ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143499 topics in this forum
-
பிரபாகரன் நல்ல மனிதர் எனினும் உலகமயமாதல் பற்றி அறிந்திருக்கவில்லை – கருணா: 01 நவம்பர் 2015 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நல்ல மனிதர் என்ற போதிலும், உலகமயமாதல் பற்றி அறிந்திருக்கவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயாகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகுவதற்கு பிரபாகரனே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். சமாதான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தம்மை பிரபாகரன் நம்பவில்லை எனவும் மாத்தையாவிற்கு நேர்ந்த கதியே தமக்கு நேரும் என அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஒஸ்லோ தீர்மானத்தை கிழித்தெறிந்த பிரபாகரன், சுதந்திர போரா…
-
- 1 reply
- 590 views
-
-
"நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரியான நிலைப்பாட்டை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதன் பிரதியை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கும் அவர்கள் அனுப்பிவைத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னதாக அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரி…
-
- 3 replies
- 532 views
-
-
யாழ்ப்பாணத்திற்கு புதிய சிறைச்சாலை யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்று திறந்து வைக்கப்பட உள்ளது. ஆயிரம் கைதிகளை தடுத்து வைக்கக் கூடிய வகையிலான இந்த சிறைச்சாலை நாளை திறந்து வைக்கப்பட உள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் திலக் மாரப்பன இந்த சிறைச்சாலையை திறந்து வைக்க உள்ளார். அதிக வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் இந்த சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 2.5 ஏக்கர் காணியில் இந்த புதிய சிறைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 272 மில்லியன் ரூபா செலவில் இந்த சிறைச்சாலை நிர்மானிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/125435/language/ta-IN/article.aspx
-
- 9 replies
- 773 views
-
-
எட்டு மதுபான நிலையங்களுக்கு சீல் செல்வநாயகம் கபிலன் யாழ்ப்பாண மாவட்டத்தில் வௌ;வேறு பகுதிகளில் முறைகேடாக இயங்கி வந்த எட்டு மதுபான நிலையங்;களுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த மதுவரி திணைக்கள உயர் அதிகாரிகள் தலமையிலான குழுவினர், குறித்த மதுபான நிவையங்களுக்கு சீல் வைத்துச் சென்றதாக மதுவரி திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இயங்கிய 3 மதுபான நிலையங்கள், ஊர்காவற்துறையில் 2, சுன்னாகத்தில் 1, புலோலியில் 1, புத்தூர் சுன்னாகம் வீதியில் அமைந்துள்ள மதுபான நிலையம் ஆகியவற்றுக்கே இவ்வாறு சீல்வைக்கப்பட்டுள்ளதாக அவ் அதிகாரி கூறினார். உரிய முறையில் களஞ்சியப்படுத்தாமை, விற்பனை பற்றுச்சீட்டுக்களை முறையாக பேணாமை, வாடிக்கையாளர்களுக…
-
- 0 replies
- 541 views
-
-
வடமாகாணத்தில் மரநடுகை மாதத்தை முன்னிட்டு மர நடுகை தொடக்க நிகழ்வு, யாழ்ப்பாணம் செம்மணி உப்பாற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றது. வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்ததோடு, மர நடுகைப் பாடல் இறுவட்டையும் வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில், வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், சி.சிறீதரன், த.சித்தார்த்தன்; மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், யாழ் மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகன், மற்றும் திணைக்கள அதிகாரிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 'ஆளுக்கொரு மரம் நடுவோம் நாளுக்கொரு வரம் பெறுவோம்' என்ற தொனிப்பொருளில் வடமாகாண சுற்றாடல் அமைச்சால் கா…
-
- 0 replies
- 887 views
-
-
காலித் துறைமுகத்தில் தற்போது தரித்துநிற்கும் அவன்ட்கார்டே நிறுவன கப்பல் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சர்ச்சைக்குரிய இந்துசமுத்திர தீவான மினிகோய்க்கு (இலட்சதீவில் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள தீவு) அருகில் பயணம்செய்த விபரம் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கையில் பலத்த சர்ச்சைக்களை உருவாக்கியுள்ள இந்த கப்பல் செங்கடலில் இருந்து இந்துசமுத்திரத்தின் ஊடாக பயணம்செய்துள்ளது. குறிப்பிட்ட கப்பல் இலங்கைக் கொடியுடன் பயணம்செய்த காரணத்தினால் அந்த கப்பலில் இருந்தவர்கள் அயல்நாடுகளின் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டிருந்தால் அதற்கு இலங்கையே பொறுப்பு கூறவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும், குறிப்பிட்ட கப்பல் சர்ச்சைக்குரிய மினிகோய் தீவிற்கு…
-
- 0 replies
