Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச விசாரணை கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம்! [Thursday 2015-09-03 19:00] வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை கோரும் வகையில் யாழ்.நகரில் நாளை கவனயீர்ப்பு கையெழுத்து போராட்டத்தை நடத்தவுள்ளதாக சர்வதேச பொறுப்புகூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. இன்று யாழ்.நகரில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் மேற்படி அமைப்பினால் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின் போதே மேற்படி அமைப்பின் தலைவர் பேராசிரியர் வி.பி.சிவநாதன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஊடகச் சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களுக்…

  2. கொழும்பு கண்காட்சியில் பிரபாகரனின் கைரேகைப் பதிவு! [Thursday 2015-09-03 18:00] விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கைவிரல் அடையாளம் கொழும்பில் நடக்கும் கண்காட்சியொன்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு லயனல் வென்ட் அரங்கில் நடைபெற்று வரும் பொலிஸ் புகைப்படக் கண்காட்சியில், பிரபாகரனின் கைவிரல் அடையாளம் கொண்ட புகைப்படமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1912ம் ஆண்டு முதல் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஆறு லட்சம் நபர்களின் கைவிரல் அடையாளங்களை குற்ற விசாரணைப் பிரிவினர் திரட்டி தொகுத்துள்ளனர். குற்றச் செயல்களுடன் தொடர்படைய 60000 பேரின் புகைப்படங்களும் திரட்டப்பட்டுள்ளன. பொலிஸ் திணைக்களத்தினால் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில், பிரபாகரனின் கைவிரல் அடையாளமு…

  3. வந்தாறுமூலையில் கி.மு 2ஆம் நூற்றாண்டில் நாகர்கள் உருவாக்கிய கிணறு, நாகர்கல் கண்டுபிடிப்பு! [Thursday 2015-09-03 19:00] மட்டக்களப்பு, வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு 2ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாக அரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு மற்றும் நாகக்கல் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் வரலாற்றுத்துறை பேராசிரியருமான சி.பத்மநாதன், மற்றும் தொல்லியல் ஆய்வுக்குழுவினரால், வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய காணியில் மேற்கொள்ளப்பட்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் நிர்மாணிக்கப்பட்ட கிணறு, கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகக் கல் என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி பேராசிரியர் சி.பத்மநாதன் குறிப்பிடுகையில், இலங்கையின் பூர்வீக குடிய…

  4. இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் சந்திரிகா! [Thursday 2015-09-03 19:00] முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். புதுடெல்லியில் நடைபெறும் அனைத்துலக இந்து - பௌத்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள சந்திரிக்கா மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்த மாநாடு, இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=139759&category=TamilNews&language=tamil

  5. சர்வதேச விசாரணைப் பொறிமுறை வேண்டும் : வடக்கு முதல்வரால் பிரேரணை முன்மொழிவு இலங்கை இறுதி யுத்தத்தின் போது சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.என வடக்கு முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனால் பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டது. வடமாகாண சபையின் 34 ஆவது அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது. அந்த அமர்விலையே முதலமைச்சர் குறித்த பிரேரணையை முன் மொழிந்தார். அதனை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வழிமொழிந்தார். குறித்த பிரேரணையை தெளிவாக வாசித்து விளங்கி கொள்ள தனக்கு ஒரு சில மணித்தியால கால அவகாசம் வேண்டும். அதன் பின்னர் பிரேரணை தொடர்பில் விவாதத்தை மேற்கொள்ளலாம் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா அவைத்தலைவரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்போது கால அவகாசம் வழங்கப…

    • 15 replies
    • 1.7k views
  6. புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்தார் சந்திரிகாSEP 03, 2015by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் இன்று சந்தித்தார். புதுடெல்லியில் இன்று ஆரம்பமான அனைத்துலக இந்து- பௌத்த மாநாட்டின் போதே, இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. பாஜக ஆதரவு விவேகானந்தா அனைத்துலக நிறுவகம், ரோக்கியோ பவுண்டேசன், அனைத்துலக பௌத்த சம்மேளனம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்த மாநாட்டை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்தார். சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும் இதில் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் சிறிலங்கா, தாய்லாந்து, மொங்கோலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள…

  7. சிறிலங்கா கடற்படையுடன் அவுஸ்ரேலிய போர்க்கப்பல் கூட்டுப் பயிற்சிSEP 03, 2015 | 12:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா கடற்படையின் போர்க்கப்பல்களுடன் இணைந்து அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று, கொழும்பில் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. ஐந்து நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த அவுஸ்ரேலியக் கடற்படையின், மெல்பேர்ன் என்ற போர்க்கப்பலே, கொழும்புத் துறைமுகத்துக்கு அப்பால் நேற்று இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றது. சிறிலங்கா கடற்படையின் சார்பில், சமுத்ர, சாகர ஆகிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்றிருந்தன. இருநாடுகளின் கடற்படைகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும், சட்டவிரோத நடவடிக்க…

