ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
10 Oct, 2024 | 07:07 PM எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை பெறும் என கூட்டணியின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான வேட்புமனுவை இன்று (10) தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வன்னியில் எமது அணி சார்பில் போட்டியிடும் அத்தனை பேரும் விடுதலைக்காக போராடியவர்கள். அந்த விடுதலையை அகிம்சை வழியில் பெறுவதற்காக நாங்கள் இன்று தேர்தலில் போட்டியிடுகிறோம். அற்ப சலுகைகளைகளுக்காக நாங்கள் துணை போகமாட்ட…
-
- 0 replies
- 242 views
-
-
10 Oct, 2024 | 08:25 PM வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய தலைமன்னார் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் வியாழக்கிழமை (10) தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். குறித்த யுவதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதி ,மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான சகல விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில் குறித்த யுவதி தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும்,கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் தலைவரின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் தயாரிக்க…
-
- 1 reply
- 113 views
-
-
கலைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேடம் Vhg அக்டோபர் 10, 2024 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேடம் கலைந்து விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (09-10-2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இவ்வளவு காலமும் போலி வேடங்களை போட்டு தேசியம் தேசியம் என பேசி மறுபக்கம் அரசாங்கங்களிடம் இலஞ்சங்களை வாங்கி கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளனர். காத்திரமான தலைமைத்துவம் எனவே, மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை வழங்க வேண்ட…
-
- 4 replies
- 825 views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம் October 9, 2024 அம்பாறை மாவட்டத்தை ‘வே….வெத்திலை பெட்டியாக’ பாவிக்கும் கலாசாரம் இந்த தேர்தலோடு மாற்றமடைய வேண்டும் அல்லது மாறவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார். அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று தனது முகப்புத்தகம் வாயிலாக இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது அம்பாறை மாவட்டம் முழுதும் கடந்த சில தினங்களாக சில பயணங்களையும் பல நண்பர்களையும் பயணங்கள் வழியே சந்திக்க நேர்ந்தது. அதுனூடாக பெற்ற செய்திகளின் அடிப்படையில் சில தகவல்களை உ…
-
- 0 replies
- 333 views
-
-
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மீது குற்றப்பத்திரிகை-மேல் நீதிமன்றில் உத்தரவு! மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு, கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது, இலங்கை அரசுக்கு சொந்தமான பணத்தை கிரீஸ் பத்திரங்களில் முதலீடு செய்து இலங்கை அரசுக்கு 1.8 பில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது இதேவேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், பிரதிவாதிகளில் ஒருவரை தலா 10 மில்லியன் ரூபா பிணையில…
-
- 0 replies
- 271 views
-
-
யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழரசின் வேட்பாளர்கள் adminOctober 10, 2024 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் , யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிட தமிழரசு கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் கையெழுத்திட்டனர். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி . சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன் , கேசவன் சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ , ச. சுரேக்கா , சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர…
-
-
- 3 replies
- 363 views
- 2 followers
-
-
தமிழரசு கட்சியினா் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி adminOctober 10, 2024 இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை கையளித்துள்ளனர். வேட்புமனுவை கையளிப்பதற்கு முன்பதாக யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், தந்தை செல்வாக்கு அஞ்சலி செலுத்தினார்கள். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி . சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன் , கேசவன் சயந்தன் , இமானுவேல் ஆர்னோல்ட் , மற்றும் தி.பிரகாஷ் , ச. இளங்கோ , ச. சுரேக்கா , சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ் . த…
-
-
- 8 replies
- 465 views
-
-
விமலின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை adminOctober 10, 2024 முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில், ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின், எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக நிற்பதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என வீரவன்ச விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரக…
-
-
- 35 replies
- 2.3k views
-
-
10 OCT, 2024 | 11:17 AM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தமைக்காக சில பொலிஸ் அதிகாரிகள் தன்னை கைதுசெய்ய முயல்கின்றனர் என ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார் பதில் பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அந்த கடிதத்தில் தன்னை கைதுசெய்வதற்கு பொலிஸ் அதிகாரிகள் சிலர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக தான் தொடர்ச்சியாக வெளியிடும் செய்திகளுடன் தொடர்புபட்டதே இந்த விடயம் என அவர் தெரிவித்துள்ளார். நான் செய்திகளை வெளியிடுவது விசாரணைகளிற…
