Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் ஆட்சி மாற்றத்தில் பிரதான பங்கு வகித்தது இந்தியா. இன்று இந்தியாவின் நிலை என்ன..? இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பிரதமர் ரணிலிடம் தோல்வி கண்டுள்ளார்களா..? மைத்திரியின் இன்றைய ஆளுமை குறைந்ததா..?இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களை ரணில் முறியடித்தாரா…? மகிந்தவை ரணில் காப்பாற்றியதன் பின்னணி இலங்கை ஆட்சியில் மேற்குலகு வெற்றியா..? வடகிழக்கு மக்களின் ஆணை சர்வதேசத்திற்கு எப்படி பதில் செல்லப்படும் போன்ற பல்வேறுபட்ட வினாக்களுக்கு லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் வெளிப்படுத்துகிறார் கனடாவில் வசித்து வரும் நேரு குணரெட்னம் . - See more at: http://www.canadamirror.com/canada/47439.html#sthash.Nf7EuOce.dpuf

    • 0 replies
    • 263 views
  2. ஒரு ஆசனத்தையாவது பெறவேண்டுமென களமிறங்கியுள்ள கட்சிக்கும் தமிழர்களின் பேச்சுப் பலமாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமிழக்கச் செய்யும் செயற்பாட்டுக்குமிடையில் தமிழ்த் தேசியம் விலைபொருளாக பயன்படுத்தப்படுகின்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது பாட்டனின், தந்தையின் அரசியலைப் பின்பற்றி அரசியல் செய்கின்றார். அவரது குற்றச்சாட்டுக்கள் முழுவதும் தமிழ்த் தேசியக் கூடடமைப்பைச் சுட்டியதாகவே இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனமாக்கும் செயற்பாடே அவரதுமுழு முனைப்பாக உள்ளது என ஆய்வாளர் சுரேஸ் தர்மா லங்காசிறி 24செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேபியுடன் தொடர்பு கொண்டு, பசில் ராஜபக்சவுடன் தொடர்பில் இருந்தமை தமிழ்த் தேசியக் …

    • 0 replies
    • 338 views
  3. வஸீம் தாஜுதினை கடத்தி கொலைசெய்ய முன் சித்திரவதை செய்யும்போது, அவர் எழுப்பிய அழுகையை , அவரின் காதலியை தொலைபேசியில் கேட்கச் செய்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளதாகப் பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் இதுவரை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் எவரும் முழுமையாகத் தீப்பிடித்து எரிந்து இறந்ததில்லை. அப்படியே தீப்பிடித்து எரிந்திருந்தாலும் ரகர் வீரரான வஸீம், சாரதியின் ஆசனத்தில் எரியும் வரை அமர்ந்திருக்க வாய்ப்பில்லை. இது தேர்தலை முன்வைத்து நடத்தப்படும் விசாரணை என குற்றஞ்சாட்டப்படுகிறது…

  4. சீனாவிடம் பெற்ற கடனை அடைக்க 400 ஆண்டுகள் செல்லும் – அதிர்ச்சித் தகவல்AUG 12, 2015 | 1:38by கி.தவசீலன்in செய்திகள் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக சீனாவிடம் பெற்ற கடனை சிறிலங்கா அடைப்பதற்கு 400 ஆண்டுகள் செல்லும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் முதலாவது கட்டத் திட்டத்துக்கு 361 மில்லியன் டொலர் செலவிடப்பட்டது. இதில் 80 வீதம் சீனாவின் எக்சிம் வங்கியிடம் இருந்து கடனாக பெறப்பட்டது. இந்த துறைமுகம் திறந்து வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் போதிய வருமானத்தைப் பெற்றுக் கொடுக்காத நிலையில் இது ஒரு வெள்ளை யானை என்று விமர்சிக்கப்படுகிறது. தற்போது ம…

    • 0 replies
    • 731 views
  5. மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரைக் களத்தில் 50 முன்னாள் புலிகள்?AUG 12, 2015 | 2:11by கி.தவசீலன்in செய்திகள் எதிர்வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளில், 50இற்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவர்கள் எந்தவொரு புனர்வாழ்வு முகாமிலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாதவர்கள் என்றும், தகவல் வெளியாகியுள்ளது. சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், சிறிலங்காவின் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவும், இணைந்தே, இவர்களை தேர்தல்…

