Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ். சுன்னாகம் பகுதியின் கிணறுகளில் கழிவு ஒயில் கலந்தமை தொடர்பிலான ஆவணப்படம் ஒன்று வெளியடப்பட்டுள்ளது. ‘சுன்னாகம்;தகிக்கும் தண்ணீர்’ என்ற இந்த ஆவணப்படத்தை ஊடகவியலாளர் ஜெரா இயக்கியுள்ளார். இந்தப்பட வெளியீடு நேற்றுமுன்தினம் சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் மணிமண்டபத்தில் இடம்பெற்றது. இந்த வெளியீட்டு நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் எனப் பலதரப்பினரும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகோண்டு சிறப்புரை வழங்கிய மருத்துவரும், யாழ். மருத்துவ சங்கத்தின் தலைவருமான முரளி வல்லிபுரநாதன், வலிகாமத்தில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பது சம்பந்தமாக நாம் பல்வேறு தரப்பினரதும் கவனத்துக்குக…

    • 0 replies
    • 454 views
  2. யாழ்ப்பாணத்தில் தற்போது புகையிலை செய்கையில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபடுவதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது. புகையிலை செய்கைக்கு பிரபலமான வடமராட்சி பகுதியில் தற்போது புகையிலை உற்பத்தி அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக உடுப்பிட்டி, புன்னாலைக்கட்டுவன், ஈவினை, கரவெட்டி பகுதிகளில் புகையிலை செய்கையில் விவசாயிகள் அதிகம் ஈடுபடுவடுதனை காணக்கூடியதாகவுள்ளது. வெங்காயச் செய்கை தற்போது முடிவுற்ற நிலையில், விவசாயிகள் தற்போது இப் புகையிலை செய்கையினை ஊடு பயிராக தமது விவசாய காணிகளில் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/144195#sthash.y35adDrU.dpuf

    • 0 replies
    • 467 views
  3. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை சனிக்கிழமை (18) கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தமிழ்மிரருக்கு தெரிவித்தார். மேற்படி சந்தேக நபர் அதே பகுதியினை சேர்ந்தவர் எனவும் மணல் அகழ்வுக்காக பயன்படுத்தபட்ட சிறிய படி ரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் உழவு இயந்திரங்கள், டிப்பர் வாகனங்களை பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த மணல் கொள்ளையர்கள், தற்போது இலகுவான முறையில் அதிகளவு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான முறையில் மணல் கொள்ளையில் ஈடுபடும் எவராக இருந்தாலும் அவர்களுக்…

    • 0 replies
    • 340 views
  4. தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, குருமன்காடு பகுதியில் குறித்த அலுவலகம் அமைந்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின் பொதுச்செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதமவிருந்தினராகவும் அகில தமிழ் காங்கிரசின் தலைவர் இ.எ.ஆனந்தராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் ,சட்டத்தரணியும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான வி.மணிவண்ணன் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் செல்லையா.இராசையா,மட்டக்களப்பு மாவட்…

    • 0 replies
    • 406 views
  5. இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவுக்கு தகுதியில்லை: தயான் ஜயதிலக்க இலங்கையின் இனப்பிரச்சினைகளில் இந்தியாவோ அல்லது தமிழர்களை திருப்திபடுத்த நினைக்கும் மேற்கத்திய நாடுகளோ தகுதியற்றவைகள் என முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உணர்வோடு இந்தியா தொடர்புப்பட்டிருப்பதாலும், தேர்தல்களில் இலங்கை பிரச்சினை பெரிதும் ஆதிக்கம் செலுத்துவதாலும், இந்தியா அரசு புலிகளை முழுவதும் அழிக்க முயலவில்லை. இலங்கை பிரச்சினையில் இந்தியா மீண்டும் ஆதிக்கம் செலுத்த மைத்திரி அரசு இந்தியா பக்கம் சாய்வதை தயான் ஜயதிலக்க கண்டித்துள்ளார். மேலும் தமிழ் பிரிவினை வாதம், தனிநாட்டு கோரிக்கையை இலங்கையால் இனிதவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். tamil…

  6. கடந்த 25 வருடத்திற்கு முன்னர் அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 11 ம் திகதி மீள் குடியேற அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மக்கள் தமது குல தெய்வமான பிள்ளையார் கோவிலை தேடிய போது அக்கோயில் இருந்த பகுதி விடுவிக்கப்படாது உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள்லையே இருந்துள்ளது. அத்துடன் அரச மரத்தின் கீழ் இருந்த குமாரகோவில பௌத்த விகாரையாக மாற்றம் செய்து பிள்ளையாருக்கு அருகில் புத்தரை வைத்து இரானுவத்தினர் வழிபட்டு வருவதனை அவதானித்தார்கள். தமது குல தெய்வ ஆலயம் பௌத்த விகாரை ஆக்கப்பட்டதை எண்ணி அவர்கள் கவலை கொண்டனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118772/language/ta-IN/article.aspx