- 455 views
-
-
ஜெனீவா சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் மைத்திரிக்கு கோதா அறிவுரை - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஜெனீவா சூழ்ச்சியில் சிக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ அறிவுரை விடுத்துள்ளார். ஜெனீவா தீர்மானங்களை அமுல்படுத்த சர்வதேச நீதவான்களின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டாம் என கோதபாய ராஜபக்ஸ கோரியுள்ளார். கடந்த 27ம் திகதி கோதபாய ராஜபக்ஸ, ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மெக்ஸ்வல் பரணகம அறிக்கை தொடர்பிலும் கோதபாய கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். குறிப்பாக யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பரிந்துரை கண்டிக்கத் தக்கது என அவர் தெரிவித்த…
-
- 2 replies
- 513 views
-
-
மக்களிடமிருந்து வரி அறவீடு செய்ய வேண்டும்: அர்ஜூன் மகேந்திரன் நாட்டின் பொருளாதார ஸ்த்திரதன்மையை உறுதி செய்ய மக்களிடமிருந்து வரி அறவீடு செய்ய வேண்டுமென மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். கடன் செலுத்துகை அதிகமாக காணப்படுவதாகவும் இதனால் இதனை ஈடு செய்ய மக்களிடமருந்து வரி அறவீடு செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய சஹரா நாடுகளைப் போன்று இலங்கையில் மக்களிடமிருந்து வரி அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறnனினும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 வீதமானளவே வரி மூலம் திரட்டப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த அரசாங்கம் அந்நிய செலவாணி ஒதுக்கங்களைக்கொண்டு உட்கட்டுமான வசதிகளை ஏற்படு…
-
- 1 reply
- 567 views
-
-
லசந்த படுகொலை: பொலிஸ் அதிகாரிகளுக்கு விசாரணை சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் உட்பட பல பொலிஸ் அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண கல்கிசை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பல பொலிஸ் அதிகாரிகளையும் விசாரிப்பதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் தயாராகி வருகின்றனர். லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் எடுத்துச் சென்ற பல பொருட்கள் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உட்பட பல விடயங்கள் குறித்து பொலிஸாரின் பதிவேட்டில் குறிப்பிடப்படுவது வழமை, அந்த பதிவேட்டின் பக்கங்களும் காணமற்போய…
-
- 0 replies
- 636 views
-
-
யாழ்.தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்! கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து வடக்கில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்களால், இன்று காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்த மாணவர்கள், வகுப்பினையும் பகிஷ்கரித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரம் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்தஆர்ப்பாட்டத்தின் போது, மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் பெரும் சரச்சையை ஏற்படுத்தியுள…
-
- 0 replies
- 413 views
-
-
இளவயதுத் திருமணமும் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய சவாலாக உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார். சிறுவர் உரிமைகள் தொடர்பான குறும்படங்களின் தொகுப்பு மற்றும் பாடல் வெளியீட்டு விழா, மட்டக்களப்பு செங்கலடி செல்லம் பிறீமியர் திரைப்பட மாளிகையில் சனிக்கிழமை (31) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு உரையாற்றிய அவர், 'ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தினாலும் ஏனைய சிறுவர் நலன்சார்ந்த அமைப்புகளினாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் சம்பந்தமாக மிக முக்கியமான பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன. இளவயதுத் திருமணம், பாடசாலையிலிருந்து இடைவிலகல் உட்பட தங்களது எதிர்கால …
-
- 0 replies
- 389 views
-
-
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் தான் முடிவு எடுக்கும்: அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் தான் முடிவு செய்ய வேண்டும் என சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சிறைச்சலையினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையினை நூற்றுக்கு இருபத்திஐந்து வீதமாக குறைக்க வேண்டும். நாட்டில் 18 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலானவர்கள் சிறைக்கைதிகளாக உள்ளனர். ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 500 ரூபாய் அரசாங்கம் செலவழிக்கின்றது. அதனால் அரசுக்கு பாரிய செலவு ஏற்படுகின்றது. கைதிகளில…
-
- 0 replies
- 1.1k views
-
-
