Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிவெறி பிடித்தவர் என்று நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர பிபிசியிடம் தெரிவித்தார். இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர முன்னர் இருந்த ஜனாதிபதிகளைப் போல இவரும் கண்ணியமாக அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளில் பணத்தை வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடவடிக்கைகள் சூடுபிடித்து வரும் சூழலில், வெளியுறவு அமைச்சரின் கடுமையான இந்த விமர்சனங்கள் வந்துள்ளன. மஹிந்த ராஜபக்ஷ வெட்கமற்று பதவி வெறியின் காரணமாகவே மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார் என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ மீதான க…

  2. வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசத்தில் சில பிரதேசம் மக்கள் மீள் குடியேறுவதற்கு நாளை அனுமதிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் மீள் குடியேற்ற அமைச்சு சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி பிரதமர் மற்றும் இராணுவ அதிகாரிகளுடன் வலி.வடக்கில் விடுவிக்கப்படாத சில பிரதேசங்களை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி இருந்தது. அதனடிப்படையில் நாளை சனிக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் செயலளார்கள் யாழில் …

    • 10 replies
    • 762 views
  3. வலி.வடக்கில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் ஒரு சில தினங்களில் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள முன்னரங்க வேலிகளை இராணுவத்தினர் பலப்படுத்தி வருகின்றார்கள். முன்னர் அப்பகுதியில் மரக்குற்றிகளை நட்டு முள் வேலி அடைத்து இருந்தார்கள். தற்போது மரக்குற்றிககளை அகற்றி சீமெந்து தூண்கள் நடப்பட்டு முள் வேலிகளை இராணுவத்தினர் அடைத்து வருகின்றார்கள். இராணுவத்தினரின் இந்த திடீர் செயற்பாட்டால் தமது காணிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்த்து இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர், பலாலி இராணுவ தலமையகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள மக்களுடைய குடிமனைகளுடன் கூடிய பகுதிகளை வ…

    • 0 replies
    • 435 views
  4. யாழ்ப்பாணம் தொழினுட்பக் கல்லுரியில் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களை தமிழரசுக் கட்சியின் பேராசிரியர் சிற்றம்பலம் மிரட்டியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக் குழுவான பபரல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான செய்தி Election monitor, Campaign for Free and Fair Elections (CaFFE) said that Tamil National Alliance (TNA) National List nominee Prof S. Sitampalam threatened students of the Jaffna Technical College after they objected to his campaigning at the premises on 20 July. "Sitampalam held a meeting at the Jaffna Technical College on 20 July at 12:30. He was invited by the Director of the College, N. Yogarajan and Sitampalam toured the Colle…

    • 1 reply
    • 600 views
  5. பெரும் தொழில் முயற்சியாளர்களின் சக்தி விரயத்தை கட்டுப்படுத்துவதற்கான மாற்று வழிகள் பற்றிய பயிற்சிப் பட்டறை இன்று புதன்கிழமை கல்லடி கிறீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது. ஜேர்மன் சர்வதேச கூட்டுத்தாபனத்துடன் இணைந்து மட்டக்களப்பு ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் மற்றும் விவசாய நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உணவு விடுதிகள், ஹோட்டல்கள் நடத்தும் 25 தொழில் முயற்சியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்களது மாதாந்த மின்சாரப் பட்டியல்கள் மற்றும் பராமரிப்பதில் ஏற்படும் செலவீனங்கள் பற்றி விவரித்தனர். இலங்கை சக்தி முகாமையாளர்கள் நிலையத்தின் பொறியியலாளர்களினால் செலவைக் குறைப்பதற்கான வழிவகைகள் பற்றி விளக்கமளித்தனர். ஜேர்மன் சர்வதேச கூட்டுத்…

    • 0 replies
    • 321 views
  6. இலங்கையின் சம்பூர் மக்களை சந்தித்த பிரிட்டிஷ் தூதர் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள சம்பூர் பிரதேச மீள்குடியேற்றத்திற்கு ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் வழியாகவே உதவுவது பற்றி கவனம் செலுத்தப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய தூதர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ள அவர், திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்திற்கும் சென்றிருந்தார். அந்தப் பிரதேசத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டு தமது காணிகளை துப்பரவு செய்யும் மக்களையும் அவர் சந்தித்து உரையாடினார். மீள்குடியேற்றத்திற்கு தயாராகிவரும் தங்களுக்கு தற்காலிக கொட்டில்கள், கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் போன்றன உடனடித் தேவையாக இருப்பது பற்றி மக்க…

