ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நிராகரித்துள்ளார். இந்தியாவில் நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், “மூன்று மாதங்களில் இரண்டு தரப்புகளிலும், நான்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்று மாதங்களில் நான்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது வெளிப்படையானது. ஏனென்றால், வெளிப்படையான உறவுகளை வைத்துக் கொள்ள நாம் விரும்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2015/06/01/news/6668
-
- 0 replies
- 263 views
-
-
இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்பு JUN 01, 2015 | 1:30by கார்வண்ணன்in செய்திகள் பிரான்சின் லியோன் நகரில் இன்று ஆரம்பமாகும், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான ஐந்து நாள் அனைத்துலக பயிலரங்கில் சிறிலங்காவும் பங்கேற்கவுள்ளது. இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வது குறித்த இந்த நான்காவது அனைத்துலக பயிலரங்கை, அனைத்துலக காவல்துறையான இன்ரபோல் ஒழுங்கு செய்துள்ளது. அனைத்துலக காவல்துறையின், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் பணியகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பயிலரங்கில் 30 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் சிறிலங்காவில் சார்பில்…
-
- 0 replies
- 304 views
-
-
-
- 0 replies
- 441 views
-
-
கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த மணியம் விதுசா (வயது 16) என்ற மாணவியை கடந்த 28ஆம் திகதி முதல் காணவில்லை என மாணவியின் பெற்றோர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (30) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஊற்றுப்புலத்திலுள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி நகரிலுள்ள தனது தாயார் பணி செய்யும் சிறுவர் இல்லத்துக்கு சென்று, தாயைச் சந்தித்துத் திரும்பிய மாணவி, இதுவரையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்றுவருகின்றார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். http://www.tamilmirror.lk/147252#sthas…
-
- 9 replies
- 538 views
-
-
தமிழ் தேசிய கூட்டங்களுக்கு தங்களுடன் ஒன்றித்து செயற்படுவதாக சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி - அஸ்கிரிய மஹாநாயக்கரை சந்தித்து இந்த விடயத்தை கூறியுள்ளார். கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு சிறந்தஒத்துழைப்பை வழங்கி வருகிறது. அவர்கள் அரசாங்கத்தின் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே அவர்களுடன் பிரச்சினைகள் எவையும் இல்லை என்று குறிப்பட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு குறித்து அஸ்கிரிய மஹாநாயக்கர் வினவியபோதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/40487/57//d,article_full.aspx
-
- 4 replies
- 427 views
-
-
மகிந்த அரசின் ஊழல்கள் குறித்த விசாரணைகள் தீவிரம் – அமெரிக்க அதிகாரிகள் உதவிக்கு வருகை MAY 31, 2015 | 3:17by கார்வண்ணன்in செய்திகள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்கா அதிகாரிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்க அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த தலைவர்களினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு விசாரணை அதிகாரிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம், நீதித் த…
-
- 1 reply
- 455 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வீட்டில் இருந்திருக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அவர் செய்த காரியங்கள் தொடர்பில் அவரே நன்கு அறிவார், அதிகாரமின்றி அவரினால் இருக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு தேர்தலிலும் தோல்வியடையாது தாம் ஒன்பது ஆண்டுகள் வீட்டிலிருந்ததாகத் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1980களிலும், 2001ம் ஆண்டிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவடைச் சிலர் உதவிகளை செய்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்களினால் நாம் பின்வாங்கி விடக் கூடாது என அவர் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 433 views
-
-
