ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
பார்த்துக் கொண்டே இருக்க குத்தாக எழுந்த ராஜபக்ஸக்கள் பார்துக் கொண்டே இருக்க சரிந்து வீழ்கிறார்கள்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பு மட்டத்தில் நீலப்படையணி எனும் பெயரில் கடந்த காலங்களில் செயற்பட்ட படையணி, இனிமேல் செயற்படாது என்றும் அப்படையணி ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் சு.க.வின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இனிமேலும் நீலப்படையணி போன்ற படையணிகள் செயற்பட மாட்டாது. எங்களிடம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் அமைப்புகள் மட்டுமே இருந்தன. கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள இணை அமைப்புகளை இணைத்துக்கொண்டு எதிர்காலத்தில் செயற்படுவோம் என்று அவர் மேலும் கூறினார். …
-
- 0 replies
- 394 views
-
-
கடந்த அரசாங்கத்தின் போது அறுகம்பே மற்றும் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு ஜனாதிபதி மாளிகைகள் இரண்டும் ஹோட்டல்களாக மாற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த மாளிகைகள் இரண்டும் ஜனாதிபதி செயலக நிதியத்திலிருந்தே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காலியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவற்றை நிர்மாணிப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவற்றை நிர்மாணிப்பதற்காக 90 பில்லியன் ரூபாவுக்கு அதிகமாக தொகை செலவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/139922#sthash.BSx7J8Mv.dpuf
-
- 0 replies
- 252 views
-
-
பதிலளிப்பாரா? பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கட்டைப்பஞ்சாயத்து மற்றும் மிரட்டல்களில் ஈடுபடுவதாக யாழ்ப்பாணத்தில் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இது வரை யாழ்ப்பாணத்திலுள்ள ஜந்திற்கும் அதிகமான காவல்நிலையங்களிற்கு சென்று அங்கு காவல்துறை அதிகாரிகளை மிரட்டியும் அவர்கள் முன்னதாகவே பொதுமக்களை அச்சுறுத்திய பல சம்பவங்கள இடம்பெற்றதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். அவரால் அச்சுறுத்தலிற்கு உள்ளாகி இருக்கும் வயோதிப தாய் ஒருவரை தனக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்;ததாக விஜயகலா காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளதும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் காரைநகரினை சேர்ந்த யுவதியொருவர் காதல் வயப்பட்ட நிலையில் …
-
- 0 replies
- 414 views
-
-
யுத்தக்குற்ற விசாரணைகள் தொடர்பில் சிறிலங்காவின் அரசாங்கமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்தே செயற்படுவதாக, சிறிலங்காவின் பௌத்த இனவாத அமைப்பான தேசப்பற்றுள்ள தேசியஇயக்கம் தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் வசந்தபண்டார இதனைக் கூறியுள்ளார். சிறிலங்கா அரசாங்கம் யுத்தக் குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் சிங்கள மக்கள் உள்நாட்டு விசாரணைகளை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.பதிவு இணைய செய்தி இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை முன்வைத்து அறிக்கைகளை வெளியிடும் போது, சிங்கள மக்கள் உள்நாட்டு விசாரணைகள் சிறந்தது என்ற முடிவுக்கு வருவார்கள். இதுவே தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அரசாங்கத்தின் திட்டமாக இருக…
-
- 1 reply
- 598 views
-
-
மட்டக்களப்பு நகரில் காணாமல் போனோரின் உறவுகள் இன்று காலைமுதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் முன்னால் 500க்கும் அதிகமான பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் ஒரு பகுதியினர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்குச் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் கையளித்தனர். காணாமல் போனோர் கடைசியாக அணிந்திருந்த ஆடைகளும் உண்ணாவிரதத்தின்போது காட்சிக்கு வைக்கப்பட்டடிருந்தன. http://www.pathivu.com/news/37841/57//d,article_full.aspx
-
- 1 reply
- 533 views
-
-
தமிழ் பேசும் சமூகம் என்றே மறைந்த எம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உச்சரித்தாரே தவிர தமிழ் - முஸ்லிம் என்று பிரித்து எந்த பேச்சு மேசையிலும் உச்சரிக்கவில்லை இதனை அறியாமல் கிழக்கு முதல்வர் விமர்சித்தமை தமிழர் மனதை புண்படுத்தும் செயல் என்று கிழக்கு மாகண சபை உறுப்பினர் த.கலையரசன் விசனம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் நஸீர் அஹமட் கூறிய பதில் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமதிப்பதுடன் இன்றைய சூழலில் பொருத்தமற்ற செயல். இப்படிப்பட்ட கூற்றுக்களை பதவி ஏற்றவுடன் கிழக்கு முதல்வர் கூறுவது சாலச் சிறந்ததல்ல என்றும் கலையரசன் விடுத்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள…
