Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமெரிக்காவின் இலங்கை தொடர்பான கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா பின்பற்றி வந்த கடுமையான நிலைப்பாடுகளை தளர்த்திக் கொண்டு, இலங்கையுடன் நட்புறவான கொள்கைகளை பின்பற்ற ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானமொன்றை நிறைவேற்ற அமெரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு ஆதரவளிக்கும் வகையில் தீர்மானம் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் பாரிய ம…

  2. அமெரிக்காவை நம்ப முடியாது, தமிழர்களுக்கு துரோகம் இழைக்கக் கூடும்: தீர்மானத்திற்கு கருணாநிதி கண்டனம்: 29 ஆகஸ்ட் 2015 அமெரிக்காவின் தீர்மானத்திற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்டனம் வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்தநடவடிக்கையானது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது என கருணாநிதி தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்களை மூடி மறைக்கும் நோக்கில் அமெரிக்கா செயற்படுவதாக தென்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையில் உள்ளக விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டால், அதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் வன்மையாக எதிர்க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை நம்ப முடியாது எனவும், அமெரிக்கா தமிழ…

    • 2 replies
    • 888 views
  3. பதவி மோகத்தில் மக்களை மறந்து தேர்தல் காலத்தில் திடீரென விழித்தெழும் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் : மனோ கணேசன் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவதால் மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் இது தேசிய அல்லது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும். இதேபோல் எப்பாடுபட்டாவது அமைச்சுப் பதவிகளை கைப்பற்றிக்கொள்வது என்பது தேசிய அரசாங்கத்தின் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியாது. இது தேசிய அரசாங்கம் என அழைக்கப்படலாம். ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்தால்தான் இது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும். இங்கே சிலர் தேசிய அரசாங்கம், தேசிய ஐக்கிய அரசாங்கம் ஆகிய இரண்டு சொற்களை…

  4. யாழ்.நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களின் வருடாந்த திருவிழாக்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தமிழர்களும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் யாழிற்கு படையெடுத்துள்ளனர். நல்லூர் கந்தசுவாமி கோயில், செல்வச்சந்நிதி ஆலயம், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயம் போன்றவற்றின் வருடாந்த திருவிழாக்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்றும் வகையில் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களும், வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கைக்கு படையெடுத்து வர ஆரம்பித்துள்ளனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலையினைத் தொடர்ந்து தெற்கிலுள்ளவர்களும் வடபகுதி நோக்கி படையெடுத்துள்ளம…

  5. நிரந்தர வீடுகள் அற்ற நிலையில் யாழ்.மக்கள் யாழ். மாவட்டத்தில் நிரந்தர வீடுகள் அற்ற நிலையில் 35 ஆயிரம் குடும்பங்கள் இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட போர் நிலமைகளால் பெரும்பாலான மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளதுடன் தமது சொந்த நிலங்களை விட்டும் இடம்பெயர்ந்துள்ளனர். தற்பொழுது ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வலி. வடக்கு, வலி. கிழக்குப் பகுதிகளில் மீள்குடியேறுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் அவர்களுக்குத் தேவையான நிரந்தர வீடுகள், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டியிருக்…

  6. காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை ஐ.நா.மனித உரிமைப் பேரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படமாட்டாது காணால் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளின் போது காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும், அவ்வாறு அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படாது என நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக ஏற்கனவே அமெரிக்கா உறுதியளித்துள்ளதாகத்…

  7. சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் நாளை அனுஸ்டிப்பு சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் நாளை அனுஸ்டிக்கப்படவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. போர் மற்றும் ஏனைய காரணங்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. மேலும் காணாமல் போனவர்களை கண்டறிவதில் சிலவேளை காலதாமதம் ஏற்படலாம் என்பதனாலும் அவர்களின் குடும்பத்தினருக்கு சரியான பதில் ஒன்றை வழங்குவதற்கு முடியாமல் போகும் என்பதனாலும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரின் தேவைகள் அதிகமாகும் என்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை கிளை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com

  8. நீர்க்காகம் இம்முறை வடக்கு- கிழக்கு கடலில் நீர்க்காகம் எனப்படும் படையினரின் கூட்டுப்பயிற்சி எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கிழக்கு மாகாண வான்பரப்பில் விமானங்கள் பறக்கக்கூடும் என்றும் இதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லையென்று இலங்கை இராணுவத்தின் பிரதான அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்தார். செப்டெம்பர் 3ஆம் திகதி நீர்காகம் கூட்டுப்பயிற்சி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் 6ஆவது தடவையாக முப்படையினர் இணைந்து நடத்தும் இப்பயிற்சியானது இம்முறை கொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை நடைபெறவுள்ளது. பயிற்சி நடக்கவுள்ள பிரதேசங்களில் விமானங்கள் பறப்பதையிட்டு மக்கள் அச்சமடையத் தேவையில்லையென்றும் இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கையில் எவ்வித பாதிப்…

  9. உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை : மூத்த வழக்கறிஞர் ரட்ணவேல் இலங்கையில் இடம்பெற்ற போர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் குறிப்பிட்டுள்ளார். கடந்த கால அனுபவங்களே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் தெரிவித்தார். இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படுவதை ஆதரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வெளியாகும்…

