ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
சிறிலங்காவில் ஆட்சி மாறினாலும் பிரித்தானிய நிலைப்பாடு மாறாது – ஹியூகோ ஸ்வையர் JAN 31, 2015 | 1:28by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், சிறிலங்கா தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அவர், நேற்று கொழும்பில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஒன்று தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், சிறிலங்கா தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாடுகள், எந்த மாற்றமும் இன்றியே தொடரும். சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் …
-
- 0 replies
- 347 views
-
-
தமிழ் தலைமைகளுக்கு ஒரு கடிதம் [ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 10:51.07 AM GMT ] இலங்கையின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நீங்கள் விடும் வெற்று அறிக்கைகள் வெறுமனே நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பது புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை தீவில் இருந்து யாரும் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் வெறுமனே வெளியாகவில்லை என்பது முதலில் நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உண்மைக்காய் குரல் கொடுத்தவர்களும் இன உணர்வாளர்களும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களும் சொந்த ஊரை விட்டு உறவுகளை விட்டு அகதிகள் எனும் கோணத்தில் அகதிகளாக நின்மதியாக தங்களது உயிரை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றர்கள் என்பது உலகறிந்த உண்மை. தற்போது பரவலாக இலங்கையில் அரசியல் மாறிவிட்டது சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலை…
-
- 2 replies
- 526 views
-
-
நாளை மறுநாள் கொழும்பு வரும் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணமும் செல்வார் JAN 30, 2015 | 15:29by கார்வண்ணன்in செய்திகள் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளார். இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அரசாங்க உயர்மட்டப் பிரமுகர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். போருக்குப் பிந்திய நல்லிணக்கம், மற்றும் பெர்றுப்பக் கூறல் தொடர்பாக கொழும்பில், ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை நடத்திய பின்னர், அவர், வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாணசபையின் உ…
-
- 5 replies
- 688 views
-
-
சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் எங்கும் நிலத்தடி நீரினில் கழிவு ஓயில் வேகமாகப்பரவி வருகின்ற நிலையினில் இது தொடர்பினில் ஊடகங்கிற்கு செய்தி வெளியிட தடைவிதித்துள்ளார் வடமாகாண சுகாதார அமைச்சர். இது தொடர்பினில் வெளியிடப்பட்டுள்ள உள்ளக சுற்றுநிருபத்தினில் தமது அனுமதியின்றி ஊடகங்களிற்கு செய்திகளை வெளியிட வேண்டாமென மாவட்ட சுகாதார அதிகாரிகளிற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட தன்னார்வ தரப்புக்கள் சில கழிவு ஓயில் சர்ச்சைகளிற்கு காரணமான மின்பிறப்பாக்கிகளை முடக்க கோரி அடையாள எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையினிலேயே ஊடகங்களிற்கு செய்திகளை வழங்க முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. ஏற்கனவே வடமாகாண விவசா…
-
- 1 reply
- 640 views
-
-
ஐரோப்பாவில் முகாமிட்டுள்ள மங்கள: மீன் தடையை நீக்க ஐ.ஒன்றியம் உறுதி! January 30, 2015 09:10 am தமது கோரிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது குறித்து கவனம் செலுத்த முடியும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இத்தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வைத்து, பெல்ஜிய உதவி பிரதமர் டிட்லர் ரேய்டெர்ஸ் உட்பட்டவர்களை சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றாடல் துறை ஆணையாளர் கர்மெனு வெலாவையும் சந்தித்து இது குறித்து பேசியுள்ளார்.…
-
- 1 reply
- 450 views
-
-
அதிகாலையில் அலரி மாளிகையில் இருந்தார் மொகான் பீரிஸ் – நேரில் கண்டதை ரணில் விபரிப்பு JAN 30, 2015 | 10:48by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அதிபர் தேர்தலுக்கு மறுநாள் அதிகாலையில் தான் அலரி மாளிகைக்குச் சென்ற போது, அங்கு பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் நின்றிருந்ததாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “அலரி மாளிகைக்கு வருமாறு கடந்த 9ம் நாள் அதிகாலை 4 மணியளவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டார். நான் அங்கு சென்றபோது அங்கிருந்தவர்களில் மொகான் பீரிசும் அடங்கியிருந்தார். அந்த நேரத்தில் அங்கு என்ன செய்கிறீர்கள் என்று அவரிடம் வினவினேன். ஆலோசனை கூறுவதற்காக தாம் வந்ததாக அவர் என்னிடம் சாதாரணமாக பதில் கூறினார். அ…
