Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய மீனவர்கள், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் முறைப்பாடு செய்ய ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்து மீறி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு கடுமையான அபராதம் விதிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்பட்டால் சர்வதேச நீதிமன்றம் அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பில் முறைப்பாடு செய்து வழக்குத் தொடரப்படும் என தேசிய மீனவர் பேரவையின் தலைவர் எம்.இளங்கோ தெரிவித்துள்ளார். தமது அமைப்பும் ஏனைய மீனவர் அமைப்புக்களும் கூட்டாக இணைந்து இந்த விடயம் குறித்து மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தேச சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கையிடம் ராஜதந்திர …

  2. தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் எதிர்ப்புத் தெரி­விக்கும் இன­வா­தி­களின் கருத்­து­க்க­ளுக்கும், அமைச்­ச­ர­வையின் குழப்­பங்­க­ளுக்கும் நாம் பொறுப்­பல்ல. எதிர்­வரும் 7ஆம் திக­திக்குள் தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தாக ஜனா­தி­ப­தியும் அர­சாங்­கமும் எமக்குக் கொடுத்த வாக்­கு­று­தி­களை உட­ன­டி­யாக நிறை­வேற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. எமக்கும் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கும் கொடுத்த வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் மீறினால் எமது அடுத்­த­கட்ட நட­வ­டிக்கைள் தொடரும் எனவும் கூட்டமைப்பு குறிப்­பிட்­டது. தடுப்புக் காவலில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் அர­சாங்­கத்­துக்குள் திடீர் குழப்­பங்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் இந்த…

  3. தமிழினத்தை விற்று விலைபோனவர்களை என்றோ ஒரு நாள் தமிழ் மக்கள் இனங்காண்பர் என்ற நம்பிக்கையைத் தவிர தமிழ்ப் பற்றாளர்களிடம் இப்போதைக்கு எந்த ஆறுதலும் கிடையாது. எனினும் தமிழ் மக்கள் எந்தளவு தூரம் தங்களின் அரசியல் தலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றனர் என்றால் எதுவும் இல்லை என்று அடித்துக் கூறலாம். மாறாக, எங்கள் அரசியல் தலைமைகளின் போக்குபற்றி மக்களுக்குத் தெளிவு படுத்த புத்திஜீவிகள் எவரும் முன்வரவில்லை. யாழ்ப்பாணத்தில் பேராசிரியர் ஒருவரை தேசியப் பட்டியலில் முதன்மை வேட்பாளராக நியமித்து அவ ருக்கு எம்.பி பதவி வழங்குமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 150 விரிவுரையா ளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கையயாப்பமிட்டு கூட்டமைப்பின் தலைமையிடம் மனுக்கொடுத்தமை அனைவரும் அற…

  4. இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 34 பேர், இன்று செவ்வாய்க்கிழமை (27) கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணக் கடற்பரப்பில் வைத்து செவ்வாய்க்கிழமை (27) அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு அண்மிய கடற்பரப்பில் 2 விசைப்படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்களும், பருத்தித்துறைக்கு அண்மிய கடற்பரப்பில் 2 விசைப்படகுகளில் மீன்பியில் ஈடுபட்ட 10 மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் நாகை மற்றும் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அந்தந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்பட…

  5. எல்லை தாண்டினால் ரூ.15கோடி அபராதம் :இலங்கையின் அறிவிப்பு இந்தியாவை சீண்டும் செயல் 27-Oct-2015 09:22 am இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்து ரூ.15 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது. இதற்காக இலங்கை மீன்பிடி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த முடிவு அதன் ஆணவப் போக்கையே காட்டுவதாக பா.ம.க நிறுவுனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது, கொடூரமாக தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. …

  6. தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் - சுமந்திரன் 26 அக்டோபர் 2015 தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படாவிட்டால் போராட்டமொன்றை நடாத்த நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளுடன் இணைந்து தாமும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்த அரசியல் கைதிகளையும் இந்த அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென …

