ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
1 அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் சாதாரண மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டுமல்லாமல், ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். அவரின் முன்னேற்றகரமான பாதைக்கு இது நல்ல உதாரணமாகும்.' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாட்டில் பிரச்சினைகள் அனைத்துக்கும் மூலகாரணமாக உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கும் நிரந்தர அரசியல் தீர்வைக்கான ஜனாதிபதி மைத்திரிபால உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் சம்பந்தன் எம்.பி. வலியுறுத்தினார். அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்ட வரைவு திருத்தங்களுடன் நாடாளுமன்றில் நேற்று…
-
- 0 replies
- 316 views
-
-
யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள மக்களுடைய நிலங்களில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான கூட்டம் இன்றைய தினம் நடைபெறவிருந்து. இந்தநிலையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் இல்லாமையினால் அந்தக் கூட்டம் 8ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மேற்படி கூட்டம் கடந்த 27ம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அன்றைய தினம் நடைபெறாமல் 29ம் திகதி இன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்றைய தினமும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அந்தக் கூட்டம் இடம்பெறவில்லை. எனவும் அது பின்னர் 8ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னதாக இடம்பெற்ற மீள்குடியேற்றத்தின் ப…
-
- 4 replies
- 774 views
-
-
பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரத்திலிருக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் 67 வருடமாக இலங்கைத் தீவில் நடைபெற்று வரும் தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டியும், ஐக்கிய நாடுகள் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள (OISL) விசாரணைக்குழு தனது விசாரணைஅறிக்கையை உடன் வெளியிட வேண்டும் எனக்கோரியும் , தமிழின அழிப்பில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலுயுறுத்தியும், நேற்று புதன் கிழமை(29.04.2015) பிற்பகல் 16.00 மணியளவில் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் கவனஈர்பு போராட்டம்நடைபெற்றது. தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும், இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் கொடுப்பது அநீதி எனவும் சுட்டிக்காட்டப்பட்டு மகஜர் கையளிக்கப்பட்டது. அத்துடன் ஐரோப்பிய நாடா…
-
- 0 replies
- 1.1k views
-
-
முதல் முறையாக பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழ மக்களின் பிரச்சினைகள் குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன் 76ம் மற்றும் 77ம் பக்கங்களில் இந்த விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளன..பதிவு இணைய செய்தி இதன்படி, சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த கன்சர்வேட்டிவ் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். அத்துடன் சிறிலங்காவில் மறுசீரமைப்பை ஏற்படுத்தவும், மனித உரிமைகள் நிலைநாட்டப்படவும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு இணைய செய்தி தமிழ்நாட்டை அடுத்து, தமிழீழ பிரச்சினைகளை தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்உள்ளடக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.பதிவு இண…
-
- 0 replies
- 545 views
-
-
யாழ்ப்பாணம் வலிகாமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் மாசினை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்காவின் ஜனாதிபதி சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சுன்னாகம் மின்சார நிலையத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவினால் அங்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை மனிதாபிமான ரீதியாக பார்க்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். அத்துடன் இது தொடர்பில் அதிகாரிகள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனருக்கு உடனுக்குடன் அறியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/39670/57//d,article_full.aspx
-
- 0 replies
- 432 views
-
-
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு நேர்மையாக நடந்துக் கொள்ள தவறி இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்நாட்டு வானொலி ஒன்றுக்க இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் காணாமல் போனவர்கள் முன்வைத்திருந்த முறைபாடுகளில் 60 சதவீதமானவை விடுதலைப் புலிகளுக்கு எதிரானவை என்று காணாமல் போனோர் தொடர்பான பரணகம ஆணைக்குழு தெரிவித்திருந்தது. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தினாலேயே அதிக அளவானவர்கள் கடத்தப்பட்டும் காணாமல் செய்யப்பட்டும் உள்ளனர். இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்வாறான நிலையில் பரணகம ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளித்துள…
