ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இறுதி யுத்த அவலங்களைத் தொடர்ந்து தமிழ் மக்கள் பெளதீக ரீதியாகப் பலவீனப் படுத்தப் பட்டு இருந்த நேரத்தில் தமிழ் மக்களுக்கு தேவைப்பட்ட தலைமைத்துவத்தையும், வழிகாட்டலையும் உரிய நேரத்தில் கொடுக்கத் தகுதியற்று, தங்கள் சுயலாபங்களில் மட்டும் கவனம் செலுத்தியவர்கள், தேர்தலில் தமிழ் மக்கள் தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம். ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பினார். தனது காரியாலயத்தில் நேற்று முன்தினம் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து உரையாடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். அவர்களுடன் தொடந்து அவர் உரையாடுகையில், தமிழர் உரிமைப் போராட்டத்தின் ஒவ்வொரு…
-
- 1 reply
- 394 views
-
-
இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நவாலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் .... 2015ம் ஆண்டின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இருதேசம் ஒரு நாடு என்றகோசத்துடன் இத் தேர்தலில் பங்குபற்றுகிறது.எனினும் இந்த விடயத்தில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் ஜீ.ஜீ பொன்னம்பலம் 1947ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி பிரித்தானிய குடியேற்ற நாடுகள் மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்த கருத்து மிக முக்கியமானது. இந்தக்காலத்தில் தந்தை செல்வநாயகமும் …
-
- 4 replies
- 883 views
-
-
பாக்கியசோதி சரவணமுத்து: குளோபல் தமிழ் செய்தியாளர்:- தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுத்துள்ள சமஷ்டி அரசியல் தீர்வுக் கோரிக்கையை சிலர் பிரிவினையாக திரிவுபடுத்த முயற்சிப்பதாக பாக்கியசோதி சரவணமுத்து குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த காலத்தை நோக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயணிக்கிறது என்று கூறி ஒரு தரப்பினரை பயமுறுத்தவும் அதன் ஊடாக இனவாத்தை தூண்டவுமே இவ்வாறு திரிவுபடுத்தும் பேச்சுககள் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஒற்றையாட்சிக்குள் அல்லாத இலங்கை என்றும் அதேநேரம் பிரிவுபடாத இலங்கை என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் அதில் பிரிவினை தொடர்பில் எதுவுமில்லை என்றும் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வ…
-
- 0 replies
- 315 views
-
-
-
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை அங்கு பயணம் மேற்கொள்கின்றார். இவர் வடக்கில் இன்று முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடம்பெறும் ஐக்கிய தேசிய முன்னணியின் (ஐக்கிய தேசியக் கட்சியின்) தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வன்னித் தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பரப்புரைக் கூட்டம் காலை 10 மணிக்கும், மன்னார் மாவட்டத்தின் பரப்புரைக் கூட்டம் நண்பகல் 12 மணிக்கும், வவுனியா மாவட்டத்தின் பரப்புரைக் கூட்டம் பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறவுள்ளது. இதனையடுத்து யா…
-
- 0 replies
- 684 views
-
-
கொழும்பு தனியார் பேருந்து நிலையத்தில் பயணப் பொதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் சம்பவ தினத்திற்கு முதல் நாள் கொழும்பிலுள்ள லொட்ஜ் (தங்கும் விடுதி) ஒன்றில் தங்கியிருந்ததாக புலனாய்வு விசாரணைகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. எனினும், எந்த தங்கும் விடுதியில், யாருடன் தங்கியிருந்தார் என்பது குறித்த விரிவான விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும், விடுதியில் கடமையில் இருந்த ஊழியர் உள்ளிட்ட பல தரப்பினரிடம் இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.tamil.srilankamirror.com/news/item/3740-2015-07-30-10-15-40
-
- 1 reply
- 834 views
-
-
யுத்தத்தில் வெற்றி பெற பங்களித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இராணுவ அதிகாரிகள் மற்றும் வேறு எந்த தரப்பினரையும் எந்வொரு விசாரணைக்கும் உட்படுத்த அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்த அரசாங்கம், வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்தவர்கள் மற்றும் பணம் பறிப்பதற்காக கொலை செய்தவர்கள் தொடர்பில் பொறுப்பேற்ற முடியாது என்றும் குறிப்பிட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கை, எதிர்வரும் செப்டெம்பரில் வெளிவந்த பின்னர், சர்வதேச நியமனங்கள் மற்றும் தராதரங்களுக்கு அமைய நம்பகமான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையொன்றை ஆரம்பிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது என அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (30) நடைபெ…
