ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142791 topics in this forum
-
பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை கூட்டுத்தலைமையை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர். எனவே, பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள் என இரானியேல் செல்வின் தெரிவித்துள்ளார். வடமராட்சியில், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,"சிங்கள தலைவர்களையும், கட்சிகளையும் நாம் ஒரு தரப்பினராகவே பார்க்க வேண்டும். அத்துடன், தமிழ் மக்கள் அனைவரும் ஒரு தரப்பினராக இணைய வேண்டும். இவ்வாறு ஒன்றிணைந்து, பலமுள்ள மக்களாக நாம் பேசுவோம். அடிமைத்தனம் என்று எங்கள் மனங்களில் ஊறிப் போயுள்ள விடயங்…
-
-
- 3 replies
- 942 views
- 2 followers
-
-
11 SEP, 2024 | 09:27 PM (இராஜதுரை ஹஷான்) இராணுவத்தினரின் கௌரவம் மற்றும் உரிமைகளை பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக ரணில், அனுர, சஜித் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். 13க்கு ஒருபோதும் இடமில்லை என்று நாமல் ராஜபக்ஷ மாத்திரமே குறிப்பிடுகிறார். நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க விரும்புபவர்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொஸ்கம பகுதியில் புதன்கிழமை (11) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, …
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவின் போது பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருட்கள் யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கை சங்கிலி – 1, மோதிரம் -1, பணப்பைகள் – 9, கைக்கடிகாரங்கள் – 18, தேசிய அடையாள அட்டைகள் – 4, சாரதி அனுமதிப்பத்திரம் – 4, வங்கி அட்டைகள் – 4, திறப்புகள் – 39 ஆகிய பொருட்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டன. இவற்றை உரிமையாளர்கள் உரிய ஆதாரங்களை காட்டி மாநகர சபை நிர்வாகக் கிளையில் அலுவலக நேரத்தில் அக்டோபர் 10 ஆம் திகதி வியாழக்கிழமை வரை பெற்றுக் கொள்ளலாம் என்று யாழ். மாநகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309271
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 SEP, 2024 | 08:54 PM (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணத்தில் கூறப்படும் விடயங்களைக் கேட்டு அழிவை நோக்கிச் செல்ல முடியாது. அவர்களது பிரிவினைவாத கருத்துக்களைப் பின்பற்றினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக புரையோடிப் போயுள்ள உள்ளக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்தார். அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் என்பது மக்கள…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க வேண்டும் என்பதை ஓர் அறைகூவலாக விடுக்கின்றேன் என திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தெரிவித்துள்ளார். இது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது; இலங்கையில் வருகிற செப்டமர் 21ஆம் நாள் நடக்கவுள்ள குடியரசு தலைவருக்கான தேர்தலில் தமிழீழ மக்களின் விடுதலை, நீதிக்கான கோரிக்கைகளின் குறியீடாக பொது வேட்பாளர் ஒருவரைப் போட்டியிடுகின்றார். இதன் மூலம் உலகத்திற்கு தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பையும் விருப்பையும் அறிவிப்பது என்ற நோக்கில் அங்குள்ள விடுதலை ஆற்ற…
-
- 1 reply
- 248 views
- 1 follower
-
-
Published By: Rajeeban 11 Sep, 2024 | 12:31 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் தனது பிரஜைகளிற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பாக்கிஸ்தான் சீற்றமடைந்துள்ளது . இலங்கை அரசாங்கம் 38 நாடுகளின் பிரஜைகள் விசா இல்லாமல் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. எனினும் இந்த பட்டியலில் தனது நாடு இடம்பெறாதமை குறித்து பாக்கிஸ்தான் சீற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்கிஸ்தானிற்கான இலங்கை தூதுவர் ரவீந்திரவிஜயகுணவர்த்தன ,இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் என பாக்கிஸ்தானையும் இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாக…
-
-
- 7 replies
- 447 views
- 1 follower
-
-
