Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மகிந்த மீது சந்திரிகாவுக்கு முற்பிறவிப் பகையாம்- சுசில் பிரேமஜெயந்த கூறுகிறார்AUG 10, 2015 | 2:12by கி.தவசீலன்in செய்திகள் மகிந்த ராஜபக்ச மீது சந்திரிகாவுக்கு முற்பிறவிப் பகை இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் சுசில் பிரேமஜெயந்த. கொழும்பில் ஹில்டன் விடுதியில் நேற்று மகிந்த ராஜபக்ச தலைமையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய தலைவர்கள் ஊடக ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதன்போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் பெயரையும் நாட்டையும் மகிந்த ராஜபக்ச நாசப்படுத்தி விட்டதாக, சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மகிந்த ராஜபக்ச, என்னை அவர் விமர்ச…

    • 0 replies
    • 375 views
  2. யதார்த்த பூர்வமாக எட்டக்கூடிய தீர்வுகளுக்காக வாக்களிப்போம்- யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர்சங்கம்: 07 ஆகஸ்ட் 2015 தமிழ் மக்களிற்கான அரசியல் தீhவானது, அவர்கள் இலங்கையின் ஏனைய மக்களுக்கு நிகராக வாழ்வதற்கான உரிமையுடன் தமது பொருளாதாரத்தினையும் கலாச்சாரத்தினையும்; காப்பதற்கும் வளர்ப்பதற்குமான உரிமையினையும், தமது பூர்வீக நிலங்களின் குடிசனப் பரம்பல் பெரும்பான்மையின மக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய மாற்றப்பட முடியாதவாறான உத்தரவாதத் தினையும் கொண்டதாக அமைய வேண்டும். தமிழ் மக்களின் இந் நியாயமான கோரிக்கைகளுக்கு சர்வதேச சமூகத்தினது ஆதரவும் அனுதாபமும் இருந்தது. எமது நியாயமான கோரிக்கைகளின் பாலிருந்த சர்வதேச ஆதரவினையும் அனுதாபத்தினையும் எமது பிடிவாதமான விட்டுக்…

  3. இலங்கையில் போர் முடிந்து ஆறு வருடங்களின் பின்னர் நடக்கும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் பல தரப்பட்ட கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளை முன்வைத்து மூன்று தமிழ் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதேவேளை தேசியக் கட்சிகள் மற்றும் ஏனைய பல கொள்கைகளை முன்வைக்கும் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இதேவேளை, போரினால், இலங்கை தமிழர்களின் கணிசமான அளவினர் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். இவர்களும் கடந்த காலங்களில் போரின் போதும், ஏனைய அரசியல் நடவடிக்கைகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள். இந்த தேர்தலில்கூட நேரடியாக இல்லாவிட்டாலும், தமிழ் பிரதேச வாக்களிப்புகளில் இவர்களின் மறைமுக…

    • 0 replies
    • 1.1k views
  4. ரணிலுக்குப் பின்னால் மக்கள் இருப்பதாக தேர்தல் மேடையில் உளறிய மகிந்தவின் விசுவாசிAUG 09, 2015 | 14:32by கி.தவசீலன்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பரப்புரை மேடையில், வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் ரணிலுக்குப் பின்னால் நிற்பதாக உரையாற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே. மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்கியே தீருவோம் என்று கங்கணம் கட்டி நிற்பவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே. இவர் முன்னர் ஐதேகவில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தாவிச் சென்றவர். இவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பேரப்புரை மேடையொன்றில் உரையாற்றிய போது, வரும் 17ஆம் நாள் நடக்கவுள்ள நா…

    • 0 replies
    • 454 views
  5. போதைப் பொருளுடன் பிள்ளைகள் பிடிபட்டால் பெற்றோரையும் கைது செய்யுமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் அதேவேளை பிள்ளைகள் பிடிப்பட்டால் அவர்களுடைய பெற்றோர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் வழக்கு தொடர்பிலான விசாரணையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பிள்ளைகளின் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு உணவு அடைக்கலம் கொடுத்து அவர்களைத் தட்டிக்க…

    • 3 replies
    • 423 views
  6. திருகோணமலை மாவட்டத்தின் பாலத்தடிச்சேனை பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தபோது, அந்தப் பகுதி மக்கள் கூட்டம் நடத்துவதானால் தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு கூட்டமைப்பினர் பதில் அளிக்கவேண்டும் என்று கேட்டு இருந்தனர் முதலில் அதற்கு உடன்பட்டவர்கள். பின்னர் கூட்டம் ஆரம்பமாக முன்னர் இது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒரு வேட்பாளர் விலகி தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ளார் அதனை அறிவிப்பதற்காக கூட்டம் தான் என்று கூறியுள்ளார். அதனால் அங்கு நின்ற மக்கள் இங்கு கூட்டத்துக்கு அனுமதி எடுக்கும் போது சொன்னது ஒன்று இப்போ கூட்டம் வேறு நோக்கம் என்றால் இங்கு கூட்டம் நடத்த அனுமதிக்கமாட்டோம் என்று அதனை எதிர்த்து மக்கள் …