    • 0 replies
    • 223 views
  7. மகிந்த அரசின் தவறுகளே வீழ்ச்சிக்குக் காரணம் – ஒப்புக்கொள்கிறார் கோத்தாJUL 22, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. கொழும்பு, பத்தரமுல்லையில் நேற்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மீரிஹானவில் வெள்ளை வான் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், நானும் மீரிஹானவில் தான் வசிக்கிறோம். நாங்கள் ஆபத்தில் இருக்கிறோம். வெள்ளை வான் கலாசாரத்தை ஊக்குவித்ததாக எம்மைக் குற்றம்சாட்டிய சோபி…

  8. சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாட்டில் ஐவர் கைது – பிரிஐ தகவல்JUL 21, 2015 | 2:21by அ.எழிலரசன்in செய்திகள் தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கார் ஒன்றை மறித்து சோதனையிட்ட அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தக் காரில் இருந்து, செய்மதி தொலைபேசி ஒன்று, நான்கு புவிநிலைகாட்டி கருவிகள், 75 சயனைட் குப்பிகள், 300 கிராம் சயனைட் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அந்தக் காரில் பயணித்த 5 பேர் கைது செய…

    • 3 replies
    • 611 views
  9. கோத்தா படுகொலை முயற்சி – குற்றத்தை ஒப்புக்கொண்ட மைத்திரிக்கு 6 மாத சிறைத்தண்டனைJUL 22, 2015 | 13:20by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைப் படுகொலை செய்ய முயன்ற வழக்கில், சிங்களவர் ஒருவருக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் நாள், கோத்தாபய ராஜபக்சவைப் படுகொலை செய்ய விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சுரேஸ்குமார் முயற்சி மேற்கொண்டிருந்தார். அவருடன் தொடர்பு வைத்திருந்த கம்பகாவைச் சேர்ந்த மைத்திரி சமன் குமார என்பவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கோத்தாபய ராஜபக்சவை படுகொலை செய்யும் விடுதலைப் புலிகளின் முயற்சி தொடர்பாக தகவல…

    • 0 replies
    • 312 views
  10. அக்குரஸ்ஸவில் ஆதரவாளரைத் தாக்கிய மகிந்த – காணொளி தீயாகப் பரவியதால் கலக்கம் JUL 22, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அக்குரஸ்ஸவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரையில், ஆதரவாளர் ஒருவரை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆவேசமாகத் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்குரஸ்ஸ பேருந்து நிலையத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது. கூட்டம் நடந்த மேடையை நோக்கிச் சென்று கொண்டிருந்த மகிந்த ராஜபக்ச திடீரென ஆதரவாளர் ஒருவரை நோக்கி எரிச்சலுடன் ஆவேசமாகப் பாய்ந்தார். உடனடியாக மகிந்த ராஜபக்சவின் மெய்க்காவலர்கள், அவரை இழுத்து மேடையை நோக்கி அழைத்துச் சென்றனர். மகிந்த ராஜபக்சவின் கைய…

    • 0 replies
    • 840 views
  11. புற்றுநோயோடு போராடும் வன்னிச் சிறுமி லக்சனா!: மன்னார் அமுதன்:- நேற்று யாழில் இருந்து திரும்பும் போது “இந்த ஜன்னலை திறந்து விடுங்க” என்ற குரலிற்கு திரும்பிப் பார்த்தேன். குரலின் சொந்தக்காரி சீட்டிலிருந்து இறங்கி உற்சாகமாய் ஓடிக்கொண்டிருந்தாள். கையிலொரு இனிப்புடன் மீண்டும் அவள் வரும் போது தான் பார்த்தேன், அவள் கண்களில் ஒன்று காயமடைந்திருந்தது. அருகில் வந்தமர்ந்த அவளின் அம்மம்மாவிடம் கேட்ட போது ”அம்மம்மா சொன்னது ஒரு இடிபோல் தான் எனக்குள் இறங்கியது. அந்தச் சுட்டிப் பெண்ணின் பெயர் லக்சனா... 6 வயது.... இடது கண்ணில் ஏற்பட்ட புற்றுநோயால் அதை அகற்றி இப்போது பிளாஸ்டிக் கண்களோடு திரிகிறாள்.. பின்பு கையில் ஏற்பட்ட புற்றுநோய், இப்போது உடலிலும் பரவியுள்ளது... தெள்ளிப்பளையில் தொடர்…

    • 0 replies
    • 532 views
  12. வீடுகள் இல்லாதவர்களுக்கு வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றவர்களினால் ஒரு வீட்டையேனும் இதுவரையில் கட்டிக்கொடுக்க முடியவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு தனியார் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (21) மாலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ் மக்களுக்கு விடிவு வந்துவிட்டால் தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் பிழைப்பு நின்றுவிடும் என்பதால், அவர்கள் தமிழ் மக்களுக்கு விடிவு வந்து விடக்கூடாது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடக் கூடாது என்பதில் சில தமிழ் அரசி…