-
- 0 replies
- 296 views
-
-
மாமனிதர் ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று பிற்பகல் 3 மணியளவில் அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் மாநகரசபை மண்டபத்தில் ஆரம்பமானது. இவ் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நினைவேந்தல் நிகழ்வு மௌன வணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது. ஆவணப்பட வெளியீடும் நடைபெற்றது. 'சிவராமுடனான நாட்கள்' என்ற தலைப்பில் வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜா, 'ஊடகங்களின் சுதந்திரம்' என்ற தலைப்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சுனில் ஜெயசேகர, 'இனிய நண்பன்' என்ற தலைப்பில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளரும் லேக்ஹவுஸ் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளருமான…
-
- 2 replies
- 1.4k views
-
-
நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்:- தமிழில்: ந.சுசீந்திரன் சிறிய உலோகக் குண்டுமணிகள் ஆண்குறியின் சலத் துவாரத்தினுள் செலுத்தப்பட்டன ‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்: இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை’ மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு வெளியீடு, 2013 ISBN: 1-56432-993-3,(சுமார் 130 பக்கங்களுக்கு மேல்) இந்த ஆவணத்தை வாசிப்பது என்பது மிகவும் மனச்சங்கடமானது. சேக்ஸ்பியரின் மக்பெத் நாடகத்தில் மக்பெத் “நான் அளவுக்கு அதிகமாகவே கொடூரங்களைத் தின்றவன்” என்று ஒரு குறியீடாகவே சொல்லுவான். இவ்வகை வாக்குமூலங்களை படிக்கின்ற போதும் அப்படித்தான் ஒன்றை விஞ்சியது மற்றொன்றாக அடுத்தடுத்துக் கொடூரங்களையே நாம் விழுங…
-
- 0 replies
- 727 views
-
-
19வது திருத்தம் சாரைப் பாம்பு தானாம்! - விமல் வீரவன்ச கூறுகிறார். [Wednesday 2015-04-29 20:00] நச்சுப் பாம்பு போன்ற 19வது திருத்தத்தை பாராளுமன்றிற்கு கொண்டுவர நினைத்த போதும் இறுதியில் நிறைவேற்றப்பட்டது சாரைப் பாம்பு போன்ற 19வது திருத்தம் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி வசம் உள்ள அதிகாரங்களை பிரதமர் வசமாக்கிக் கொள்ள எடுத்த முயற்சி தோல்வியுற்றுள்ளதாக விமல் தெரிவித்தார். 19வது திருத்தம் பாராளுமன்றில் கொண்டுவரப்பட்ட போது எதிர்கட்சித் தலைவரின் பணியை செய்தது தினேஸ் குணவர்த்தன என அவர் குறிப்பிட்டார். யாப்புச் …
-
- 0 replies
- 570 views
-
-
பலமான சட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பு நழுவி விட்டது! - ஜேவிபி குற்றச்சாட்டு. [Wednesday 2015-04-29 20:00] நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ள 19 வது திருத்தச்சட்டத்தினை விடவும் அதிக பலம் பொருந்திய சட்டம் நிறைவேற்றப்படும் அரிய சந்தர்ப்பம் கை நழுவிப்போயுள்ளதாக ஜேவிபி குற்றம் சுமத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவு, மற்றும் அதிகாரத்தினை தக்கவைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் காரணமாகவே இந்த வாய்ப்பு கை நழுவிப்போயுள்ளதாக ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், …
-
- 0 replies
- 513 views
-
-
இப்பவும் மத்தியே எம்மை வழிநடத்திவருகிறது. நாங்கள் சேர்ந்தே செய்வோம் வாருங்கள் என்று கூறிவிட்டு கடிவாளத்தை சட்டப்படி தம்வசம் வைத்திருக்கின்றனர் எனவே வெகுவிரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். மாந்தை கிழக்கு பாலிநகரில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கடைத்தொகுதி திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது:- எமக்குத் தேவையான பணம் ஒரு தொகை என்று அதைத் தெரிவித்தால் குறைந்த தொகையே எமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. எமக்குத் தேவையான ஆளணி ஒரு தொகை என்றால் குறைந்த தொகையே எமக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது. இப்பவும் மத்தியே எம்…
-
- 0 replies
- 437 views
-
-
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாணம் அரச செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றார்கள். பொறுப்புவாய்ந்த தரப்புக்களிடமிருந்து எழுத்துமூலத் தீர்வு கிடைக்கும்வரை இது முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தப் போராட்டம் குறித்து கருத்து வெளியிட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் பிரதாபன்:- “பட்டம் பெற்று பல வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் எங்களுக்கான வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. இதற்கு முன்னரும் இதுமாதிரியான போராட்டங்களை முன்னெடுத்து, அரச அதிகாரிகள் எங்கள் குறைகளைத் தீர்ப்பதாக உறுதியளித்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. எங்கள் போராட்டங்களின் பின்னர் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்ற…