-
- 0 replies
- 649 views
-
-
வடமராட்சி கிழக்கினில் மணல் கொள்ளையினில்; தொடர்ந்தும் ஈடுபட அனுமதி கோரி ஈபிடிபியும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளது.முன்னதாக வடமராட்சி கிழக்கினில் அனுமதியற்று ஈபிடிபியின் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மணல் கொள்ளையினை தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள் போராடிவந்திருந்தனர். அவர்களது போராட்டத்தின் எதிரொலியாக மணல் கொள்ளைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையினில் இன்று தம்மை மீண்டும் மணல் அகழ்வு நடவடிக்கையினில் ஈடுபட அனுமதி கோரி ஈபிடிபி ஆதரவாளர்கள் போராட்டத்தினில் குதித்துள்ளனர். சுமார் 15 பேர் வரையிலான ஆட்களை கொண்ட கும்பலொன்று மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பதாக இவ்வார்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.எனினும் ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்ட எவரும் வடமராட்சி கிழக்கை சேர்ந…
-
- 5 replies
- 764 views
-
-
வடக்கு மாகாணத்திற்குட்பட்ட இரண்டு வைத்தியசாலைகளில் விபத்து மற்றும் அவசரசிகிச்சைப் பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளன. வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளில் இதற்கான இருமாடிக்கட்டடங்கள் அமைக்கப்படவுள்ளன. அண்மையில் வவுனியாவில் மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தலா இரண்டு சத்திரசிகிச்சை கூடங்களுடன் விபத்து பிரிவும், அவசர சிகிச்சைப்பிரிவுகளுடன் புதிய கட்டடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கான கட்டடம் அமைக்கும் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வடமாகாண சபையின் 2௦15 ஆம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் பாதீடு தொடர்பான முன்மொழிவின் போது…
-
- 0 replies
- 565 views
-
-
இலங்கையில் 400 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவிருந்த ஆடம்பர விடுதி மற்றும் சுற்றுலா மைய செயற்றிட்டத்துக்கான வரி சலுகைகளை இலங்கை அரசு விலக்கிக்கொள்ள தீர்மானித்துவிட்டதால் குறித்த திட்டத்தை முன்னெடுக்கப்போவதில்லையென ஜேம்ஸ் பக்கரின் கிறவுன் குரூப் தெரிவித்துள்ளது. பக்கரின், சுற்றுலா மையம் உட்பட மூன்று வெளிநாட்டு சுற்றுலா மையங்களுக்கான தாராள வரி சலுகைகளை இரத்து செய்யப்போவதாக இலங்கையின் புதிய அரசு நேற்று அறிவித்தது. புதிய அரசின் இந்த தீர்மானத்தின் காரணமாக தமது கம்பனி இந்த திட்டத்தை நிறுத்தப்போவதாக கிறவுன் குரூப் நிறுவனத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு இந்த கம்பனிக்கு பல வரி சலுகைகளை வழங்கியிருந்தது. ஆனால் த…
-
- 0 replies
- 369 views
-
-
மீன் ஏற்றுமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவான முறையில் இலங்கை மீன்பிடியில் ஈடுபடாத காரணத்தினால், இலங்கை மீன் வகைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை நீக்கும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் பிரசல்ஸிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது பல்வேறு முக்கியஸ்தர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மீன்பிடித் தடையை நீக்குவதற்கு தேவையான தர நிர்ணயங்களை எட்ட இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியமே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பெல்ஜியத்தின் ப…
-
- 0 replies
- 367 views
-
-
புதிய பிரதம நீதியரசராக கே.சிறிபவன், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இவர் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசராகவும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட ஆலோசகராகவும் பிரதி சட்டமா அதிபராகவும் பணியாற்றியுள்ளார். கனகசபாபதி ஜே.ஸ்ரீபவன் 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ் இந்து கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்ற அவர் சட்ட கல்லூரியில் இணைந்து கொண்டதுடன் 1976 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியின் பரீட்சையில் முதல் தரத்தில் சித்தியடைந்தார். 1978 ஆம் ஆண்டு பெப…
-
- 0 replies
- 525 views
-
-
