ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளே, சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கொண்ட அறிக்கைகளைவெளியிட்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ் கைதிகள் சிறிலங்காவின் பாதுகாப்பு தரப்பினரால் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. பிரித்தானியாவைத் தளமாக கொண்ட தன்னார்வ நிறுவனம் ஒன்று இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான அறிக்கைகளை வெளியிடும் அமைப்புகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டவை என்று அவர் உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு கூறியுள்ளார். http://www.pathivu.com/news/42298/57/…
-
- 0 replies
- 302 views
-
-
அனுர யாப்பா, சுசில் பிரேமஜெயந்தவை சுதந்திரக் கட்சியை விட்டே நீக்கினார் மைத்திரிAUG 15, 2015 | 1:40by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பாவும், சுசில் பிரேமஜெயந்தவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். முன்னதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து அனுர பிரியதர்சன யாப்பாவையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவையும் மைத்திரிபால சிறிசேன நீக்கியிருந்தார். கட்சியின் கொள்கைகளை மீறியதாக …
-
- 0 replies
- 387 views
-
-
கொலையும் செய்வோம் – மைத்திரியை மிரட்டும் மகிந்தவின் விசுவாசிAUG 15, 2015 | 1:50by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அனுர பிரியதர்சன யாப்பாவையும், சுசில் பிரேமஜெயந்தவையும், மீண்டும் அதே பதவிகளில் அமர்த்தாவிடின் தாம் கொலை செய்யவும் அஞ்சப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை மிரட்டியுள்ளார் மகிந்தவின் விசுவாசியான முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன். தம்புள்ளவில் நேற்றுமாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,’ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலர் சுசில் பிரேமஜயந்தவையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலர் அனுர பிரியதர்சன யாப்பாவையும், உடனடியாக மீண்டும் அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும். இவர்களை நீக்க சிறிலங்கா அதிபர் …
-
- 0 replies
- 384 views
-
-
சிறிலங்காவில் சித்திரவதைகள் – ஐ.நாவுக்குத் தெரியாதாம்AUG 14, 2015 | 5:33by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவில் போருக்குப் பின்னரும் தடுப்புக் காவலில் இருக்கும் கைதிகள் மீது சித்திரவதைகள் தொடர்வதாக வெளியான அறிக்கை தொடர்பாக ஐ.நா அறியவில்லை என்று, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் போர் முடிந்து ஆறு ஆண்டுகளாகியும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் தடுப்புக் காவலில் இருக்கும் தமிழ்க் கைதிகள் மீது படையினரின் சித்திரவதைகள் தொடர்வதாக பிரித்தானியாவைத் தளமாக கொண்ட சித்திரவதையில் இருந்து விடுதலை என்ற மனிதாபிமான அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த்து. நியூயோர்க்கில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில், இந்…
-
- 2 replies
- 461 views
-
-
தமிழ் மக்களின் நேரிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வடிவம் வெற்றிமேல் வெற்றிகளைப் பெற்று விடுதலை என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறிச் சென்ற காலகட்டத்தில் தமிழ் மக்களின் ஜனநாயகக் குரலாக எமது தேசியத் தலைவர் வே. பிரபாகரனால் உருவாக்கப்பட்டது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. எனவே இதை இந்திய உளவு நிறுவனத்தின் கையாட்களிடமோ மஹிந்த ராஜபக்சவின் குடும்ப நண்பர்களிடமோ கையளிக்க முடியாது. இது என்றும் தமிழ் மக்களின் உரிமைக்குரல் எந்த ஒரு மேலாதிக்க சக்திகளுக்கும் விலைபோகாது ஒலிக்க வேண்டும் எனப்படும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இலங்கைத் தமிழ் மக்கள் எந்த ஒரு சரணடைவாளர்களுக்கும் விற்றுவிடத் தயாரில்லை. ஆனால் 2010 இலங்கையின் சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொண்டமை இலங்கையின் போர்க்குற்றங்கள் ம…
-
- 0 replies
- 263 views
-
-
‘ஒபாமா வந்தாலும் ரணிலை காப்பாற்ற முடியாது’ August 14, 20156:40 pm “பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் வந்திருக்கின்றார். விடுமுறையை கழிப்பதற்காக வந்திருந்தால், நுவரெலியாவுக்கு போகலாம், கடற்கரைக்கு போகலாம் ஆனால், யாழ்ப்பாணத்துக்கு ஏன் போகவேண்டும்” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, குருநாகலில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் கேள்வி எழுப்பினார். “அவர், யாழ்ப்பாணத்துக்கு சென்றிருக்கின்றார். புதைக்கப்பட்டுள்ள புலிகளை உசுப்புவதற்கே அவர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். டொனி பிளேயர் அல்ல, அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா வந்தாலும் ரணிலை காப்பாற்ற முடியாது” என்று …