-
- 0 replies
- 390 views
-
-
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நேற்று 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக சரத் வீரசேக எம்.பியும் வாக்களித்தனர். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார எம்.பி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சட்டமூலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் 27ஆம் திகதி சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். நேற்று செவ்வாய்க்கிழமையும் விவாதம் நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்பு நேற்று மாலை 6 மணிக்கு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அ…
-
- 11 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவிலே அகதித் தஞ்சம் கோரிய தமிழ் ஏதிலிப் பெண்ணொருவர் விரக்தியின் விளிம்புநிலையில் நின்று தனக்கான நீதிக்காக மன்றாடும் நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ்க்குரல் வானொலிக்கு இச்செவ்வி வழங்கப்பட்டுள்ளது, ரதினி எனப்படும் இந்த ஈழத்துப்பெண் தனது மூன்று வயதுக் குழந்தையுடன் படகுவழியாக அவுஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி கடந்த ஆண்டு வருகைதந்திருந்தார். இவரது கணவர் ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரிவந்திருந்த நிலையில் தாயகத்தில் பல்வேறு சிக்கல்களையும் ஆபத்துக்களையும் தொடர்ந்தும் எதிர்கொண்டதால் தனது குழந்தையுடன் அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாகப் புறப்பட்டார் ரதனி. அவுஸ்திரேலிய அரசின் புதிய குடவரவுச் சட்டத்தின்படி இத்…
-
- 0 replies
- 739 views
-
-
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டோர், எவ்வித குற்றமும் அற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விடுதலை செய்த பின்னர் கைதுசெய்யப்பட்டோர், சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் என்று தம்மில் பலர் ஆறு முதல் பதினெட்டு வருடங்களுக்கு மேலாக சிறையில் வாழ்க்கையைக் கழித்து வருவதாகவும், இதனால் தமது குடும்பம் பிள்ளைகளின் எதிர்காலம், கல்வி, பாதுகாப்பு, பராமரிப்பு, வாழ்க்கைமுறை எல்லாமே சீரழிந்து கொண்டிருப்பதாகவும், தம்மைப்போன்றே நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமையும் மோசமாக உள்ளதாக மனம்வெதும்பியுள்ள அநுராதபுரம் சிறைச்சாலை அரசியல் கைதிகள், கூட்டமைப்பின் தலைவர் ச…
-
- 0 replies
- 655 views
-
-
கடத்தப்பட்ட தங்களின் உறவினர்கள் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவை சந்தித்தித்துள்ளனர். இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். சிறைச்சாலையில் அண்மையில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வின் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களில் தங்களின் உறவினர்களை அடையாளம் கண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கைகயை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.pathivu.com/news/39641/57//d,article_full.aspx
-
- 0 replies
- 555 views
-
-
அரசியலமைப்பின் 18ஆவது திருத்திற்கு வாக்களித்தன் மூலம் ஏற்பட்ட விளைவுகளையும் பலா பலன்களையும் அனுபவித்து விட்டோம். அவ்வாறு அச்சட்டத்திற்கு ஆதரவு அளித்தமைக்கு இன்று வருந்துகின்றேன் என்று அமைச்சர் ஹக்கீம் இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 19 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்து அது நிறைவேற்றப்பட்டதன் மூலம் இன்றுவரை நாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். ஊழல் மோசடிகள் மேற்கொள்ளப்பட்டன. மத சார்பான பிரச்சினைகள் தூண்டிவிடப்பட்டன. தவறு இழைத்தவர்களுக்கு மேற்படி சட்டத்தின் ஊடாக பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனவே 18க்கு வாக்களித்தமை…
-
- 4 replies
- 583 views
-
-
19வது திருத்தச்சட்டம் மூன்றாவது வாசிப்பும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது! [Wednesday 2015-04-29 08:00] நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பது தொடர்பான அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 19ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 215 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டதோடு, ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 7 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சமுகமளிக்காதிருந்தனர். 19ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்…
