Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 29 Nov, 2024 | 01:56 PM 'வெள்ளை வேன்' குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவரை விடுவிப்பதாக கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, வெள்ளை வேனில் ஆட்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் அன்றைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டார். அதனையடுத்து, ராஜித சேனாரத்ன மற்றும் இருவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கிலிருந்து தற்போது ராஜித சேனாரத்ன உட்பட மூவரும் கொழும்பு உயர் நீதிமன்றத்த…

  2. 29 Nov, 2024 | 04:41 PM முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளதாக மக்கள் இன்று (29) பீதியடைந்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் பாெருத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து இன்று மாலை ஒலி எழுந்துள்ளது. அந்த ஒலி சமிக்ஞையை கேட்ட கடற்கரையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுனாமி பேரலை ஏற்பட்டுள்ளதாக அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து, அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், வட்டுவாகல் கடற்படை தளத்தில் ஒத்திகை பயிற்சி செய்வதாகவும் அப்பயிற்சி வேளையிலேயே இந்த ஒலி எழுப்பப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுனாமி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பொதுமக்களுக்கு…

  3. 29 Nov, 2024 | 05:44 PM (நா.தனுஜா) வடக்கில் அநேக இடங்களில் வெள்ளநீர் வடிந்தோட இடமின்றித் தேங்கி நிற்பதால், அங்கு வாழும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உருவாகியிருப்பதாகவும், எனவே இதற்குத் தீர்வுகாண்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் கடந்த ஒருவாரகாலமாக நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையாலும், வெள்ளத்தினாலும் வட, கிழக்கு மாகாணங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வடக்கின் வெள்ளப்பேரிடர் பாதிப்பு மற்றும் ப…

  4. 29 Nov, 2024 | 05:38 PM வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செ.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன் ஆகியோருடன் முல்லைத்தீவு மாவட்டசெயலர், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை (29) முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தைப் பார்வையிட்டனர். அதேவளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, உரிய அமைச்சுக்களுடன் பேசி புதிய பாலத்தை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்திருந்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், …

  5. 29 NOV, 2024 | 05:46 PM இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆஜராகியுள்ளார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது அபிவிருத்தி லொத்தர் சபை ஏற்றுக்கொள்ளப்பட்ட விலைமனு கோரல் முறைக்கு மாறாக பல தனியார் நிறுவனங்களுக்கு லொத்தர் ஊக்குவிப்பு பணிகளை ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி அதன் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு தொடர்பில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்திருந்த அமைச்சர் விஜித ஹேரத்தை இன்றைய தினம் சாட்சியமளி…

  6. எஸ்.என்.எம்.சுஹைல் ஐரோப்­பி­யரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பின்னர் இலங்­கையில் இலங்கை அர­சியல் நிர்­வாக முறைமை அறி­மு­க­மா­னது. 1505 இல் போர்­க்­கீசர் இலங்­கையின் கரை­யோ­ரங்­களை கைப்­பற்­றினர், அவர்­க­ளி­ட­மி­ருந்து 1658 இல் ஒல்­லாந்தர் இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டனர். இவர்கள் இந்­நாட்டை ஆக்­கி­ர­மித்த போது நாட்டில் பல்­வேறு நிர்­வாக முறைமை இருந்­து­வந்­தது. குறிப்­பாக கண்டி இரா­ஜியம் வலு­வான அர­சாக இருந்­தது. எனினும் 1796 இலங்­கைக்கு படை­யெ­டுத்த பிரித்­தா­னியர் 1815 இல் முழு இலங்­கை­யையும் கைப்­பற்றி ஒரே நிர்­வா­கத்தின் கீழ் கொண்டு வந்­தனர். கால­னித்­து­வத்தின் வரு­கை­க்கு முன்­னரும் பின்பும் இலங்­கையின் ஆட்­சியில் முஸ்­லிம்கள் பங்­…

