ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
கிழக்கு மாகாண சபையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் பகிரங்க அழைப்பு விடுத்தார். தற்பொழுது அக்கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கிழக்கு மாகாண அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்று இணைந்து செயற்பட வருமாறும் அமைச்சர் அக்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் கூட்டாக இணைந்து செயற்பட்டது போன்று கிழக்கு மாகாணத்திலும் செயற்பட ஒன்…
-
- 0 replies
- 443 views
-
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இலங்கை தொடர்பான சர்வதேச சமூகத்தின் நகர்வுகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. அமெரிக்க, இந்திய, சீன நாடுகளுடனான இலங்கையின் உறவுகள் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதன் பாதிப்புகள் தமிழர்கள் மீதும் தாக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகளை வலுவாக எதிர்பார்க்கச் செய்துள்ளது. முக்கியமாக போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில், சர்வதேச சமூகம் தனது முன்னைய ஈடுபாட்டை குறைத்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் குறித்து அண்மைய நாட்களாகவே பேசப்படுகின்றன. ஜெனீவாவில் வரும் மார்ச் 2ம் திகதி கூடவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித…
-
- 0 replies
- 636 views
-
-
இன நல்லுறவை கருத்தில் கொண்டு ஓமந்தை சோதனை நிலையத்தில் சோதனைகள் இடம்பெறாதென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். எனினும் சோதனைச் சாவடி அகற்றப்படாதெனவும் தேவையேற்பட்டால் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அது அகற்றப்படாதிருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார். வடக்குக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், நேற்று சனிக்கிழமை கொழும்பு திரும்ப முன்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் இங்கு மேலும் கூறுகையில் ; வடக்கிலுள்ள உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனையிலுள்ளனர். இந்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சராக டி.எம். ச…
-
- 1 reply
- 598 views
-
-
நிதியமைச்சின் சுமார் 2100 கோவைகள் காணாமல்போயுள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றப்புலனாய்வு துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த கோவைகளில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கேள்விகளுக்குரிய கணக்கு வழக்குகள் இருந்திருக்கலாம் என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் நிதியமைச்சின் அதிகாரிகளே சம்பவத்துக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=126156&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 314 views
-
-
கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) நியமிக்கப்படுவார் என்று அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, பிள்ளையான் மற்றும் அவருடன் புதிதாக இணைந்துள்ள இனியபாரதி ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினர். கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பிள்ளையானுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க அரசுத்தரப்பு முன்வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=126153&catego…
-
- 0 replies
- 342 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் வடக்கில் கையகப்படுத்திய காணிகளை மீண்டும் உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ரீதியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் கூறப்பட்ட கூற்றினை தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்றிருப்பதாக தெரிவித்த கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என பாதுகாப்பு பிரதியமைச்சர் ருவான் விஜேயவர்த்தன கூறிய கூற்று கவலையை ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார். இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் நல்லாட்சியை உறுதிப்படுத்தியிருப்பதாக நம்பிக்கை கொள்ள முடியும் என்று த…
-
- 1 reply