11 Sep, 2024 | 01:46 PM நாகப்பட்டினம்: தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையினர் தங்களின் கப்பலை விட்டு மோதி படகை கவிழ்த்ததாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நாகை மாவட்டம் செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன் என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில் கடந்த 9-ம் தேதியன்று அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், தேவராஜ், கார்த்திகேயன், சதீஷ் ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில், நேற்று மாலை அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகின் மீது கடற்படை கப்பலைக் கொண்டு மோதியதாக கூறப்படுகிறது. கப்பல் மோதியதில் …
-
- 0 replies
- 131 views
-
-
11 Sep, 2024 | 05:36 PM மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு தினமான இன்று (11) வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்துவைக்கப்பட்டது. வட்டுக்கோட்டை தென்மேற்கு பகுதியில் இவ்வீதி அமைந்துள்ளது. விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் வீதி திறப்பு நிகழ்வு ஆரம்பமானது. அடுத்து, விருந்தினர்களது உரைகளை தொடர்ந்து வீதி திறக்கப்பட்டது. யாழ். நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகனின் தலைமையில் நடைபெற்ற இந்த வீதி திறப்பு நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அத்துடன் மதகுருமார், வலி.மேற்கு…
-
-
- 1 reply
- 1.2k views
-
-
(எம்.மனோசித்ரா) கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்து கொள்ள நான் விரும்பவில்லை. சரியான பாதையில் பயணிப்பதற்காக எந்தவொரு தியாகத்துக்கும் நான் தயாராகவே இருக்கின்றேன். எனவே இராஜாங்க அமைச்சு பதவி பறிபோனதில் கவலை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு நான் எடுத்த தீர்மானம் எனது சுய உரிமையாகும். எனது 14 வருட அரசியல் வாழ்வில் கட்சி தாவும் அரசியல் மற்றும் அடிமைத்தனமான அரசியலை நான் வெறுக்கின்றேன். எவ்வித சிறப்புரிமைகளையும் பெற்றுக் …
-
- 1 reply
- 301 views
-
-
Published By: Vishnu 11 Sep, 2024 | 06:21 PM ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு செவ்வாய்க்கிழமை (10) அம்பாறை மாவட்டத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் இம்முறை போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு நமக்காக நாம் எனும் தொனிப்பொருளில் தேர்தல் பிரசாரத்தை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுத்திருந்தார். அவருடன் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா. நடராஜா உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர். முதலில் அம்பாறை மாவட்ட எல்லையில் உள்ள பெரிய நீல…
-
-
- 6 replies
- 436 views
-
-
யாழ்ப்பாணத்தில் (jaffna) பாடசாலை மாணவி ஒருவர் டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (10.9.2024) கொக்குவில் - ஆடியபாதம் வீதியில் இடம்பெற்றுள்ளது. கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த 17 வயதான வினுதா விஜயகுமார் என்ற மாணவியே இதன்போது உயிரிந்துள்ளார். திடீர் மரண விசாரணை கொக்குவில் (Kokkuvil), ஆடியபாதம் வீதியில் தனியார் கல்வி நிலையத்துக்குப் பயணித்த மாணவியை டிப்பர் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் ம…
-
- 2 replies
- 446 views
- 1 follower
-
-
தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. மாறாக இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்கள் வரலாற்று ரீதியில் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கானது என தழிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து நேற்று (10) மாலை வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ்த் தேசியம் இன்று பலவாறாக அகத் துண்டாலுக்கு உட்பட்டு வருகின்றது. இது தமிழ் மக்களின் அரசியல் அபில…
-
- 2 replies
- 481 views
- 1 follower
-
-
11 SEP, 2024 | 11:53 AM சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவையும் வாசிம் தாஜூதீனையும் கொலை செய்தவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என சி.ஐ.டி.யின் முன்னாள் தலைவர் ரவி செனிவிரட்ண தெரிவித்துள்ளார். இருவரும் அரசியல் நோக்கங்களிற்காக கொலை செய்யப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். குருநாகலில் தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். வாசிம் தாஜூதீன் படுகொலை விசாரணைகளை அவ்வேளை ஆட்சியிலிருந்தவர்கள் தடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார். பொலிஸார் அந்த கொலை குறித்து உரிய முறையில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவ்வேளை ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லைஎன அவர் தெரி…
