ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
அநுர அரசாங்கம் டீசலை 100 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை தற்போதைய அநுர அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினர் எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என்று தேர்தல் மேடைகளில் கூறிவந்தனர். அதன்படி, லிட்டருக்கு 150 ரூபாய் குறைக்கவேண்டும். தற்போதைய சட்ட விதிகளுக்கமைய, 30ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும். டீசலின் விலை எனவே அவர்கள் வாக்குறுதி அளித்தபடி வரிகளை நீக்கினால், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 471 views
- 1 follower
-
-
28 SEP, 2024 | 12:43 PM (எம்.நியூட்டன்) புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சங்கத்தின் போது அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் அவர் தெரிவிக்கையில் நாம் ஒரு இடதுசாரி என்ற வகையில் புதிய ஜனாதிபதியை வரவேற்கிறோம்.எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்கள் தொண்ணூறு வீதமானவர்கள் இருக்கின்றார்கள். வாழ்க்கைச் செலவு மாறி அதிகரித்து இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி பாரிய மார்க்சிச நிலைப்ப…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
இலக்கிய மாதத்தையொட்டி 25 ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் "கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியை" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டுள்ளார். இதன்போது இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் சமந்த இந்தீவர,சிறுவர் புத்தகங்கள் தொடர்பிலான தேசிய கொள்கைப் பத்திரத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வழங்கி வைத்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) நடைபெறும் கண்காட்சிக்கு வருகை தந்திருந்த மக்கள் ஜனாதிபதிக்கு விசேட வரவேற்பளித்தனர். 400 புத்தக கூடங்கள் இங்கு 400 புத்தக கூடங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றைப் பார்வையிட வந்திருந்த மக்களோடு ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரைய…
-
- 1 reply
- 262 views
- 1 follower
-
-
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறிப்பிட்டளவில் சீரமைக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய சலுகைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்திருந்தார். சட்டத்தின்படி,ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும் அவரின் வாழ்நாளில் வாடகையின்றி பொருத்தமான குடியிருப்பைப் பயன்படுத்த உரிமை உண்டு. மாதாந்த கொடுப்பனவு பொருத்தமான குடியிருப்பு வழங்கப்படாவிட்டால், மாதாந்த ஓய்வூதியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு இணையான மாதாந்த கொடுப்பனவு அவருக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியை வகிக்கும் ஒருவரு…
-
- 1 reply
- 684 views
- 1 follower
-
-
28 SEP, 2024 | 11:52 AM (எம்.நியூட்டன்) வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,” எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அஞ்சனா ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகி, நான்காம் திகதி வெள்ளிக்கிழமை வரையிலான, மூன்று தினங்கள் கண்காட்சி நிகழ்வு இடம் பெறவுள்ளது. முப்பதிற்கும் மேற்பட்ட விடயத் தலைப்புக்களை உள்ளடக்கியதாக இக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். …
-
- 1 reply
- 891 views
- 1 follower
-
-
அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 4000 வாகனங்கள் மாயம் – விசேட ஆய்வு ஆரம்பம். சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் ஆகிய ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட கணக்காய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தக் கணக்காய்வின் பின்னர், காணாமல் போன அல்லது இடம்பெயர்ந்த அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதான கணக்காய்வாளர்டபிள்யூ.பி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். காலி முகத்திடலத்தில் ஒப்படைக்கப்பட்ட 110 சொகுசு வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை ஆராய விசேட கணக்காய்வு குழ…
-
- 0 replies
- 127 views
-
-
தமிழரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம். தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன்,இரா.சாணக்கியன், கலையரசன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா, சி.சிவமோகன்,அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https:…
-
- 1 reply
- 438 views
- 1 follower
-
-
28 SEP, 2024 | 11:22 AM வரி செலுத்தத் தகுதியான அனைவரும் 2023/2024 ஆண்டுக்கான வருமான வரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த கால அவகாசத்துக்குள் வரி செலுத்தத் தவறினால் அபராதம் மற்றும் வட்டி அறவிடப்படுவதோடு, தள்ளுபடி செய்யப்படவோ குறைக்கப்படவோ மாட்டாது என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நிலுவையில் உள்ள அனைத்து இயல்புநிலை வரிகளையும் எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதியன்று அல்லது அத்திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் 1944 என்ற இலக்க…
