Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்ததாக கைப்பற்றப்பட்ட 16 படகுகளுடன் தமிழக மீனவர் குழு நாடு திரும்பியுள்ளது.எனினும் தமது படகுகள் கடற்படை வசமிருந்த வேளை மோசமாக சேதடைந்துள்ளதாக மீனவர்கள் தரப்பினில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 80 படகுகள் நீதிமன்றுகளால் விடுவிக்கப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு வருகைதந்த தமிழக மீனவர்கள் 34 படகுகளை தமிழகத்திற்கு கொண்டு சென்றனர். எஞ்சிய படகுகளில் 30 படகுகளை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்காக தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் உள்ளிட்ட 143 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். அவர்களால் பழுதுபார்க்கப்பட்ட 16 படகுகளுடன் அவர்கள் மீண…

  2. திங்கள் இரவு சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் நடந்தது என்ன? APR 25, 2015 by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய 23 மணிநேரப் போராட்டத்தின் போது, நடந்த சம்பவங்களை, சிலோன் ருடே நாளிதழில், பிரசாத் மஞ்சு எழுதியுள்ள கட்டுரையில் சுவையாக விபரித்துள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் நாடாளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு சாரார் தொடர்ந்து 23 மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீளக்கூடிய பின்னர், சபாநாயகர் சமல் ராஜபக்ச ஆர்ப்பாட்டக்காரர்களின் வேண்டுகோள்களை பரிசீலிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து கடந்த 21ம் நாள்…

  3. புலிகளுக்கு 645மில்லியன் ரூபாவும் 200 வாகனங்களும் வழங்கியே 2005ம்ஆண்டு தேர்தல் வெற்றி கொள்ளப்பட்டது: நீதவான்கள் சட்ட விரோதமான தீர்ப்புக்களை அளிக்குமாறு மஹிந்த அழுத்தம் கொடுத்தார் – ராஜித சேனாரட்ன:- 26 ஏப்ரல் 2015 நீதவான்கள் சட்டவிரோதமான முறையில் தீர்ப்புக்களை அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அழுத்தங்களை பிரயோகித்தார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்காக படைவீரர்கள் சிந்திய வியர்வையையும் கண்ணீருக்கு பின்னால் ஒளிந்து கொண்டு தாம் செய்த தேசவிரோத பாவங்களை மூடி மறைக்க முயற்சிக்கின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினரும் யுத்த வெற்றியை துஸ்பிரயோகம் செய்துள…

  4. முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்காக, முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் விசேட யாகம் ஒன்றை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன் - கொட்டகலை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயம் ஒன்றில் இந்த பூஜை நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியாவில் இருந்து விசேட பூஜகர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் ஆட்சி அமைக்க நல்லாசி வேண்டி இந்த யாகம் நடத்தப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/news/39554/85//d,article_full.aspx

    • 0 replies
    • 396 views
  5. எதிர்வரும் இரண்டு வாரங்களில் எட்டு முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை திணைக்களத்தின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தில் கீழ் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பான 56 முறைபாடுகள் பதிவாகி இருந்தன. அவற்றில் 26 முறைபாடுகள் குறித்த விசாரணைகள் முற்றாக நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், குறித்த எட்டு அமைச்சர்களை நீதிமன்றத்தின் ஊடாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. http://www.pathivu.com/news/39553/85//d,article_full.aspx

    • 0 replies
    • 442 views
  6. இந்திய இராணுவத் தளபதி நாளை சிறிலங்கா வருகிறார் APR 26, 2015 | 16:34by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா இராணுவ தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே, இந்திய இராணுவ தளபதி கொழும்பு வரவுள்ளார். அவருடன், ஐந்து அதிகாரிகளைக் கொண்ட குழுவும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கூட்டுப்படைகளின் தளபதி முப்படைகளின் தளபதிகள், ஆகியோரை, இந்திய இராண…

