ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143529 topics in this forum
-
தமிழ்த் தேசியத்துக்கு மட்டுமே வாக்களியுங்கள்! தமிழ் சிவில் சமூக அமையம்! Tamil Civil Society Forum 07.11.2024 பாராளுமன்றத் தேர்தல் 2024: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது? (14.11.2024 அன்று நடைபெறவுள்ள சிறீலங்காவுக்கான பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பான தமிழ் சிவில் சமூக அமையத்தின் முன்வைப்பு) ஜனாதிபதித் தேர்தல் 2024ம் என்.பி.பி எனும் தேசிய மக்கள் சக்தியும் அதன் மூலாதாரமான ஜே.வி.பி எனும் மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த ஜனாதிபதி தேர்தல் வரை சிறீலங்காவுக்கான ஜனாதிபதித் தேர்தல்களில் சிங்கள மக்கள் சிங்களத் தேசியக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியினதோ, சிறீலங்கா ச…
-
- 0 replies
- 262 views
-
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின பாறுக் ஷிஹான் 32 ஆயிரம் சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள் அரசியல் கட்சி ஒன்றின் பணிமனைக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசீம் வீதி பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கட்சி ஒன்றின் பணிமனைக்கு இவ்வாறு சட்டவிரோத மாதிரி வாக்குச்சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து குறித்த பணிமனைக்க…
-
-
- 10 replies
- 643 views
- 1 follower
-
-
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்துள்ள வடக்கு மாகாண விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்கள் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களின் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் செங்காரபிள்ளை அறிவழகன், இலங்கை சுதந்திரம் அடைந்த பின் தெற்காசியவில் வளமான நாடாக சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது. இலங்கை சுதந்திரம் அடைந்து 5 குடும்பங்கள் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளனர். …
-
- 0 replies
- 160 views
-
-
கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறி எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்திற்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள், 26 சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 924 வேட்பாளர்கள் போட்டி யிட்ட நிலையில் பொதுஜன பெரமுன 12 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன. இதில் பொதுஜன பெரமுன ,தேசிய மக்கள் சக்தியில் எந்தவொரு தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்ப…
-
- 1 reply
- 304 views
-
-
தமிழ் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பார்களாக இருந்தால் அதை விட வரலாற்று தவறு ஒன்றுமில்லை - கே.வி.தவராசா தமிழ் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிப்பார்களாக இருந்தால் அதை விட வரலாற்று தவறு ஒன்றுமில்லை என ஐனாதிபதி சட்டத்தரணியும் சுயேட்சைக்குழு 14 இன் வேட்பாளருமான கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ 2009 வரை தமிழரசுக்கட்சி தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையிலே இருந்தது. அதன் பின்னரே இந்த மாற்றங்கள் வெளிவரத் தொடங்கின. கட்சிக்குள் எப்போதும், தன்னிச்சையாகவே முடிவெடுப்பா…
-
- 1 reply
- 482 views
-
-
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களின் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் செங்காரபிள்ளை அறிவழகன், இலங்கை சுதந்திரம் அடைந்த பின் தெற்காசியவில் வளமான நாடாக சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது. இலங்கை சுதந்திரம் அடைந்து 5 குடும்பங்கள் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஆட்சிக்கு வருவதற்கு இனவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர். நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை தொலைந்து விட்டு தமிழர்களாக, சிங்களவர்கள…
-
-
- 2 replies
- 488 views
- 1 follower
-
-
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில் நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு வரவே மாட்டார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடக செவ்வியொன்றில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த சில விடயங்கள் வருமாறு:- “இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்து வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை என்பதனால் வேறு கட்சிகளிலும், சுயேச்சைகளிலும் போட்டியிடுபவர்களினாலேயே தமிழரசு மீது அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதேநேரம் அநுராகுமார திஸாநாயக்காவின் கட்சியைப் பொறுத்த மட்டில் ஊழல் அற்ற ஆட்சி, நேர்மையான நிர்வா…
-
-
- 15 replies
- 1.1k views
- 3 followers
-
-
வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் குறித்த ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு அழைத்துள்ளனர். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை 2024 நவம்பர் 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, முன்னாள் போராளியான சசிகுமாரின் அனைத்து புனர்வாழ்வு ஆவணங்களையும் விசாரணைக்கு கொண்டு வருமாறு பயங்கரவாத தடுப்பு புலனாய்வு திணைக்களத்தினால் தொலைபேசி அழைப்பு மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். https://thi…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
நீர்கொழும்பு, தெமங்சந்தி பிரதேசத்தில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சொகுசு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் ஊடாக இந்த சொகுசு வாகனம் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சொகுசு வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழ…
-
- 2 replies
- 444 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன் தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெர…
-
-
- 7 replies
- 741 views
-
-
சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப்பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது. தமிரசுக்கட்சி தலைவராக ஜனநாயக ரீதீயில் போட்ட…
-
-
- 26 replies
- 1.5k views
- 1 follower
-
-
பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் முதல் அப்பியாச புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகத்திடம் இருந்து எமக்குக் கிடைக்கும் ஆதரவு வலுவாக உள்ளது. மேலும் ஜனாதிபதியின் தலையீட்டினால் சில சலுகைகளை பெற முடிந்துள்ளது. எங்களிடம் குறுகிய கால கொடுப்பனவுகள் மட்டுமல்ல, நாங்கள் எதிர்காலத்தில் முன்வைக்கும் வரவு செலவுத் திட்டத்தில், சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ஓய்வூதியம் பெறுபவர்களைப் பாதுகாப்பதற்கும், வாழ்க்கைச் செல…
-
-
- 2 replies
- 362 views
- 1 follower
-
-
மத்தல விமானநிலையத்தின் முகாமைத்துவத்தினை இந்திய இலங்கை கூட்டு முயற்சியிடம் ஒப்படைக்கும் முன்னைய அரசாங்கத்தின் திட்டத்தினை இலங்கை அரசாங்கம் கைவிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டதடைகளை மீறி இந்திய ரஸ்ய கூட்டு முயற்சிக்கு அனுமதிவழங்க இலங்கை அதிகாரிகள் தயாராகயில்லை என்பதால் இந்ததிட்டம் கைவிடப்படுவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னைய அரசாங்கம் மத்தல விமானநிலையத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை இந்தியாவின் சௌர்யா ஏரோநோட்டிக்ஸ் மற்றும் ரஸ்யாவின் எயர்போர்ட் ஒவ் ரீஜன்சிடம் கையளிக்க தீர்மானித்தது. இதற்கு அனுமதி வழங்குவதற்காக உடன்படிக்கையின் நகல் வடிவத்தினை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியிருந்தனர். எனினும் இலங்கையி…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
நாடாளுமன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அற்றுப் போகலாம் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேட்பாளர்களை எச்சரித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் நாட்டில் அமைதி காலம் பிரகடனப்படுத்தப்படும். தேர்தல் சட்டங்களில் அமைதி காலம் தொடர்பில் விரிவாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அமைதி காலத்தில் நடந்து கொள்ளுமாறு அனைத்து வேட்பாளர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன். அமைதி காலத்தில் எவ்வித தேர்…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்கள் அனுபவிக்க…
-
- 0 replies
- 207 views
-
-
சுமந்திரன் அரசியலுக்கு தகுதியற்றவர் Vhg நவம்பர் 07, 2024 சுமந்திரனால் என் மீது வழக்கு தொடரட்டும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு கணபதிப்பிள்ளை சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் அரசியலுக்கு பொருத்தமற்றவர். அவர் ஒரு மதமாற்றி. இது தொடர்பில் ஏழாண்டுகளுக்கு முன்பே நான் புத்தகம் அடித்து வெளியிட்டுள்ளேன். மதமாற்றத்திற்காக அவரது மனைவியின் பெயரில் மாதாந்தம் 1100 டொலர்ஸ் வருகிறது. மனைவியின் பெயரில் சுமந்திரனுக்கே அந்த பணம் வருகிறது. சுமந்திரன் மெதடிஸ் திருச்சபையில் துணை ஆயராக இருந்தவர். அவர் 54 மதமாற்றிகளை ச…
-
-
- 39 replies
- 2.4k views
-
-
அரசநிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் "பாட்டனாரிடம்" ஆலோசனை பெறவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும், அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை இரண்டு கட்டமாக அதிகரிக்கவேண்டும் என்ற உதய செனிவிரட்ணகுழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு இது தெரிந்திருக்கவேண்டும் தெரியாவிட்டதால் பாட்டனாரிடம் கேளுங்கள் என அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் மூன்றாவது தொகுதி கடன் இந்த வருட இறுதியில் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளமை குறித்…
-
-
- 3 replies
- 322 views
- 1 follower
-
-
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்…
-
- 5 replies
- 621 views
- 1 follower
-
-
3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலு…
-
- 0 replies
- 447 views
-
-
பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் எதுவித அடிப்படையும் அற்ற நிலையில் நண்பர்களுக்கும் னையவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. எதிர்கட்சியில் இருந்து யார் ஆதரவு தருகிறார்ளோ அவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. அவ்வாறான அமைச்சுக்களுக்கு விஞ்ஞான ரீதியாக தொடர்புகள் இருக்க வில்லை. …
-
-
- 4 replies
- 405 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட செயலகம், இலங்கை பொலிஸ், கடற்றொழில் கூட்டுத்தாபனம், கொட்பே மீன்பிடி துறைமுகம், துறைமுக அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு இதில் கலந்துகொண்டனர். இங்கு திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆளுநரிடமும் உரிய அதிகாரிகளிடமும் மீனவர் பிரதிநிதிகள் ஒவ்வொன்றாக முன்வைத்தனர். மீன்பிடி தொழிலில் இட…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2024 பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், பிரசார செயலாளர் நடராஜர் காண்டீபன், சிரேஸ்ட சட்டத்தரணி கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ், சிரேஸ்ட சட்டத்தரணி மற்றும் கட்சியின் வேட்பாளர்களான திருமதி வாசுகி சுதாகர், திருமதி க.ஞானகுணேஸ்வரி, திருமதி ஜீன்சியா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். …
-
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் தாந்தாமலை, மாவடிமுன்மாரி கிராமங்களின் எல்லைப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசத்திலுள்ள ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் இடம்பெற்று வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் வியாழக்கிழமை பகல் (07) முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸ் கடமைப் பிரிவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. கிராமத்தின் பொதுமக்கள் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது சட்டவிரோத உற்பத்திக்கு தயாரான கோடா ஆறு பரல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடியுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட கோடா பரல்கள் …
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பை கூட எடுத்து வைக்காதவர்கள் விடுதலை போராட்டத்தில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வேட்பாளர் பாலச்சந்திரன் கஜத…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வந்த 52 வயதுடைய இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 180 கோடி ரூபாய் பணமோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தார். இந்நிலையில், இன்றைய தினம் மலேசியாவில் இருந்து நாட்டுக்கு வருகை வருகை தந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சந்தேகநபரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 253 views
- 1 follower
-