இந்தோனேசியால் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகளுக்கு நடந்தது என்ன? இந்தோனேசியா நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை அகதிகளை கொண்டிருந்த படகொன்று பற்றி தகவல்கள் இல்லாதிருப்பதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளை சேர்ந்த இவர்கள் முதலில் இந்தோனேசியா சென்று முகாம்களில் தங்கியிருந்ததாகவும் பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியா புறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைக் கொண்ட இப்படகில் சுமார் 65 பேர் வரையிலிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. தாம் அடைக்கலம் புகும் வகையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கடந்த 21ம் திகதி வியாழக்கிழமை தகவலை அனுப்பியிருந…
-
- 1 reply
- 537 views
-
-
வன்முறையில் ஈடுபட்ட மேலும் 14 பேர் யாழ்ப்பாணத்தில் கைது! [sunday 2015-05-31 08:00] யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதி மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தில் மேலும் 14 பேரை கடந்த இரு தினங்களில் பொலிசார் கைது செய்துள்ளனர். புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களை பொலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனார். கடந்த 19ம் திகதி யாழ்.நகரில் கூடிய குழுவொன்று யாழில் இன்றையதினம் கடையடைப்பு என கூறி யாழ்.நகரில் உள்ள அனைத்து கடைகளையும் கட்டாயப்படுத்தி மிரட்டி பூட்ட வைத்தனர். மறுநாள் 20ம் திகதி யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியை சூழவுள்ள பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையில் ஊடுருவிய குழுவொன்று திடீர் என வன்ம…
-
- 2 replies
- 701 views
-
-
278 அரசியல் கைதிகளை விடுவித்துக் கொள்வது தொடர்பில் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலமாக காரணம் இன்றி தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை துரிதமாக விடுவித்துக் கொள்ளும் பொருட்டு இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெறவிருந்த போதும், தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அடுத்த வாரம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.co…
-
- 3 replies
- 416 views
-
-
போர்க்குற்ற விசாரணையில் சிக்குவாரா பொன்சேகா? – ஹரிகரன் By காவியன் on May 31, 2015 அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இலங்கைக்கு வந்திருந்த போது கடந்த 2ம் திகதி தாஜ் சமுத்திரா விடுதியில் அவரைச் சந்தித்த இலங்கை அரசாங்கக் குழுவில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இடம்பெற்றிருந்தார்.அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியிடம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு தலைமை தாங்கியவர் இவர் தான் என்று, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை அறிமுகப்படுத்தி வைத்தார்.அப்போது சரத் பொன்சேகாவிடம் நீங்கள் இப்போது போரில் வெற்றி பெற்று விட்டீர்கள், இது நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் என்று ஜோன் கெரி குறிப்பிட்டிருந்தார்.ஜோன் க…
-
- 0 replies
- 806 views
-
-
வவுனியாவில் வாள், பொல்லுகளுடன் நடமாடிய 10 பேரை நேற்று சனிக்கிழமை இரவு வவுனியா பொலிஸார் கைது செய்தனர். வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து வாகனம் ஒன்றில் வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா நோக்கி வந்த இளைஞர்களையும், சிறுவர் பூங்கா பகுதியில் வாள், பொல்லுகளுடன் நடமாடிய இளைஞர்களையுமே பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 10 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து வாள்கள், பொல்லுகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.malarum.com/article/tam/2015/05/31/10330/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0…
-
- 2 replies
- 405 views
-
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதம வேட்பாளராக மகிந்தவை நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், மகிந்தவுக்கு ஆதரவான தரப்பினர் இரண்டாவது திட்டத்தில் களமிறங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. மகிந்தராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக நியமிக்க முடியாது என்று ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் வேறொரு கட்சியின் ஊடாக மகிந்தராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக நியமித்து போட்டியிட செய்யும் முயற்சிகளுக்கு அவர்கள் தயாராகியுள்ளனர். இதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் பல நாடாளுமன்றஉறுப்பினர்களும் இணங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/40491/57/…