  7. புலம்பெயர், உள்நாட்டு தமிழ் பேசும் மக்கள், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து எப்பேர்ப்பட்ட ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை அறிந்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் 75ஆவது அகவைப் பூர்த்தி நிகழ்வு மன்னார் ஆயரின் வாசஸ்தலத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆயர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 'எமது மக்களின் நன்மையிலும் தீமையிலும், வாழ்க்கையிலும் மரணத்தறுவாயிலும் பக்கத்தில் நின்று, இறுக்கமான ஒரு காலத்தின் போதும் எம்மக்களுக்கு அரிய பல சேவைகள் புரிந்து வந்துள்ளார். இ…

    • 6 replies
    • 591 views
  8. இந்நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தேவை பட்டியலில் முன்னுரிமை கொண்ட விடயம் அல்ல. உண்மையில் இது அதிகமாக தேவைப்பட்டது சில பெரும்பான்மை கட்சிகளுக்கும், சில பெரும்பான்மை சமூக அமைப்புகளுக்குமே. இதை நாம் புரிந்துக்கொண்டு, தேச நலன் கருதியும், ஐக்கியம் கருதியும் விட்டுக்கொடுப்புகளுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க நாம் உடன்பட்டோம். இவ்விதம் புதிய ஜனாதிபதியையும், புதிய பிரதமரையும், புதிய அரசாங்கத்தையும் உருவாக்க பெரிதும் துணை வந்த எமக்கு இன்று துரோகம் இழைக்க பெரும்பான்மை கட்சிகளில் இருக்கின்ற சில சக்திகள் திட்டமிடுகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

  9. தமிழக மீனவர்கள் எல்லைக் கடந்து வந்தால் அவர்களை சுடுவதாக ரணில் விக்ரமசிங்க நகைச்சுவையாகவே கூறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவும் இந்திய ஊடகம் ஒன்றிடமே இந்த கருத்தை வெளியிட்டிருந்தார். தமது வீட்டுக்குள் அத்துமீறி நுழைபவரை சுட்டுக் கொல்வதற்கு உரிமை இருப்பதாக ரணில் கூறி இருந்தார். ஊடகவியலாளர் தொடர்ச்சியாக கேட்ட கேள்விகளால் அலுப்படைந்த ரணில், இவ்வாறு பகடி செய்த போதும், ஊடகங்கள் அதனை பெரிதுப்படுத்தி இருப்பதாக சந்திரிக்கா கூறியுள்ளார். http://www.pathivu.com/news/39297/57//d,article_full.aspx

  10. தேர்தலை எதிர்கொள்ள அஞ்சும் சுதந்திரக் கட்சி தலைவர்கள் – நாடாளுமன்ற கலைப்புக்கு எதிர்ப்பு APR 18, 2015 | 12:01by கி.தவசீலன்in செய்திகள் தேர்தலின் போது, அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய வரும் ஏப்ரல் 23ம் நாள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதையடுத்து, நாளை முக்கிய கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். தற்போதைய நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியமான தலைவர்கள் பலரும் விரும்பவில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலையாலும், பிளவுகளாலும், தற்போதைய நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை எத…

    • 0 replies
    • 412 views
  11. இந்தியா எச்சரித்த தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளைத் தொடர சிறிலங்கா அனுமதி APR 18, 2015 | 11:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தெற்காசியாவினதும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று, இந்திய பாதுகாப்பு வல்லுனர்களால் எச்சரிக்கப்பட்ட, தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் தாமரைக் கோபுரம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பான சர்ச்சைக்கு முடிவு காண்பதாக இணக்கம் காணப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுக்கமைப்பு ஆணையம், சிறிலங்கா துறைமுக அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன, தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளைத் தொடர்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முன்னதா…

    • 0 replies
    • 744 views
  12. 77 கிலோ சந்தனக்கட்டைகளை துலாபாரம் கொடுத்து குருவாயூரில் ரணில் வழிபாடு APR 18, 2015 | 11:10by அ.எழிலரசன்in செய்திகள் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் ஆலயத்தில், தனது எடைக்கு இணையாக 77 கிலோ சந்தனக்கட்டைகளை துலாபாரம் கொடுத்து, வழிபாடு செய்தார். இன்று காலை சிறிலங்கன் விமானம் மூலம், மனைவி மைத்ரியுடன் கொச்சினை வந்தடைந்த ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்து புகழ்பெற்ற குருவாயூர் ஆலயத்தில் காலை 11.15 மணியளவில் வழிபாடு நடத்தினார். இதன்போது, ரணில் விக்கிரமசிங்க தனது எடைக்கு இணையாக- 8.45 இலட்சம் ரூபா பெறுமதியான 77 கிலோ சந்தனக் கட்டைகளை துலாபாரமாக கொடுத்தார். சிறிலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும், ரணில் …