-
- 0 replies
- 266 views
-
-
சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்ற 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான தனது மகள், தான் பணிபுரிந்த இடத்தில் கழுத்து அறுபட்டு உயிரிழ்ந்துள்ளதாக, வவுனியா சிதம்பரம் அகதிமுகாமில் வசிக்கும் சத்திவேல் பொன்மலர் (வயது 60) தெரிவித்துள்ளார். உயிரிழந்த மகள் தொடர்பில் பக்கசார்பற்ற மரண விசாரணையை முன்னெடுக்க சடலத்தை நாட்டுக்கு கொண்டுவந்து தரும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுனியா, சிதம்பரம் அகதி முகாமில் இருந்து சவூதி அரேபியாவின் தமாம் நகரத்தில் உள்ள வீட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற சுப்பா கமலாதேவி(வயது 36) என்ற, இரண்டு குழந்தைகளின் தாயான பெண்னே இவ்வாறு உயிரிழந்துள்ளார். http://www.tamilmirror.lk/151096#sthash.qDyLtbWk.dpuf
-
- 5 replies
- 819 views
-
-
அம்மி மிதித்து அருந்ததி காட்டி மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? யாழ் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் வாதப் பிரதி வாதம் .. யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, அம்மி மிதித்து அருந்ததி காட்டி மந்திரம் ஓதி பெரியோர் முன்னிலையில் கட்டப்பட்ட தாலி விவாகரத்தின் பின்னர் யாருக்கு சொந்தம்? – என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு வாதப்பிரதிவாதம் எழுந்தது. நீண்ட விவாததத்தின் பின்னர், திருமணத்தின் அடையாளமாகக் கட்டப்பட்ட தாலியும் கொடியும் விவாகரத்து பெற்ற பெண்ணுக…
-
- 4 replies
- 1.3k views
-
-
பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரம் எமது கைக்கு வரும்! - என்கிறார் சம்பந்தன் [Thursday 2015-07-30 18:00] எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரம், எமது கைக்கு வருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூதூரில் நேற்றுமாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கான முதல் அடியை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டார். மேலும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய கட்டாயம் உள்ளதாகவும், இரு சமூகங்களின் உறவை பலப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார். மூதூர் முஸ்லிம…
-
- 2 replies
- 387 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது 4 ஆசனத்தையாவது தமிழர்கள் கைப்பற்ற வேண்டுமாயின் அனைவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். வாகரையில் நேற்று புதன்கிழமை (30) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்ற பதவியை கொண்டு என்னையோ, எனது குடும்பத்தையோ, எனது குடும்ப உறவுகளையோ அபிவிருத்தியடைய செய்யவில்லை. தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுத்து பணமும் பெறவில்லை. காரணம் இது ஒரு தூய பணி. அதை திறம்பட மேற்கொள்வதை கடமையாக கொண்டேன். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவானது நீண்டகாலமாக இம்மண்ணில் எது தமிழ் இனத்தின் உரிமைக்காக போராடிய எமது உறவுகளின் …
-
- 1 reply
- 344 views
-
-
வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி, அந்தக் கிழவி என்றைக்குமே நீதிக்கு துரோகம் செய்ததில்லை. வரலாறு என்ற கண்டிப்பான கிழவி என்றைக்கோ ஒரு நாள் துன்பப்படும் மக்களுக்கு நீதிபெற்றுத்தருவாள். சிறிய மக்கள் கூட்டத்தின் கூட்டுக்காயங்களுக்கு மருந்தையும் அவள் பெற்றுத்தருவாள். பாதிக்கப்பட்ட அரசற்ற சிறிய மக்கள் கூட்டங்களுக்கு வரலாறு ஒருநாள் நீதியைப் பெற்றுத்தரும்” என ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு ‘பூர்வீக நோக்கில் புதுக்குடியிருப்பு’ என்கிற வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டின் போது எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த அரசியல் மற்றும் சமூக நிலையியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்களின் உரை முழுமையாக காணொலியில்: http://tamilleader.com/?p…
-
- 0 replies
- 413 views
-
-
கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கில் மாறி வந்த அரசாங்கங்கள், தமிழ் மக்களை ஏமாற்றியதே வரலாறாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஆர்.துரைரெட்ணம் தெரிவித்தார். மாங்கேணியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் ஜநனாயக ரீதியான தேர்தல் நடப்பதற்கான அவதானிப்பினை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலுள்ள 40சதவீத மக்களின் விகிதாசாரத்தை அடையக் கூடியவாறு, இந்த 40சதவீத பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்ளக் கூடியவாறு வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் மத்திய அரசாங்கத்திடம் உரத்துச் சொ…
-
- 0 replies
- 520 views
-
-
ஐ.நா விசாரணையினை உள்ளக விசாரணையாக முடக்கியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார். ஐ.நா விசாரணை தமிழ் மக்களுக்கு நீதியாக அமையாது என சனல் 4 வெளியிட்டுள்ள செய்திக்கு கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளக விசாரணைக்கு தயார் என பகிரங்கமாகவே கூறியிருக்கின்றார்கள். இலங்கையில் உள்ளக விசாரணையினை நடாத்துவதன் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கம் மாறியதுடன், உள்ளக விசாரணையினை வலியுறுத்துவதன் ஊடாக தமிழ் மக்களுக்கு…
-
- 0 replies
- 205 views
-
-
இனத்துவேச அரசியல் செய்பவர்களை கண்டிக்க வேண்டும் சுரேஷ் பிரேமசந்திரன்:- இலங்கை அரசு உள்ளக பொறிமுறையின் ஊடாக யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொண்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஐநா அறிக்கையில் உள்ள சில விடயங்கள் கசிந்துள்ளதாக சனல் 4 ஊடகங்கள் ஊடாக சில செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த செய்திகளின் பிரகாரம் பார்கின்ற போது முக்கியமாக இது ஒரு உள்ளக பொறிமுறையை உருவாக்குவதற்காக சில ஆலோசனைகள் சொல்லப்பட்ட…
-
- 0 replies
- 159 views
-
-
பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரம் எமது கைக்கு வரும்! - என்கிறார் சம்பந்தன் [Thursday 2015-07-30 18:00] எதிர்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரம், எமது கைக்கு வருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மூதூரில் நேற்றுமாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதற்கான முதல் அடியை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென அவர் குறிப்பிட்டார். மேலும் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய கட்டாயம் உள்ளதாகவும், இரு சமூகங்களின் உறவை பலப்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார். மூதூர் முஸ்லிம…
-
- 0 replies
- 213 views
-
-
எதுமே கிடைக்காத உள்ளக விசாரணையொன்றின் மூலம் எமது மக்கள் நடுத்தெருவில் விடப்படுவதற்கு இலங்கை அரசிற்கு அப்பால் கூட்டமைப்பு முழுமையாக எமது மக்களிற்கு பொறுப்பு கூறவேண்டியிருக்கும். ஆட்சி மாற்றம் கோசத்தின் கீழ் கூட்டமைப்பே துரோகத்திற்கு பொறுப்பு கூறவேண்டியிருக்கும்.https://youtu.be/Jq6vt0H0THM என்றோ ஒருநாள் எமது மக்களிற்கு இலங்கை அரசு பொறுப்புக்கூற வேண்டிவரும். அப்போது இலங்கை அரசுடன் இணைந்து தமிழ் மக்களிற்கு செய்த துரோகத்திற்கு கூட்டமைப்பும் பொறுப்பு கூற வேண்டிவருமென எச்சரித்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்ட கஜேந்திரகுமார் தனது வாயிலிருந்து ஒரு தடைவ சுமந்திரனை முட்டாளென…
-
- 0 replies
- 198 views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை மேலதிக பகுப்பாய்வு செய்து அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிப்பதற்கு சுமார் 27 ஆயிரம் அமெரிக்க டொலர் தேவைப்படுவதால் அதை நிறுத்திவைக்குமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கடந்த 2013 ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இருந்து குடிதண்ணீர் வழங்குவதற்காக வீதி ஓரத்தில் குழாய் பதிப்பதற்காக குழி வெட்டிப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து முன்னாள் மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி வைத்தியரெட்ண தலைமையில் அகழ்வு பணி இடம்பெற்றிருந்தது. இதன் போது 83 மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பபட்டிருந்ததுடன் அகழ்வு …
-
- 0 replies
- 283 views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை மேலதிக பகுப்பாய்வு செய்து அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிப்பதற்கு சுமார் 27 ஆயிரம் அமெரிக்க டொலர் தேவைப்படுவதால் அதை நிறுத்திவைக்குமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் தெரிவித்தனர். கடந்த 2013 ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் இருந்து குடிதண்ணீர் வழங்குவதற்காக வீதி ஓரத்தில் குழாய் பதிப்பதற்காக குழி வெட்டிப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து முன்னாள் மன்னார் நீதிபதி ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி வைத்தியரெட்ண தலைமையில் அகழ்வு பணி இடம்பெற்போது 83 மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பபட்டிருந்ததுடன் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டிருந்த…