    • 0 replies
    • 376 views
  6. இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் – பரிசீலிக்கத் தயார் என்கிறது சிறிலங்காAUG 11, 2015 | 10:58by கி.தவசீலன்in செய்திகள் இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைக்கும் தொடருந்து மற்றும் நெடுஞ்சாலை இணைப்பு வழியை உருவாக்குவது தொடர்பாக இந்திய அரசாங்கம் இதுவரையில் சிறிலங்காவிடம் அதிகாரபூர்வமான தகவலைப் பரிமாறவில்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். பாக்கு நீரிணை வழியாக இந்த இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் தொடர்பான சாத்திய ஆய்வை மேற்கொள்ளுமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இநதிய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெர…

    • 0 replies
    • 320 views
  7. நியாயங்கள் நிமிரும்! வேடங்கள் கலையும்! கேட்டாரே ஒரு கேள்வி இராசகுமாரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வேட்பாளராகப் போட்டியிடுபவரும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவருமான இராசகுமாரன் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இது வெறும் பதிலை மட்டும் தேடும் கேள்வியல்ல, எங்கள் ஒவ்வொருவரின் மனச்சாட்சியை இடித்து உலுப்பும் கேள்வி கடந்துபோன காலத்தில் நாம் நடந்துவந்த பாதையில் பதிந்து கிடந்த. தடங்களை மீள்பரிசீலனை செய்யவும் புதிய பயணத்தைத் தொடங்கவும் எங்கள் சிந்தனை வானில் இடிமுழக்கம் எழுப்பிய கேள்வி. எமது மண்ணினதும் மக்களதும் விடிவுக்காகத் தம்மை அர்ப்பணித்துப் போராடியவர்களும் அவர்களுக்கும் உணவோ உறைவிடமோ வழங்கியவர்களும் ஆண்டுக்கணக்கில் சிறைகளில்வாட அவர்கள…

    • 1 reply
    • 444 views
  8. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கையில் 'கண்களைத் திறக்கட்டும்' என்னும் தொனிப்பொருளில் நாடகங்களை ஆற்றுகை செய்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. வடமராட்சி மாலுசந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட்டமைப்பு இவ்வாறு நாடகம் மூலம் பிரசாரம் செய்தது. இசைக்கச்சேரி, நாடகம் மற்றும் எழுச்சிப் பாடல்கள் என தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறைகளை கட்சிகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. : http://www.tamilmirror.lk/151753#sthash.2vEg6YwL.dpuf

    • 9 replies
    • 978 views
  9. ஊடகவியலாளர் பிரகீத் கடத்தப்பட்டதும் கிரிதெல இராணுவ முகாமில் விசாரிக்கப்பட்டார் என்ற செய்தியை முன்னர் படித்தோம். இப்போது பிரகீத் கிரிதெல இராணுவ முகாமுக்கு எப்படி ரகசியமாக அழைத்துவரப்பட்டார் என்பது குறித்து அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு கிரிதெல இராணுவ முகாமுக்கு பிரகீத்தை அழைத்து வந்து, இராணுத்திடம் சிக்க வைத்ததன் பின்னணியில் முன்னாள் போராளி ஒருவரும் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. பிரகீத் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரையும் விசாரித்த போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரகீத் எக்னெலிகொட கடத்தல் மற்றும் விசாரணை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதையடுத்தே இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்களில் ஒருவர், விடுதலைப…

  10. வன்னி மக்களைப் பொறுத்தவரை என்றுமில்லாத அளவுக்கு இந்தப் பாராளுமன்றத் தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னாரில் இடம்பெற்ற ஊடகவியளார்கள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால உள்நாட்டுப் போரினால் சீரழிந்து சின்னாபின்னமாகியிருக்கும் நம் வாழ்வைச் சீராக்கிச் செப்பனிட வேண்டிய தேவைப்பாடு நமக்கிருப்பதால் இந்தத் தேர்தலில் நாம் மிக நிதானத்துடன் சிந்தித்துச் செயற்பட வேண்டி இருக்கிறது. நடந்து முடிந்த போர் நம் வாழ்க்கையில் ஆறாத ரணங்களை ஏற்படுத்திச் சென்று விட்டது. உயிர் இழப்ப…

