினர்கள் நரேந்திர மோடியிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர். கோலாலம்பூர் பொதுக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆசியான் மாநாட்டில் பங்கேற்கவும், இந்திய-மலேசிய இருதரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சுக்களை நடத்தவும் இந்தியப் பிரதமர் கோலாலம்பூர் சென்றுள்ளார். அங்கு இந்திய வம்சாவளி மக்கள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது, அவர்கள் பிரச்சினை குறித்து திங்கள் கிழமை மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்குடன் பேசவுள்ளதாக தெரிவித்தார் என அந்தக் கூட்டத்…

  8. தமிழர்களை இன்னமும் பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றனர் : சமந்தா பவரிடம் முதலமைச்சர் சுட்டிக்காட்டு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தையும் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுத்து பெற்றுத் தருவோம் என, அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சமந்தா பவர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து இன்று சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். …

  9. (க.கிஷாந்தன்) 2016 வரவு செலவு திட்டத்தில் அதிகப்படியான நிதி மலையக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை கவரவில் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுடைய வீட்டு பிரச்சினையை தீர்க்கும் வகையில் அதிகளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் மலையகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பதற்கு ஜனவரி மாதம்…

  10. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம் செய்தார். குறித்த விஜயத்தின் போது கடந்த காலத்தில் யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு உலக நாடுகள் கவலைப்பட்டது. ஆனால் மீளவும் புத்துயிர் பெற்று நூலக வளர்ச்சியைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன். குறித்த நூலகத்தில் புராதன ஓலைச்சுவடிகள் இன்னமும் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருவது பாராட்டத்தக்க விடயமாகும். குறித்த நூலகத்திற்கு எமது அரசாங்கத்தால் உதவிகள் செய்ய முன்வந்துள்ளோம். அதன்படி குறித்த நூலகத்தில் உள்ள நூலகங்களை பேணிப்பாதுகாப்பதற்குரிய அனைத்தையும் நாங்கள் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். …

  11. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ். உதயன் பத்திரிகைக்குச் சென்று அங்கு உதயன் குழுமத்தின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனை சந்தித்தார். குறித்த சந்திப்பின் போது கடந்த காலத்தில் உதயன் பத்திரிகைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், மற்றும் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளையும் பார்வையிட்டார் சமந்தா பவர். அதன்பின்னர் உதயன் குழுமத் தலைவர் ஈ.சரவணபவனை சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது சமந்தா பவர் கருத்து தெரிவிக்கையில், நானும் ஒரு ஊடகவியல…

  12. இலங்கை- இந்திய மீனவர்களின் பிரச்சினை அரசியல் பிரச்சினை. அதனை இரு நாட்டின் அரசாங்கமும் இணைந்து பேசி தான் தீர்வினை பெற வேண்டும் என இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த 19ஆவது சர்வதேச மீனவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு இலங்கை இந்திய அரசாங்கம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதனை நாம் அறிவோம். இது ஒரு தேசிய பிரச்சனை. இரு நாட்டு அரசாங்கமும் இந்த பிரச்சனை தொடர்பில் தொடர்ந்து பேசி வருகின்றது. தேசிய அரசாங்கம் இந்த பிரச்சனை தொடர்பில் பேசி கொள்வதனால் இப்போது இல்லாவிட…

  13. நாட்டை வந்தடைந்தார் சமந்தா பவர் ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்க தூது வர் சமந்தா பவர் இன்று பிற்பகல் இலங்­கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து இலங்கைக்கு வந்த இந்திய விமானச் சேவைக்கு சொந்தமான யுஐ 281 என்ற விமானத்தில் 8 பிரதிநிதிகளுடன் வருகைத் தந்தார். சமந்தா பவர் நாளை நண்பகல் கொழும்பில் அமைந்துள்ள அமெ­ரிக்க தூது­வரின் இல்­லத்தில் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பி­ன­ருடன் முக்­ கிய பேச்­சு­வார்த்­தை­யொன்றில் கலந்­து­கொள்­ள­வுள்ளார். இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூதுவர் அப்துல் கெசாப் உள்­ளிட்ட முக்­கிய அதி…