-
- 1 reply
- 669 views
-
-
மகிந்தராஜபக்ஷவுக்கு மீண்டும் லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் அழைப்பாணை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரை விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்த போது, அவருக்கு ஆதரவான தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தனர். சிலர் நாடாளுமன்றத்தில் தங்கி இருந்து போராட்டத்தை நடத்தினார்கள். இதனை அடுத்து மகிந்தவிடம் விசாரணை நடத்தப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் அவருக்கு எதிராக அழைப்பாணை விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஆர்ப்பாட்டங்களின் காரணமாக மகிந்தவிடம் விசாரணை செய்வது நிறுத்தப்படவில்லைஎன்றும், கடந்த மாதம் அடுத்தடுத்து ஏற்பட்ட அரசாங்க விடுமுறைகளின் காரணமாகவே இந்த விசாரணைகள் இடம்பெறவில்லை என்றும்,அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
-
- 0 replies
- 548 views
-
-
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிலட்டால், ஒரு வருடத்துக்குள் சிறிலங்கா இரத்தக் களரியாக மாறி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றமே சிறிலங்காவை பாதுகாத்துள்ளது. இல்லையெனில் மகிந்தவை எதிர்த்தவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலை உருவாகி இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.pathivu.com/news/40489/57//d,article_full.aspx
-
- 1 reply
- 460 views
-
-
வடக்கில் தாய்மார் வடிக்கும் இரத்தக் கண்ணீர் ராஜபக்ச குடும்பத்தை சாபமாக துரத்தும்! [ ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2015, 12:12.21 AM GMT ] வடக்கில் ஒவ்வொரு தாயும் தமது பிள்ளைகளின் சீரழிவுகளைப் பார்த்து சிந்தும் இரத்தக் கண்ணீர் ராஜபக்சவின் குடும்பத்தை சும்மாவிடாது. ஒவ்வொரு தாயும் வடிக்கும் இரத்தக் கண்ணீர் இவர்களுக்கு சாபமாக அமைவது நிச்சயமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் தெரிவித்துள்ளார். வடக்கில் சமூகச் சீரழிவுகளை ஏற்படுத்தி இன்று அது விஸ்வரூபமாகி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யும் நிலை ஏற்படுவதற்கான பொறுப்பை மஹிந்த ராஜபக்சவே ஏற்றுக் கொள்ள வேண்டும். “வடக்கின் வசந்தம்” என்ற பெயரில் ராஜபக்ச குடும்…
-
- 2 replies
- 421 views
-
-
மியன்மாரில் நடைபெறும் அரக்கர்களின் கொடூர தாக்கதல்களினால் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா சபை தூங்குகிறது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்பாவி முஸ்லிம்கள் மீது மியன்மாரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காடைத்தனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம் ஜும்ஆ தொழுகையின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட், ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும்போதே மேற்படி குற்றச்சாட்டினை தெரிவித்தார். “மியன்மாரிலுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களும் அரக்கர்களும் கொடூரமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை கொன்று குவித்து வருகிறது. இதனைப் பார்த்துக்கொண்டு ஐநா சபை தூ…
-
- 8 replies
- 757 views
-
-
மீள்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வளலாய் பகுதிக்கு, இலங்கைக்கான நோர்வே தூதுவர் கீறிற்; லோகீன் தலமையிலான குழுவினர், சனிக்கிழமை (30) விஜயம் செய்தனர். மீள்குடியேறிய பொதுமக்களுடன் கலந்துரையாடிய அக் குழுவினர், மீளக்குடியமர்வதற்கான உதவிகளை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக செய்து தருவதாக உறுதியளித்தனர். இதன் போது நிலமைகளை நோர்வே குழுவுக்கு தெரிவித்த பொதுமக்கள், 'எமது வாழ்வதாரம் கடலை நம்பியே உள்ளது. கடலுக்கு சென்று மீன்பிடிப்பதற்கு போதிய வாழ்வாதர உதவிகள் வழங்கப்படவில்லை. இங்கு மீள்குடியமர்ந்த 113 குடும்பங்களில் 15 மீனவ குடும்பங்கள் மட்டுமே கட்டுமர தொழில் மேற்கொள்கின்றனர். மீள் குடியமர்ந்து 03 மாதங்கள் கடந்தும் இதுவரை நிவாரண உதவிகள் வ…
-
- 0 replies
- 242 views
-
-
