Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விசாரணைகளை எதிர்நோக்கத் தயார் – கருணா தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை எதிர்நோக்கத் தயார் என முன்னாள் பிரதி அமைச்சர் கருணர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில் கருணாவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.சிறுவர்களை படையில் இணைத்துக் கொள்ளல் உள்ளிட்ட பல பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் கருணாவிற்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த உடன் தாம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து நாடு திரும்பியதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி…

    • 1 reply
    • 468 views
  2. உண்மைகளைக் கண்டறிவது நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் : டேவிட் கமரூன் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையினை சர்வதேச தலைவர்கள் வரவேற்றுள்ள நிலையில், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் அதனை வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் அமெரிக்க பிரேரணைக் குறித்த வரவேற்பினை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், நீதியான விசாரணைகளை நடத்தி போரில் இடம்பெற்ற சம்பவங்கள் என்ன என்பது குறித்த உண்மைகளை அறிந்து கொள்வது, நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இவ்வாறான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இல…

    • 2 replies
    • 478 views
  3. ரவிராஜ் கொலை: மேலும் ஒரு சந்தேகநபர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு கொழும்பு நாரஹன்பிட்டியில்இடம்பெற்ற இந்தக் கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில்கொலையாளிகளை சம்பவ இடத்துக்கு வாகனத்தில் அழைத்து சென்ற ஒருவரையே தற்போது கைது செய்துள்ளனர் எனப் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே செனவி என்ற கடற்படை சிப்பாயும், மனம்பேரி என்ற பொலிஸ் உத்தியோகத்தரும் ரவிராஜ் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை ரவிராஜின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிள்ளையா…

  4. எம்.வீ.சன்சீ கப்பலின் மூலம் கனடாவுக்கு அகதிகளாக சென்ற இரண்டு பேர் யுத்தக் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனடிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 2010ம் ஆண்டு சுமார் 500 இலங்கை அகதிகள் வரையில் குறித்த கப்பலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு கனடாவைச் சென்றடைந்தனர்.இவ்வாறு பயணித்த குறித்த கப்பலில் உள்ள அகதிகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையில், கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 11 பேர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டும் இருந்தனர். இவ்வாறான ஒரு நிலையில், தற்போது இரண்டு பேர் யுத்தக்குற்றங்களுடன் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது என்ற கனடா நாட்டின் குடிவரவு சப…

    • 2 replies
    • 738 views
  5. பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை மீது தனிக்கவனம் வேண்டும் இலங்கையின் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் தனியான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மனி்த உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ளகூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளன. ஜெனிவாவில் கடந்த மூன்று வாரங்களாக நடந்து வந்த ஐ.நா. மனிதகள் உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடர் நேற்று வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தொடரின் ஒட்டுமொத்த செயற்பாடுகள் குறித்து, 10 மனி்த உரிமை அமைப்புகள் அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த, பிலிப் டாம் வெளியிட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையில், "இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரங்களிலும்,உறுதியான முடிவுகளைத் தருவதற்கு, விடாமுயற்சியுடன்தீ…

  6. ஐ.நா தீர்மானம் குறித்து எந்தவித குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை :எதிர்க்கட்சித் தலைவர் ஐ.நா தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் அது தொடர்பில் 'எந்தவிதமான குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது, சர்வதேச பங்களிப்புடனான விசாரணையையும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையும்வலியுறுத்தியிருப்பதனால் தமிழ் மக்கள் தமது இலக்கை அடைவதற்கு ஒரு வழி பிறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஐ.நா தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருப்பதனால் ஒரு குழப்பமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றத…