-
- 0 replies
- 316 views
- 1 follower
-
-
11 SEP, 2024 | 02:22 PM நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கந்தப்பளை நு/கோட்பெல் தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 07 மாணவர்கள் அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் குறித்த மாணவர்களின் பெற்றோர்களால் ராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளனர். அத்துடன் நுவரெலியா வளையக் கல்வி காரியாலயத்திற்கு சென்று குறித்த பாடசாலையின் அதிபரை இடமாற்றம் செய்ய கோரியும் பாடசாலை அதிபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை உரிய தீர்வு கிடைக…
-
-
- 18 replies
- 752 views
- 2 followers
-
-
11 SEP, 2024 | 10:16 AM புதுக்குடியிருப்பு கைவேலி பாடசாலையில் மின்விசிறி திருட்டுடன் தொடர்புடைய மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு கைவேலி கணேசா வித்தியாலயத்தில் கடந்த மாதம் 16 ஆம் திகதி 4 மின் விசிறிகள் திருடப்பட்டுள்ளது. அதனையடுத்து பாடசாலை சமூகத்தினரால் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கைவேலி முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பாடசாலை மின்விசிறிகளை களவாடிய நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த சந்தேகநபர் மின்விசிறிகளை களவாடி இருநப…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
Published By: VISHNU 11 SEP, 2024 | 02:15 AM வவுனியா, ஓமந்தை பகுதியில் ரயிலுடன் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். செவ்வாய்கிழமை (10) மாலை யாழிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரயில் புளியங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ரயில் பாதையில் நடந்து சென்ற பெண்ணுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மரணமடைந்தார். உயிரிழந்தவர், இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்த ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/193364
-
- 0 replies
- 992 views
- 1 follower
-
-
மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு ஜேவிபி சதி திட்டம்!- திஸ்ஸ குட்டியாராச்சி. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக் கொலை செய்வதற்கு சதி திட்டங்கள் தீட்டப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே திஸ்ஸ குட்டியாராச்சி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ தேசிய மக்கள் சக்தியினால் இந்த கொலைக்கான சதி முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அவரது பாதுகாப்பு என்பனவற்றை இ…
-
- 0 replies
- 304 views
-
-
Published By: Vishnu 10 Sep, 2024 | 08:57 PM (நா.தனுஜா) இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்திருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை (10) வவுனியாவில் கூடிய ஜனாதிபதித்தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்கான கட்சியின் விசேட குழு, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோரி எதிர்வரும் 14 அல்லது 15 ஆம் திகதி அறிக்கையொன்றை வெளியிடுவதற்கும், எதிர்வரும் 14 ஆம் திகதி கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தை நடத்தாமல் இருப்பதற்கும் தீர்மானித்துள்ளது. நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி …
-
- 0 replies
- 169 views
-
-
தமிழ் மக்களை இரத்தமும் சதையுமாக கொன்றொழித்த ஜே வி பி அநுரவுக்கு தமிழ் மக்களுக்கு எதிராக துரோகங்களை மேற்கொண்ட சுமந்திரன் வக்காலத்து வாங்குகிறார் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா குற்றம் சாட்டினார் . இன்றையதினம் திங்கட்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் யாழ்ப்பாணம் வருகை ஜே வி பி என்ற பெயர் மாற்றப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார தமிழ் மக்களை மிரட்டுகிறார் என யாழ்ப்பாணம் வருகை தந்த மற்றும் ஒரு வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். இருவரைப் பொறுத்த வரையிலும் பழைய வரலாறுகளை தேடிப் பார்…