  7. நழுவினார் பான்கீ - மூன் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று நினைக்கிறீர்களா என்று இந்திய ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நழுவியுள்ளார். இந்தியாவின் ”ரைம்ஸ் ஒவ் இந்தியா” ஆங்கில ஊடகத்தின் செய்தியாளர் கார்த்திகேயன் ஹேமலதாவுக்கு, ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். இந்தச் செவ்வியின்போது, “இலங்கை தொடர்பாக ஐ.நா பொதுச் சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் அமைதியின்மை நிலவியபோது, தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று நினைக்கிறீர்களா?” என்று, ஐ.நா பொதுச் செயலரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ஜனாதிபதிர் மைத்திரிப…

  8. தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் பணிப்பு! இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் பி.பி.ஸி. தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் தொடங்கும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் மனோ கணேசன் கூறினார். பிரமதருடனான இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களான சுவாமிநாதன், திலக் மாரப்பன ஆகியோரும் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் அலுவலக உயரதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கான…

  9. அலரி மாளிகையில் நிலக்கீழ் மாளிகையோ பதுங்கு குழியோ கிடையாது – சாகல ரட்நாயக்க: 27 அக்டோபர் 2015 அலரி மாளிகையில் நிலக் கீழ் மாளிகையோ அல்லது பதுங்கு குழியோ கிடையாது என தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் பதுங்கு குழி காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.எனினும், இந்த அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என அமைச்சர் சாகல தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதியின் இந்தக் கருத்தில் உண்மையில்லை எனவும் இவ்வாறான எந்தவொரு பதுங்கு குழியும் அமைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க குமாரதுங்க இவ்வாறு ஏதேனும் மாளிகை ஒன்றை…

  10. அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு! [Tuesday 2015-10-27 07:00] சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அடுத்த மாத முதல் வார முடிவுக்குள் எடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அடுத்த மாத முதல் வார முடிவுக்குள் எடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் …

  11. உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவல் அடிகளாரை இலங்கை வருமாறு அரசாங்கம் அழைப்பு! [Tuesday 2015-10-27 07:00] உலகத் தமிழர் பேரலவயின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அடிகளாரை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் அவசர அழைப்பு விடுத்துள்ளனர். இவர்களது அழைப்பு தொடர்பாக, இடதுசாரி தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவல் மின்னஞ்சல் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார். உலகத் தமிழர் பேரலவயின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அடிகளாரை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் அவசர அழைப்பு விடுத்துள்ளனர். இவர்களது அழைப்பு தொடர்பாக, இடதுசாரி தலை…

  12. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகி ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2015/10/26/த-வி-கூ-வில்-இணையவுள்ள-கருணா-அம்மான்

  13. தமிழ் மக்களின் அவமானம் ”கருணா” 2004 ஆம் ஆண்டு தமிழினத்தின் போராட்ட வரலாற்றில் மிகப்பெரிய துரோகம் நிகழப்பெற்ற ஆண்டாகும். அந்தத் துரோகமானது சிங்கள தேசத்துக்குப் பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு சூத்திரதாரியென இன்றைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவைத் தமிழர் தரப்பு எண்ணியிருந்தது. விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத்தின் கட்டளைத் தளபதி என அழைக்கப்பட்ட மட்டக்களப்பு கிரானைச் சேர்ந்த கருணாஅம்மான் என அழைக்கப்பட்டு வரும் விநாயகமூர்த்தி முரளிதரனின் துரோகச் செயல்களும் அவர் மேற்கொண்டிருந்த படுகொலைகளும் உலகத் தமிழர்களால் மறக்க முடியாததும் மன்னிக்க முடியாததும் ஆகும். மட்டக்களப்பு மாவட்ட மக்களால் ஒதுக்கப்பட்டவரான முரளிதரன் பத்தாண்டு காலத்தில் அவரது அரசியல் செயற்பாடுகளை தம…

  14. இலங்கை மாணவர்களுக்கு MBA கற்கைநெறியை வழங்கும் DeVry பல்கலைக்கழகம் Submitted by Priyatharshan புத்தாக்கம்,சமத்துவம் மற்றும் சமகால கற்கை நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ள ஒரு புதியதலைமுறை சார்ந்த கல்விநிறுவனமான Asian International Academy, இலங்கையில் MBA கல்வித் தகைமையைவழங்கும் முகமாக DeVry பல்கலைக்கழகத்தின் Keller முகாமைத்துவ பட்டப்படிப்பு கல்லூரியுடன் உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. DeVry பல்கலைக்கழகமான DeVry Education Group Inc: (NYSE:DV) நிறுவனத்தின் அங்கமாகும். இது தொடர்பான அங்குரார்ப்பண வைபவம் DeVry பல்கலைக்கழகம், மாணவர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கலாக கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. இ…