  7. புலி படம் இலங்கை யாழ்ப்பாணத்திலும் வெளியாகியுள்ளது. கட் அவுட், பேனர், தோரணம், பட்டாசு என்று தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் குறைவைக்கவில்லை யாழ்ப்பாண தமிழர்கள். புலி வெளியான திரையரங்குகளில் வைக்கப்பட்ட கட் அவுட்களுக்கு பாலாபிஷேகமும் பீர் அபிஷேகமும் நடந்தது. தமிழகத்தைப் போல், டாஸ்மாக்கையும் தெருவுக்குத் தெரு திறந்தால் யாழ்ப்பாண தமிழர்கள் இனப்படுகொலையை மறந்து இன்னும் குஷியாக இருப்பார்கள். தமிழன் என்றெnரு இனமுண்டு, தனியே அதற்கொரு குணமுண்டு. சாக்கடையில் குளித்தாலும் போகாத குணம் அது. . http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-fans-celebrate-puli-in-srilanka-115100200047_1.html

    • 10 replies
    • 1.4k views
  8. மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறவுள்ளதாகவும், கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் முறைக்கேடுகள் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தவுள்ளதாகவும் நிதி மோசடி விசாரணை பிரிவு தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாக செயற்பட்ட சஜின் வாஸ் குணவர்தன மற்றும் துறைமுக அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பிரியத் விக்ரம ஆகியோர் அரசாங்க சாட்சியாளர்களாக மாறியுள்ளனர். ராஜபக்ஷ குடும்பத்திற்கு சொந்தமான CSN தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பில் இதுவரையில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிற்கு அமைய, அந்த தொலைக்காட்சி நிறுவனம் ராஜபக்ஷ அறக்கட…

  9. சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கும் மில்லியன் கணக்கிலான கறுப்புப் பணத்தை வர்த்தகங்களுக்கு பயன்படுத்தி நிதி சந்தையில் இணைத்து கொள்ளும் கடத்தல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஈடுபடுவதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது. அவரின் உரிமைத்துவத்தின் கீழ் செயற்படுகின்ற 6 நிறுவனங்கள் இக் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணை பிரிவு வெளிப்படுத்தியுள்ளது. “கவர்ஸ் கோப்பரேட் சர்விஸ்”, “கவர்ஸ் சொலுஷன்”, கவஸ் செகடேரியட்” “என்.ஆர்.கன்ஸல்டன்”, “ஹெலோகோப்” மற்றும் சிலோன் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்களே இவ்வாறான கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற …

  10. தொண்டமனாறு செல்வச்சந்நிதி, கீரிமலை சிவன்கோவில்களை தரிசித்தார் சம்பந்தன் தொண்டமனாறு செல்வச்சந்நிதி, கீரிமலை சிவன்கோவில்களுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அங்கு பூஜை வழிபாடுகளை மேற்கொண்டார். செல்வச்சந்நிதி கோவிலில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை வடமாகாண சபை உறுப்பினர் சிவயோகன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவருடன் யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் கலந்து கொண்டிருந்தார். தொண்டமனாறு செல்வச்சந்நிதி கீரிமலை சிவன்கோவில் http…

    • 3 replies
    • 1.9k views
  11. அமெரிக்காவின் கிறீன் கார்ட் லொத்தர் விசாவுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. மேலும் இச்சீட்டிழுப்பில் விண்ணப்பிப்பதற்கு எவ்வித கட்டணங்களும் அறிவிடப்படமாட்டாது. என்றும் விண்ணப்பிப்பது தொடர்பில் இடம் மோசடிகள் குறித்தும் அவதானமாக செயற்படுமாறும் தூதரத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விண்ணப்பங்களை www.dvlottery.state.gov என்ற இணையத்தள முகவரியில் சமர்ப்பிக்க முடியும். எதிர்வரும் 2016 மே மாதத்துக்கு முன்னதாக வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதோடு அவர்களை சட்ட ரீதியான முறையில் ஐக்கிய அமெரிக்காவில் குடியமர்த்த…