  10. வடக்கு, கிழக்கு உட்பட ஏழு மாவட்டங்களில் வறட்சி: 60,000 குடும்பங்கள் பாதிப்பு நாட்டின் 7 மாவட்டங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சுமார் 60,000 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, பொலன்னறுவை, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் வறட்சியான காலநிலையால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக அந்த நிலையத்தில் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். இதனையடுத்து, பல பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்ட இடர் முகமைத…

  11. தேசிய அரசில் இணைகிறார் சமல் ராஜபக்ச முன்னாள் சபாநாயகரும், ஐ.ம.சு.மு சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவருமான சமல் ராஜபக்ச தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளார். தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு இணங்கி தேசிய அரசாங்கத்தில் தான் இணைந்துகொள்வதாக அவர் கூறினார். அரசாங்கத்தின் செயற்பாடு களை எதுவித தடையும் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கு பலம் சேர்க்கும் வகையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் திட்டத்துக்கு பலம் சேர்ப்பதற்கு தான் விரும்புவதாகவும், அரசியல் என்பது ஒரு சித்தாந்தமாக இருந்தாலும் கட்சித் தலைவரின் முடிவுக்கு மதிப்பளித்து செயற்ப…

  12. கோத்தபாயவுக்கு தொடரும் சோகம் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவை எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்படுகின்றது. இந்நிலையில் அண்மையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கோத்தபாய ராஜபக்‌ஷவை மீண்டும் விசாரணைக்கு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ரக்னா லங்கா என்ற பாதுகாப்பு சேவை வழங்கும் கோத்தபாய ராஜபக்‌ஷவுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்துக்கு அரச நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்படவுள்ளது…

  13. 35 ஆயிரம் கோப்பை தேநீர் வழங்கி கின்னஸ் சாதனை படைக்க முயற்சி! [Friday 2015-08-28 19:00] இலங்கை சுற்றுலா சபை, இலங்கை தேயிலை சபை மற்றும் இலங்கை விமான சேவை ஆகியன இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மூலம் புதிய கின்னஸ் சாதனை பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். நுவரெலியா பீட்ரு தோட்டத்தில் 500 கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களைக் கொண்டு ஒரே நாளில் 2 மணித்தியாலங்களுக்குள் 3000 கிலோ கிராம் கொழுந்து பறித்து அதில் தேயிலை தூள் தயாரித்து 35,000 பேருக்கு தேநீர் வழங்கி இந்த கின்னஸ் சாதனை புரியப்படுகிறது. இன்று கொழுந்து பறிக்கப்பட்டது.நாளை கண்டி எசல பெரஹரா காண வருபவர்களுக்கு 35,000 கோப்பை தேநீர் வழங்கி கின்னஸ் சாதனை படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.…

    • 0 replies
    • 422 views
  14. சனல்- 4 போர்க்குற்ற காணொளியின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளப் போகிறது சிறிலங்கா?Aug 29, 2015 | 3:23by கார்வண்ணன் in செய்திகள் சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படம் தொடர்பாக சிறிலங்கா இராணுவம் இன்னமும் விசாரணை நடத்தி வருவதாக சிறிலங்கா இராணுவ ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், முன்னைய அராங்கத்தின் பணிப்பின் பேரில், சனல் -4 காணொளி தொடர்பாக 2013ஆம் ஆண்டு தொடக்கம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளவர்கள் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினரா என்பதை உறுதி செய்யும் விசாரணைகளே இடம்பெறுவதாகவும் சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனினும், ஜெனிவாவில் …

  15. சிறிலங்கா நாடாளுமன்றில் மகிந்தவுக்கு முன்வரிசை ஆசனம்Aug 29, 2015 | 3:48by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்படும் என்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் திசநாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தேசிய அரசாங்கத்தில் எத்தனை உறுப்பினர்கள் இடம்பெறுவர் என்பது பற்றிய தகவல்கள் எனக்குத் தரப்படவில்லை. இதனால் நாடாளுமன்ற ஆசனங்களை என்னால் ஒழுங்குபடுத்த முடியாதுள்ளது. தேசிய அரசாங்கத்தில் இடம்பெறப் போகின்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் தெரிய வந்த பின்னரே ஆசனங்களை ஒழுங்குபடுத்த முடியும். சிறிலங்காவின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு வரும் செப்ரெம்பர் 1ஆம் ந…

  16. போரின் வலிகளுக்குள் புடமிடப்பட்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள் : சிறீதரன் போரினால் நாம் தோற்றுப் போனவர்கள் அல்ல போரின் வலிகளுக்கூடாக வாழ்ந்தவர்கள் என்றும் போரின் வலிகள் எங்களை புடமிட்டிருக்கிறது. என,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலையில் இணைப்பதற்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் ‘வறுமையில் வாழும் பிள்ளைகள்தான் தேசத்தினையும் தேசியத்தினையும் நேசிப்பவர்களாக …