  7. மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்; மக்களுக்கு எச்சரிக்கை! வட தமிழீழம் :- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே குறித்த பாலம் உடைப்பெடுக்கும் அபாயம் உருவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிரதான பாதையாக ஏ- 9 வீதிக்கு செல்கின்ற பாதையிலே குறித்த பாலம் அமைந்துள்ளதால் போக்குவரத்து முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாலம் உடையக்கூடிய நிலைக்கு காரணமாக குறித்த இப்பாதை ஊடாக அதிக எடை க…

  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் 2024 மாவீரர்நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2024 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ மக்களின் இறைமையை மீட்டெடுத்து, தமிழீழ அரசமைக்கும் புரட்சிகர வரலாற்றுப்பயணத்திற்காக, விடுதலைக்கனவுடன் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரத் தெய்வங்களை வணங்கி, நினைவுகூர்ந்து, அவர்கள் கனவு நனவாக நாம் உறுதியுடன் போராடியே தீருவோமென உறுதிகொள்ளும் புரட்சிகரநாள். தமிழின விடுதலைக்காகத் தம்மை ஈந்து, எமது மண்ணில் விதையாகிப்போன மாவீரர்களின் ஈகத்தினை ஒவ்வொருவரது நெஞ்சத்திலும் நிறுத்தி, தமிழ்த்தேசியம் என்ற உயிர்மைக் கருத்த…

      • Like
      • Haha
    • 5 replies
    • 748 views
  9. வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட நேற்று யாழ்ப்பாணம் சென்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம், வடக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பில் நாம் சிந்தித்து வருகின்றோம். அது தொடர்பில் நாம் மதிப்பீடு செய்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை…

  10. “விளக்கேற்ற அழைத்த சிறிதரன் திருப்பி அனுப்பி விட்டார்” - மூன்று மாவீரர்களின் தாயார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், என்னை விளக்கேற்ற வருமாறு அழைத்துவிட்டு திருப்பி அனுப்பி விட்டார் என மூன்று மாவீரர்களின் தாயொருவர் கண்ணீருடன் கவலைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை 6.55 மணியளவில் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் , நீங்கள் மூன்று மாவீரர்களின் தாயா? என வினவினார் எனது மூன்று பிள்ளைகளின் விபரங்களை கேட்டு அறிந்து கொண்ட பின்னர், புதன்கிழமை (27) அன்று கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நீங்கள் பொதுச் சுடரேற்ற வேண்டும் வருகை தாருங்கள் என்றார். நானும் சம்மதம் தெரிவித்தேன் மாவீ…

  11. மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சி: சந்தேகநபர்களுக்கு பிணை மறுப்பு November 29, 2024 2008ஆம் ஆண்டு பொரலஸ்கமுவவில் அப்போதைய அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயற்சித்த இரண்டு விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சபுவித்த நேற்று (28) நிராகரித்துள்ளார். சந்தேக நபர்களான “கோஸ்தர்” அல்லது “மோரிஸ்” என அழைக்கப்படும் செல்வராசா கிருபாகரன் மற்றும் “தனுஷ்” என அழைக்கப்படும் தம்பையா பிரகாஷ் ஆகியோர் சுமார் 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சட்ட பிரதிநிதிகளான சுரங்க பண்டார மற்றும் அசித்த விபுலநாயக்க ஆகியோர் பிணை கோரியிருந்தனர். எனினும், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில்…

  12. 29 NOV, 2024 | 11:43 AM சீனாவின் ஆராய்ச்சி கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்னைய அரசாங்கம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டன என தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் வலுவான உறவுகள் காணப்பட்ட போதிலும், முன்னைய அரசாங்கம் அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்தமை ஏமாற்றமளிக்கின்ற விடயம் என குறிப்பிட்டுள்ளார். சீன கப்பல்களை மாலைதீவு வரவேற்றது, ஆனால் இலங்கை அதனை நிராகரித்ததும் நாங்கள் ஆச்சரியமடைந்தோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/199979