    • 0 replies
    • 592 views
  13. மீண்டும் அரசியலுக்கு திரும்பும் எண்ணம் இல்லை என்கிறார் பசில் APR 18, 2015 | 8:29by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் எண்ணம் தமக்குக் கிடையாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான பசில் ராஜபக்ச, முன்னைய ஆட்சிக்காலத்தில் பெரியளவிலான ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்டு வருகிறார். அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த சில நாட்களிலேயே, அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார் பசில் ராஜபக்ச. இந்த நிலையில், திவிநெகும கணக்கில் இருந்த 6500 மில்லியன் ரூபா பணத்தை, பசில் …

    • 0 replies
    • 528 views
  14. பாராளுமன்றத்தில் தற்போது எதிர்க் கட்சித் தலைவர் யார் என்ற பிரச்சனை நிலவுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிர் கட்சித் தலைவர் பதவியைத் வழங்குவது தொடர்பில் பல முரண்பட்ட கருத்துக்களும் வந்த வண்ணமுள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். தற்போதைய நிலமையின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க் கட்சித் தலைவராக வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும் தமிழர் என்ற காரணத்தினால் அது ஒதுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நிலவும் எதிர்க் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அவரிடம் வினவியபோதே மேறகண்டவாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பில அவர் மேலு…

    • 1 reply
    • 486 views
  15. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு நாளில் இரு தாய்மார் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.திருக்குமார் தெரிவித்தார். கிரானை சேர்ந்த டினோரஞ்சி முத்துக்கிருஸ்ணன் மூன்று குழந்தைகளையும் தன்னாமுனையை சேர்ந்த மேகானந்தி சுதாகரன் மூன்று குழந்தைகளையும் பிரசவித்துள்ளனர். இந்த குழந்தைகள் போதனா வைத்தியசாலையின் சிசுக்கள் விசேட சிகிச்சை பிரிவு, சிசுக்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் ஆறு குழந்தைகளும் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டாக்டர் திருமதி சித்திரா கடம்பநாதன் தெரிவித்தார். இதேவேளை குழந்தைகளை பிரசவித்தவ…

    • 0 replies
    • 438 views
  16. வட, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்த நடவடிக்கை – டச்சு நாடாளுமன்றத்தில் அஜித் பெரேரா APR 18, 2015 | 3:13by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. நெதர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா, டச்சு நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மீள்குடியமர்வு, உயர்பாதுகாப்பு வலயங்களை மீளாய்வு செய்தல், நிலங்களைப் பொதுமக்களிடம் ஒப்படைத்தல், நல்லிணக்கம், மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகிய நடவடிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வ…

    • 0 replies
    • 540 views
  17. இந்தோனேசிய மாநாட்டில் இருந்து நழுவினார் சிறிலங்கா அதிபர்- உள்நாட்டு நெருக்கடியே காரணம்? APR 18, 2015 | 2:51by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தவாரம் இந்தோனேசியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தைக் கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 60வது ஆசிய-ஆபிரிக்க உச்சிமாநாடு இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலும், பன்டுங் நகரிலும் நாளை 19ம் நாள் தொடக்கம், 24ம் நாள் வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்பார் என்றும், அவர், இந்த மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், இந்தானேசிய அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், நேற்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின் படி, சிறிலங்கா அதிப…

    • 0 replies
    • 517 views
  18. அமெரிக்காவில் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தும் சிறிலங்கா நிதி அமைச்சர் APR 18, 2015by கார்வண்ணன்in செய்திகள் ரவி கருணாநாயக்க- நிஷா பிஸ்வால் – கோப்புப்படம். அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில், உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன் ரவி கருணாநாயக்க மூடிய அறைக்குள் பேச்சுக்களை நடத்தியுள்ளார். அதேவேளை, நேற்றுமுன்தினம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், பொருளாதார அபிவிருத்தி, சக்தி மற்ற…

    • 0 replies
    • 425 views
  19. 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வற்புறுத்த முடியாது! [ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 02:57.30 PM GMT ] 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது என்று இலங்கை நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சியில் நேற்று நடந்த அரசியல் விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். 1987ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில், அரசியலமைப்பில் பலவந்தமாக திணிக்கப்பட்ட, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் புதிய அரசாங்கத்தை இந்தியா வற்புறுத்த முடியாது. இந்தியா தனது தீர்வை ஏற்றுக்கொள்ள வைப்பதற்…