-
- 0 replies
- 72 views
- 1 follower
-
-
பிறப்பு முதல் இறப்பு வரை நல்ல மன ஆரோக்கியத்தை பேணுவது முக்கியம் என மனநல தினச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமர சூரிய தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2024 உலக மனநல தினம், பணியிடத்தின் பௌதீக சூழல் நிலைமை, மன அழுத்த மேலாண்மை செய்தல் முதல் செயல்படுத்தல் மற்றும் சமூகதிற்கு இயைவாக்குதல் வரையான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. பணியிடத்தில் மனநலத்திற்கு முதலிடம் கொடுப்போம் என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருள். மன ஆரோக்கியத்திற்கும் பணியிடத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவைப் புரிந்துகொள்வதும் முக்கியம். ஆரோக்கியமான பணியாளர்கள் கூட மோசமான பணிச்சூழலில் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். …
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான வரைவு தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான A/HRC/57/L.1 தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57வது கூட்டத்தொடரில் குறித்த தீர்மான வரைவு நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195895
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் Vhg அக்டோபர் 09, 2024 புலிகளை ஒதுக்கிய நரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவர் என முன்னாள் போராளி கந்தசாமி இன்பராஜா தெரிவித்துள்ளார். வவுனியா வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை கந்தசாமி இன்பராஜா தலைமையிலான சுயேட்சைக்குழு இன்றையதினம் (09-10-2024) தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக புணர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சை குழுவில் போட்டியிடுகின்றது. நாடாளுமன்ற தேர்தல் இதனையடுத்து, வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று (09-10-2024) …
-
- 0 replies
- 349 views
-
-
(எம்.நியூட்டன்) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குரிய வேட்புமனுக்களை இன்று புதன்கிழமை (09) தாக்கல் செய்தது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் களமிறங்குகிறது. வேட்பாளர் பட்டியலின்படி, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆறுமுகம் கந்தையா பிரேமச்சந்திரன், குருசுவாமி சுரேந்திரன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், பாலச்சந்திரன் கஜதீபன், சிங்கபாகு சிவகுமார், சசிகலா ரவிராஜ், சிவநாதன் ரவீந்திரா, ஜெயரத்தினம் ஜெனார்த்தனன் ஆகியோர் களமிறங்குகின்றனர். …
-
-
- 6 replies
- 690 views
- 1 follower
-
-
75 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியத்தை கட்டி காப்பாற்றுவதற்காக பாடுபட்ட தமிழரசுக் கட்சி தற்போது தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமாக மாறியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசிறின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) ஆகியோராலேயே வடக்கு மற்றும் கிழக்கு கட்சிகள் தற்போது துன்பகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தனிநபரின் அடாவடித்தனம் தலைமைத்துவத்தை மதிக்காமல் தாங்களே கட்சிகளை கையிலெடுத்து செயற்படும் ஒரு எதேட்சையா…
-
-
- 30 replies
- 1.9k views
- 1 follower
-
-
இலங்கையில் தொழுநோயை கட்டுப்படுத்த ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறு திருமுருகன் தெரிவித்ததுடன் யாழில்(jaffna) சங்கானையில் அதிகளவான நோயாளர்கள் இருப்பது கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டார். இலங்கையில்(sri lanka) தொழுநோயாளர்களின் நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டிற்காக உழைத்து வரும் மாற்று மக்கள் சபை அங்கத்தவர்களை சந்திக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள தொழு நோயாளர்களை மலர்ச்சி காண வைப்பதற்காக உருவாக்கப்பட்ட நோயாளர்களுக்கான மாற்றத்திற்கான மக்கள் அமைப்பு மற்றும் (மாற்றும் மக்கள் சபை) காவேரி கலா மன்றத்தின் கூட்டு முயற்சிகளை பாராட்டுகிறேன். இலங்கையில் தொழுநோய் இலங்கையில் தொழுநோய் என…
-
- 0 replies
- 446 views
- 1 follower
-
-
தமிழ் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் கூட தங்களின் சுய இலாபத்திற்காக ஒற்றுமையாக செயல்பட்டு பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் தாங்கள் சுயநலத்திற்காக தங்களது கட்சி பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் நடந்து கொண்டுள்ளார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை (09) அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் தமது பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை இன்று தாக்கல் செய்தன. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் …
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
எஸ்.ஆர்.லெம்பேட் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் மாத்திரமே உறுதி செய்யப் பட்டுள்ளார். மேலும் இரு வேட்பாளர்கள் தெரிவில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன், தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்குவதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். எனினும், ஆதரவாளர்களின் வற்புறுத்தல்களால் பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார். எனினும், அதிலிருந்து வெளியேறுவதாக, செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளார். இந்த நிலையில் மன்னாரில் …
-
-
- 4 replies
- 433 views
-
-