65 ஆயிரம் வீட்டுத்திட்டம் அமுலாக்கப்பட்டால் வடக்கில் வீடில்லா பிரச்சினை தீரும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதன் படி, 65 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும் பட்சத்தில், வடமாகாணத்தில் வீடில்லா பிரச்சினை தீர்க்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் வீடுகள் இல்லை என்ற குற்றச்சாட்டை பலர் முன்வைக்கின்றனர். ஆனால் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் அளவுக்கு வடமாகாண சபையில் நிதி இல்லை. இந்நிலையில் அரசாங்கம் அறிவித்துள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் அமுலாக்கப்படுமாக இருந்தால், இந்த வீட்டுப் பிரச்சினைகள் தீரும் என்று அவர் தெரிவித்துள்ளார். http…
-
- 0 replies
- 366 views
-
-
புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி கொள்ள முடியாது – சரத் பொன்சேகா புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி கொள்ள முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து திருப்திகொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் பிரச்சார மேடைகளில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடக சுதந்திரம், ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சுமூகமான றவுகளை பேணுதல் போன்ற விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கைச் செலவு குறைப்பு தொடர்பி…
-
- 0 replies
- 365 views
-
-
சுரேஷுக்கு அழைப்பு விடுக்கவில்லை - TULF செயலாளர் வீ.ஆனந்தசங்கரி புதிதாக உருவாக்கப்படவுள்ள கூட்டணியில் இணையுமாறு சுரேஷ் பிரேமசந்திரனுக்கு தான் அழைப்பு விடுக்கவில்லை என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். புதிதாக உருவாக உள்ள கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி இணைந்து கொள்ளாது எனவும், அது தொடர்பில் தான் ஆனந்தசங்கரியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதாக வெளியான செய்தி பொய் எனவும் நேற்றைய தினம் யாழ் நீர்வேலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்து இருந்தார். அக் கருத்து தொடர்பில் ஆனந்த சங்கரியிடம் வினாவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்து இருந்தார். அது தொடர்…
-
- 0 replies
- 424 views
-
-
எதிர்க்கட்சித் தலைமையை எமக்கே வழங்க வேண்டும் : அடம்பிடிக்கிறது மகிந்த அணி எதிர்க்கட்சித் தலைமைப் பதவி தமக்கே வேண்டும் என மஹிந்த ஆதரவு அணி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடர்ந்தும் கோரிவரும் மஹிந்த ஆதரவு அணி, இந்த விடயத்தில் சபாநாயகர் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியது. பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு வலியுத்தினார். இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்றத்தில் நாம் 48 பேர் இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இணைந்து 22 பேர் தான் இரு…
-
- 4 replies
- 535 views
-
-
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. பட்டாசுகளை மிகவும் கவனமாக பாதுகாப்புடன் வெடிப்பது மிக அவசியம். பட்டாசுகள் வெடிக்கும் போது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்கள் இங்கே. கம்பி மத்தாப்புகளை பொருத்தும் போது, அருகில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள். எரிந்து முடிந்ததும் கம்பிகளை வாலியில் போட்டு விடுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு தீக்காயத்தை ஏற்படுத்தக் கூடும். அருகில் குழந்தைகள் இருந்தால், அதனை தொட்டு எடுக்க வாய்ப்பும் இருக்கிறது. வெடிக்காத பட்டாசுகளை தயவு செய்து கையில் எடுத்து பார்க்க வேண்டாம். தண்ணீர் ஊற்றி அணைத்து விடுங்கள். சங்கு சக்கரங்களை சிமெண்ட் தரையில் மட்டும் வைத்து பொருத்துங்கள் மண் தரையில் வேண்டாம். பட்டாசு திரிகளை தீக்குச்சி வைத்து கொளுத்த வேண…
-
- 0 replies
- 420 views
-
-
மகிந்த ஆட்சியில் இனஅழிப்பே நடந்தது! - வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஒப்புதல் [Saturday 2015-10-31 07:00] மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பௌத்த நாடு என்ற பெயரில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்களை இலக்குவைத்து திட்டமிட்ட இனஅழிப்பும், அடக்குமுறையும் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பௌத்த நாடு என்ற பெயரில் சிறுபான்மை இன மக்களான தமிழ், முஸ்லிம்களை இலக்குவைத்து திட்டமிட்ட இனஅழிப்பும், அடக்குமுறையும் இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு …
-
- 4 replies
- 342 views
-
-