  8. கோத்தா, துமிந்த மற்றும் இரு முன்னாள் இராணுவ அதிகாரிகளிடம் 3 மணிநேரம் விசாரணை SEP 03, 2015 | 11:17by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவினால், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று 3 மணிநேரம் விசாரிக்கப்பட்டார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு, இன்று கோத்தாபய ராஜபக்சவுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகளான மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல, மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டோ ஆகியோரையும் விசாரணைக்கு அழைத்திருந்தது. இந்த நால்வரிடமும்…

  9. எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த ஒரே நாடு சிறிலங்கா – மேஜர் ஜெனரல் உதய பெரேராSEP 03, 2015 | 2:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் எல்லா வகையான தீவிரவாதங்களையும் முறியடித்த அனுபவத்தைக் கொண்ட ஒரே நாடாக சிறிலங்கா விளங்குவதாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்கா இராணுவம் நடத்திய இரண்டு நாள் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று, உரையாற்றிய மேஜர் ஜெனரல் உதய பெரேரா, “கடந்த நூற்றாண்டில் தீவிரவாதம் தனது பழைய முகங்களை மாற்றியுள்ளது. தீவிரவாதத்தின் ஐந்தாவது அலையைத் தடுத்து நிறுத்த, அனைத்துலக சமூகம் ஒன்றுபட வேண்டும். தீவிரவாதம் அடு…

    • 3 replies
    • 727 views
  10. சர்வதேசத்தின் நன்மைகளுக்காக எமது மக்களின் நலன்களை விட்டுக்கொடுக்க முடியாது! - விக்னேஸ்வரன் உறுதி!! சர்வதேசத்தின் நன்மைகளுக்காக எமது மக்களின் நலன்களை நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 34வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறை ஊடாகவே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணை தீரமானமாக நிறைவேற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணையை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனே முன்மொழிந்த போது, 'இந்தப் பிரேரணை எதற்காக?, சர்வதேச ஒழு…

  11. இலங்கையின் 08ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்று காலை நியமிக்கப்பட்டார். சுமார் 30 ஆண்டுகளின் பின்னர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்தச் சந்தர்ப்பத்தை வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் தருணமாக கருதப்பட்டாலும் இரா.சம்பந்தன் தென் இலங்கை அரசியலில் சிக்கிவிட்டாரா என்ற கேள்வியும் எழுகிறது. தமிழர்களுக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்தே தேர்தல் காலத்திலும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குகளைச் சேகரித்து வந்தது. தேர்தலில் மூன்றாம் சக்தியாக நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் …

  12. வடக்கில் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் நியமனங்கள் ரத்து! [Wednesday 2015-09-02 06:00] வட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் வெற்றிடத்திற்கு சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் மீளப் பெறப்பட்டுள்ளதாக வட மாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மாகாண சபையின் 34வது அமர்வு நேற்று இடம்பெற்ற போதே இது தொடர்பாக அவர் அறிவித்தார். கடந்த மாதம் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்குமான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனத்திற்கு சிங்கள உத்தியோகத்தர்களே அதிகளவில் நியமிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக 361 நியமனத்தில் 332 நியமனங்கள் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பாக நாம் தேர்தல் ஆணையாளரு…

  13. கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி- ஆதரவாகவும் எதிராகவும் வாதப்பிரதிவாதங்கள்SEP 03, 2015 | 1:57by கி.தவசீலன்in செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், வழங்கப்படக் கூடாது என்றும் பரவலான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படக் கூடாது என்றும் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் மட்டும் வலியுறுத்தி வருகின்றனர். பொது பலசேனா, தேசப்பற்று தேசிய இயக்கம் போன்ற சிங்கள இனவாத அமைப்புகள் இதற்கு ஆதரவளித்து வருகின்றன. இந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பி…

  14. எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு? – இன்று முடிவு அறிவிப்புSEP 03, 2015 | 1:43by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடவுள்ள நிலையில், புதிய எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் கரு ஜெயசூரிய வெளியிடவுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள ஒரு பிரிவினர் குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைசவராக நியமிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 16 ஆசனங்களைக் கொண்ட கூட்டமைப்புக்கு எதி…