-
- 0 replies
- 417 views
-
-
சந்தேக நபரைப் பிடிக்க முயன்ற பொலிசாருக்கு கத்திக் குத்து! - மூளாயில் பதற்றநிலை [Wednesday 2015-04-29 08:00] பொலிஸார் ஒருவரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றவரைப் பிடிக்க முயன்ற போது, மூளாய், மாவடி பகுதியில் நேற்று மாலைபொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகலால், பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் குறித்த பகுதிக்கு நேற்று மாலை சென்றுள்ளனர். சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று அவரைக் கைதுசெய்ய முற்பட்டவேளை அவர் பொலிஸார் ஒருவரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில் குறித்த இடத்துக்கு மேலதிக பொலிஸார் வ…
-
- 0 replies
- 429 views
-
-
இனவாத அரசியல்வாதிகளின் கைகளில் வடமாகாணம்! - தினேஸ் குணவர்த்தன சீற்றம். [Wednesday 2015-04-29 08:00] சர்வதேச வழிநடத்தலில் மட்டுமே இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பும் மக்களின் ஒற்றுமையும் இன்று சர்வதேச சக்திகளுக்கு அடிபணிந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்குவதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பு,மீண்டும் அதிகாரம் அவரின் கைகளுக்கு செல்லவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய அரசாங்கம் அமைந்தவுடன் நாட்டில் நிலவிய ஜனநாயகம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது . ஒரு சாரார் மட்டுமே சுகபோகம் அனுபவிக்கின்றனர் ஆனால் மற்றைய சிலர் பழிவாங்கப் படுகின்றனர்.கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் அமைதி …
-
- 0 replies
- 258 views
-
-
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விசாரணை அறிக்கை வரும் செப்ரெம்பர் மாதம், வெளியிடப்படும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தமக்கு உறுதியளித்திருப்பதாகவும், எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவுடன் அவர், ஐ.நா மனித உரிமை ஆணையாளருடன் எடுத்துக் கொண்ட படத்தையும் எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ளார். எனினும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எங்கு, எப்போத…
-
- 3 replies
- 561 views
-
-
கிளிநொச்சி - அறிவியல்நகர் பகுதியில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/04/27/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
-
- 5 replies
- 845 views
-
-
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி நேபாளத்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த மூன்று ஊடகவியலாளர்கள் அடுத்த சில தினங்களில் நாடு திரும்பவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இந்த ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இலங்கையில் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும், இவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசியல் தஞ்சம் கோரியிருந்த நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் குறித்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று முன்தினம்…
-
- 0 replies
- 476 views
-
-
அரசியல் ஆசை இருந்தாலும் மக்களின் ஆதரவு இன்றி மஹிந்த ராஜபக் ஷவினால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகளை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. முடிந்தால் அடுத்த தேர்தலில் மஹிந்த போட்டியிட்டு வென்று காட்டட்டும் என்றும் அக்கட்சி சவால் விடுத்தது. தான் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஜே.வி.பி.யின் கருத்தினை வினவியபோதே அக் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கடந்த பத்து வருடங்களில் நாடு எல்…
-
- 0 replies
- 652 views
-
-
இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இரண்டு பதவிக்காலங்கள் என்று மீண்டும் குறைத்தது, மற்றும் தகவல் அறியும் உரிமை என்ற இரு விஷயங்களைத் தவிர, 19வது சட்டத்திருத்தத்தின் மூலம் மைத்திரிபால சிறிசேன பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்கிறார் சட்ட ஆய்வாளர் குமாரவடிவேல் குருபரன். இன்று இலங்கையில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் நிறைவேறிய இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், பொது ஸ்தாபனங்களுக்கு அரசியல் தலையீடு இல்லாமல் நியமனங்களைச் செய்ய உருவாக்கப்பட்ட அரசியல் சட்ட அவையில் பெரும்பான்மையாக அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் இருக்கவேண்டும் என்ற யோசனையைக் கைவிட்டு, இப்போது அந்த அவையில் பத்தில் ஏழு பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள் என்ற முடிவுக்கு வர அரசு நிர்ப்பந்திக்கப்…
-
- 0 replies
- 373 views
-