  15.  'எங்களுடன் சேர்ந்ததாக கருணா கூறுகிறார் சேர்ந்து விட்டதாக நாம் கூறவில்லை' ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து, தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கூறியிருக்கின்றாரேயொழிய, சேர்ந்து விட்டதாகவோ சேர்ந்து செயல்படுகின்றோம் என்றோ கூறவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஊடகங்களுக்கு இன்று (26) அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தாவது. அவர் தன்னுடைய விருப்பத்தை மாத்திரம்தான் தெரிவித்துள்ளார். அவர் எங்கள் மீது வைத்திருக்கின்ற மதிப்பும், நம்பிக்கை…

    • 4 replies
    • 639 views
  16. யாழ். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய 5 புதிய செயற்திட்டங்கள் யாழ். குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 483.06 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 புதிய செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டங்கள் அனைத்தும் 2015 ஆம் ஆண்டுமுதல் 2016 ஆம் ஆண்டுக்கு இடையில், நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச்செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருபாலை நீர் வழங்கலை செயற்படுத்த 64.51 மில்லியன் ரூபாவும், பருத்தித்துறை நீர்வழங்கல் திட்டத்திலிருந்து இன்பசிட்டி, சக்கோட்டை, ஆகிய பகுதிகளுக்கு நீர்வழங்க 33.17 மில்லியன் ரூபாவும் பொக்கணையிலிருந்து சுன்னாகம், நிலாவரை பகுதிக்கு நீர் வழங்க 35 மில்லியன் ரூபாவும், வல்வெட்டித்துறை நீர் வழங்கல் திட…

  17. வித்தியா படுகொலை: முதலாம் சந்தேக நபருக்கு சிறைத் தண்டனை வித்தியா வழக்கின் முதலாம் சந்தேக நபரான பூபாலசிங்கம் தவக்குமாரின் பழைய வழக்கு ஒன்றும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு புங்குடுதீவில் உள்ள வீடு ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் களவாடப்பட்டிருந்தமை தொடர்பிலேயே குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த களவு தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டதன் பிரகாரம் குற்றவாளியான தவக்குமார் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் தவக்குமார் குற்றவாளியாக இனங்காணப்பட்டதை அடுத்து அவருக்கு 1500 ரூபா தண்டப்பணம் வித்திக்கப்பட்டதுடன், செலுத்தத் தவறின் ஒரு மாத சிறைத்தண்டனையும், மேலும் இரண்டு வெவ்வேறான குற்…

  18. வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9பேரையும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். ஊர்காவற்துறை நீதிமன்றில் மேற்படி வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டார். இன்றைய தினம் சந்தேக நபர்களில் ஒருவர், இந்த வழக்கை துரிதப்படுத்துமாறும்,வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் தன்னுடைய குடும்பத்தின் மரியாதை இழக்கப்பட்டிருப்பதாக மன்றில் தெரிவித்தார். இதற்கு பதிலளித்…

  19. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஈழத்தமிழர்களை கைவிட்டுள்ளதாக இந்தியாவின் முன்னாள் மத்திய இடை அமைச்சரும் காங்கிரஸ் உறுப்பினருமான வீ.நாராயணசாமி தெரிவித்தார். ஈழத்திழர்கள் விடயத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். http://www.tamilmirror.lk/157427/ம-ட-ஈழத-தம-ழர-கள-க-வ-ட-ட-வ-ட-ட-ர-#sthash.yZngyvOo.dpuf

    • 5 replies
    • 651 views
  20. வெளிநாட்டில் வதியும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்கும் சாத்தியத்தை ஆராய்வதற்கு ஒரு தெரிவுக்குழுவை நியமிக்கக் கோரும் ஒரு நகர்த்தல் பத்திரத்தை அரசாங்க மற்றும் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கெண்ட ஓர் அணி, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்வதுடன், அதன் பெருமையைப் பறைசாற்றும் வெளிநாட்டில் வதிவோருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதென 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள இந்த நகர்த்தல் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சுனில் ஹந்துன்நெத்தி, நிஹால் கலபதி, அநுர குமார திஸாநாயக்க, அஜித் பி பெரேரா, எரான் விக்கிரமரட்ன, எட்வாட் குணசேகர, திலிப் வேதஆராச்சி, அஜித் மன்னபெரும, காஞ்சனா விஜேசேகர, டி.வி.சானக்க, முஜிபுர் ரஹ்மான், டாக்ட…