- 474 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனீவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளையும், சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை நடத்தும் குழுவினரையும் சந்தித்து பேசியுள்ளார். அடுத்த மாதம் சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறப்பட்டாலும், அதனை தாமதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சுமந்திரனின் தீடீர் ஜெனீவாப் பயணம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் அண்மைய நடவடிக்கைகளால் அவருக்கு எதிரான கருத்துக்கள் கூட்டமைப்பு வட்டாரங்களிலும், மக்கள் …
-
- 9 replies
- 868 views
-
-
மகனிற்காக அதி வேகப்படகு ஓட்டுவதற்கு வாவியை வாங்கிய மகிந்த! [sunday 2015-02-08 08:00] யோசித ராஜபக்ஷ பொல்கொட வாவியில் அதி வேகப்படகு ஓட்டுவதற்கு கடற்படையினர் பொல்கொட வாவியைச் சுற்றியுள்ள ஈர நிலத்தை ரூ.5 கோடிக்கும் மேற்பட்ட பணம் செலுத்தி வாங்கியுள்ளனர். இப் பணத்தை எட்டு நபர்களுக்கு வழங்கி பிரதேச செயலக காரியாலயத்தினூடாக 38 உறுப்புரையின் கீழ் 2011/09/27 அன்று இலக்கம் 1725/10 வர்த்தமானி அறிவித்தலின் கீழ் உரிமையாக்கியுள்ளனர். இதற்காக பணமாக ரூ. 50,400,000/= (ஐந்து கோடி நானூறு இலட்ச்சம்), 8 நபர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக காணி அமைச்சினால் 2013/03/07 அன்று பிரதேச செயலகத்தின் செயளாளருடைய பெயருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந் நிலங்களை கடல் கண்கா…
-
- 0 replies
- 518 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை மீதான விவாதம் ஐநா பேரவையில் மார்ச் மாதம் நடைபெறாது என்றும், அது செப்டம்பர் மாத அமர்வுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை அடுத்த மாதம் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலங்கையின் புதிய அரசாங்கம், தமக்கு கால அவகாசம் தருமாறு கோரியுள்ள நிலையில், விசாரணை அறிக்கை மீளாய்வை வரும் செப்டம்பர் மாதத்துக்குப் பிற்போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உயர்மட்ட வட…
-
- 0 replies
- 382 views
-
-
மகிந்த ஆட்சியில் பதுக்கிய சொத்துக்களை மீட்க உலக வங்கியுடன் இணைந்து நடவடிக்கை FEB 08, 2015 | 2:01by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர்களால், முறைகேடான வகையில் சேகரிக்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கை குறித்து உலக வங்கியுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இது தொடர்பாக திருடப்பட்ட சொத்துக்களை மீட்கும் உலக வங்கியின் அலகின் அதிகாரிகள் குழுவை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இந்தப் பேச்சுக்களில் சட்டத்தரணி வெலியமுனவும் கலந்து கொள்ளவுள்ளார். உலக வழங்கியின் சொத்துக்களை மீட்கும் அலகின் அதிகாரிகளுடனான சந…
-
- 0 replies
- 561 views
-
-
அலரி மாளிகையில் கூட்டமைப்பு – அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியமர்வு குறித்து ரணிலுடன் பேச்சு FEB 08, 2015 | 1:27by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியமர்வு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தியுள்ளது. நேற்று முன்தினம் மாலை அலரி மாளிகையில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா பிரதமருடன் மீள்குடியேற்ற அமைச்சர் எ.எம்.சுவாமிநாதன், திருகோணமலை கடற்படை அதிகாரிகள் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தரப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சே…
-
- 0 replies
- 617 views
-
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான விவாதம் செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு? FEB 08, 2015 | 1:01by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா நடத்திய விசாரணை அறிக்கையின் மீதான மீளாய்வு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் நடைபெறாது என்றும், அது செப்ரெம்பர் மாத அமர்வுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை அடுத்த மாதம் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், சிறிலங்காவின் புதிய அரசாங்கம், தமக்கு காலஅவகாசம் தருமாறு கோரியுள்ள ந…
-
- 0 replies
- 537 views
-
-
இராணுவம் வெளியேறுவதை யாழ்.மக்கள் விரும்பவி்ல்லையாம்! - யாழ்.படைத்தளபதி கூறுகிறார் [saturday 2015-02-07 09:00] யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினர் வெளியேறுவதை அங்குள்ள மக்கள் விரும்பவில்லை என யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.ங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர், யாழ்ப்பாண குடாநாட்டின் சில பகுதிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேறுவதனை மக்கள் எந்த வகையிலும் விரும்பவில்லை. பொதுமக்கள் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை பிரதேச மக்கள் விரும்பவில்லை. போரின் பின்னர் மிகவும் அத்தியாவசியமான முகாம்களைத் தவிர்ந்த ஏனைய இடங்கள் பொதுமக்களுக்கு அதிகளவில் மீள வழங்கப்பட்டுள்…