இலங்கையில் புதனன்று மீண்டும் பதவி அமர்த்தப்பட்ட தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க வியாழனன்று பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஷிராணியை நாடாளுமன்றம் குற்றஞ்சாட்டி பதவி நீக்கியது தவறு என தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அவர் மீண்டும் பதவி அகற்றப்பட்டிருந்தார். ஷிராணி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை வரவேற்கும் வைபவத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தான் ஒய்வு பெற்ற பின்பு வெற்றிடமாகும், இலங்கையின் 44ஆவது தலைமை நிதிபதி பதவிக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக செயற்படும் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டால் அது தொடர்பாக தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். நீதித் துறையில் தான பதினாறு வரு…
-
- 6 replies
- 1.1k views
-
-
வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை – சிறிலங்கா திட்டம் JAN 30, 2015 | 1:24by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, புதிதாக உள்நாட்டு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரவைப் பேச்சாளர், ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “அனைத்துலகத் தர நியமங்களுக்கு ஏற்ப, ஐ.நாவினால் ஏற்றுக் கொள்ளத்தக்க உள்நாட்டு விசாரணை ஒன்றை ஆரம்பிப்பது குறித்து நாம் சிந்திக்கிறோம். இது புதிய உள்நாட்டு விசாரணையாக இருக்கும். தேவைப்பட்டால் இந்த விசாரணையில் சில வெளிநாட்டு நிபுணர்களின் உதவிகளையும் நாம் பெற்றுக் கொள்வோ…
-
- 0 replies
- 499 views
-
-
புதிய அரசின் கொள்கைகளை ஜெனிவாவுக்கு விளக்கினார் ஜயந்த தனபால- தொடர்ந்து பேச இணக்கம் JAN 30, 2015 | 1:14by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபால நேற்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். ஜெனிவாவில் நேற்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பாக, அவர் ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு விளக்கமளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜோகிம் ருக்கரையும், பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் கூட, சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ஜயந்த தனபால சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்…
-
- 0 replies
- 344 views
-
-
வடக்கில் படை முகாம்கள் மீது கற்களை வீசத் தூண்டிய இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை JAN 30, 2015 | 0:53by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கில் சில இராணுவ முகாம்களின் மீது கற்களை வீசுமாறு ஒரு குழுவினரைத் தூண்டி விட்ட, இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 9ம் நாள், அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்தே, வடக்கிலுள்ள சில இராணுவ முகாம்கள் மீது கற்களை வீசுமாறு ஒரு குழுவினரைத் இந்த அதிகாரிகள் தூண்டியுள்ளனர். இந்த இரண்டு இராணுவ அதிகாரிகளும், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள் என்று அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத…
-
- 0 replies
- 669 views
-
-
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தற்போது வருகை தந்துள்ளார். தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி விலக வேண்டுமென நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள், சிவில் அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். http://www.adaderana.lk/tamil/news.php?nid=65737
-
- 14 replies
- 1.2k views
-
-
ஐ.நா அறிக்கை தாமதமாகலாம் என தமிழ்மக்கள் அச்சம் – பிரித்தானிய அமைச்சரிடம் சி.வி எடுத்துரைப்பு JAN 29, 2015 | 8:47by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் ஐ.நா நடத்தும் போர்க்குற்ற விசாரணையின் அறிக்கை வெளியாவது தாமதமாகலாம் என்று தமிழ்மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் ஹியூகோ சுவைரிடம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர் இன்று காலை விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், “ஆட்சிமாற்றத்துக்குப் பிந்திய நிலைமை …
-
- 0 replies
- 395 views
-
-
குளிரூட்டப்பட்ட ஆடம்பர அறையில் நாய் வளர்த்த மகிந்த முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அலரி மாளிகையில் செல்லப் பிராணிகளாக விலை மதிப்பான 43 நாய்கள் வளர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நாய்களை பராமரிப்பதற்கென பிரத்தியோகமாக அறைவடிவமைக்கப்பட்டு அவை குளிரூட்டப்பட்டு, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதனை தவிர பெறுமதியான 23 அரிய வகை பறவைகளும் ஒரு குதிரையும் இரண்டு போனிக்குதிரைகளும் அலரி மாளிகையில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்காக கடந்த காலங்களில் கோடிக்கணக்கில் பொது நிதி செலவு செய்யப்பட்ட விதம் பற்றி தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டுள்ள நிலையில் வாகனங…