-
- 1 reply
- 395 views
-
-
கிழக்கின் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாக புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த காங்களில் பாகிஸ்தானிலிருந்து சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்தவர்கள் கிழக்கிற்கு பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஜிஹாதிய இயக்கங்களும் கிழக்கில் செயற்பட்டிருந்ததாகவும் அது குறித்த தகவல்களையும் புலனாய்வுப் பிரிவினர் திரட்டியிருந்தனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய இலங்கையின் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, மலேசிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள்…
-
- 1 reply
- 385 views
-
-
சுய விருப்பின் பேரில் யாழில் இருந்து கொழும்புக்கு பஸ் வண்டியில் சென்றுள்ளார்:- யாழில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரான மு.தம்பிராஜாவின் 19 வயதான திருவளவன் தம்பிராஜா வெள்ளவத்தையில் வைத்து நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதய குமார வுட்லரின் ஆலோசனைக்கு அமைய யாழில் இருந்து கொழும்புக்கு வந்த விஷேட பொலிஸ் குழு, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகஹவத்த ஆகியோருடனான குழுவுடன் இணைந்து அவரை இவ்வாறு கைது செய்ததாகவும், நேற்று இரவு 11.00 மணிய…
-
- 6 replies
- 1.3k views
-
-
சிறிலங்காவில் சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்புபோன்ற வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றது. ‘இன்னமும் முடிவுறாத போர்: சிறிலங்காவில் சித்திரவதைகள் மற்றும் பாலியல்வன்முறைகளில் இருந்து உயிர் தப்பியோர்- 2009- 2015′ என்ற தலைப்பில்வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில்,40 ற்கும் மேற்பட்ட இரகசிய தடுப்பு நிலையங்களின் பெயர்களும்60ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றவாளிகள் மற்றும் துன்புறுத்தலாளர்களின் பெயர்களும்பதிவு செய்யப்பட்டுள்ளன. உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பினால் (ITJP) வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பெயர்கள் தவிர வேறு பல சித்திரவதை முகாம்கள் உள்ளன என்று குறிப்பி…
-
- 0 replies
- 421 views
-
-
மஹிந்த பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராடா நிறுவன ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படலாம் என பொலிஸ் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ராடா நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் துறைசார் விடயங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் காணப்பட்டது. 2004ம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தம் காரணமாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் இழந்தவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே ராடா நிறுவனத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது…
-
- 0 replies
- 360 views
-
-
தமிழர் பிரச்சினைக்கு சமஸ்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒரே நாட்டில் ஐக்கியமாக வாழக்கூடிய சூழ்நிலைக்கு குந்தகம் ஏற்படக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் ஐக்கிய தேசியக் கட்சி எடுக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய மற்றும் பிளவுபடாத இலங்கைக்குள் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தினை அனுமதிக்கப் போவதில்லை என அவர் குறிப…
-
- 0 replies
- 273 views
-
-
ஈபிடிபி உறுப்பினருக்கு மரணதண்டனை! - மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு. [Thursday 2015-07-30 06:00] வந்தாறுமூலை பிரதேசத்தில் கடந்த சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இளம் குடும்பப் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவருக்கு நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சந்திரமணி இவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். வந்தாறுமூலை பிரதேசத்தில் கடந்த சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இளம் குடும்பப் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவருக்கு நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்…
-
- 0 replies
- 622 views
-