-
- 2 replies
- 297 views
-
-
ஏழரை இலட்சம் டொலருக்கு அமர்த்தப்பட்ட வெளிநாட்டு ஆலோசகரை நீக்கியது புதிய அரசு FEB 06, 2015 | 0:17by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மோசமான நடத்தையால் அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டொமினிக் ஸ்டர்ரஸ் கானை சிறிலங்காவின் புதிய அரசாங்கம், வெளிநாட்டு முதலீட்டு ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது. அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவராகப் பணியாற்றிய போது, வொசிங்டன், பாரிஸ், பிரசெல்ஸ் நகரங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் டொமினிக் ஸ்டர்ரஸ் கான். இவரை முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஆலோசகராகப் பதவிக்கு அமர்த்தியிருந்தது. இதற்கென அவருக்கு 7…
-
- 0 replies
- 712 views
-
-
ஐ.நா. விசாரணையாளர்கள் இலங்கையில் விசாரணை நடத்த வேண்டும்! - புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை [saturday 2015-02-07 09:00] இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் என்றும், இதற்காக ஐ.நா. விசாரணையாளர்களை இலங்கை சென்று விசாரிக்க வேண்டும் எனவும் புலம்பெயர் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கனேடியன் தமிழர் தேசிய பேரவை (கனடா), தமிழ் அமைப்புக்களின் டெனிஸ் கூட்டமைப்பு (டென்மார்க்), ஈழத்தமிழ் இத்தாலியப் பேரவை (இத்தாலி), நியூசிலாந்து தமிழர் பேரவை (நியூசிலாந்து), டச்சு தமிழர் கூட்டமைப்பு, மைசன் டூ தமிழீழம் பிரான்ஸ், நோர்வேஜியன் தமிழீழ பேரவை, சுவிஸ் தமிழீழ பேரவை, பெல்ஜியம் தமிழர் கலாசார பேரவை, தமிழீழ பேரவை ஜேர்மனி…
-
- 3 replies
- 522 views
-
-
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் போன்று ஏனைய மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இராணுவ முகாம்கள் எந்தவிதத்திலும் அகற்றப்படாது என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன இன்று யாழில் தெரிவித்தார். இன்று பி.ப 2.30 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பலாலி இராணுவப் படைத்தளத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கு,கிழக்கு இணைந்த ஏனைய பிரதேசங்களிலும் இராணுவ குறைப்பிற்கு இடமில்லை. ஆனாலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுத்து தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டுமே தவிர தேசிய பா…
-
- 3 replies
- 496 views
-
-
ஈபிடிபி சார்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பேரவை உறுப்பினர்களை காப்பாற்றும் வகையினில் பல்கலைக்கழக பீடாதிபதிகள் உயர்கல்வி அமைச்சரிற்கு அனுப்பி வைத்திருந்த கடித விவகாரம் சூடுபிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக பீடாதிபதிகள் கடிதம் எழுதியமை தொடர்பில் நடவடிக்கைக்கு எடுக்க யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக பீடாதிபதிகள் உயர்கல்வி அமைச்சருக்கு நிர்வாகம் தூய்மையாக இருப்பதாக எழுதியதாக கூறப்படும் கடி…
-
- 0 replies
- 534 views
-
-
தமிழ் தேசத்தின் மீதான வெற்றியை நிலைநாட்டிய சிங்கள தேசத்தின் வீரன் நவீன துட்டகெமுனுவாகிய ராஜபக்ச தேர்தல் தோல்வியின் பின் பெட்டி பாம்பாக அடக்கப்பட்டிருப்பதை சிங்கள தேசமும் ஏன் இலங்கை தீவு முழுவதும் வியப்புடன் பார்த்து நிற்கிறது. அனைத்து ஆதிகாரங்களையும் கையில் கொண்டிருந்த சர்வாதிகாரி, அரசின் மையங்களில் முழு செல்வாக்குடனும் அரசாங்கத்தை தங்களது குடும்பத்தின் முழுகட்டுபாட்டிலும் வைத்திருந்த ராஜபக்ச குடும்பம், ஒரு தேர்தல் தோல்வியின் பின்; இன்று "எங்களை அநியாயமாக தண்டிக்காதீர்கள், வெளியே சுதந்திரமாக நடமாட விடுங்கள்" என்று கோரிக்கை வைக்கும் நிலையில் இருக்கிறதென்றால் இது இலங்கைதீவின் சாதாரண நடைமுறையல்ல. தேர்தல் காலத்திலும் சரி தேர்தலின் பின்பும் சரி அரசியல் கொலைகளும் கலகங்களும் …
-
- 0 replies
- 455 views
-
-