  12. யாழில் புலிக்கு படையெடுப்பு இன்றைய தினம் நடிகர் விஜயின் புலி திரைப்படம் உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் குறித்த திரைப்படம் ராஜா, மெஜெஸ்டிக் கொம்பிளக்ஸ் தியேட்டர்களில் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிகாலை முதலே அதிகளவான ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுத்தனர். ஆனாலும் குறித்த நேரத்துக்கு திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.பின்னர் புலித்திரைப்படம் திரையிடப்பட்டதால் ரசிகர்களின் கொந்தளிப்பு குதூகலிப்பாக மாறியது. http://on…

    • 17 replies
    • 1.6k views
  13. மின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை ஜனாதிபதி யுத்த வெற்றி நாயகர்களை மின்சாரக் கதிரையில் உட்கார வைக்கப்போவதாகக் கூறினார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. அதேபோல் ஹைபிரிட் நீதிமன்ற முறைமையும் இருக்காது. எமது சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அனைத்து விசாரணைகளும் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஜெனீவாவுக்கான விஜயத்தினை முடித்துக்கொண்டு நாடுதிரும்பி ஜனாதிபதி, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் முகமாக ஜனாதிபதி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை - ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே மேற்படி கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில், “எம்மீது சர்வதேசம் கொண்டிருந்த கொடுங்கோபத்தினை எமது இராஜதந்திர நகர்வுகளினூடாக தணியவைத்திருக்கிறோம். இது…

  14. சாவுத் தண்டனைதான் தீர்வாக முடியுமா? பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், வன் புணர்வுப் படுகொலைகள் என்பன இப்போதெல்லாம் அதிகரித்த வண்ணமாகவே உள்ளன. கம்பகா கொட்டதெனியவைச் சேர்ந்த சிறுமி சேயா மற்றும் ஜெருசா, புங்குடுதீவு மாணவி வித்தியா ஆகியோர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து பரவலான கண்டனப் போராட் டங்களும் நீதி வேண்டிய கோரிக்கைகளும் இனவேறுபாடுகளின்றி அனைத்து மக்களாலும் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் கூட பெண்கள், சிறுமிகள் மீதான இது போன்ற கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருப்பது, பொதுமக்கள் அரசின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கின்றது. தூக்கத்தில் இருந்த சிறுமியைத் தூக்கமுயற்சி, பொலநறுவை மன்னம்பிட்டிப் பகுதியில் ஒன்பது வயதுச் சிறுமி …

  15. திருடனின் தயாரிடம் சாத்திரம் கேட்கும் குழு!: யாழ்ப்பாணத் தம்பி நேற்று கொழும்பிலை பெரிய கொண்டாட்டம் தெரியுமே? ஏகாதிபத்தியத்தை வென்ற தலைவரே வருக, மகிந்தவால் வெல்ல முடியாதததால் வென்று வருபவரே வருக எண்டு சனங்கள் கத்துகள். போஸ்டர்கள் ஒட்டுகினம். இஞ்ச எங்கடை சனம் ஏக்கத்திலை இருக்குது. நீதி கிடைக்குமோ எண்டுற அச்சத்திலை இருக்குதுகள். என்ன நடக்கப்போகுதோ எண்டுற குழப்பத்திலை இருக்குதுகள். ஆர நம்பிறது எண்டு விளங்காமல் விழி பிதுங்க பார்க்குதுகள். ஆக.. அங்காலை கொண்டாட்டம். இஞ்சாலை திண்டாட்டம். அடப்பாவியளே இஞ்சையும் ஒரு சனத்தை மகிழ்ச்சிப்படுதிறியள். மற்ற சனத்தை துன்பப்படுத்திறியள். பிறகு நல்லிணக்கம் செய்யிறியள் எண்டுறியள். மகிந்தவை இதிலையும் பின்பற்றுறியளோ? மகிந்தவை தூக்குக் க…