சரணடையும் திட்டத்துக்கு புலிகளின் தலைமை சாதகமாக பதிலளிக்கவில்லை! - எரிக் சொல்ஹெய்ம் [Saturday 2015-10-31 07:00] போரின் கடைசிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். போரின் கடைசிக் கட்டத்தில் விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு, முன்வைக்கப்பட்ட திட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனும், புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் சாதகமாகப் பதிலளிக்கவில்லை என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெ…
-
- 2 replies
- 446 views
-
-
சுங்கத் திணைக்கள லஞ்ச மோசடியுடன் தொடர்புடைய 3 சந்தேக நபர்கள் கடல் வழியாக இந்தியாவிற்கு தப்பியோட்டம் சுங்கத் திணைக்களத்தில் இடம்பெற்ற லஞ்ச ஊழல் மோசடியுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், கடல் வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர்.இலங்கையின் மிகப் பெரிய லஞ்ச ஊழல் மோசடியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். சுமார் பன்னிரண்டரை கோடி ரூபா லஞ்சமாக பெற்றுக் கொண்ட போது இந்த அதிகாரிகளை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவினர் கையும் களவுமாக பிடித்திருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று பேர் கடல் வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளனர். எதிர்வரும் நாட்களில் இந்த நபர்கள் கைது செய்யப்படவிர…
-
- 0 replies
- 331 views
-
-
பருத்தித்துறை பொலிஸ் நிலைய கட்டடம் திறந்து வைப்பு காங்கேசன்துறை பொலிஸ் பிரிவின் பருத்தித்துறை பொலிஸ் நிலைய புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று காலை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனின் அழைப்பின் பேரில் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாறப்பனவினால் திறந்து வைக்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கான, புதிய கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றிருந்தது. அதன்படி அதன் நிர்மானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த திறப்பு விழாவின்போது அமைச்சர் திலக் மா…
-
- 0 replies
- 827 views
-
-
2017ல் அனைத்து அரச நிறுவனங்களிலும் இலவச wifi 2016ஆம் ஆண்டில் அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம், 2016ஆம் ஆண்டில் 3500 அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் இலவச wifi வலயங்களை ஸ்தாபிப்பதே தமது எதிர்பார்ப்பு என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகக் கட்டடங்களில் இந்த இலவச wifi வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப…
-
- 0 replies
- 451 views
-
-
ஜெனீவா தீர்மானத்தை ஹக்கீம் எதிர்த்தது முஸ்லீம்களின் காட்டிக் கொடுப்பாகவே தமிழர்கள் கருதுகின்றனர் தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை வெளிப்படையாகப் பேசுவதன் ஊடாகவே இரு சமூகத்துக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையை தடுக்காமைக்கு ஒவ்வொரு தமிழர்களும் பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், முஸ்லிம் தலைமைத்துவங்களின் செயற்பாடுகள் தமிழர்களிடையே சந்தேகத்தை உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார். 2012ஆம் ஆண்டு ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரசாரம் செய்தமை முஸ்லிம்களின் காட்டிக் கொடுப்பா…
-
- 0 replies
- 415 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நிவாட் கப்ரால் ஆகியோரின் உத்தரவுக்கு அமைவாக தமிழீழ விடுதலைப் புலிகளின் 40 தொன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டள்ளது. யப்பானிய நிறுவனமான ஜப்புட்டா ஹோல்டிங்ஸ் ஊடாக சுயிஸ் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திற்கே இந்த தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி 1 கிலோ தங்கம் 46 ஆயிரம் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் ஈடுபட்ட இடைத்தரகர்களுக்கு ஒரு கிலோ தங்கத்திற்கு 2000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் வினைதிறன் அற்ற வகையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. யப்பானிய நிறுவனத்திற்கு விற்பனை செய்யப…
-
- 2 replies
- 592 views
-
-
அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு முன்வைக்க முயற்சி! [Saturday 2015-10-31 07:00] விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மீது போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்க புலம்பெயர் இலங்கையர் அமைப்பு ஒன்று தீர்மானித்துள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை நீதிபதிகள் முன்பாக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் இலங்கையர் அமைப்பொன்றின் பிரதிநிதிகள் மேற்கொண்டிருப்பதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் மீது போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்க புலம்பெயர் இலங்கையர் அமை…
-
- 0 replies
- 450 views
-