    • 0 replies
    • 303 views
  7. உள்ளக விசாரணை என்பதனை TNA ஏற்றுக் கொள்ளவில்லை:- ஐநா மனித உரிமை ஆணையத்தினால் வெளியிடப்பட உள்ளதாக சனல் 4 வெளியான தகவல் என்பது கசிந்த ஆவணமோ அல்லது புனையப்பட்டதோ அல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் அக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்து உள்ளார். யாழ்.நீர்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சர்வதேச விசாரணைக்கு எதிராக உள்ளக விசாரணை ஏது வந்தாலும் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை உள்ளக விசாரணைக்கு சர்வதேச அமைப்புக்கள் ஒத்துழைத்தாலும் ஐநா ஒத்துழைப்பு வழங்கினாலும் உள்ளக விசாரணை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கையில…

  8. மஹிந்தவை காப்பாற்ற ஏற்படுத்தி கொள்ளப்பட்ட மைத்திரி - கோத்தபாய இணக்கப்பாட்டில் விரிசல்? [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 10:51.49 AM GMT ] கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டில் விரிசல் நிலைமை தோன்றியுள்ளதாக ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது தரப்பு இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படாமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இவ் இணக்கப்பாட்டிற்கமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினால் “எதிர்கால சான்றிதழ்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மேலதிகமாக ஜனாதிபதி தரப்பின…

    • 0 replies
    • 396 views
  9. தாஜுதீன் கொலையில் தனது மகனுக்குத் தொடர்பில்லையாம் – மகிந்த ராஜபக்ச கூறுகிறார்AUG 09, 2015 | 12:32by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணத்துடன் தனது மகனுக்குத் தொடர்பிருப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச தொடர்புபட்ட மும்முனைக் காதல் விவகாரத்தினாலேயே, வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதுகுறித்து கொழும்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மகிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “தாஜுதீன் மரணம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதை வரவேற்கிறேன். ஏனென்றால், எமது பெயரை இதிலிருந்த…

    • 0 replies
    • 388 views
  10. முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவு தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு தேவையில்லை என்று கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆதரவு வழங்குவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியமை தொடர்பில் அவரிடம் நேற்று கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், 'முரளிதரன் மக்கள் செல்வாக்கு இல்லாதவர். தமிழ் மக்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. அதேபோல், எந்தக் கட்சியும் அவரை சேர்த்துக்கொள்ளவும் இல்லை. இதனாலேயே, தமிழ்த்; தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்' என்றார். 'இவரின் ஆதரவு இன்றி பல தேர்தல…

    • 0 replies
    • 630 views
  11. வாக்களிப்பு அலையொன்று தோன்றுமா? நிலாந்தன்:- http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122752/language/ta-IN/---.aspx#.VcbgSoi9VL8.facebook

    • 2 replies
    • 1.6k views
  12. முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பொறியியல் – மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நடைபெற்றுவருகின்ற உயர்தரம் விஞ்ஞானப் பரீட்சையில் சிங்கள மாணவிகள் இருவர் தோற்றிவருகின்றமை மாவட்ட மாணவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெறுகின்ற பரீட்சையில் அவர்கள் இருவரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகத் தோற்றிவருகின்றனர். மாங்குளம் மகாவித்தியாலய அதிபர் மற்றும் மாங்குளம் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோரின் துணையுடனேயே மாணவிகள் பரீட்சையில் தோற்றியிருப்பதாக கோட்டக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு மாவட்டத்தில் தனிப்பட்ட ரீதியில் பரீட்சையில் தோற்றுவதாக இருந்தால் அந்தப் பிரதேசத்தில் குறைந்தது மூன்று …

  13. உள்நாட்டு விசாரணையில் எதிர்நோக்கப்படும் சிக்கல் [ ஞாயிற்றுக்கிழமை, 09 ஓகஸ்ட் 2015, 05:39.48 AM GMT ] போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில், சர்வதேச விசாரணை மூலமே தமக்கு நீதி கிடைக்கும் என்று தமிழர்கள் நம்பும் நிலையில், நம்பகமான உள்நாட்டு விசாரணை மூலம் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்போம் என்று இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது. நம்பகமான உள்நாட்டு விசாரணை விவகாரத்தில், தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் திருப்தியையும், நம்பிக்கையையும் அளிக்கும் வகையில், இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளத் தவறியிருக்கிறது. இப்போது, உள்நாட்டு விசாரணை விவகாரத்தில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான இரண்டு முக்கியமான சவால்களை இலங்கை அரசாங்கம் எதிர் கொண்டுள்ளது. முதலாவது, சுத்தமான குடிநீர…