  7. யுத்தமின்றி எதிரியைத் தோற்கடிக்கும் மூலோபாயம் – சீனாவுக்கு சன் சூ கற்றுத் தந்த பாடம் APR 26, 2015 | 9:17by நித்தியபாரதிin ஆய்வு கட்டுரைகள் இராணுவ மூலோபாயங்கள் தொடர்பாக சன் சூவால் எழுதப்பட்ட Art of War நூலில் அவர் பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.யுத்தமில்லாமல் எதிரியைத் தோற்கடிப்பதற்கான பல்வேறு மூலோபாயங்களை சன் சூ தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இதுவே தற்போது சீன வெளியுறவுக் கோட்பாட்டில் பிரயோகிக்கப்படுகிறது. இவ்வாறு livemint இணையத்தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. சீனாவின் இராணுவ மேதையான சன் சூ (Sun Tzu) தற்போது உயிருடனிருந்து ருவிற்றரில் இணைந்திருந்தால், சீனாவில் பிறந்ததை எண்…

    • 0 replies
    • 544 views
  8. போர்க்குற்றவாளிகளின் விபரங்களை இலங்கையிடம் ஒப்படைக்கிறது ஐ.நா! [sunday 2015-04-26 09:00] போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது. ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைகளின் மூலம் திரட்டப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்களின் பட்டியல்களை விசாரணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த விபரங்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணை …

  9. வலி.வடக்கில் கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த 1000 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு உள்ளது. அதில் கடந்த 11 ம் திகதி காங்கேசன்துறை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது. அவ்வாறு அன்றைய தினம் விடுவிக்கப்பட்ட பகுதியில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு ஒரு அடி காணியே கிடைத்துள்ளது. குறித்த வீட்டு உரிமையாளரின் வீட்டின் முன் பகுதியில் ஒரு அடியே விடுவிக்கப்பட்டு உள்ளது. வீட்டின் ஏனைய பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளது. குறித்த வீடு , கூரை மற்றும் யன்னல்கள் கதவுகள் அற்ற நிலையில் காணப்பட்டாலும் வீடு பெரியளவிலான சேதங்கள் இன்றி காணப்படுகின்றது. வீட்டின் மேல் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு இருந்துள்ளது அதற்கு சாட்சியமாக வீட்…

  10. அம்பாறை மாவட்டம் காரைதீவில் இரவோடிரவாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்துடனான போஸ்டர்களுடன் அதன் கொள்கை விளக்க துண்டுப்பிரசுரமும் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்குவதை இவை கட்டியம் கூறி நிற்கிறதோ? படமும் தகவலும்: வி.ரி.சகாதேவராஜா- http://www.tamilcnnlk.com/

  11. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 8 முன்னாள் அமைச்சர்கள் கைது! [sunday 2015-04-26 08:00] அடுத்து வரும் இரு வாரக்காலப்பகுதியில் ஊழல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குற்றச்சாட்டுக்களின் நிமித்தம் 25 அதிகாரிகள் மற்றும் அரசியல் தரப்பினரும் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே கைது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல் வழங்கியுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர, 52 பேருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜ…

  12. பிரதமர் வேட்பாளர் குறித்து மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுக்கவில்லை! - ஜனாதிபதி மைத்திரி [sunday 2015-04-26 08:00] இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் சர்வதேசத்தின் தலையீடுகள் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேற்கத்தைய நாடுகள் சில, பிரதமருக்கான போட்டி விடயத்தில் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இது இலங்கையில் நடைமுறையில் உள்ள சுதந்திர ஊடகமுறையை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கையாகும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=130950&category=TamilNews&language=ta…

  13. இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு ஆட்சேர்ப்பதற்கான சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன. 18 வயது முதல் 28 வயது வரையான திருமணமாகாத க.பொ.த. சாதாரண தர பரீட்சையை கணிதம் தாய் மொழி உட்பட்ட இரண்டு தடவைகளுக்கு மேற்படாமல் சித்தியடைந்த ஆகக்குறைந்த 05 அடி 04 அங்குல உயரம் கொண்டவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அச்சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படைச்சம்பளம் கடினக் கொடுப்பனவு இணைந்த கொடுப்பனவு மற்றும் வேறு கொடுப்பனவுகளும் பற்றிய விபரங்களும் அதில் அடங்கியுள்ளன. இப்பதவிக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னதாக பணிப்பாளர் பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவு 375 ஸ்ரீ ஜயந்தி மாவத்தை கொழும்பு 6 என்ற …