-
- 3 replies
- 633 views
-
-
புலிகள் இயக்கம் உள்ளிட்ட ஏனைய தமிழ் இயக்கங்களின் முன்னாள் உறுப்பினர்கள் நலன்கருதி தொழில்வாய்ப்புத் திட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் தான் கடந்த அரசுகளிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்ததாகவும், எமது மக்கள் நலன்கருதிய திட்டங்களை முன்னெடுப்பதற்கு தடையாக இருந்துவரும் சுயலாப தமிழ்த் தலைமைகளின் செயற்பாடுகள் காரணமாகவே இத்திட்டமும் செயல்வடிவம் பெறாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் இயக்கங்களில் ஆரம்பந்தொட்டே தங்களை இணைத்துக் கொண்டிருந்த பல உறுப்பினர்கள், உரிய கல்வித்தகைமைகள் உட்பட ஏனைய தகைமைகளைக் கொண்டிராத நிலையில் காணப்படுகின்றனர…
-
- 1 reply
- 353 views
-
-
இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேலும் வலுவடையும் என்று புதுடெல்லியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.முன்னதாக அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு அளித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அணிவகுப்பு மரியாதையை சிறிசேனா ஏற்றுக் கொண்டார். பின்னர், ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிறிசேனா தனது மனைவி ஜெயந்தியுடன் மலரஞ்சலி செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அணு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், மோடியும், சிறிசேனவும்…
-
- 1 reply
- 941 views
-
-
ஆசனம் ஒதுக்கப்படவில்லை ; ஏமாற்றத்துடன் திரும்பினார் டக்ளஸ் வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா புறக்கணித்திருந்தார். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ். பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். எனினும் கரு ஜெசூரியவை அழைத்து வந்த டக்ளஸ் தேவானந்தா நூலக கேட்போர் கூடத்தில் விட்டுவிட்டு கூட்ட அறையை விட்டு வெளியேறினார். தொடர்ந்தும் ஈ.பி.டி.பி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சப…
-
- 4 replies
- 758 views
-
-
வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா புறக்கணித்திருந்தார். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ். பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். கரு ஜெசூரியவை அழைத்து வந்த டக்ளஸ் தேவானந்தா நூலக கேட்போர் கூடத்தில் விட்டுவிட்டு கூட்ட அறையை விட்டு வெளியேறினார். எனினும் ஈ.பி.டி.பி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். குறித்த கூட்டத்தி…
-
- 0 replies
- 353 views
-
-
தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரி சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறையினை உருவாக்கும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவீரமாதக ஈடுபடத் தொடங்கியுள்ளது. அனைத்துலக விசாரணையினால் ஏற்படப்போகும் அபாயங்களில் இருந்து சிங்கள தேசம் தன்னுடைய நலன்களை பாதுகாகத்துக் கொள்வதற்காக, ஆட்சிமாற்றம் எனும் புதிய முகத்துடன் இரத்தும் தோய்ந்த தனது கரங்களை அனைத்துலக அரங்கில் மூடிமறைத்து வருகின்றது. இவ்வேளை சிங்களத்தின் தமிழனஅழிப்பின் இரத்தம் தோய்ந்த முகத்தினை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தி, தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலகத்திடம் கோரி, தனது செயற்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இராஜதந்திரத்தளம், மனித உரிமைத்தளம்…
-
- 0 replies
- 287 views
-
-
வெலே சுதா போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய 26 டிரக்டர்கள் களனி பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வெலே சுதா பாகிஸ்தானில் இருந்து கடத்தும் போதைப் பொருள் குறித்த டிரக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் போதைப் பொருள் பிரிவினரால் இந்த டிரக்டர்கள் மீட்கப்பட்டுள்ளன. களனி - பியகம வீதி சிங்காரமுல்ல 6ம் கட்டை பகுதி களஞ்சியசாலை ஒன்றில் இருந்து இந்த டிரக்டர்கள் மீட்கப்பட்டுள்ளன. வெலே சுதா வழங்கிய தகவலின்படி பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் இந்த டிரக்டர்களை மீட்டுள்ளனர். டிரக்டர்களின் உதிரிபாகங்களை கழற்றி அதனுள் போதைப் பொருள் மறைத்து கொண்டு வரப்பட்டுள்ளதாக தெர…
-
- 0 replies
- 1.1k views
-
-