    • 0 replies
    • 309 views
  14. கூட்டமைப்பின் பலம் தமிழ் வாக்காளர்களின் கையிலேயே உள்ளது – கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்AUG 09, 2015 | 2:04by கி.தவசீலன்in செய்திகள் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவும்- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும்- அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். கூட்டமைப்பின் பலம் தமது வாக்குகளில்தான் தங்கியுள்ளது என்பதனை ஒவ்வொரு தமிழ் வாக்காளர்களும் மறந்து விடக்கூடாது. இவ்வாறு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அந்த அறிக்கையில், “தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழை…

    • 0 replies
    • 490 views
  15. சிறிலங்காவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தனியான கடவுச்சீட்டு – நாளை முதல் நடைமுறைAUG 09, 2015 | 2:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலும், 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு தனியான கடவுச்சீட்டு பெற வேண்டும் என்ற கட்டாய நடைமுறை சிறிலங்காவில் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பொது சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலர் தென்னக்கோன், “பெற்றோரின் கடவுச்சீட்டுகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ளும் தற்போதைய நடைமுறையினால், சிறுவர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல்களை எதிர்நொக்க வேண்டியுள்ளது. நாளை முதல் விநியோகிக்கப்படவுள்ள, பயோமெட்ரிக் கடவுச்சீட்டுகளில் பத்து விரல்களின் ரேகை…

    • 0 replies
    • 405 views
  16. சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டதுAUG 09, 2015 | 3:45by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு (Presidential Security Division – PSD) முற்றாக கலைக்கப்பட்டுள்ளதாக பொது ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் அதிபர் பாதுகாப்புப் பிரிவு ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோக்களிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கண்டியில் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வில் சிறப்பு அதிரடிப்படையினர் தமது முதலாவது பாதுகாப்பை அவருக்கு வழங்கியிருந்தனர். …

    • 0 replies
    • 491 views
  17. புலிகளின் ஈகத்தை வைத்து நடத்தப்படும் ஈனத்தனமான அரசியல் பிழைப்புAUG 09, 2015 | 6:32by புதினப்பணிமனைin கட்டுரைகள் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது, தெற்கில் மட்டுமன்றி, வடக்கிலும் வாடிக்கையாகி விட்டது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளையும், அதன் தலைவர் வே.பிரபாகரனையும், தமது பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலைப் புலிகள், அதன் தலைவர் வே.பிரபாகரனை நம்பித் தான் பல அரசியல் கட்சிகள் களமிறங்கியிருக்கின்றன. சிங்களக் கட்சிகளும் அதற்கு விதிவிலக்கானவை அல்ல. கொள்கை ரீதியாகவோ, வேறு வழிமுறைகளின் ஊடாகவோ, தமிழ் மக்களின் வாக்குகளை தம்மால் கவர…

    • 0 replies
    • 516 views
  18. இலங்கை அரசியல் கைதிகள் எவரும் இல்லையென நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் அரசியல்கைதிகள் குறித்தோ அல்லது காணமற்போனவர்கள் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தோ அரசாங்கத்தினால் எந்த வித தீர்மானங்களையும் எடுக்க முடியாது,அடுத்த பாராளுமன்றத்தில் புதிய அமைச்சரவையின் கீழ் இது தொடர்பான முடிவுகளை எடுக்கவேண்டும்,தற்போதைக்கு நாட்டின் சட்;டங்களின் அடிப்படையில் செயற்படுவோம்.எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதி அரசியற்கைதி முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சோவே அவரும் விடுதலைசெய்யப்பட்டு விட்டார், பல்வேறு காரணங்களிற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்புஅரசியற் கைதிகள் என தெரிவிக்கின்றது, இவர்களில் சிலர் பல்வேறு கு…

  19. குண்டி வத்தினால் குதிரையும் புல்லுத் தின்னும் எண்டு எங்கடை பாட்டி என்னைப் பாத்து நக்கல் அடிக்கிறவா... இப்ப நடக்கிற அரசியல் கூத்துக்களைப் பாக்கேக்குல்லை இதுதான் எனக்கு நினைவுக்கு வருது. எங்கடை பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கிறது, எங்கடை அடையாளத்தை பாதுகாக்கிறது, மக்களின் தீர்ப்பு இதெல்லாம் சரியான முக்கியத்துவம். இந்த தேர்தலும் அப்பிடித்தான் அமையும்.. ஆனால் தமிழர் தாயகத்தில போடடியிடுறவையள் வாக்கு எடுக்கிறதுக்காய் என்னவெல்லாம் பேசுறினம் எண்டு பாருங்கோவன். தமிழ் தேசிய தலைவர்கள் இப்பதான் பிரபாகரன் எண்டுற பேரை உச்சரிக்கிறினம்.. அவர் ஆயுதம் தூக்கினதுக்கு இப்பதான் நியாயம் சொல்லுறினம்.. தமிழர் தாயக கொள்கைளை குறிச்சுத்தான் டெய்லி மீட்டிங்குகளிலை பேசுறினம்.. இதெல்லாம் அவையள் தே…