  11. அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சொந்தமாக மன்னார் மாவட்டத்தில் 3000 ஏக்கர் காணி உள்ளது. காணியனைத்தும் அவருடைய மனைவி, தந்தை, சகோதரர்கள் என உறவினர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைதொடர்பான அனைத்து ஆதாரங்கள் அடங்கிய கோப்புகள் எங்களிடம் உள்ளது என தெரிவித்த வட மேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா, குறுகிய காலப்பகுதியில் ரிசாத்துக்கு எவ்வாறு பல மில்லியன் ரூபா சொத்துக்கள் கிடைக்கப்பெற்றது எனவும் கேள்வியெழுப்பினார். யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து நிர்கதியான மக்களைக் காட்டி அமைச்சர் றிஷாத் பதியுதீன் பணம் சம்பாதித்து வருவதாகவும் அதனாலேயே வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இன்னும் அகதிகளாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும…

  12. 1990ஆம் ஆண்டு இலங்கையின் கிழக்கே ஏறாவவூர் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலின் 25வது ஆண்டு உள்ளுர் முஸ்லிம்களினால் இன்று செவ்வாய்கிழமை நினைவு கூறப்பட்டது. ஏறாவூர் சம்பவம் தமிழர் - முஸ்லிம் உறவில் மாறாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நள்ளிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 121 பேர் கொல்லப்பட்டார்கள். பலர் காயமடைந்தனர். காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதல் இடம்பெற்று 7வது நாள் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதாக பிரதேச பள்ளிவாசல்கள் சம்மேளனம் கூறுகின்றது. 1990ம் ஆண்டு வாக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காவல் நிலையங்கள் செயலிழந்து போன நிலையில் முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்த…

  13. டொனி பிளேயர் வந்தடைந்தார் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலரும் வருகைதந்துள்ளனர். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே 348 விமானத்தின் ஊடாக இன்று பிற்பகல் 1.40க்கு இலங்கை வந்தடைந்த அவர், தலைமையிலான குடும்ப உறுப்பினர்கள் உள்ளக வான்வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தும் சிறியரக விமானத்தின் ஊடாக அநுராதபுரத்தைநோக்கிச் சென்றுள்ளனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகைதந்துள்ள டொனி பிளேயர், இரண்டுவார காலம் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. - See more at: http://www.…

    • 3 replies
    • 688 views
  14. வடமாகாண சபை முதல்வர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரனை கொண்டுவருவது குறித்து மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் கலந்துரையாடவில்லை என மாகாண சபை உறுப்பினர்கள பலர் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்துள்ளனர்... இது குறித்து நேற்று (10.08.15) கருத்து வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன், சுகிர்தன், ஆர்னோல்ட் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது குறித்து நாம் கனவிலும் நினைக்கவில்லை.... அவரே எமது முதலமைச்சர்... அவருக்கு ஈடானவர் தற்பொழுது எவரும் இல்லை.... அது மட்டும் அன்றி அவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையை மாற்று கட்சிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன.... அவரது அறிக்கை தெளிவாக சொல்கிறது கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் உ…

  15. நான் வல்வெட்டித்துறையில் பிறந்தவன்! எனக்கும் தேசிய உணர்வு உள்ளது!- அங்கஜன் [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 11:59.18 AM GMT ] தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு புறம் எங்களை சிங்கள கட்சிகள் என்றும், தேசிய கட்சி கள் என்றும் கூறிக்கொண்டு மறுபக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தமிழர்களால் தெரிவு செய்யப்பட்டவர் அவருடைய ஆட்சியின் கீழ் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் எனவும் கூறிக் கொண்டிருக்கின்றது. மேற்கண்டவாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட தலைமை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.மாவட்ட தேர்தல் நிலமைகள் தொடர்பாக இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். குறித்த சந்திப்பில் மேலும் அவர் …