    • 3 replies
    • 671 views
  21. இன்று நல்லாட்சி இடம்பெறுவதாக கூறப்படும்போது இந்து ஆலயங்களுக்கும் கடவுளுக்கும் காவலாளிகள் தேவையாகவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் கடந்த வெள்ளிக்கிழமை உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்மேலும் கூறுகையில், குருக்கள்மடம் விஷ்னு ஆலயத்திலும் வாகனேரி இத்தியடி விநாயகர் ஆலயத்திலும் உள்ள விக்கிரகங்கள் திட்டமிட்டு சில விசமிகளால் சேதப்படுத்தப்பட்ட செயலானது ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதை புண்படுத்தும் செயலாகும். ஏற்கனவே மஹிந்ந அரசின் காலத்தில் குருக்கள்மடம் முருகன், ஆலயம் மாங்காடு…

  22. இலங்கையின் கடற்பரப்புக்குள் ஊடுருவும் இந்திய மீன்பிடிப் படகுகளுக்கு 15 கோடி ரூபா வரையிலான கடுமையான அபராதத்துடன் கூடிய தண்டனையை அமுல்படுத்தும் திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படவிருப்பதாக மீன்பிடித் துறை பணிப்பாளர் நாயகம் எம்.சி.எல்.பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார். மீன்பிடித் துறை சட்டமூலத்தில் இந்த உத்தேச திருத்தங்கள் விரைவில் அமுல்படுத்தப்படவிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் பெர்னாண்டோ, தற்போது நடைமுறையிலுள்ள ஊடுருவலுக்கு எதிரான சட்டங்கள் போதியளவுக்கு வலுவானவை அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார். கடந்த வாரம் உள்ளூர் மீனவர்கள் மீது கடுமையான அபராதங்களை அமுல்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. மற்றொரு நாட்டின் தேசிய சட்டப் பரிமாணங்களை மீறுவோர் மற்ற…

  23. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஓர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒன்றுகூடல் இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ஜெனீவா தீர்மானம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ ஆக்கிரமிப்பின் கீழுள்ள காணிகளை விடுவித்தல், மீள்குடியேற்றம், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் உட்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட அரசியல் அமைப்பு வடிவத்தை எடுப்பதற்கு இடையூறாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது. இது தொடர்பாக ஆக்கபூர்வமான முடிவொன்றை எடுப்பதையிட்டு கலந்துரையாடுவதெனவும், தமிழரசுக் கட்சியிடம் கூட்டமைப்பின் ஏனைய அங்…

  24. யாழில் மோட்டார் கைக்குண்டு மீட்பு யாழ். கச்சேரி வீதியில் உள்ள வீட்டு வளவில் குறித்த குண்டு இருப்பதாகவே வீட்டு உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். குறித்த வீட்டு உரிமையாளர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீட்டு வளவினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது, மோட்டார் குண்டு இருப்பதனை அவதானித்து உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த மோட்டார் கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://onlineuthayan.com/news/1860

  25. யோசித குறித்த விசாரணை அறிக்கையை மூடி மறைக்கிறது பாதுகாப்பு அமைச்சு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, கடற்படை அதிகாரி லெப். யோசிதராஜபக்ச, தொடர்பான விசாரணை அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு மூடிமறைப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. கடற்படையில் இருந்தபோது, லெப்.யோசித ராஜபக்ச, கடற்படையின் விதிமுறைகளை மீறியதாக குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது பாதுகாப்பு அதிகாரியாக யோசித ராஜபக்ச பணியாற்றியிருந்தார். இதுதொடர் பாக கடற்படையின், ரியர் அட்மிரல் வெட்டவா தலைமையிலான குழு விசாரணைகளை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை பாதுகாப்பு அமைச்சிடம் கையளித்திருந்தது. எனினும், இந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.