    • 0 replies
    • 294 views
  20. தேசிய இனப்­பி­ரச்சி­னைக்கு தமிழ் ­மக்கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய நிரந்­த­ர­மான, நியா­ய­மான அர­சி­யல்­ தீர்­வைக் ­கோ­ரியே எமது தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளி­யா­னது. ஆனால், மஹிந்­த ­ரா­ஜ­பக் ஷ முதல் இன­வாத அர­சி­ய­லா­ளர்கள் வரை நாட்­டைப்­ பி­ரித்து தமி­ழீழம் அமைக்­கப்­போ­கி­றார்கள் எனக் கூக்­கு­ர­லி­டு­கின்­றனர். நாட்­டைப் ­பி­ரிக்­கு­மாறு நாம் ஒரு­போதும் கோர­வில்லை. இவ்­வாறு அம்­பாறை மாவட்ட தேர்தல் பரப்­பு­ரைக்­காக வரு­கை­தந்த தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்தன் பாண்­டி­ருப்பில் உரை­யாற்­று­கையில் குறிப்­பிட்டார். இப்­ப­ரப்­பு­ரைக்­கூட்டம் கிழக்கு ­மாகா­ண­சபை உறுப்­பினர் மு.இரா­ஜேஸ்­வரன் தலை­மை­யி­ல் இடம் ­பெற்…

    • 0 replies
    • 1.9k views
  21. ஜனாதிபதி மைத்திரியை ஒரு ஜனநாயகவாதியாக கருதுகின்றேன்: சம்பந்தன் [ சனிக்கிழமை, 08 ஓகஸ்ட் 2015, 07:32.29 AM GMT ] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதியாக நான் கருதுகின்றேன். அவரது செயற்பாடுகளும் அவ்வாறாகவே அமைந்துள்ளது. அவர் நமது நாட்டில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். நேற்று இரவு காரைதீவில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால, மகாத்மா காந்தி, மார்டின் ஜோசப்கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களை பின்பற்ற விரும்புவதாக கூறுகின்றார். இந்த தலைவர்…

  22. இலங்கையில் இரண்டாம் தரப் பிரஜைகளாக எமது தமிழ் மக்கள் ஒருபோதும் வாழமுடியாது. எனவே, அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீடு சின்னத்திற்கு வாக்களித்து எமது உரிமைகளை வென்றெடுப்போம். - இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன். நேற்றிரவு புதன்கிழமை திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினை தற்போது சர்வதேச மட்டத்தை அடைந்துள்ளது. ஆனால், இன்னும் தீர்வு கிட்டவில்லை. ஏறத்தாழ 65 வருடங்களாக எமது போராட்டம் தொடர்கின்றது. தந்தை செல்வாவால் பல அரசியல் முயற்சி…

    • 27 replies
    • 2.5k views
  23. புலம்பெயர் போலித் தேசியவாத அமைப்புகள் ராஜபக்சவை ஏன் ஆதரிக்கின்றன? 90 களுக்குப் பிந்திய காலத்தில் புலிகளில் இணைந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகத்தில் கீழணிகளிலுள்ளவர்களே. வசதிபடைத்தவர்கள் வெளி நாடுகளுக்குச் சென்று தமது வாழ்க்கையை வளம்படுத்திக்கொண்டனர். இன்று தமிழ்த் தேசியம் பேசி வாக்குப் பொறுக்கும் பிரதானிகள் பலர் கொழும்பின் உயர்குடிகளைச் சார்ந்தவர்கள். சுமந்திரன் என்ற கொழும்பு உயர்குடி அரசியல்வாதியின் ஆளுமைக்குள்ளேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. பேரினவாத ஒடுக்குமுறையைச் சந்தித்திராத சுமந்திரன் போன்றவர்கள் யாழ்ப்பாணம் வரை சென்று அரசியல் பேசுவது தமது வர்க்க நலன்களுக்காக மட்டுமே. இதன் மறுபக்கத்தில் கொழும்பைச் சார்ந்த பணக்காரர்களில் ஒருவரும் கொழும்பு உயர…

    • 2 replies
    • 380 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.