    • 11 replies
    • 1.5k views
  16. மட்டக்களப்பு, நாவலடி வாவியில் கூண்டுகளில் கொடுவா மீன்களை வளர்க்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் 06 மாதங்களில் மொத்த வருமானமாக மீனவர் ஒருவருக்கு சராசரி இரண்டு இலட்சம் ரூபாய் கிடைப்பதாக இந்த மீன் வளர்ப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள க.அருள்நாதன் தெரிவித்தார். 'விவசாய அபிவிருத்தி மூலம் வறுமையை குறைத்தல்' எனும் தொனிப்பொருளில் வாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் கொடுவா மீன்களை வளர்க்கும் திட்டம் நாவலடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் ஒன்பது மீனவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒன்பது கூண்டுகளில் கொடுவா மீன்கள் வளர்க்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி 3…

  17. இலங்கை அரசுமீதான சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே முடியும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த வெற்றி பெற்றிருந்தால் நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் தொடர்ந்தும் மக்களை அடக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர் இராணுவ சப்பாத்துக்களால் மக்களை அடக்கிய வைத்திருந்தால் நாட்டில் உரிமைக்கான கலவரம் தலைதூக்கியிருக்கும் என்றும் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதுடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் சர்வதேச சவால்களிலிருந்து விடுவிக்கவும் முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார். …

  18. கொமாண்டோ படையணியின் தளபதி பதவியிலிருந்து மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பாதுகாப்பு அமைச்சின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக தொடர்ந்தும் பதவி வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/08/11/மேஜர்-ஜெனரல்-பிரசன்ன-சில்வா-பதவி-நீக்கம்

  19. மகிந்த ராஜபக்ச இன்னமும் பதவி ஆசை கொண்டு ஆட்சிபீடமேற நினைப்பது வெட்கக் கேடான செயல் என்று விபரித்துள்ளார் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க. மகிந்த ராஜபக்ச இனவாத்தை தூண்டி ஆட்சிபீடமேற நினைக்கிறார் என்றும் அதற்கு எவரும் துணைபோகக்கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த எட்டாம் திகதி பெற்ற வெற்றியை தக்க வேண்டும் என்று தெரிவித்த அவர் தோற்றுப்போன மகிந்த ராஜபக்ச நிழல் போலத் தொடர்ந்து ஆட்சி பீடமேற நினைப்பதாகவும் கூறுகிறார். இதேவேளை தற்போது நடைபறும் நல்லாட்சியில் புத்திக்கூர்மையான இரண்டு தலைவர்கள் உள்ளதாகவும் அவர்களை தொடர்ந்தும் ஆட்சியில் அமர்த்தி மகிந்தவின் ஆபத்தை தவிர்க்குமாறும் அர்ஜூன ரணதுங்க மேலும் தெரிவித்தார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/ar…

  20. பிரபல ரக்பி வீரர் படுகொலையில் ராஜபக்ஸ குடும்பம் சிக்குமா? செஞ்சிலுவை சங்க டிபென்டர் ரக வாகனம் கைப்பற்றப்பட்டது:- இலங்கையின் பிரபல ரக்பி வீரரை படுகொலை செய்வதற்கு முன்னர் கடத்துவதற்காக பயன்படுத்திய இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனத்தை குற்றப்புலானய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை செஞ்சிலுவை சங்கம் இதனை உறுதிசெய்துள்ளது. மேலும் குறிப்பிட்ட வாகனம் எவ்வாறு படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபயசிங்க தீவிரவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதையும் செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். குறிப்பிட்ட வாகனம் தற்போது படுகொலை தொடர்பான முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.மேலும் குறிப்பிட்ட வாகனத்த…

  21. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் படுகொலை வழக்கு விசாரணை தொடர்பில் முன்னாள் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்ஸ விடுத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார். தாஜூடீன் மரணம் குறித்த விசாரணைகள் தொடர்பில் சிராந்தி ராஜபக்ஸ, பிரதமரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளார். ரகர் வீரர் தாஜூடீனின் மர்ம மரணம் தொடர்பிலான விசாரணைகளில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என பிரதமர், சிராந்திக்கு பதிலளித்துள்ளார். எவ்வாறெனினும், சிராந்தி ராஜபக்ஸ, பிரதமரிடம் எவ்வாறான உதவியை கோரினார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. தாஜூடீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக சிரிலியே சவிய என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனமொன்றில், கடத்தப்பட்டாரா என்பது குறித்து குற்றப்…