  13. வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம்! November 29, 2024 07:06 am வடக்கு- கிழக்கில் பணியாற்றிய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வைத்தியர் ஆர்.முரளிஸ்வரன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வைத்தியர் ஜி.சுகுணன் மட்டக்களப்பு கல்முனை வடக்கு வைத்தியசாலையின் பணிப்பாளராகவும், வைத்தியர் டி.வினோதன் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், வைத்தியர் கே.ஜி.சீ.வை.எஸ்.வீ.வீரக்கோன் ஊவா மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும், திருமதி பி.எஸ்.என்.விமலரட்ண கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் தி…

  14. 29 NOV, 2024 | 10:38 AM இலங்கை வெளிசக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது சுயாதீன வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவர் குய் ஜென்ஹாங் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக இலங்கையின் பொருளாதார நிலைமையை சில தரப்பினர் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்த முயலும்போது இலங்கை சுயாதீன வெளிவிவகார கொள்கையை பின்பற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் சிலருடனான கருத்துபகிர்வின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வெளிநாடுகளின் உலக நாடுகளின் உதவி அவசியம் என சில உலக நாடுகள் இலங்கைக்கு தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ள…

  15. சீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சி பகுதியில் அதிக பாதிப்புக்கு உள்ளான புனிதநகர்ப் பகுதிக்குப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டு கள நிலவரம் தொடர்பில் ஆராய்ந்தார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த கற்கோவளம் மெதடிஷ்த மிஷன் அ.த.க.பாடசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொண்டா வெள்ள நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதன் போது இப்பகுதியில் ஏற்பட்ட இடர்பாடு தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குத் தான் கொண்டு செல்வதாகப் பொதுமக்களிடம் அவர் உறுதியளித்துள்ளார். https://thinakkural.lk/article/3128…

  16. அமைச்சுகளுக்கு சொந்தமான 254 அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்! தற்போது அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த கார்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த சொகுசு கார்களை பராமரிக்க அரசு பாரிய செலவை சுமக்க வேண்டியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்களே பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவதையும் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. அத்துடன்…

  17. 29 NOV, 2024 | 11:06 AM இலங்கை - இந்திய கடற்படைகளின் கூட்டு நடவடிக்கையால் இலங்கைக் கொடியுடன் காணப்பட்ட 2 மீன்பிடிப் படகுகளும் அவற்றிலிருந்து 500 கிலோ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கொடியுடன் காணப்பட்ட படகுகளில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையானது இந்திய கடற்படைக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்திய கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இந்திய கடற்படையினரின் வான்வழி கண்காணிப்பு நடவடிக்கையின் அடிப்படையிலேயே இரண்டு படகுகளும் அடையாளம் காணப்பட்டன. மேலும், கைப்பற்ற இரண்டு படகுகள் மற்றும் போதைப்பொருளோடு கைதான சந்தேக நபர்கள் மேலதிக …

  18. Less than a minute wp-content/uploads/2024/11/img_6488-1-780x976.jpg.webp முஸ்லிம்கள் ஒஸாமா பின்லாடனை நினைவுகூர்ந்தால் தலை மிஞ்சாது ! ஆனால் இங்கே பிரபாகரனின் புகைப்படத்தையும் கொடியையும் வைத்து நினைவுகூர்கின்றனர் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர் “ சிவாஜிலிங்கம் உங்களுக்கு ஒரு போதும் இந்த நாட்டை பிடிக்கவும் முடியாது பிடிக்கவும் விடமாட்டோம்” என கூறினார். https://madawalaenews.com/9360.html

  19. 28 NOV, 2024 | 04:29 PM வடிகாலமைப்பு சீரின்மையாலேயே அதிகளவான இடங்களில் வெள்ள நீர் தேங்கிய, பாரிய அளவில் வெள்ள அனர்த்தம் ஏற்படக் காரணமாக அமைந்ததாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தொடர்ந்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், உரிய திணைக்களங்கள் வடிகாலமைப்பு விடயத்தில் அதிக கவனத்துடன் செயற்படவேண்டும். வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்குதல், நிவாரணங்கள் வழங்குதலுடன், தறப்பாள் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது தெரிவித்திருந்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்க…