வட மாகாணசபை உறுப்பினர் மேரி கமலா குணசீலனின் இராஜினாமா கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் வட மாகாண சபை உறுப்பினர் பதவி வகிப்பதாகக் கூறி, மேரி கமலா வட மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தருணத்தில், ஒரு வருட காலத்தில் தான் வட மாகாண சபை உறுப்பினராக இருப்பதாகவும், அதற்கு பின்னர் ஒரு தினத்தில் பதவியை இராஜினாமா செய்து மற்றவருக்கு விட்டுக்கொடுப்பதாகவும் கூறியிருந்தார். அவரால் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் வழங்கப்பட்ட கடிதம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேரி கமலா கருத்துக்கூறுகையில், சத்தியப்பிரமாணத்தின் போது, ஒரு வருடத்தில் பதவி விலகுவதாக கூ…
-
- 0 replies
- 350 views
-
-
வடமாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு வாகனங்கள் வழங்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக 10 பிரதேச சபைகளுக்குரிய வாகனங்கள் இன்று வழங்கப்பட்டன. யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்ற மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் புத்தசாசன மற்றும் மதவிவகாரங்களுக்கான அமைச்சர் கரு ஜயசூரிய இந்த வாகனங்களை வழங்கினார். வலிகாமம் வடக்கு, நெடுந்தீவு, காரைநகர், மாந்தை கிழக்கு, மாந்தை மேற்கு, வெங்கலவெட்டிக்குளம், பூநகரி, வலிகாமம் தெற்கு, பருத்தித்துறை, துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட்டன. http://seithy.com/breifNews.php?newsID=126667&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 307 views
-
-
இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணை அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் சமர்ப்பிப்பதனை கால தாமதிக்கும் யோசனையை, மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல் ஹுசைன் ஆதரிப்பதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை சில மாதங்களுக்கு காலம் தாழ்த்துமாறு இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது. புதிய விசாரணைப் பொறிமுறைம ஒன்றை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு அவகாசம் கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 30ம் அமர்வுகள் வரையில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை ஒத்தி வைக்கும் யோசனையை ஆதரிக்கின்றேன். இலங்கை நிலைமைகளின் மாற்றம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை காலம் தாழ்த்துவது நிய…
-
- 0 replies
- 171 views
-
-
மாற்றங்கள் தோற்றத்திலே அன்றி திட்டத்திலோ! தீர்விலோ! காணோம் வளலாய் மக்களின் வாழ்வாதாரத்துக்கும் வளத்துக்கும் உறுதுணையாக இருந்த மக்களின் சொந்த நிலங்களை மேலாதிக்க நிலையில் அபகரித்து வளலாய் மாதிரிக்கிராம வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை நிலத்தின் உரிமையாளர்களும் வளலாய் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று வளலாய் மீள் குடியேற்ற செயற்குழு அறிவித்துள்ளது. வளலாய் கிராமத்தில் 240 ஏக்கர் நிலத்தில் ஆயிரத்து 22 குடும்பங்களை குடியேற்றுவதற்கு மாதிரிக் கிராமம் அமைப்பது தொடர்பாக அரசு அறிவித்தல் செய்துள்ளது. இந்தக் குடியிருப்பில் வலி வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களைக் குடியேற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு வளலாய் மீள்குடியேற்ற ச…
-
- 6 replies
- 671 views
-
-
பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வுகளை எட்ட முடியும்; கரு ஜெயசூரிய நாங்கள் சமாதானக்கரம் நீட்டுவது போல நீங்களும் எங்களை நோக்கி சமாதானக்கரம் நீட்டுங்கள் என புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதிதியாக கரு ஜெயசூரிய கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துக்களை இந்த வடக்கு மாகாண மக்களுக்கு தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். நான் இங்கு வந்ததன் முக்கிய நோக்கம் வடக்கு மாகாணத்தை நோக்கி சமாதானக் கரங்களை நீட்டுவதற்கே. ஜனவரி 8 இல் நாட…
-
- 2 replies
- 446 views
-
-
இலங்கை வர மோடி சம்மதம் இலங்கை அரசின் அழைப்பை ஏற்று எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு வருவதற்கு இந்தியப் பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பினை அடுத்து இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதேவேளை இருநாடுகளுக்கிடையே அணுசக்தி ஒப்பந்தம், நாளந்தா பல்கலைக்கழகம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=318143876416178259#sthash.CtD7i8x9.dpuf
-
- 2 replies
- 638 views
-
-