  22. ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவை கிரித்தல இராணுவமுகாமில் வைத்து தான் விசாரணை செய்ததாக பொலிஸாரால் கடந்த ஞாயிற்றுக்கிழை கைதுசெய்யப்பட்ட இராணுவமேஜர் தெரிவித்துள்ளார். பிரகீத் காணமற்போன சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்பட்ட குறிப்பிட்ட இராணுவ அதிகாரி கடந்த ஞாயிற்றுக்கிழமை குருநாகலில் வைத்து கைது செய்யப்பட்டார். குறிப்பிட்ட இராணுவ அதிகாரி இராணுவபுலானய்வு பிரிவை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரகீத்தின் சில படைப்புகள் தொடர்பாகவும், அவரிற்கும் முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்தும் தான் பிரகீத்தை விசாரைண செய்ததாக கைதுசெய்யப்பட்ட இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட முகாமை சேர்ந்த மேஜர் தர அதிகாரியொருவர் பிரகீத் வேறு…

  23. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுமத்திய குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவையல்ல என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு அளித்த செவ்வியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, பொதுபல சேனா இயக்கத்தை கடுமையாக சாடியிருந்தார். தம்மை ஆட்சியிலிருந்து கவிழ்ப்பதற்கு சர்வதேச சக்திகளினால் உருவாக்கப்பட்ட இயக்கமே பொதுபல சேனா என அவர்கு ற்றம் சுமத்தியிருந்தார். நோர்வே நிதியுதவியுடன் பொதுபல சேனா இயங்கி வருவதாகவும் இதுதொடர்பிலான விபரங்கள் அடங்கிய நூல் ஒன்றும் சந்தையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஞானசார …

  24. 11ஆம் நாள், 2006ஆம் ஆண்டு, ஒகஸ்ட் மாதம் ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு நாள். நான்காம் ஈழ யுத்தம் வடக்கில் மூண்ட நாள். சமதானம் முடிவுக்கு வந்தநாள். சுமார் ஆறு லட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கான தரைவழி மார்க்கமும் சுமார் ஐந்து லட்சம் மக்கள் வசிக்கும் வன்னிக்கான மார்க்கமும் மூடப்பட்டது. அன்று முதல் யாழ்ப்பாணம் பசி நகரமாக மாறியது. தாரை வழி மார்க்கம் மூடப்பட்டதால் யாழ்ப்பாணம் பெரும் அதிர்ச்சிக்கும் அசைவுக்கும் உள்ளானது. அதன் செயற்பாடுகள் முடங்கின. இன்று திறக்கும் நாளை திறக்கும் என்று காத்திருந்த போதும் பாதை திறக்கப்படவில்லை. யாழ்ப்பாணம் ஓகஸ்ட 11 அன்று யுத்தக் கோலம் பூண்டது. யாழ் நகரம் ஊரடங்கால் பாழடைந்துபோனது. தெருக்களில் சனங்கள் எவரும் இல்லை. யாழ்ப்பாணத்த…

  25. சுதந்திர போராட்டம் சுமந்திரனுக்குள் சுருங்கிவிடப்போகிறதா? தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அண்மையில் ஆஸ்திரேலிய தமிழ் வானொலி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் பின்னர் அவரது பேட்டி தொடர்பாக நடைபெற்ற கருத்துக்களத்தில் கலந்துகொண்ட நேயர் ஒருவர், சுமந்திரன் இறக்கும் தினத்தை தமிழ்மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார். சிறிலங்காவின் இன்றைய தேர்தல் நிலைவரத்தை எடுத்துநோக்கினால், சுமந்திரன் எனப்படும் ஒற்றைச்சொல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் அதிகமானதும் ஆழமானதும் ஆகும். அந்த தாக்கம் சாதகமானதா, பாதகமானதா என்பது விவாதத்துக்குரியது. தமிழ் தேசிய அரசியல் களத்தை பொறுத்தவரை, நெருங்கிவரும் சிறிலங்காவின் நாடாளுமன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.