-
- 3 replies
- 1.2k views
-
-
இன்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளியான விளம்பரம் தமது ஒப்புதலின்றி வெளியிடப்பட்டுள்ளதாக புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமந்திரனை வெல்ல வைப்பது தமிழர்களின் வரலாற்று கடமையென கனடாவிலுள்ள பேராசிரியர் சேரன் உள்ளிட்டவர்கள் தெரிவித்ததாக விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை உணர்வாளர்கள் சிலர் அனுப்பி, வரலாற்று கடமையை விளங்கப்படுத்துமாறு சேரனிடம் கேட்டிருந்தனர். அதற்கு பதிலளித்த சேரன் தனக்கு தெரியாமல் தனது படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். தாயக மக்களே தமது தெரிவினை முடிவு செய்ய முடியும். புலம்பெயர் உறவுகள் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்க முடியுமெனவும் சேரன் தெரிவித்துள்ளார். அவரது சம்மதமின்றி சுயநல தேர்தல் பிரச்சாரத்திற்கு விளம்பரப்படுத்தும் இவர்கள் எப்படிய…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தம்மை நீக்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஆகியனவற்றின் அனுமதியின்றி பதவிகளிலிருந்து நீக்க முடியாது எனஅவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் அடிப்படையில் கட்சியின் உறுப்புரிமை அல்லது கட்சியின் ஓர் பதவி குறித்து மத்திய செயற்குழுவே தீர்மானிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரது உறுப்புரிமையை ரத்து செய்ய அல்லது இடைநிறுத்த கூட்டமைப்பின் ந…
-
- 3 replies
- 513 views
-
-
இன்று ஆடி அமாவாசை தினமாகும். இதனை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள இந்து ஆலயங்கள் பலவற்றிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. குறிப்பாக வடக்கில் உள்ள ஆலயங்களில் இளம் பிள்ளைகள் யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது தந்தைக்காய் விரத்தில் ஈடுபட்டு வழிபாடுகளில் கலந்து கொண்டனர். கிளிநொச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் ஆலயம் மற்றும் கந்தசுவாமி ஆலயங்களில் சிறுவர்கள் உள்ளிட்ட இளம் பிள்ளைகள் யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது தந்தையருக்காக மோட்ச அர்ச்சனை செய்த காட்சி கடந்த கால யுத்தத்தின் கொடூரத்தை காட்டுவதாக இருந்ததாக எமது செய்தியாளர் கூறினார். பெருமளவான இளம் பிள்ளைகள் யுத்தத்தில் தந்தையை இழந்திருக்கும் துயரமும் இதன்போது வெளிப்பட்டதாக குறிப்பிடும் குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் சிறுவர்கள் உள்…
-
- 1 reply
- 680 views
-
-
மகிந்தவுக்காக கையெழுத்திடாமல் நழுவினார் பௌசி – மைத்திரியின் பிரதமர் வேட்பாளரா? AUG 14, 2015by கார்வண்ணன்in செய்திகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், தமக்குப் பிரதமர் பதவி வேண்டாம் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏ.எச்.எம்.பௌசி மட்டும் கையெழுத்திடவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால், மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருக்கே அ…
-
- 3 replies
- 606 views
-
-
"என்னை தமிழனாக பாருங்கள்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasu/bnhe1d4cw4wk?utm_source=soundcloud&utm_campaign=share&utm_medium=facebook
-
- 2 replies
- 1.1k views
-
-
யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து நேற்றுமாலை 6.30மணியளவில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இவர்களுடன் வலிமேற்கு சமூக மேம்பாட்டுக் கழக ஆலோசகர் டேவிட், முன்னைநாள் சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர் கேதீஸ்வரநாதன், முன்னைநாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இங்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் உரையாற்றும்போது, தமிழ் த…
-
- 0 replies
- 320 views
-
-
மைத்திரியின் கடிதத்தை வெளியிடக் கூடாது – தேர்தல் ஆணையாளர் உத்தரவுAUG 14, 2015 | 10:35by கி.தவசீலன்in செய்திகள் மகிந்த ராஜபக்சவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எழுதிய கடிதத்தை திரும்பத் திரும்ப வெளியிடக் கூடாது என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு வேட்பாளர் என்ற வகையில், மகிந்த ராஜபக்சவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதாலேயே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அத்துடன் மைத்திரிபால சிறிசேன நேற்று எழுதிய கடிதத்துக்கு ஊடகங்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தனவோ, அதுபோல, இன்று மகிந்த ராஜபக்ச எழுதிய கடிதத்துக்கும் ஊடகங்கள் சமமான முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்…
