Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் மகிந்தவின் இன்னொரு தேர்தல் பரப்புரை யாழ்.தேவி புகையிரதம் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் காங்கேசன்துறை வரை தனது பயணத்தை விஸ்தரிக்கவுள்ளது. தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் மகிந்த ராஜபக்ச அன்றைய தினம் உத்தியோக பூர்வமாக அதனை ஆரம்பித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மிக விரைவாக இடம்பெற்று வருகிறது. எனவே அதற்குள் அனைத்து புனரமைப்பு வேலைகளையும் செய்து முடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரைகள் தெற்கில் சூடு பிடித்திருந்த நிலையில் வடக்கில் எந்தவித முன்னேற்பாடுகளும் அற்று காணப்படுகிறது.. இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் என்பன ஜனாத…

  2. ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வந்தவர்களை தேடி அலையும் புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க 250 உத்தியோகத்தர்கள் வடக்கிற்கு வருகைதந்துள்ள நிலையில் அவர்களை கண்காணிக்க இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினர் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு நாளைய தினம் மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.இதில் வடமாகாணத்திலுள்ள சகல படைமுகாம்களிலும் கடமையாற்றும் படையினர் வாக்களிக்கவுள்ளனர். இந்த நிலையில் படை முகாம்களில் வாக்களிப்பினை ஒழுங்குபடுத்துவதற்கும், கண்காணிப்பதற்குமாக குறித்த 250 உத்தியோகத்தர்களை தேர்தல் திணைக்களம் வடக்கிற்கு அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படிக் குழுவுக்கு முன்னாள் வடமாகா…

  3. சுகாதார ஊழியர்களுக்கு இரகசிய நியமனம்; டக்ளஸ் வழங்கிவைப்பு யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த சுகாதார ஊழியர்கள் 178 பேருக்கு இன்று நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதற்கான நிகழ்வுகள் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. ஊழியர்களுக்கான நியமனக்கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்துள்ளார். குறித்த 178 சுகாதார ஊழியர்களும் நாளாந்தம் 390 ரூபா சம்பளத்துடன் 7000ஆயிரம் ரூபா வாழ்க்கைப்படியையும் தற்காலிக பணியாளர்கள் என்ற அடிப்படையில் 3வருடங்களாக பெற்று வருகின்றனர். எனினும் மூன்று வருட முடிவில் நிரந்தரநியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் அதன்படியே இன்று நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் நியமனம் வ…

  4. யாருக்கு ஆதரவு? - ரிஷாத் பதியுதீன் கட்சி இன்று முடிவு! [Monday 2014-12-22 09:00] ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இன்று முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் அறிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட் கருத்து வெளியிடுகையில், "நாம் இந்த நிமிடம் வரையில் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை. நேற்று எமது கட்சியின் உயர்பீடம் கூடியிருந்தது. இதன் போது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் நாம் கலந்துரையாடினோம். அத்துடன் எமது கட்சியின் ஏனைய பிரதிநிதிகளின் கருத்துக்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியிரு…

  5. பொய்யான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றதாம் எதிரணி! – குற்றம்சாட்டுகிறது அரசதரப்பு [Monday 2014-12-22 09:00] பொது எதிரணியினர் ஆதாரமற்ற பொய்யான கருத்துக்கணிப்பு முடிவுகளைக் கூறி மக்களை ஏமாற்றி வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐ.ம.சு.மு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், போலிப் பிரசாரங்கள் மூலமே தமது தேர்தல் நடவடிக்கைகளை அவர்கள் முன்கொண்டு செல்கின்றனர். பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஊடகங்களை மாத்திரம் வைத்துக் கொண்டே பிரசாரங்களை முன்னெடுக்கிறார். சேறுபூசும் வகையிலான பிரசாரங்க ளும், பொய்யான உறுதிமொழிகளை வழங்கும் பிரசாரங்களுமே அவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.…

  6. கொல்லைப்புறக் கோழிக்குஞ்சுகளை 100 பயனாளிகளுக்கு வழங்கினார் அமைச்சர் ஐங்கரநேசன்! [Monday 2014-12-22 09:00] வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று மாங்குளத்தில் கோழிக்குஞ்சுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களது குடும்ப வருமானத்தை உயர்த்தும் நோக்கிலும், போசாக்கு நிறைந்த முட்டையை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளும் நோக்குடனுமே இந்தத் திட்ட…