  16. ஐ.நா அமர்வு பாதிக்க கூடாது என்பதற்காகவே மௌனம் காத்தேன் : வெகுவிரைவில் சி.வியிடம் விளக்கம் கோருவேன் தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிப்படுத்திய கருத்துக்கள் மற்றும் அவரின் செயற்பாடுகள் குறித்து விரைவில் அவரைச் சந்தித்து விளக்கம் கோரவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். இன்று வலிகாமம் கிழக்குப் பகுதியில் உள்ள வளலாய் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்த மக்களைச் சந்தித்து உரையாடிய எதிர்க்கட்சித் தலைவர், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், தேர்தல் காலத்திலும், அதனைத் தொடர்ந்து ஐ.நா மனித உரிமை பேரவையின் அமர்வு இடம்…

    • 3 replies
    • 773 views
  17. சிறப்பு அனுமதியுடன் மதுரை மல்லிச் செடிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மதுரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லைகைப் பூச்செடிகள் வவுனியாவிலுள்ள பண்ணை ஒன்றில் வர்த்தக ரீதியில் நடப்பட்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரக அலுவலகத்தின் முயற்சியில், உள்ளூர் வர்த்தகர் ஒருவர் இதில் இறங்கியுள்ளார். இலங்கையில் மலர்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், அதற்கான உறுபத்தி வர்த்தக ரீதியில் இல்லாத குறை உணரப்பட்டதாலேயே இந்த புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மல்லிகை சாகுபடி வாழ்வாதாரமாக அமையும் என நம்பிக்கை மதுரையில் மல்லிகை சாகுபடியில் நல்ல அனுபவம் கொண்டவர்க…

  18. சுதுமலைப் பகுதியில் இளைஞர்கள் அடாவடி; வீதியால் செல்வோரிடம் பணம் அபகரிக்கும் தந்திரம் மானிப்பாய், சுதுமலைப் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வீதி வலம் வரும் சில இளைஞர்கள் பொலிஸாருக்குப் பணம் கட்டவேண்டும் எனக் கூறி வீதியால் செல்லும் அப்பாவி மக்களை ஏமாற்றிப் பணத்தை அபகரித்துச் செல்வதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மோசடி குறித்து அச்சம் கொண்டுள்ள மக்கள், இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரைக் கோரியுள்ளனர். இணுவிலைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவர் ஒருவரிடமும், வீதியால் மோட்டார் சைக்கிளை உருட்டிச் சென்ற முதியவர் ஒருவரிடமும் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் பணத்தைக் கேட்டுப் பெற்றுள்ளனர். பொலிஸாரின் பெயரைச் சொல்லி அப்பாவி மக்களிடமிருந்து பணத்தை அபகரித்துச் செல்பவர்கள் மீது ந…

  19. சேயா கொலையைக் கண்டித்து யாழில் கண்டன ஆர்ப்பாட்டம் கொட்டதெனியாவ பிரதேசத்தில் 5 வயது சிறுமி சேயா பாலியல் வண்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று யாழ். மத்திய பேரூந்து நிலைய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு மற்றும் பெண் விடுதலை சிந்தனை அமைப்பு இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தது. இன்று எமது நாட்டில் ஏற்பட்டு வரும் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் மாற்றங்கள் இது போன்ற குற்றச் செயல்களுக்கும், வன்முறைகளுக்கும் பெருகி வரக் காரணமாக உள்ளன என்று கோசமிட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று நாட்டில் பல பாகங்களில் இப்படியான சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளே இடம்பெறுகின்றன. “இ…

  20. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது ஆச்சரியமாகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அடிப்படைவாதிகள் சிலர் எதிர்ப்பது புதுமையல்ல எனினும் ஜீ.எல். பீரிஸ் இதனை எதிர்ப்பது ஆச்சரியமளிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இது குறித்து தெரிவித்த பிரதமர் அதிர்ச்சியான விடயம் என்னவெனில் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ஜீ.எல். பீரிஸ் இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதே. அவர் எதனை ஏன் எதிர்க்கிறார் என்று புரியவில்லை. நாம் ஜனநாயகத்தை நிலை நாட்டியுள்ளதை எதிர்க்கிறாரா? இறையாண்மையைப் பலப்படுத்தியுள்ளதை எதிர்க்கின்றாரா? ஊடக சுதந…