-
- 0 replies
- 377 views
-
-
மக்களின் ஆணைக்கு மதிப்பளியுங்கள் – மைத்திரிக்கு மகிந்த பதில் கடிதம்AUG 14, 2015 | 10:25by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்கும் ஆணைக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றாலும், சுதந்திரக் கட்சியின் ஏனைய தலைவர்களுக்கு வழிவிடும் வகையில், ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஐந்து பக்க கடிதம் ஒன்றை மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியிருந்தார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. அதற்குப் பதிலளிக்கும் வகையில் மகிந்த ராஜபக்ச இன்று ஒரு பக்க கடிதம…
-
- 0 replies
- 355 views
-
-
சமஸ்டி முறைமை ஆட்சியை எதிர்க்கின்றேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்வைத்த சமஸ்டி முறைமை ஆட்சியை தாம் நிராகரித்ததாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் தேர்தலில் வெற்றியீட்டுவோம் என நன்கு தெரிந்து கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தி சமஸ்டி முறைமை ஆட்சியை வழங்க இணங்க வேண்டிய தேவை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டில் பிரபாகரன் முன்வைத்த சமஸ்டி முறைமை யோசனைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருந்தால், தாம் அப்போதே ஜனாதிபதியாக பதவி வகித்திருக்க ம…
-
- 30 replies
- 2.5k views
-
-
[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 10:45.26 AM GMT ] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்தவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அனுர பிரியதர்ஷன யாப்பாவும் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கட்சி திருத்தச்சட்டத்திற்கமையவே அவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சின் பொதுச்செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக பேராசிரியர் விஷ்வா வர்ணபால நியமிக்கப்பட்டு…
-
- 4 replies
- 938 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 01:23.27 PM GMT ] இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு பரிமாணமாக தடம்பதிக்க விருக்கும் 15வது பாராளுமன்றத் தேர்தல் ஒரு சமராகவே அனைத்து மாவட்டங்களிலும் உச்ச நிலையை எட்டியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலும் இதன் அலைபட்டி தொட்டியெல்லாம் அடித்துக் கொண்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்துக்கென உள்ள 05 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைகளிலிருந்து மொத்தம் 368 வேட்பாளர்கள் பந்தயச் சமரில் இறங்கியுள்ளனர். ஆனாலும் 04 கட்சிகளே இறுதிச் சுற்றிற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும். அதாவது விகிதாசார நியமங்களுக்கமைவாக மாவட்டத்தில் 05 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வல்லமையை 04 கட்சிகளே பெற்ற…
-
- 0 replies
- 1.2k views
-
-
மக்கள் ஆணையில்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவை பிரதமராக நியமிக்க முடியுமென்றால் ஏன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்க முடியாது என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கே பிரதமர் பதவி வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் பிரதமர் பதவியை வழங்க வேண்டியது கட்டாயமானது என அவர் அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ கூடுதல் ஆசனங்களுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிருப்தியின் ஊடாகவேனும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கி தேர்தல் பணிகளுக்கான தலைமைப் பொறுப்பினை வழங்கியிருந்தார். அவ்வாறான பின்னணியில் நிச்சயமாக ப…
-
- 1 reply
- 227 views
-
-
புலிகளை தொடர்புபடுத்தி அரசியல் செய்யும் யுகத்திற்கு எதிர்வரும் 17ஆம் திகதியோடு முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஐ.தே.முன்னணி ஆட்சியில் புலிகளுக்கு இடமில்லை. பிரிவினைவாதத்திற்கும் இடமில்லை என உத்தரவாதமளிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, யாழ்ப்பாணம் தொடக்கம் மாத்தறை வரையிலான மக்கள் ஐ.தே.முன்னணிக்கே வாக்களிப்பார்கள் என்றும் நம்பிக்கை வெளியிட்டார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐ.தே.#முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 19ஆவது திருத்தத்திற்கு அமைய நான்கு வருடங்கள் அதா…
-
- 0 replies
- 531 views
-
-