அச்சத்தினால் புங்குடுதீவை விட்டு வெளியேறுகிறது வித்தியாவின் குடும்பம் MAY 31, 2015 | 2:36by கி.தவசீலன்in செய்திகள் கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தினர், பாதுகாப்புக் காரணங்களுக்காக, புங்குடுதீவை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தகவல் வெளியிட்டுள்ள வித்தியாவின் தாய், சரஸ்வதி சிவலோகநாதன், தமது பாதுகாப்புக் கருதி, வவுனியாவில் தனது உறவினர்களுடன் குடியேறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது மகளின் படுகொலைக்குக் காரணமான சந்தேக நபர்களின் குடும்பத்தினர், புங்குடுதீவில் தமது வீட்டுக்கு அருகே வசிக்கின்ற நிலை…
-
- 0 replies
- 580 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நாட்டம் காட்டவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் தாம் இதனைக் குறிப்பிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை மத்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தாமாகவே முன்வந்து எதனையும் செய்வதில்லை எனவும், தமிழ் மக்கள் அழுத்தங்களை பிரயோகித்தால் மட்டும் உதவிகளை பெற்றுக் கொள்ள முடிவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சர்வதேச அழுத்தங்கள் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். படையினர் காணிகளை வழங்கியுள்ள போதிலும் செழிப்பான காணிகளை தொடர்ந்தும் தம் வசம் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் படையினர் பாரியளவில் குவிக்கப…
-
- 2 replies
- 509 views
-
-
புங்குடுதீவில் நடந்த கொடூரமும் தொடர்ந்து நடைபெற்ற நில சம்பவங்களும் எமக்கு பல செய்திகளை சொல்லி நிற்கிறது. இங்கு நான் பதிவிடுவது, நானறிந்த நான்கைந்து சம்பவங்களின் மட்டுமே. இதன் தொகுப்பும் முடிவும் உங்களுடையது. 1) புங்குடுதீவு கொடூரத்தையும் அதை ஒத்த அண்மைய சமூக நெறிப்பிறழ்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட அநேகர் ( இளைஞர்கள்) போதைக்கு அடிமையானவர்களே என்பது நடக்கின்ற விசாரணைகளில் இருந்து தெரிகிறது. 2) யாழ்மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை செய்யும் இடங்களை ( முக்கியாமய் பாடச்சாலைகளுக்கு அருகில் ) பலதடவை ஆதாரத்துடன் போலிஸுக்கு கொடுத்தும், எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்ப்டாத நிலையில் விரக்தியடைந்த யாழ் செயலக தரப்புகள், அப்போதைபோருள் விற்பனையாளார்களை பகிரங்கமாக மக்களுக்கு வெளிப்படு…
-
- 0 replies
- 376 views
-
-
தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் ஆடம்பரக் ஹோட்டல்கள்! [ சனிக்கிழமை, 30 மே 2015, 09:35.33 AM GMT ] இலங்கையில் தமிழர்களிடமிருந்து கைப்பற்றிய நிலங்களில் ஆடம்பர ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் மற்றும் இராணுவ தளபாடங்களாக மறுவுருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை இராணுவத்துக்கும் தமிழ் விடுதலைப்புலிகளுக்கு இடையே 26 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. (35வது நிமிடத்திலிருந்து வடக்கு முதல்வரின் பேச்சைக் கேட்கலாம்) இதில் 10,000 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் போர் நிறைவடைந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரம…
-
- 0 replies
- 540 views
-
-
அமெரிக்க ஆய்வு நிறுவன அறிக்கையை மறுக்கிறது சிறிலங்கா அரசாங்கம் MAY 30, 2015 | 12:58by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போருக்குப் பின்னரும், சிறுபான்மையினர் மீது மௌனப் போர் தொடர்வதாக அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. வடக்கு மாகாணம் தொடர்பான புதிய அரசாங்கத்தின் அணுகுமுறையில் முக்கியமான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். “கடந்த ஜனவரி மாதம் சிறிலங்காவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்த இராணுவப் பின்னணி கொண்ட ஆளுனர்கள் மாற்றப்பட்டு, சிவில் பின்னணி கொண்ட ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 435 views
-
-
தமிழருக்கு ஐ.நா நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் – அனுராதா மிட்டல் MAY 30, 2015 | 12:14by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவை நீதித்துறை சார்ந்த நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று ஒக்லண்ட் நிறுவனம் என்ற கலிபோர்னியாவைத் தளமாக கொண்ட அமெரிக்க ஆய்வு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுராதா மிட்டல் தெரிவித்துள்ளார். இந்த மையத்தினால், தயாரிக்கப்பட்ட சிறிலங்காவில் போருக்குப் பிந்திய நிலைமைகளை விபரிக்கும், “போரின் நீண்ட நிழல்“ என்ற அறிக்கையைத் தயாரித்த அனுராதா மிட்டல், இந்த அறிக்கை வெளியீட்டை முன்னிட்டு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவில் ஆட்சியில…
-
- 0 replies
- 461 views
-