    • 3 replies
    • 410 views
  13. தேர்தலின் பின்னர் அமையவிருக்கும் புதிய ஆட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் அவர் மூலமாக நாம் முழுமையான அரசியல் தீர்வைப் பெறவேண்டும். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் மிக்க கட்சியாக 22 உறுப்பினர்ளைப் பெறவேண்டும். இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டும். இதுவே தெளிவான இலக்கு. ஒவ்வொரு தமிழ் மகனும் இந்தத் தெளிவைப் பெற வேண்டும். புத்திஜீவிகள் தெளிவுபடுத்தவும் வேண்டும். இவ்வாறு மாவடிமுன்மாரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் உரையாற்றிய இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர் பா. அரியநேந்திரன் கூறினார். http://virakesari.lk/articles/2015/07/19/அடுத்த-ஆட்சியில்-தீர்வைப்-பெறுவதற்கு-கூட்டமைப்பைப்-பலப்படு…

    • 4 replies
    • 536 views
  14. தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக மேடைக்குச் சென்றுகொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தனது கட்சி தொண்டரை தாக்கச் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று அரச ஊடகங்களில் ஒளிபரப்பாகின. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதன்போது மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகிந்த ராஜபக்ச ஆதரவாளர் நெரிசலில் சிக்கிக் கொண்டார். அப்போது தொண்டர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச மேடையில் ஏறுவதற்கு முன்பாக அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். மகிந்த ராஜபக்சவும் குறித்த ஆதரவாளரைத் தாக்க கையை உயர்த்தினார். எனினும், கூட்ட நெரிசலில் அவர் இழுபட்டுச் செல்ல, அவரைச் சுற்றியிருந்தவர்கள் மகிந்த ராஜபக்ச…

    • 2 replies
    • 489 views
  15. வடக்கில் தேர்தலை நடத்தியதன் விளைவே மஹிந்த ராஜபக்ஷவின் சாம்ராச்சியம் சரிய காரணமாகிவிட்டது. வடக்கின் தேர்தலை நடத்தாதிருந்தால் இன்றும் மஹிந்த தான் ஜனாதிபதி, நான் பாதுகாப்பு செயலாளராக இருந்திருப்பேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மீண்டும் மஹிந்த அரசாங்கத்தை உருவாக்கி நாட்டின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில். நாட்டில் நல்லாட்சி, ஜனநாயகம் பற்றி பேசி எம்மை சர்வாதிகாரியாக சித்தரித்தவர்கள் இன்று நாட்டில் என்ன செய்கின்றனர். மஹிந்த ராஜபக் ஷவை அன…

    • 5 replies
    • 795 views
  16. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதுJUL 20, 2015 | 5:17by கார்வண்ணன்in செய்திகள் வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கும் முயற்சிகளை தேர்தல் முடிந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்கார தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்திருந்த நிலையிலேயே, ஆளுனர் தரப்பில் இந்த முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுமதி மறுத்து வந்தது. எனினும், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அண்மையில் மாகாண முதலமைச்சர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்த போது, வடக்கு மாகாணசபை முதலமைச்சர் நிதியத்தை உரு…

    • 10 replies
    • 1.2k views
  17. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரஜா உரிமையை இரத்துச் செய்ய வேண்டும் பரிந்துரைக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பிரஜா உரிமையை இரத்துசெய்வதாயின், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றின் பரிந்துரைக்கமைய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான் ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமு; எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் ஆற்றிய உரையை மையப்படுத்தி மகிந்த ராஜபக்ச தரப்பில் இந்த அறிக்கை வெிளயிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச புலிகள் இயக்கத்திற்கு நிதி வழங்கினார் என்று ''ஜனாதிபதி ஆணைக்குழு'' விசாரணைகளின் மூலம் உறுதியானால் மகிந்த …

    • 0 replies
    • 390 views
  18. தென்னிலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வினை வழங்காது தொடர்ந்து இழுத்தடிக்கும் என்றால் சர்வதேசத்தின் பங்களிப்புடன்பிரிந்து செல்வதைத் தவிர எந்த வழியும் இல்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் குறித்து ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது இதனை அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ எதிர்வரும் நாடாளுமன்றத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக கூட்டமைப்பு காணப்படும். எமது நீடித்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டி நிபந்தனை அடிப்படையில் ஆதரவினை வழங்குவோம். அவ்வாறு அவர்கள் எமது பிரச்சனைக்குத் தீர்வு வழங்கவில்லை என்றால் ஆட்சியை கவிழ்ப்போம். …