  15. ஐ.நாவுடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டும்! - கனடா வலியுறுத்தல்[Wednesday 2015-09-02 19:00] ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டுமென கனடா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை உன்னிப்பாக ஆராயப் போவதாக கனேடிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் வரையில் கனடாவின் தீர்மானம் பற்றி அறிவிக்கப்படாது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களில் இலங்கை கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்ட…

  16. காலம் கடத்தவே உள்ளக விசாரணை : ரஜீஹரின் தந்தை மனோகரன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசையும் உள்ளடக்கியதொரு பொறிமுறை காலம் கடத்தும் வேலையே தவிர நீதி வழங்குவதற்கானதல்ல என்கிறார் இலங்கை திருகோணமலை கடற்கரையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தை மருத்துவர் மனோகரன். http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150902_drmanogaran

  17. இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார். Image copyrightAlan KeenanImage captionஇலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு உள்ளிட்ட தீர்வுகளை தற்போது நிறைவேற்ற முடியுமென ஆலன் கீனன் கூறினார்.பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கையுடன் இணைந்து தீர்மானத்தைக் கொண்டுவரப்போவதாக அமெரிக்கா கூறியிருப்பது குறித்துப் பேசிய ஆலன், போர்க்குற்றம் குறித்த எந்த ஒரு முயற்…

  18. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மைத்திரி கொடுத்த விருந்துSEP 02, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபருக்கும், புதிதாகத் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா அதிபர் நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார். சிறிலங்கா இராணுவம் நடத்திய பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் மற்றும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்றிரவு அதிபர் மாளிகையில் இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது. இதன்போது, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. இந்த இராப்போசன விருந்தில், மை…

  19. மத்தல விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்த எதிர்ப்பு- பாரஊர்திகளை மறித்து போராட்டம்SEP 02, 2015by கி.தவசீலன்in செய்திகள் மத்தல மகிந்த ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தின் களஞ்சியசாலையை நெல்லைக் களஞ்சியப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, மத்தல விமான நிலைய களஞ்சியத்தில் சேமிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மத்தல விமான நிலையத்தின் களஞ்சியசாலைகள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், அவற்றை நெல்லைச் சேமித்து வைக்கப் பயன்படுத்த, விமான சேவைகள் நிறுவனத்தினால் நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் தொகுதி நெல்லை ஏற்றிய பாரஊர்திகள் மத்தல விமான நிலையத்துக்குச…

  20. எதிர்க்கட்சித் தலைவராக நாளை நியமிக்கப்படுகிறார் சம்பந்தன்? – தட்டிப்பறிக்க முனையும் வாசுSEP 02, 2015 | 0:52by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்காவின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று இடம்பெற்ற போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் அறிவிக்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள – தேசிய அரசாங்கத்துடன் இணையாள கட்சிகளின் உறுப்பினர்கள், தமக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வ…

    • 21 replies
    • 1.1k views
  21. ஒற்றையாட்சியில் அதிகாரப் பகிர்வு இல்லை சமஸ்டியே இறுதி தீர்வு : சுமந்திரன் எம்.பி ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் இதற்கு மேலும் அதிகாரங்களைப் பகிர முடியாததன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி முறையிலான தீர்வினை வழியுறுத்துவதாகவும், இதுவே தமது உறுதியான நிலைப்பாடு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவந்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். எட்டாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, அதில் பங்கேற…

  22. "மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச தலையீடு தேவை""மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச தலையீடு தேவை" இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார்.இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார். பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை …

  23. போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த தொழில்நுட்ப உபாயங்களை கையாள்கிறார் ஜனாதிபதி நாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் கடைபிடிக்கப்படும் தொழில்நுட்ப உபாயங்களை பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சுக்கள் மற்றும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டையும், இளம் சந்ததியினரையும் போதை பொருள் பாதிப்பில் இருந்து மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை தாம் பொறுப்புடன் முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சுக்களும், நிறுவனங்களும் உதவ வேண்ட…

  24. உள்ளக விசாரணைக்கு கூட்டமைப்பு துணை போகக்கூடாது! - சுரேஷ் பிரேமச்சந்திரன்[Wednesday 2015-09-02 19:00] உள்ளக விசாரணை காலத்தை இழுத்தடிப்பு செய்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இருக்கும், எனவே அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போகக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.நீர்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்திற்கு அமைய விசாரணைகள் நடாத்தப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வெளி வந்த பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் …

  25. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு 3 கட்சிகள் கடிதம்! [Wednesday 2015-09-02 19:00] வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பிற்கும், போர்க்குற்றங்களுக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியன ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- ஸ்ரீலங்காவில் வாழ்கின்ற தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்துகின்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களை சேர்ந்த நாங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.