மலேசியாவில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர் நாடு கடத்தப்பட்டுள்ளார். கோலாலம்பூரில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 37 வயதான குறித்த நபர் கடந்த 2012ம் ஆண்டு சுற்றுலா வீசா மூலம் மலேசியாவிற்குள் பிரவேசித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் மலேசியாவில் குறித்த நபர் பணம் திரட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகளுடன் இணைந்து கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைகளின் போது குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார். சந்தேக நபர்கள் இன்றைய தினம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/…
-
- 0 replies
- 457 views
-
-
நான் ஜோதிடம் பார்த்து, நேரம் பார்த்து தேர்தல் தினத்தை தீர்மானிப்பவனில்லை. அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. புத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால் நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்? - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். கொழும்பு - 07 இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாட்டின்போது "ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?" என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஜோதிடம் பார்த்து, நேரம் பார்த்து, தேர்தல் தினத்தை தீர்மானிப்பதில்லை. அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணைய…
-
- 0 replies
- 245 views
-
-
புலிகளுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் கனவு மட்டுமல்ல அவரது குடியுரிமையும் பறிபோகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் காற்று தடைப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காற்று வீச ஆரம்பித்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷவின் காற்று வீசுவதாக கூறி கடந்த காலங்களில் அவர் பெயர் அரசியலில் வியாபாரம் செய்யப்பட்டது. ஆனால் இன்…
-
- 0 replies
- 213 views
-
-
வடமராட்சி திக்கம் பிரதான வீதியில் பொலிஸார் நடத்திய அதிரடி சுற்றி வளைப்பில் 10 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் வடமராட்சி பருத்தித்துறையில் இருந்து வல்வெட்டித்துறை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலிஸார் வழிமறித்து சோதனைக்குட்படுத்திய போதே கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு பிரதான வீதிகள் ஊடாகக் கஞ்சா பொதிகள் கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை நடத்தினர். வடமராட்சியின் பிரதான வீதிகளில் பொலிஸார் நிறுத்தப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வடமராட்சி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம் ஜவ்பர் தலைமையிலான விசேட பொலிஸ் குழு இந்த அதிரடி நடவட…
-
- 0 replies
- 228 views
-
-
அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சொந்தமாக மன்னார் மாவட்டத்தில் 3000 ஏக்கர் காணி உள்ளது. காணியனைத்தும் அவருடைய மனைவி, தந்தை, சகோதரர்கள் என உறவினர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைதொடர்பான அனைத்து ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் எங்களிடம் உள்ளது என தெரிவித்த வட மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா, குறுகிய காலப்பகுதியில் ரிசாத்துக்கு எவ்வாறு பல மில்லியன் ரூபா சொத்துக்கள் கிடைக்கப்பெற்றது எனவும் கேள்வியெழுப்பினார். யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து நிர்கதியான மக்களைக் காட்டி அமைச்சர் றிஷாத் பதியுதீன் பணம் சம்பாதித்து வருவதாகவும் அதனாலேயே வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இன்னும் அகதிகளாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும…
-
- 7 replies
- 617 views
-
-
சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் கட்சிக்கே வாக்களியுங்கள், என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அறிக்கை விடுத்துள்ளார். இன்று காலை விடுத்துள்ள அவர் விடுத்துள்ள அறிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எனது அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இளைஞர்களே, யுவதிகளே! தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் யாருக்கு வாக்களிப்பது, யாரை தெரிவு செய்தால் உங்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் அவர்கள் வாழவைப்பார்கள் என்பது குறித்து நீங்கள் ஓர் தீர்மானத்திற்கு வந்திருப்பீர்க்ள் என நம்புகின்றேன். உங்களது தீர்மானத்தில் நான் எந்தவொரு செல்வாக்கினையோ அல்லது தலையிட்டினையோ செய்யப்போவதில்லை. இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நட…
-
- 45 replies
- 3.2k views
-