    • 5 replies
    • 1.2k views
  14. ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உலகம் பூராகவும் பெரும் பரபரப்பு. இங்கு நான் உலகம் என்பது ஈழத்தமிழ் உலகத்தை, அண்மையில் வெளிவந்த அஜித்தின் 'வேதாளத்திற்கு' நிகராக, சுமந்திரனுக்கு முதலமைச்சர் எழுதிய பதிலறிக்கை, ஈழத்தமிழுலகம் எங்கும் பரபரப்பாய்ப் பேசப்படுகிறது. 'குடுத்தார் பார் ஒரு குடுவை', 'உடஞ்ச மூக்கைத் தேடுறார் சுமந்திரன்', 'மனுசன் சொன்னது அத்தனையும் சரி', இப்படியாய்க் கட்சி பிரிந்து முதலமைச்சருக்கு வால் முறுக்குவோர் சிலர், கொண்டாடிக் குதூ…

    • 12 replies
    • 1.8k views
  15. கூட்டமைப்பு - முதலமைச்சர் இடையே விரைவில் சந்திப்பு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்பீடத்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மிக விரைவில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் கட்சியில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளைத் தீர்க்கும் விடயங்கள் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் அழைக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சரின் கடந்த கால தேர்தல் நேரங்களில் நடந்துகொண்ட விதம், வெளியிடப்பட…

  16. வீதியில் சென்ற இளைஞர்கள் இருவரை மானிப்பாய் பொலிஸார் கண்டபாட்டில் தாக்கிய சம்பவம் பொலிஸாரின் அத்துமீறலைக் காட்டுகிறது. இவ்வாறு தாக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவின் மகன் என்று தெரிய வருகிறது. வீதியில் சென்ற இரண்டு இளைஞர்கள் மீது தமக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிக மோசமாகத் தாக்குவதென்பதற்குள் தமிழ் இளைஞர்கள் என்ற அடிப்படை இருப்பதைக் காண முடியும். பொலிஸாரின் அத்துமீறல்கள் பல இடங்களில் நடக்கின்ற போதிலும் எதுவும் செய்ய முடியாது. நட வடிக்கை எடுக்க முற்பட்டால் தொடர்ச்சியான பழிவாங்கலுக்கே ஆளாக வேண்டி வரும் என்ற நிலைமை காரணமாக பேசாதிருக்கின்ற சம்பவங்களே நடந்து கொண்டிருக்…

  17. விக்கினேஸ்வரன் எதிர் சுமந்திரன்: அறிக்கைப்போரின் பார்வையாளர்களா தமிழ் மக்கள்? விக்கினேஸ்வரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான முரண்பாடு எனப்படுவது ஒரு தனிப்பட்ட முரண்பாடு அல்ல. தமிழ் அச்சூடகங்களில் ஒரு பகுதியும் இணைய ஊடகங்களில் ஒரு பகுதியும் சித்தரிப்;பது போல அது சுழலும் சொற்போரும் அல்ல. விக்கினேஸ்வரனின் அறிக்கையில் கூறப்படுவது போல கொழும்பு மையநோக்கு நிலைக்கும் தமிழ் மைய நோக்கு நிலைக்கும் இடையிலான ஓரு முரண்பாடு மட்டும் அல்ல. அல்லது சுமந்திரன் கருதுவது போல அது கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட மறுக்கும் ஓர் ஒழுக்காற்றுப் பிரச்சினை மட்டுமல்ல. ஆயின் அது என்ன? அது மேற்கண்ட எல்லாவற்றையும் விட இரண்டு அடிப்படைகளில் ஆழமானது. மு…

  18. தற்போது சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் மா.ஜெயராசா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் மீள்குடியேற்ற மாவட்டம் என்பதன் காரணமாக வீட்டுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் வீடுகளுக்காக உருவாக்கப்பட்ட குழிகளில் மழைவெள்ளம் தற்போது தேங்கிநிற்கின்றது. 'இக்குழிகளில் சிறுவர்கள் தவறிவிழுகின்ற அபாயநிலை உள்ளதால் பெற்றோர்கள் வெள்ளம் நிறைந்த பகுதிகளுக்கு தமது பிள்ளைகளை செல்லவிடாது பாதுகாக்குமாறு தெரிவித்துள்ளார். அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திலும் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டத்திலுள்ள சகல உணவகங்களின் சுகாதாரம் தொடர்பாக சுகாதாரப் பர…