  20. 28 NOV, 2024 | 06:24 PM இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள ஒன்பது தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர். அதன்படி புர்கினா பாசோ (Burkina Faso), பொஸ்னியா மற்றும் எர்செகோவினா (Bosnia and Herzegovina) , அசர்பைஜான் குடியரசு (The Republic of Azerbaijan), ஜோர்ஜியா (Georgia), பெலரூஸ் குடியரசு (The Republic of Belarus), ஆர்மேனியா குடியரசு (The Republic of Armenia), ஸ்பானிய குடியரசு (The Kingdom of Spain), கொங்கோ குடியரசு (The Republic of Congo), மற்றும் கினியா குடியரசு (The Republic of Guinea) ஆகியவற்றின் புதிய தூதுவர்களும் கென்யாவின் புதி…

  21. யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட மலேசிய செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் தனது 86 ஆம் வயதில் காலமானார். மலேசியாவின் செல்வந்தர்கள் தரவரிசையில் ஆனந்த கிருஷ்ணன் மூன்றாம் நிலையை வகிப்பதாக போர்பஸ் சஞ்சிகை அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. மலேசிய தேசத்தை கட்டி எழுப்புவதற்கும் கூட்டாண்மையை நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் ஆனந்த கிருஷ்ணனின் பங்களிப்பு அளப்பரியது என பாராட்டப்பட்டுள்ளது. ஆனந்த கிருஷ்ணன் மலேசியா பொருளாதார நெருக்கடி நிலைகளை எதிர்நோக்கிய காலத்தில் கிருஷ்ணன் பொருளாதாரத்திற்கு வழங்கிய பங்களிப்பு முக்கியமானது என கூறப்பட்டுள்ளது. தொலைதொடர்பு, ஊடகம், சக்தி வளம் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கிருஷ்ணன் தடம் பதித்து வெற்றியீட்டி…

  22. 28 NOV, 2024 | 08:07 PM (நா.தனுஜா) இரக்கமற்ற வகையில் பயங்கரவாதத்தைக் கட்டமைத்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையோ அல்லது அதன் தலைவரையோ போற்றுவது நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு ஏதுவான வழிமுறையாக அமையாது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இனவாதத்தைப் பரப்புவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தெற்கின் கடும்போக்கு சக்திகளுக்கு அந்த வாய்ப்பை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார். மாவீரர் தினத்தை முன்னிட்டு புதன்கிழமை (27) கடும் மழைக்கு மத்தியிலும் வட, கிழக்கு மக்கள் மாவீரர் துயிலும் இல்லங்களுக்குச்சென்று பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். …

  23. யாழில் பேரிடர் பணியில் கடற்றொழில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் களத்தில்! Published By: DIGITAL DESK 7 28 NOV, 2024 | 05:31 PM தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கள் முகாம்களில் தஙகவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இ…

      • Like
      • Haha
    • 7 replies
    • 549 views
  24. 28 NOV, 2024 | 02:00 PM இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா (Ajay Banga) ஆகியோருக்கு இடையில் நேற்று புதன்கிழமை (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இணையத் தொடர்பாடல் முறையூடாக இடம்பெற்றது. இதன்போது, புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி சவால்களை வெற்றி கொள்ள இலங்கைக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்புக்கள் குறித்து அஜே பங்கா (Ajay Banga) கருத்து தெரிவித்ததோடு, சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் புதிய வேலைத்திட்டங்களை செயற்படுத்த நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்ப…

  25. வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர் நிலைமை தொடர்பில் ஆராயும், இணையவழி கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்ற போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இடர் பாதிப்புக்கள் தொடர்பில் அந்தந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் மேலதிக மாவட்டச் செயலர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவது தொடர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.