-
- 0 replies
- 208 views
-
-
10ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் 10ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவானது கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக 9ஆம் திகதிவரை இடம்பெற்றது. இதன்போது 18 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 60ற்கும் மேற்பட்ட திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. யாழ்ப்பாண சர்வதேச திரைப்படவிழாவின் இறுதிநாளில், தெரிவுசெய்யப்பட்ட திரைப்படங்களின் இயக்குனர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி எஸ்.…
-
- 0 replies
- 356 views
-
-
10 Sep, 2024 | 02:22 AM (நா.தனுஜா) தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு புற்றுநோயைப் போன்றது எனவும், அதனை முடிவுக்குக்கொண்டுவந்து பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வரை கடந்தகால மீறல்களின் தாக்கங்களும், காயங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் தொடர்ச்சியாகத் துரத்திக்கொண்டிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் ஆட்சிபீடம் ஏறும் புதிய அரசாங்கம் உண்மையையும், பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதன் ஊடாக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (9…
-
- 0 replies
- 138 views
-
-
10 Sep, 2024 | 10:10 AM நன்னீர் நாய் என அறியப்படும் உயிரினம் ஒன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார் வாகன திருத்தும் இடத்திற்கு நன்னீர் நாய் வழி தவறி சென்ற நிலையில் சனிக்கிழமை (7) பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நன்னீர் நாய் (Smooth-coated Otter) நீர்நாய் வகையைச் சேர்ந்தது ஆகும். இது பொதுவாக லெட்ரொகலே இனத்தின் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்திய துணைக்கண்டத்திலும் மேலும் தென்கிழக்காசியப்பகுதியில் அமைந்துள்ள நாடுகளிலும் காணப்படுகிறது. மற்ற நீர் நாய்களைவிட இதன் மேல் உள்ள முடிகள் குறைவாகவும் மிருதுவாகவும் காணப்…
-
- 0 replies
- 703 views
-
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் பயிலும் மாணவியான மாதங்கி கனகசுந்தரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். வேகமாக அதிக எண்ணிக்கையான பாதணிகளை அடுக்குதல் என்னும் தலைப்பின் கீழான போட்டியிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார். இணையத்தளம் ஊடாக விண்ணப்பித்து 10 பாதணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக 59 செக்கன்களில் அடுக்கி குறித்த சாதனையை புரிந்துள்ளார். கடந்த மே மாதம் 20ஆம் திகதி கொடிகாமத்தில் உள்ள வீட்டில் இரு சாட்சிகள் முன்னிலையில் கின்னஸ் உலக சாதனை சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த சாதனை நிகழ்வு காணொளியாக பதிவு செய்யப்பட்டு இணையத்தினுடாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மூன்று மாதங்களின் பின் world guiness assesment commity ம…
-
-
- 5 replies
- 539 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 7 10 SEP, 2024 | 10:59 AM பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று திங்கட்கிழமை (09) மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக படுகொலை ஞாபகார்த்த தூபியானது புனரமைக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப் மேரியினால் திறந்துவைக்கப்பட்டது. படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உ…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 10 SEP, 2024 | 03:14 PM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவரது கால் பாதம் துண்டாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டியின் கால், மோட்டார் சைக்கிளின் செயினுக்குள் அகப்பட்டு, பாதம் துண்டாடப்பட்டுள்ளது. விபத்தினை அடுத்து காயப்பட்டவரை அவ்விடத்தில் இருந்தவர்கள் மீட்டு மீண்டு நோயாளர் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், துண்டாப்பட்ட பாதத்தினையும் மீட்டு நோயாளர் காவு வண்டியில் அனுப்பி வைத்துள்ளனர். விபத்து சம்…
-
- 0 replies
- 840 views
- 1 follower
-