இலங்கையின் 67ஆவது சுதந்திர தின அரசாங்கத்தின் பிரதான நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்கு முன்னதாக கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. எனினும், இதற்கு முன்னர் நடைபெற்ற சுதந்திர தின வைபவங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரம் அடைந்த இலங்கையில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றும் தமிழர் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படவில்லை என்றும் தமிழருக்குத் தீர்வு வரும் வரையில் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதில்லை என்ற முடிவில் கூட்டமைப்பு உள்ளதாகவும் முன்னர் அறிவிக்கப்பட்டிரு…
-
- 49 replies
- 4.2k views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹாபீஸ் நசீர் அஹமட், இன்று மாலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில், திருகோணமலையில் இந்த சந்திப்பிரமாணம் வைபவம் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=126064&category=TamilNews&language=tamil
-
- 36 replies
- 1.8k views
-
-
வட, கிழக்கில் காணாமற்போன அனைவரையும் தேடித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இன்று (6)அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வெளிவந்த பல்வேறு தகவல்களுடன், வடக்கில் கைதான பலர் இரகசிய முகாம்களில் இருப்பதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் இந்த விடயங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக பசீர் சேகுதாவூத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, 2009 ஆம் ஆண்டு படையினரால் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படும் ஈரோஸ் அமைப்பின் பொதுக் குழுத் தலைவரும்…
-
- 4 replies
- 900 views
-
-
நாடாளுமன்ற விளையாட்டுத்திடலில் நடைபெற்ற 67ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழரசுக்கட்சியின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றதையடுத்து கூட்டமைப்புக்குள் கருத்துமோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மீது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு தீர்மானிக்க வேண்டும் என தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் இலங்க…
-
- 37 replies
- 2.4k views
-
-
கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கியமைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயா கமகே. இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "கிழக்கு மாகாணசபையில் 7 ஆசனங்களுடன் சிறுபான்மை பலத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி வழங்கியமை நியாயமற்றது. கிழக்கு மாகண முதலமைச்சராக என்னை நியமிப்பதற்கு அனைவரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், நான் குறுகிய காலமே கிழக்கு மாகாண சபையில் இருக்கப் போகின்றேன். தற்போதுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பினால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும். ஏனெனில், ஐக்கிய மக்கள் சுதந்திர …
-
- 1 reply
- 757 views
-
-
சென்னையில் நடை பெற்ற இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் கருத்தரங்கம் இலங்கைத் தேர்தல் முடிவுகளும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் என்ற தலைப்பில் நேற்று மாலை 4 மணியளவில் அறிவாயுதம் ஆய்விதழ் ஏற்பாட்டில் சென்னை சந்திரசேகர் திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இவ் நிகழ்வில் செ.குமரமள்ளர் முன்னிலை வகிக்க வழக்கறிஞர் ப. அமர்நாத் தலைமை ஏற்றார். இதில் உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் அகதிகளை திரும்பப் பெறும் சூழ்ச்சியும் அபாயமும் என்ற தலைப்பிலும், பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் மாற்று அரசியல் என்ற தலைப்பிலும், கா.அய்யநாதன் அவர்கள் 13 வது சட்டத்திருத்தம் தீர்வாகுமா? என்ற தலைப்பிலும், மருத்துவர் நா. எழிலன் இன்றைய சூழலில் தமிழகம் - புலம்பெயர்…
-
- 1 reply
- 834 views
-
-
வடமாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கணகரத்தினத்தின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனந்தெரியாத குழு ஒன்று நேற்று இரவு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவகப் பகுதிக்கு வந்தால் கவனித்துக் கொள்வதாக அவர் தாக்குதல் நடத்திய குழுவினால் எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக அவர் காவற்துறையில் முறைபாடு செய்துள்ளார்.http://www.pathivu.com/news/37564/57//d,article_full.aspx
-
- 1 reply
- 468 views
-