    • 0 replies
    • 306 views
  17. கிளிநொச்சியில் நெல் அறுவடை பாதிப்பு! கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் நெற்செய்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சியை சேர்ந்த விவசாயிகள் கூறுகின்றனர்.அறுவடைக் காலத்தில் பெய்த மழையினால் நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடுமையான வெம்மையால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளான கிளிநொச்சி மாவட்ட மக்கள் கடந்த சில நாட்கள் பெய்த மழையினால் ஆறுதல் அடைந்தாலும் நெற் பயிரச்செய்கை விவசாயிகளுக்கு மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழைபெய்துள்ளது. சிறுபோக அறுவடைக் காலமாகிய இன்றைய நாட்களில் இன்னமும் பல விவசாயிகள் தமது நெற் பயிரை அறுவடை செய்யவில்லை. இந்த நிலையில் பெய்த மழையினால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை மழைய…

    • 0 replies
    • 280 views
  18. மங்கள சமரவீர தலைமையில் ஜெனிவா செல்கிறது அரசகுழு! [Saturday 2015-08-29 08:00] எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கையின் சார்பில் அமைச்­சர்கள் அடங்கிய உயர்­மட்டக் குழு கலந்­து ­கொள்­ள­வுள்­ளது. குறிப்­பாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, வெளி­வி­வ­கார அமைச்சின் உயர்­மட்ட அதி­கா­ரிகள் உள்­ளிட்ட பலர் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். 30 ஆவது கூட்டத் தொடரின் முத­லா­வது அமர்வில் இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதே­வேளை முதல் நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்ள …

    • 0 replies
    • 271 views
  19. காணாமல் போனவர்கள் - விசாரணைக் குழுவின் அறிக்கை UN மனித உரிமைப் பேரவை அமர்வில் சமர்பிக்கப் படமாட்டாது: 29 ஆகஸ்ட் 2015 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- காணால் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது சமர்ப்பிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளின் போது காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.எனினும், அவ்வாறு அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படாது என நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் ஒன்றை நிற…

  20. இந்த நேர்காணலை புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் அவசியம் கேளுங்கள். "போருக்கு உதவிய இந்தியாவின் கலைஞர்களை ஏன் உங்களால் நிராகரிக்க முடியாது?": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவைக்கு 27.08.2015 அன்று அகில இலங்கை கம்பன் கழகத்தின் மூத்த பேராளர் கம்பவாரிதி ஜெயராஜ் வழங்கிய சிறப்பு நேர்காணல். நேர்கண்டவர்: தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/d1prvcq19mv3

  21. மனைவியை அடித்து போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவருக்கு தூக்குத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாழ். மேல் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு, சித்திரை மாதம் 23 ஆம் திகதி ஆணைக்கோட்டை பகுதியில் யோகராசா அமுதவர்த்தினி என்பவர் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வந்த நிலையில், சட்ட வைத்திய அதிகாரி எஸ். சுகுந்தன் யாழ். மேல் நீதிமன்றில், மனைவியை போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார் என சாட்சியமளித்துள்ளார். …

  22. "எமது தோல்விக்கு நாமே காரணம்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 21.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/theivigan/nwux98l2p1fc

    • 40 replies
    • 3.5k views
  23. முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபஷ, தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரமதர் ரணிலுக்கு, அனுப்பிய விசேட அறிவிப்பு ஒன்றின் ஊடாகவே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தனது சகோதரியுமான நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமார் நடேசன் ஊடாகவே மஹிந்த இதனை அனுப்பி வைத்துள்ளார். இதற்கு பதில் அளித்த பிரதமர், பொலிஸ் விசாரணைகளில் தான் தலையிடமுடியாது எனவும், முடிந்தால் ஜனாதிபதியிடம் இக்கோரிக்கையினை முன்வைக்குமாறும் தெரிவித்துள்ளார். நிதி மோசடி சம்பந்தமான பல வழக்குகள் மற்றும் கொலை குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால், மஹிந்த ராஜபக்ஷ …

  24. லைக்கா கிராம வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் :சம்பந்தன் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் பூந்தோட்ட முகாம் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அமைக்கப்படும் லைக்கா கிராமத்தின் பணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். லைக்கா கிராம வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்திருந்தார். மேலும் சம்பந்தன் உரையாற்றுகையில், பூந்தோட்ட மக்கள் உட்பட வடக்கு தமிழ் மக்கள் லைக்கா நிறுவனத்தின் வீட்டுத்திட்டத்தினை வரப்பிரசாதமாகக் கொள்…

  25. யாழ்.மாவட்டத்தில் விபத்துக்கள் சடுதியாக அதிகரித்துள்ளன. கடந்த இரண்டரை மாதங்களில் மாத்திரம் வீதி விபத்துகளில் சிக்கி 48 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 850 பேர் எலும்புகள் முறிந்த நிலையிலும் 700 பேர் தலை அடிபட்டுப் பாதித்த நிலையிலும் வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. கடந்த ஜூன் 10 ஆம் திகதியிலிருந்து கடந்த 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து 6 ஆயிரத்து 300 பேர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 850 பேர் எலும்புகள் முறிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து வயதுப் பிரிவினரும் உள்ளடங்குக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.