  20. தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் இந்து மதத்தை தழுவினார் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் ஒருவர் இந்து மதத்தை தழுவியுள்ளார். பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிக்கும் அஸ்கார் லெப்பை இல் முபீன் என்பவரே இவ்வாறு மதம் மாறி மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி காளி கோயில் வீதியில் வசிக்கும் சுதாராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார். குறித்த மணமகன் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்தை தழுவி சிவகணேசன் என்று பெயர் மாற்றப்பட்டு திராவிடர் பாரம்பரிய முறையாக காது குத்தி கடுக்கன் இட்டு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். இவர்கள் செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் செல்லம் மோகனின் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். இது பற்றி மோகன் தெரிவிக்கையில், நமது…

    • 6 replies
    • 964 views
  21. பிரபாகரனின் பிரத்யேக சந்திப்பிடங்களை கட்டிக் கொடுத்த பொறியியலாளர் விடுதலை! தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிரத்யேகச் சந்திப்புக்களிற்கான கட்டிடங்களை வடிவமைத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பொறியிலாளரான பீதாம்பரம் டிவாகரன் (47) என்ற பொறியிலாளர் சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த பொறியிலாளரான டிவாகரன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரிற்கு இல்லங்களை அமைத்து கொடுத்துள்ளார். “நேரியன் இல்லம்” என அழைக்கப்பட்ட இல்லத்தையே பிரபாகரன் பிரத்யேக சந்திப்புக்களிற்காக பயன்படுத்தியிருந்தார். அதுதவிர, வன்னியில் பல இடங்களில் இருந்த பி…

  22. சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு – பயிற்சித் திட்டங்கள் குறித்து ஆராய்வு APR 17, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் யி ஜியான்லியாங், இன்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது, பல்வேறு இருதரப்பு ஈடுபாடுள்ள விவகாரங்கள் குறித்தும், மற்றும் சீன இராணுவத்துக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பயிற்சித் திட்ட ஒத்துழைப்புகள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இந்தச் சந்திப்பில், சிறிலங்கா இராணுவத் தளபதியுடன், இராணுவச்…

    • 0 replies
    • 272 views
  23. 2006ம் ஆண்டு நடந்த ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உதவியுடன், பான் கீ மூனை வெற்றிபெற வைத்ததாக, அண்மையில் காலமான தென்கொரிய வர்த்தகப் பிரமுகர் ஒருவர் தெரிவித்ததாக, தென்கொரிய நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. பான் கீ மூனை ஐ.நா பொதுச்செயலராக்குவதற்கு தாம் கணிசமான பங்காற்றியதாக, தமது நண்பர்களிடம் கியாங்னம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான, சங் வொன்- ஜொங் தெரிவித்த தகவலை கொரிய நாளிதழான Dong-A Ilbo வெளியிட்டிருக்கிறது.பதிவு இணைய செய்தி தாம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாகவும், அதனைப் பயன்படுத்தி, சிறிலங்கா சார்பில் 2006ம் ஆண்டு ஐ.நா பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிட்ட ஜ…

  24. தமிழீழ மக்களால் நேசிக்கப்பட்ட மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் 27.11.1965 ஆம் ஆண்டு பிறந்தவர் . முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத் தொடுவாயைச் சேர்ந்தவர். 1984 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளபட்ட பல்வேறு வெற்றிகரத் தாக்குதல்களில் பங்கேற்றவர். பல வெற்றித்தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்.தாயகத்தில் ஆக்கிரமிப்புப் படையாக வந்த இந்தியப்படைக்கு சிம்மசொப்பனமாக செயற்பட்டவர். இவரது நினைவுகளை சுமந்து அவரது வீர வரலாறுகளோடு வெளியீடுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம் , தமிழீழ விடுதலை புலிகளால் வெளியீடப்பட்ட நூல் "சமர்க்கள நாயகன்" அதனை தமிழகத்தில் இராவணன் பதிப்பம் தற்போது வெளியீட்டு வருகிறது. இதன் முதல் நூல் வெளியீட்ட…

    • 5 replies
    • 906 views
  25. இலங்கையின் இனப் பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியா கட்டமைப்பு ரீதியாக பொருத்தமில்லாத நாடு என, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தயான் ஜயதிலக்க கூறியுள்ளார். தமிழ்நாட்டின் உணர்வு மற்றும் தேர்தல் அதிகாரங்களோடு இந்தியா சம்பந்தப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் என அவர் கூறியுள்ளார். இனப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கு மீண்டும் கதவைத் திறந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பக்க சாய்வை ஜயதிலக்க ஞாபகப்படுத்தியுள்ளார். மேலும் இந்தியாவிடம், தங்கியிருப்பதனால் தமிழ் பிரிவினை வாதத்திலிருந்தும் தனிநாட்டு கோரிக்கையிலிருந்தும் இலங்கையை காப்பாற்ற முடியாதெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://www.pathivu.com/news/39309/57//d,articl…

    • 0 replies
    • 513 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.