கிளிநொச்சியில் இருந்து சட்டவிரோதமாக யாழ்பாணத்திற்கு லொறி வாகனத்தில் கடத்தப்பட்ட 20 மாடுகளை கடந்த திங்கட்கிழமை மீசாலைப் பகுதியில் வைத்து சாவகச்சேரிப் பொலிஸார் மீட்டுள்ளனர். இதன்போது 19மாடுகள் உயிருடனும் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டதுடன், வாகனச் சாரதி மற்றும் உதவியாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக யாழ்பாணத்திற்கு கடத்தப்பட்ட 20 மாடுகள் (newuthayan.com)
-
- 0 replies
- 654 views
-
-
தன்னாட்சி - தற்சார்பு - தன்னிறைவு ஆகிய மூன்று அடிப்படை விடயங்களை முன் வைத்தே தேர்தலில் போட்டியிடவுள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் இல்லத்தில் இன்று புதன்கிழமை (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய கூட்டணி இளைஞர்களையும், அனுபவமுள்ளவர்களையும் வேட்பாளராக நியமித்துள்ளோம். நான் முன்பே கூறியது போன்று தேர்தல் அரசியலிலிருந்து விலகியுள்ளேன். எமது வேட்பாளர்களின் சராசரி வயது 42 ஆகும். இளம் வேட்பாளர்கள் என இவர்களைச் சொல்லலாமா என சிலர் கேட்டார்கள். எங்களுடைய அரச அலுவலர்கள் 60 வயது வரை வேலை செய்கின்றனர். எனவே 60 வயதுக்கு உட்பட்டவர…
-
- 0 replies
- 292 views
-
-
09 Oct, 2024 | 05:33 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக பா.அரியநேத்திரன் சங்கு சின்னத்தில் தமிழ் மக்களின் ஒற்றுமை கருதி போட்டியிட்டிருந்தார். ஆனால் தற்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமாக சங்கு சின்னம் அமைந்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். களுவாஞ்சிகுடியில் புதன்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் தற்போது தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் பொதுமக்கள் சபையானது ஜனாதிபதி தேர்தலின் போது சுயேச்சை சின்னமாகதான் சங்கு சின்னம் அமைந்துள்ளது. இப்போது அந்த சங்கு சின்…
-
- 0 replies
- 94 views
-
-
09 Oct, 2024 | 05:20 PM கல்முனை பிரதேச செயலகத்தை உட்பட்ட பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சவப் பெட்டியைத் தூக்கி இன்று புதன்கிழமை (09) ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறா இருப்பதாகவும் போராட்டதாரர்கள் தெரிவித்ததுடன், பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோரை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை முன்வைத்தனர். ஏற்கனவே ஒரு மதுபானசாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில் புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல்லை எனவும், சிறிய கிராமமான…
-
- 0 replies
- 99 views
-
-
இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை விஸ்தரிக்கவேண்டும் என என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது உலக தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணையர் இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் (Situation of Human Rights in Sri Lanka) மற்றும் ஜெனிவா மனித உரிமைகள் சபையின் 57 ஆவது அமர்வில் நடைபெற்ற உரையாடல் ஆகியன அடங்கிய அறிக்கையொன்றை சமீபத்தில் வெளியிட்டமையை உலகத் தமிழர் பேரவை (GTF) வரவேற்கிறது. தொடரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி இலங்கையில் பொறுப்புக்கூறலும் நல்லிணக்கமும் முன்னெடுக்கப்படுவதற்கு தேசிய, சர்வதேச செயற்பாடுகள் அவசியம் என்பதை இவ்வறிக்கை முன்வைக்கிறது. சிவில்…
-
- 0 replies
- 197 views
-
-
09 Oct, 2024 | 06:21 PM தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் ராஜினாமா கடிதங்கள் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் புதன்கிழமை (09) தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் விடயங்களை கையாள்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் புதன்கிழமை (09) கூடியது. இதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…. வன்னியின் மூன்றுமாவட்டத்தினதும் வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளை காலை இறுதி விபரம் அறிவிக்கப்படும். தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் ராஜினாமா கடிதம் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை…
-
-
- 3 replies
- 308 views
-
-
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கோட்டை நீதவான் திருமதி தனுஜா லக்மாலி இன்று உத்தரவிட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள நிப்போன் ஹோட்டலில் தேசிய பலசேனா அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குர்ஆனை அவமதித்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, அவர் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த முறைப்பாட்டிற்காக கொம்பனி வீதி பொலிஸார் நீதிமன்றில் முன்னிலையாகினர். விசாரணை மார்ச் 5, 2025க்கு ஒத்திவைக்கப்பட்டது. https://thinakkural.lk/article/310484
-
- 3 replies
- 326 views
- 1 follower
-
-
09 OCT, 2024 | 03:29 PM 4 நட்சத்திர அமெரிக்க கடற்படை அட்மிரலும் அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியுமான அட்மிரல் ஸ்டீவ் கேலர், நாளை வியாழக்கிழமை (10) இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதை அறிவிப்பதில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மகிழ்ச்சியடைகிறது. 2021 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த அதியுயர் அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பம் இதுவாகும். தனது விஜயத்தின் போது, நீடித்த, மீண்டெழும் தன்மையுடைய, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தினைப் பேணிப்பாதுகாப்பதற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் வலுவான பங்காண்மையினை அட்மிரல் கேலர் மீள வலியுறுத்துவார். இந்து…
-
- 3 replies
- 300 views
- 1 follower
-