  14. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வோம்; நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நல்லை ஆதீனம் வேண்டுகோள் 100 நாள் திட்டம் தமிழ் மக்களுக்கு எந்தவித நலனையும் செயற்படுத்தவில்லை என்ற ஏக்கம் எல்லோர் மனதிலும் உள்ளது. எனவே இந்த புதிய அரசின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையினை ஒன்றுபடுத்தி தமிழினத்திற்கு உரிய விடிவினை மிகவிரைவாக பெற்றுத்தருவதே தந்தைக்கு செய்யும் அஞ்சலி என நல்லை ஆதீன குரு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தை செல்வாவின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று யாழ். பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள அவரது சதுக்கத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு ஆசிச்செய்தி வழங்கும் போதே அவர் இந்த வேண்டுகொளை விடுத்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ…

  15. யாழ்.வடமராட்சியில் ஒருவர் கொலை நேற்று இரவு 8 மணியளவில் யாழ்.வடமராட்சி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் அல்வாய் வடக்கு நக்கீரன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செந்தூரன் (வயது44) பொல்லால் கடுமையாக தாக்கியதையடுத்து உயிரிழந்துள்ளார். மேலும் தாக்கப்பட்டவரை சிகிச்சைகாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார். சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும், இரு தரப்பினர்களுக்கிடையே நிலவிய நீண்டகால பகையே இக்கொலைக்க்காண காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் இதுவரை யாரும் கை…

  16. நாவலாகியது சம்பூரின் பூர்வீக வரலாறு வைத்தியகலாநிதி ஆ.சதீஸ்குமாரினால் எழுதப்பட்ட கொட்டியாரபுரத்து சிங்கம் எனும் வரலாற்று நாவல் வெளியீட்டு விழா கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தலைமையில் திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரியில் நேற்று இடம்பெற்றது. இந்த நாவலானது சம்பூர் பிரதேசத்தின் பூர்வீக வரலாற்றினை உள்ளடக்கிய ஒரு இலக்கிய நூலாக அமைந்துள்ளது. இது தொடர்பாக கிழக்குமாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி கருத்து தெருவிக்கையில், இலக்கியம் தொடர்பான இவ்வாறான முயற்சிகளுக்கு கல்வி அமைச்சினால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என உறுதியளித்ததோடு இவ்வாறான நாவல்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். http://onlineuthayan.com/News_More.php?id=4200940007267…

  17. சிறுபான்மை பாதிக்கப்படும் தேர்தல் முறைக்கு எதிர்ப்பு - அமைச்சர் ரிஷாத் சிறுபான்மை மக்களனது பிரதிநிதித்துவம் பறிக்கப்படும் எந்தவொரு தேர்தல் முறை மாற்றத்துக்கும் நாம் ஆதரவு வழங்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அரசு கொண்டுவரவுள்ள தேர்தல் திருத்தத்துக்கு உடனடியாக ஆதரவு வழங்குவது தொடர்பில் தாம் ஆழமாகச் சிந்தித்து வருவதாகவும் கூறினார். தேர்தல் திருத்தத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவு தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தேர்தல் சீர்திருத்தத்திற்கு உடனடியாக ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது கட்சி சிந்தித்துவருகின்றது. அரசில் அங்கம் வகிக்கும்…

  18. நேபாளத்துக்கு இலங்கை உதவி நேபாளத்தில் நேற்றுக் காலை நடந்த மிகப் பெரிய நில அதிர்வினால் உயிரிழந்தவர்களுக்காக, இலங்கை அரசு இலங்கை மக்கள் சார்பில் தனது கவலையை யும் இரங்கலையும் வெளியிட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் நேற்றுக் காலை நடந்த மிகப் பெரிய நில அதிர்வினால் அங்கு ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை எண்ணி, இலங்கை மக்களும் இலங்கை அரசும் மிகப்பெரும் கவலையடைந்துள்ளது. உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்திப்பதுடன், இந்த அழிவிலிருந்து நேபாளம் விரைவில் மீண்டு வரவேண்டும்…

  19. சிங்கக் கொடி விவகாரம் சூழ்ச்சியாக இருக்கலாம் - மஹிந்தவுக்கு வந்தது சந்தேகம் சிறுபான்மை இனங்களின் அடையாளங்களை அகற்றிய தேசியக் கொடி பயன்படுத்தப்பட்டமை சூழ்ச்சியாக இருக்கக் கூடும் என்று, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச­ தெரிவித்துள்ளார். காலியில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ச­வுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்துக்கு வெளியே கடந்த திங்களன்று நடத்தப்பட்ட போராட்டத்திலும், கடந்த வியாழனன்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச­வுக்கு ஆதரவாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்பாகவும் நடத்தப்பட்ட போராட்டத்திலுல், சர்ச்சைக்குரிய சிங்கக் கொடிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இலங்கையின் தேசியக் கொடியில் உள்ள சிறுபான்மை…