    • 13 replies
    • 1.8k views
  19. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொண்டு போராட்டக் களத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படும் இலங்கையர் தொடர்பிலான விசாரணைகளை கிழக்கு மாகாணத்திலும் மேற்கொள்ளமாறு பணிப்பரை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வெளிநாட்டாரின் நடமாட்டங்கள் குறித்து தீவிரமாகக் கண்காணிக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/150633#sthash.a5qvNfuu.dpuf

    • 0 replies
    • 220 views
  20. எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே முதலமைச்சரின் லண்டன் பேச்சு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. நீண்ட அவரது உரையை அரச தரப்பினரல்ல, கூட்டமைப்பின் தலைவர்கள்தான் வரிக்கு வரி நுணுக்கமாகப் படிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. பல விடயங்ளுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாக அவர்கள்தான் உள்ளார்கள். ‘ஒரு நாடு இரு தேசம்’ என்று முன்னர் சொன்னதை சற்று மாற்றியமைத்து, இலங்கையில் இரு தேசிய இனங்கள் இருக்கின்றன என முதல்வர் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. தேர்தல் நடைபெறும் நிலையில் ஒரு தரப்புக்கு அது சாதகமாகிவிடும் என்பதால் நிதானமாக அந்த மாற்றத்தை முதல்வர் செய்துள்ளார் போலும். லண்டன் பயணம் முடிகின்றது. சில தினங்களில் முதல்வர் நாடு திரும்பவுள்ள நிலையில் எழும் முக்கிய கேள்வி: கூட்டமைப்புக்கு ஆதரவாக தே…

  21. கிளிநொச்சி தட்டுவன்கொட்டி பிரதேசத்தில் தொடர்ந்து சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்;கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி பிரதேசத்தில் தினமும் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெற்று வருகின்;றது. குறிப்பாக ஊரியான் குளத்தின் கீழான பயிர்ச்செய்கை நிலங்களில் குறித்த மண் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், இரவு வேளைகளில் கனரக வாகனங்களில் மணல் ஏற்றிச்செல்லப்படுவதுடன்; இதனைத்தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக கடற்கரையோரங்களில் உள்ள உவர்நீர் கலந்;த மண்ணினையும் ஏற்றிச் சென்று வேறு இடங்கள…

    • 0 replies
    • 236 views
  22. வடமாகாண சபையால் ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பனை அபிவிருத்தி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு பனை அபிவிருத்தி வாரத் தொடக்கமான நாளை புதன்கிழமையில் இருந்து இறுதி நாளான எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணக் கூட்டுறவு அமைச்சின் ஏற்பாட்டில் பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சங்கமும் பங்கேற்கும் இக்கண்காட்சி நாளை புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்குத் திறந்து வைக்கப்படவுள்ளது. தினமும் காலை 10 மணியில் இருந்து மாலை 8 மணிவரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் பனைசார் கைவினைப் பொருள்கள், பனைசார் பாரம்பரிய உணவுவகைகள், பனைசார் ஓளடதங்கள், …

    • 0 replies
    • 391 views
  23. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து சிரியாவில் விமானக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த இலங்கையரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலங்களைப் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராய் செய்லானி என்ற 37 வயதான மேற்படி நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை நடத்துமாறு மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரை பணித்துள்ள பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன், அதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றையும் நியமித்துள்ளார். கண்டி, வெரல்லகமவில் பிறந்த முஸ்லி நிலாம்தன் என்ற இயற்பெயருடைய இந்நபர், மேற்படி பயங்கரவாத அமைப்பில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடிய போது, அமெரிக்க வான்படையினர் கடந்த வாரம் நடத்திய விமான தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார். அபு செ…

    • 0 replies
    • 255 views
  24. மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்கு 149 மில்லியன் ரூபா கொடுத்த சீன நிறுவனம் – விசாரணையில் அம்பலம்JUL 22, 2015 | 1:22by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலின் போது, அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்காக சீன நிறுவனம் ஒன்று 149 மில்லியன் ரூபாவை வழங்கியது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு- மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைகளுக்காக சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் கடந்த ஆண்டு 149 மில்லியன் ரூபாவை வழங்கியது தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது. சீன துறைமுக பொறியியல் நிறுவனமே சிறிலங்காவில், ம…

    • 0 replies
    • 270 views
  25. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்க இந்திய மத்திய அரசு கடும் எதிர்ப்புJUL 22, 2015by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோருக்கு கருணை காட்டக் கூடாது என்று, உச்சநீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு நேற்றுத் தெரிவித்தது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், சாந்தன், நளினி (முருகனின் மனைவி), ராபர்ட், பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு நேற்று விசா…

    • 0 replies
    • 567 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.