சர்வதேச யுத்தக் குற்ற அறிக்கையை தாமதித்து வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசேன் சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். இந்த கடிதத்தில் புதிதாக சிறிலங்காவில் ஆட்சி அமைத்துள்ள அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளின் அடிப்படையில் இந்த விசாரணை அறிக்கையை தாமதாக வெளியிட தீர்மானித்திருப்பதாக கூறியுள்ளார் யுத்தக்குற்ற வாளிகளை தண்டிப்பதாகவும் சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்து கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த அறிக்கையை தாமதிப்பதன் மூலம், விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க இன்னும் கால அவகாசம் கிடைக்கும். எனவே இந்த விசாரணைகளுக்கு புதிய தகவல்களும்…
-
- 0 replies
- 329 views
-
-
தீர்மானம் தொடர்பில் உலகத் தமிழ் மக்களுக்கு வட மாகாண முதலமைச்சர் விடுக்கும் வேண்டுகோள் Feb 15, 20150 வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் தாற்பரியத்தை உலகம் முழுவதும் எடுத்துக் கூறுவதுடன் தமிழ் மக்களின் கடந்தகால மற்றும் இக்கால பிரச்சனைகளையும் எடுத்தியம்பி நல்லதொரு அரசியல் மாற்றம் ஏற்பட ஆவன செய்யவேண்டும் என்றும் உலகம் பூராகவுமுள்ள தமிழ் மக்களுக்கு வட மாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். “இன்றைய கால கட்டம் எமது பயணத்தில் ஒரு தங்குமிடம் போன்றது. இதுவரை நடந்தேறியதை இப்பொழுது நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இனி நடக்கப்போகின்றவை நன்மையாக நடக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். இதற்கு சிங்கள பொது மக்கள் எமக்கு ஆதரவு நல…
-
- 2 replies
- 505 views
-
-
இடமாற்றங்களை வழங்குங்கள் ; ஆசிரியர்கள் போராட்டம் வன்னி வலய பாடசாலைகளில் கடமையாற்றும் ஆகிரியர்கள் தங்கள் பதவிக்காலம் முடிவடைந்தும் இடமாற்றம் வழங்கப்படவில்லை என வலியுறுத்தி ஆசிரியர்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=113193876216356639#sthash.OnFzIBkB.dpuf
-
- 0 replies
- 427 views
-
-
வடக்கிலுள்ள 10 பிரதேச சபைகளுக்கு வாகனங்கள்; கரு ஜெயசூரிய வழங்கி வைப்பு பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. அதற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தினை அடுத்து பிரதேச சபை தவிசாளர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன. குறித்த வாகனங்களை கரு ஜெயசூரிய வழங்கி வைத்தார். அதற்கமைய வவுனியா தெற்கு, பூநகரி, காரைநகர், வலி.வடக்கு , பருத்தித்துறை , வெண்கல செட்டிகுளம், மாந்தைகிழக்கு, மாந்தை மேற்கு, நெடுந்தீவு, துணுக்காய் ஆகிய பிரதேச சபைகளுக்கு குறித்த வாகனங்கள் வழங்கப்பட்டன. இதேவ…
-
- 0 replies
- 389 views
-
-
கடந்த வாரம் இத்தாலியில் இருந்து சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட்ட 6 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வு பிரிவினரால் தாக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையர்களை நாடு கடத்தும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. புதிய அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் தமிழர்களை நாட்டுக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்திருந்த நிலையில், நாட்டுக்கு திரும்பிச்செல்வோர் மற்றும் நாடு கடத்தப்படுவோர் கைது செய்யப்பட்டு கடும் சித்திரைவதைக்குட்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் இத்தாலி அரசாங்கத்தால் நாடுகடத்தப்பட்ட 6 பேர் விமான நிலையத்தில் வைத்து புலனாய்வு …
-
- 1 reply
- 478 views
-
-
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களில் ஒன்றான கிளிவெட்டி முகாமில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பட்டித்திடல், மணல்சேனை, கட்டைப்பறிச்சான் ஆகிய முகாம்களில் தங்கியுள்ள சம்பூர் மக்களும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். புதிய அரசாங்கத்தின் நூறுநாள் திட்டத்தின்கீ்ழ் தமது மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்ப்பார்த்தபோதிலும் அது கைகூடவில்லை என கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்கள் கூறினர். சம்பூரில் உள்ள சொந்த காணிகளில் தம்மை குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை வேண்டும்…
-
- 0 replies
- 544 views
-
-
தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்: த.தே.கூ MONDAY, 16 FEBRUARY 2015 03:26 இலங்கையில் மீள்குடியேற்றம், காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சூழலிலேயே தமிழ்க் கூட்டமைப்பு இந்தக் கருத்தினை முன்வைத்துள்ளது. இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் வேளையில், திரும்புவர்கள் மீள்குடியேறுவதற்கான காணிகள் உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாள…
-
- 0 replies
- 613 views
-