-
- 2 replies
- 454 views
- 1 follower
-
-
27 SEP, 2024 | 06:22 PM (நா.தனுஜா) நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (24) நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து, சகல அரசியல் கட்சிகளும் இம்முறை பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுப்…
-
-
- 67 replies
- 4.1k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 27 SEP, 2024 | 06:23 PM நா.தனுஜா நாட்டின் சமகால பொருளாதார நிலைவரங்களை கருத்திற்கொண்டு வட்டிவீதங்களை முன்னைய மட்டத்திலேயே பேணுவதற்குத் தீர்மானித்திருக்கும் மத்திய வங்கி, இவ்வாண்டின் முடிவில் பொருளாதார வளர்ச்சி எதிர்வுகூறப்பட்டதை விடவும் உயர்வான மட்டத்தில் பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான 5ஆவது மீளாய்வுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (27) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பிலேயே இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவ…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போத…
-
-
- 7 replies
- 498 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் அணிகள் கூட்டாக இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் கொழும்பில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அறிவிப்பு திகதி இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய தேச…
-
- 6 replies
- 524 views
- 1 follower
-
-
27 SEP, 2024 | 05:36 PM அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பதில் பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய இன்று (27) நியமிக்கப்பட்டுள்ளார். வடமத்திய மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய இவர் பொலிஸ் சேவையில் 36 வருட காலம் அனுபவமுள்ளவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முதன்முதலாக பொலிஸ் கான்ஸ்டபிளாக தனது சேவையை ஆரம்பித்துள்ளார். இவரது நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/194943
-
- 2 replies
- 882 views
- 1 follower
-
-
27 SEP, 2024 | 05:11 PM மாற்றத்திற்கான மாற்று வழி தொடர்பாக திறந்த உரையாடல் நாளை சனிக்கிழமை (28) வவுனியா வாடி வீட்டில் இடம்பெற உள்ள நிலையில் வடகிழக்கு பகுதியில் உள்ள பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியலாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள், குறிப்பாக மாற்றத்தை விரும்பும் இளையோர்கள் அனைவரையும் கருத்து பகிர்வில் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை (27) அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், கடந்த பல தசாப்தமாக தொழில் முறை அரசியல் வாதிகளால் தமிழ்த்தேசிய…
-
- 2 replies
- 713 views
- 1 follower
-
-
-
-
- 3 replies
- 1.6k views
-
-
27 SEP, 2024 | 10:59 AM இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 என் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடையை பிறப்பித்துள்ளது. ஐந்து மில்லியன் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக இரண்டு நிறுவனங்களிடமிருந்து 750,000 என் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானத்திற்கே நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அமைச்சரவையின் தீர்மானம் கேள்விப்பத்திர நடைமுறையை மீறிய செயற்பாடு, ஊழல் என எபிக்லங்கா நிறுவனமும் அதன் நிறைவேற்று தலைவரும் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிம…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
Published By: VISHNU 27 SEP, 2024 | 01:25 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கை பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முகம்கொடுக்கும்போது சீனா எமக்கு வழங்கிய ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவுபடுத்துவதுடன் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துக்காக சீன நிதி நிறுவனங்களினால் தொடர்ந்து வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பில் இலங்கை உளப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறது என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். மக்கள் சீனா உருவாக்கத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (25) மாலை கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக…
-
- 3 replies
- 231 views
- 1 follower
-
-
முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளை மீள வழங்க வேண்டும்: காலக்கெடுவும் விதிக்கப்பட்டது முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அந்தந்த அமைச்சு பதவிகளை வகித்த சந்தர்ப்பத்தில் பயன்படுத்திய அனைத்து அரசாங்க வீடு மற்றும் பங்களாக்களை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு அரச பொது நிர்வாக அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சுமார் 15 பேருக்கு அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றம் பங்களாக்களை ஒப்படைப்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் சில நிறுவனங்களுக்கு அரசாங்கம் 50 கொழும்பு அரச பங்களாக்களை வழங்…
-
-
- 7 replies
- 536 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார் கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயற்பட்டுள்ள இவர் கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார். பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர நவம்பர் மாதம் 1962 ஆம் ஆண்டு பிறந்தார். மனைவியின் பெயர் மல்லிகா ரத்ணசேகர. இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இவர் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார். தனது ஆரம்பக் கல்வி கந்தளாயில் உள்ள அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொழும்ப…
-
-
- 5 replies
- 516 views
- 1 follower
-
-
மனோவிடமிருந்து வெளியேறினார் குருசாமி ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர் ஆகிய பதவிகளில் இருந்து தான் உடன் பதவி விலகுவதாக கே.டி. குருசுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர், குறித்த கட்சிகளின் தலைவர் மனோகணேசனுக்கு அனுப்பியுள்ள உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றிலேயே அறிவித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர், “நாட்டில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளையும், அதன் பின் நடக்கின்ற நிகழ்வுகளையும் உற்று நோக்கும் பொழுது, மக்களின் மனதில் மிகப் பெரிய மாற்றத்தையும், அவர்களின் எதிர்பார்ப்பு உயர்ந்திருப்பதையும் காண்கின்றோம். இந்நிலையில், மக்களோடு நேரடியாக களத்தில் பணிசெய்ய விரும்புவதால், கட்சி…
-
- 0 replies
- 582 views
-
-
சங்கா?,குத்துவிளக்கா?; தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் இழுபறி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பாகப் போட்டியிடுவது தொடர்பில் அரசியல் கட்சியினருக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் இழுபறியில் முடிவு எட்டப்படாமல் முடிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் கூட்டான தமிழ் மக்கள் பொதுச் சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம்(26) யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அ…
-
-
- 24 replies
- 1.6k views
-
-
பொது ஒழுங்கை நிலைநாட்ட முப்படையினருக்கு அழைப்பு adminSeptember 27, 2024 இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை அழைக்கும் உத்தரவு அடங்கிய இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் முதன்முறையாக ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது https://globaltamilnews.net/2024/206952/
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். பல்கலை மாணவர்களுக்கு 30 இலட்சம் ரூபா நன்கொடை இலங்கையின் வடக்கு - கிழக்கு பிராந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கல்விக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களிலும் இருந்தும் சுமார் 100 மாணவர்கள் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத் திட்டத்துக்கான ரூபா 30 இலட்சம் ரூபா இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூ…
-
- 0 replies
- 817 views
-
-
வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா் adminSeptember 27, 2024 ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தஇனம் வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம் வேதநாயகன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள ஜனாதிபதியால் நாம் எவருக்கும் பயப்படாது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து செல்ல முடியும். இவர் ஜனாதிபதியாக வந்ததால் மாத்திரமே நான் இந்த பதவியை பெற்றுக் கொள்கிறேன். வேறு எந்த ஜனாதிபதி வந்திருந்தாலும் இந்த பதவி எனக்கு கிடைத்திருக்கவும் மாட்டாது வேறொருவர் எனக்குப் பதவி…
-
- 5 replies
- 457 views
- 1 follower
-
-
விபத்தில் நாதஸ்வர வித்துவான் உயிரிழப்பு adminSeptember 27, 2024 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நாதஸ்வர வித்துவான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலசேகர் ஹரிபிரசாத் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 14ஆம் திகதி இரவு முல்லைத்தீவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நாதஸ்வர கச்சேரி நிகழ்வை முடித்துக்கொண்டு, மறுநாள் 15ஆம் திகதி காலை வேளை மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த வேளை சாவகச்சேரி பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மதிலுடன் மோதி விபத்துக்க…
-
- 0 replies
- 1.1k views
-