  21. நாம் எந்த சந்தர்ப்பத்திலும் இராணுவத்தினருக்கு துரோகம் இழைக்கமாட்டோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தூக்கு கயிறிலிருந்து நாமே காப்பாற்றினோம்என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சமாதானத்திற்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், மனித உரிமை மீறல் விவகாரத்திலிருந்து இலங்கையை பாதுகாக்கும் வகையிலான அமெரிக்காவின் பிரேரணையை இனவாதிகள் எதிர்க்கின்றனர். சர்வதேச குற்றச்சாட்டுகளிலிருந்து நாட்டை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது நானோ, அமைச்சரவையோ எடுக்கவில்லை. ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்க…

  22. இலங்கையில் நடைபெறவிருக்கும் விசாரணைக்கு இலங்கை முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் பிரேரணை குறித்து அவர் மேலும் கூறுகையில்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்காவின் பிரேரணை எமது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அமெரிக்கா முன்வைத்த இந்த பிரேரணையை ஐக்கிய நாடுகள் சபையின் 47 நாடுகளும் ஏகமனதாக ஆதரித்துள்ளன. அதேபோல் எமது அரசாங்கமும் இந்த பிரேரணையை ஏற்றுக் கொண்டுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதரவு தெரிவித்துள்ளது. ஆகவே இவ்வாறு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ஒரு தீர்மானம் வெளிவந்…

  23. இராணுவ நிர்வாகம் முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர். இலங்கையில் இராணுவ நிர்வாகம் முற்றாக நீக்கப்பட்டு முழுமையான சிவில் நிர்வாகம் ஏற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார். இன்றைய தினம் வலி.வடக்கு ஒட்டகப்புலம் பகுதிக்குச் சென்ற வேளை மக்கள் அவரை வரவேற்று கௌரவித்தனர்.அதன் பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், வலி.வடக்கில் உள்ள காணிகளை (ஒட்டகப்புலம); முழுமையாக சுவீகரிக்கும் நோக்கிலே கடந்த கால ஆட்சியாளர்கள் முயன்றார்கள்.மீளக் காணிகளை மக்களிடம் ஒப்படைக்கும் எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை. அதுமட்டுமல்ல கடந்த கால ஆட்சியாளர்கள் காணிகளை மக்களிட…

  24. இறையாண்மையை பாதிக்காது தீர்மானம் இலங்கை தொடர்பான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டமையினால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்புக்கள் இல்லை என்று இலங்கையிலிருக்கும் பிரிட்டன் தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானம் மூலம் இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் சுயாதீனத் தன்மை மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான பிரிட்டன் தூதுவரின் கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வொன் றின்போது அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியன் மூலம் செழிப்பான நாட்டை உருவாக்க வேண்டிய தேவை உள்ளதை இலங்கை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அதேபோல தமிழ்த் தேசியக் கூட்…

  25. பட்டப்பகலில் திருட்டு பட்டப்பகலில் வீட்டில் எவரும் இல்லாத சமயம் பார்த்து குளியலறை வழியாக வீட்டுக்குள் புகுந்த திருடன், அங்கு அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் ரூபா பணம் உட்பட 10 பவுண் தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளான். இந்தத் துணிகரமான திருட்டு சுதுமலை வடக்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த வாரம் இடம் பெற்றுள்ளது. உறவினர் வீட்டில் இடம்பெற்ற திருமண வைபவத்துக்குச் செல்வதற்காக, பாதுகாப்புக் கருதி வங்கியிலுள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் ஒரு பகுதியை எடுத்து வந்த குடும்பஸ்தர் திருமணம் முடிந்ததையடுத்து மீண்டும் வங்கியின் பெட்டகத்தில் சேர்ப்பதற்காக அவற்றை அலுமாரியில் வைத்துப் பாதுகாப்பாகப் பூட்டி வைத்திருந்தார். சம்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.