  19. சிராந்தியின் அறக்கட்டளைக்கு சீனாவில் இருந்து நிதியுதவி! [Sunday 2015-11-22 09:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய என்ற அமைப்புக்கு சீன அரசாங்கம் 75 ஆயிரம் டொலர்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரக முதல் செயலாளர் இது தொடர்பில் இலங்கையின் வெளியுறவு அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சிரிலிய அமைப்புக்கு சீன அரசாங்கம் பணத்தை வைப்பு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவின் சிரிலிய சவிய என்ற அமைப்புக்கு சீன அரசாங்கம் 75 ஆயிரம் டொலர்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு பீஜிங்கில் உள்ள இலங…

  20. புலிகள் அமைப்புக்களுக்கு தடை விதித்த வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் 22-11-2015 07:30 AM தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படும் அமைப்புகள் மற்றும் 424 நபர்கள் மீது தடை விதித்தது வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/159663/-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%…

  21. நிரந்த அரசியல் தீர்வுக்கு ஐ.நா வலியுறுத்தல்: பேச்சை ஆரம்பிக்குமாறும் யோசனை [ Sunday,22 November 2015, 02:47:17 ] இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுக்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளுடன் நடத்தி நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிரந்த அரசியல் தீர்வு ஒன்றின் மூலமே வடக்கு கிழக்கு மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள அன்றாட பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும் பொருளாதார அபிவிருத்திகள் ஏற்படும் எனவும் ஐ.நா வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த ஐ.நா உயர் அதிகாரி ஒருவர் இவ்வா…

  22. டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் பொறுப்பு இந்திய நிறுவனத்திடம்! ரவியின் திட்டம் அம்பலம் [ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 11:25.05 PM GMT ] இலங்கையர் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை இந்திய நிறுவனம் ஒன்றிடம் கையளிக்க அமைச்சர் ரவி கருணாநாயக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அடையாள அட்டைகள் வழங்குதலுக்குப் பொறுப்பான தேசிய ஆட்பதிவுத்திணைக்களம் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. எனினும் இந்த திணைக்களத்தின் ஊடாக டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் செயற்பாட்டில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ச்சியாக தலையிட்டு வருகின்றார். கடந்த நூறு நாள் அரசாஙகத்தின் பதவிக்காலத்தில் ரவி கருணாநாயக்க இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒன்…

  23. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகம் கட்டார் நிறுவனமொன்றுக்கு தாரைவார்ப்பு? [ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 11:36.21 PM GMT ] ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிர்வாகம் மிக விரைவில் கட்டார் நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அதிகாரத்தில் இருந்த நூறு நாள் அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இலங்கை வந்திருந்த கட்டார் நாட்டு முக்கியஸ்தர் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணக்கப்பாட்டுக்கு வந்திருந்ததாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. கட்டார் விமான சேவை நிறுவனம் கனடா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளுக்கான விமான சேவையை விஸ்தரிக்கும் ஆர்வத்தில் உள்ளது. எனினும் தனியார் நிறுவனம் என்ற வகையில் விமானப் போக்குவரத…

  24. திருகோணமலை வதைமுகாம் பற்றிய மேலதிக தகவல்களை வெளியிடுவோம்! - யஸ்மின் சூக்கா [Sunday 2015-11-22 09:00] திருகோணமலையில் கடந்த வாரம் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவினால் வெளியிடப்பட்ட கடற்படை இரகசிய வதை முகாம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடத் தயார் என்று, உண்மை, நீதிக்கான சர்வதேச திட்டம் அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் கடந்த வாரம் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவினால் வெளியிடப்பட்ட கடற்படை இரகசிய வதை முகாம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியிடத் தயார் என்று, உண்மை, நீதிக்கான சர்வதேச திட்டம் அமைப்பின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இந்த முகாம் தொடர்பில்…

  25. சுமந்திரனுக்கு எதிராக வடமராட்சியில் சுவரொட்டிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரனுக்கு எதிராக யாழ். வடமராட்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.