-
- 30 replies
- 2.6k views
-
-
வடமாகாணம் இராணுவ பிடியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்பதை யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிய அரசு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுள்ள நிலையில் வடமாகாணத்தில் இடம்பெறும் மாற்றங்கள் தொடர்பாக அவர்கள் ஆவலாக கேட்டறிந்தனர். புதிய அரசின் செயற்பாடுகள் பல இடத்தில் நன்மை பயக்கின்றது. குறிப்பாக ஆளுநர், பிரதம செயலாளர் ஆகியவர்களின் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூறினேன்…
-
- 1 reply
- 453 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலை - காணிகளை மீள் அளித்தல் - இராணுவத்தை குறைத்தல் - உள்நாட்டு விசாரணை - ராஜித - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இலங்கை அரசாங்கம் யுத்தக்குற்றம் தொடர்பான சர்வதே விசாரணைக்கு அனுமதியளிக்காது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனரத்தின,உள்நாட்டு விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வடமாகாணத்தில் இராணுவத்தினரிடம் உள்ள தனியார் நிலங்களை ஓப்படைப்பதற்கும்,அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கும் புதிய அரசாங்கம் எண்ணியுள்ளதாக அமைச்சரவை பேச்சளார் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் வடமாகாணத்தில் இராணுவபிரசன்னத்தை குறைக்கும்,கடந்த அரசாங்கத்தை போன்று இராணுவநடவடிக்கைகள் மூலமாக மாத்திரம் பயங்கரவாதத்தின் மீள் எழுச்சியை கட்ட…
-
- 3 replies
- 527 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். http://www.tamilmirror.lk/137398
-
- 25 replies
- 3.2k views
-
-
-வா.கிருஸ்ணா தமிழ் மக்களின் பல போராட்டங்கள் மற்றும் பல தியாகங்களுக்கு மத்தியில் உருவான கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடுக்கின்றமை கவலைக்குரிய விடயம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது நினைவுதினம், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், '65 வருடகால போராட்ட வரலாற்றில், இலட்சக்கணக்கான உயிர்களை பறிகொடுத்த இனமாக தமிழினம் மட்டுமே உள்ளது. இந்தப் போராட்டம் காரணமாக மூவின மக்களும் மடிந்துள்ளார்கள…
-
- 0 replies
- 742 views
-
-
யாழ்.ஊடக அமைய பிரதிநிதிகள்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இலங்கையில் தெற்கினை போன்று வட-கிழக்கில் ஊடகவியலாளர்கள் மீதான நெருக்குவாரங்கள் குறைந்திருப்பதாக இல்லை. அத்துடன் கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய தமிழ் ஊடகவியலாளர்கள் இலங்கை திரும்புவதற்கான சூழல் மேம்பட்டுவிட்டதாகவும் நம்பவில்லை எனவும் யாழ்.ஊடக அமைய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர்க் யாழ்.பொதுசனநூலகத்தில் வைத்து யாழ்.ஊடக அமைய பிரதிநிதிகளை சந்தித்தார். புதிய ஆட்சி மாற்றம் மற்றும் ஊடக நிலை என்பவை பற்றி அவர் ஊடக அமையப்பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடிகள் மற்றும்…
-
- 0 replies
- 401 views
-
-
போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் பிரிட்டனின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர். வடமாகாண முதலமைச்சர் மற்றும் யாழ்.ஊடக அமையப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு அவர் கருத்து வெளியிடுகையில் பிரித்தானியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லாத போதும் ஆதரவளித்த ஏனைய நாடுகளது முடிவிலும் தங்கியிருப்பதாக தெரிவித்தார். போர்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிடுவதா தொடர்ச்சியான நடவடிக்கை என்னவென்பது பற்றிய தீர்மானத்தை அதனை கொண்டு வரும் நாடுகளே தீர்மானிக்கும் என அவர் தெரிவித்தார். குறிப்பாக எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்படும் தரவு அறிக்கை வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தி…
-
- 0 replies
- 563 views
-
-
வலி.வடக்கு மக்களை சந்திக்க வரும் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டாம் என இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வலி.வடக்கு மக்களை நாளைய தினம் பிரிட்டன் வெளியுறதுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இன்று காலை வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சிவில் உடைகளில் சென்ற இராணுவத்தினர் மக்களை மிரட்டியுள்ளனர். புதிய அரசு பொறுபேற்ற பின்னர் உயர் அதிகாரி ஒருவர் உங்கள் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள அவரிடம்,நாங்கள் இந்த இடத்தில் நீண்ட காலமாக இருந்து பழகி விட்டோம். எனவே உயர் பாதுகாப்பு வலய காணிகளுக்கு பத…
-
- 4 replies
- 728 views
-