  20. சாவகச்சேரியில் பொது சுகாதார பரிசோதகர் குழு முற்றுகை சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர் குழுவினர் நேற்று உணவு கையாளும் நிலையங்களின் மீது தீடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். கொடிகாமம் மற்றும் கைதடி பிரதேசங்களிலுள்ள உணவுகையாளும் நிலையங்களிளேயே நேற்றுப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர். இப் பரிசோதனையின் போது குறைபாடுகள் காணப்பட்ட நிலையங்களை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு எச்சரித்ததுடன் மேலும் உணவு கையாளும் நிலையமொன்றில் காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை அதனை தற்காலிகமாக மூடுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். மத்திய சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்ட உலக உணவுப் பாதுகாப்பு தினத்தையொட்டிய உணவு பாதுகாப்பு செயற்பாடுகளில் ஒன்றாகவே…

  21. ஈழத் தமிழ் மக்களால் தந்தை செல்வா என அழைக்கப்பட்ட எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் நினைவு தினம் இன்றாகும். ஈழத்துக் காந்தி என பலராலும் அழைக்கப்பட்ட தந்தை செல்வா ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் முன்னோடித் தலைவராவர். வழக்கறிஞராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த செல்வநாயகம் மூன்று தசாப்தங்களுக்கு மேல் அரசியல் தலைவராக செயற்பட்டார். மலேசியாவின் ஈபோ நகரில் பிறந்த செல்வநாயகம் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் வாழ்ந்தார். ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவ…

  22. ஜுன் மாதம் பொது தேர்தலுக்கு ஆயத்தமாகவும்!– பிரதமர் [ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 07:43.11 AM GMT ] பொதுத்தேர்தல் ஜுன் மாதம் இடம்பெறுவது உறுதி என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சிக்கு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய குறித்த தேர்தலில் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைத்து உறுதியாக முகம் கொடுப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்து வருகின்றதென சிரேஷ்ட உப தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். பொது தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிடுவதுடன் சிறுபான்மை கட்சிகள் மற்றும் ஏனைய குழுக்ளை ஒன்றினைத்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைக…

  23. போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐ.நா இலங்கையிடம் ஒப்படைக்கவுள்ளது போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளின் மூலம் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் மட்டும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களின் பட்டியல்களை விசாரணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த விபரங்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பி…

  24. மகிந்தவுடன் இணைய தயார் நிலையில் மைத்திரி தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஆயத்தமாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் ஸ்ரீ.சு.கவின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே மகிந்தவுடனான கலந்துரையாடலுக்கும் சம்மதம் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் மே தின பேரணியில் கலந்துக்கொள்ளுமாறு கட்சி செயலாளர் முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார் ஆனால் அவர் அதனையும் புறக்கணித்தார். அதனால் தான் எனக்கும் மகிந்தவிற்கும் சந்திப்பொன்ற…

  25. நேபாள நிலஅதிர்வில் மயிரிழையில் உயிர்தப்பிய மட்டக்களப்பு மருத்துவ மாணவி APR 26, 2015 | 2:21by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நேபாளத்தில் நேற்று நிகழ்ந்த பாரிய நிலநடுக்கத்தில், தலைநகர் காத்மண்டுவில் மருத்துவக் கல்வியை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பைச் சேர்ந்த நிவரிதா சசிதரன் என்ற மாணவி இதுகுறித்து கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில், “நேபாளம் வந்துள்ள சிறிலங்கா பெண்கள் உதைபந்தாட்ட அணியின் உறுப்பினர்கள் சிலரைச் சந்திப்பதற்காக, இன்னொரு இலங்கை மாணவியுடன் கல்லூரி விடுதியை விட்டு புறப்பட்டு, வழியில் சென்று கொண்டிருந்த போதே, நில அதிர்வு ஏற்பட்டது. உடனடியா…

    • 1 reply
    • 553 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.