  7. சீன எதிர்ப்புக் கொள்கையில் இலங்கையின் எதிரணி! – த ஹிந்து கூறுகிறது [Monday 2014-12-22 09:00] இலங்கையின் எதிரணித் தரப்பு சீனாவுக்கு எதிரான கொள்கையை கடைபிடிப்பதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.அண்மையில் வர்த்தகத் துறையினரை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால ஜனாதிபதியாக பதவியேற்றதும் காலிமுகத்திடல் கடலை நிரப்பி சீன நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு போட் சிட்டி திட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த திட்டம் 1.34 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் 580 ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தநிலையில் குறித்த திட்டத்தினால் இலங்கையின் கரையோர கடல் வளம் பாரிய பாதிப்புக்கு உள்ளாகும் என்ற…

  8. பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தலைமையில் மற்றுமொரு இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அவரது புலனாய்வு ஆலோசகர் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண, இராணுவத் தளபதி லெப்பிடினட் ஜெனரல் தயா ரத்நாயக்க, கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் இணைந்து இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு கட்டமாக கொழும்பு முகத்துவாரம் ரொக் ஹவுஸ் இராணுவ முகாமுக்கு பெருமளவில் மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கடந்த 17 ம் திகதி இரவில் இருந்து இவ்வாறு படையினர் குறித்த முகாமுக்கு வந்த வண்ண உள்ளனர். இராணுவத்தினரின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. முகத…

  9. ஜெனிவாவில் மார்ச் 25ம் திகதி இலங்கை குறித்த விவாதம்! [Monday 2014-12-22 09:00] இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை, எதிர்வரும் மார்ச் 25ம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த மார்ச் மாத அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 28வது முறையான அமர்வு எதிர்வரும் மார்ச் 2முதல் 27ஆம் திகதி வரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இதன்போது இலங்கையின் விவகாரம் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது. 2104ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி “இலங்கையின் நல்லிணக்கத்தையும்; பொறுப்புக்கூறலையும் மேம்படுத்தல்” என்ற அடிப்படையில் சர்வதேச விசாரணையை நடத்துமாறு …

  10. பசிலின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்த மேர்வின் சில்வா பதவியில் இருந்து தூக்கப்பட்டார்! [Monday 2014-12-22 09:00] களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து அமைச்சர் மேர்வின் சில்வா விலகிக் கொண்டுள்ளார். கிரிபத்கொட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொகுதி அமைப்பாளர் பதவியை துறக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்னிடம் கோரினார். இந்தக் கோரிக்கைக்கு அமையவே தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து விலகிக் கொள்கின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் பசில் ராஜபக்ச களனி தேர்தல் தொகுதியில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் தொடர்பில் விதித்த நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் கூறி…

  11. மகிந்தவைத் தோற்கடியுங்கள்! – சூசகமாக கோருகிறார் அரியநேத்திரன் எம்.பி [Monday 2014-12-22 09:00] தபால் மூலமாக வாக்களிக்கும் அரச ஊழியர்கள் அனைவரும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார். அம்பிளாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். வடகிழக்கில் வாழும் நாம் கடந்த 65 வருடங்களாக சுதந்திரம் அற்றவர்களாக, அரசியல்தீர்வு இல்லாதவர்களாக அதற்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆயுதப்போர் கடந்த 2009 மௌனிக்கப்பட்டு ஐந்தரை வருடம் கடந்த நிலையிலும் நிம்மதியாக நடமாட முடியாமலும் இறந்த உறவுகளுக்காக, ஒரு தீபம் கூடஏற்ற முடியாமலும் இராணுவ அடக்குமுறைக்குள்…

  12. கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் பெருவெள்ளம்! – இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு. [Monday 2014-12-22 10:00] கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,919 குடும்பங்களைச் சேர்ந்த 9,942 பேரும்; திருகோணமலை மாவட்டத்தில் 1,122 குடும்பங்களைச் சேர்ந்த 3,980 இடம்பெயர்ந்தனர். வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 214 கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்து 64,984 குடும்பங்களைச் சேர்ந்த 241,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இடம்பெயர்ந்தவர்கள் பாடசாலைகள், பொதுக்கட்டடங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கி…

  13. சீனாவுடனான நட்புறவு தொடரும் – ரணில், மைத்திரி திடீர் குத்துக்கரணம் DEC 21, 2014 | 13:19by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் தாம் ஆட்சிக்கு வந்தால், சீனாவை ஓரம்கட்டி விட்டு, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவோம் என்று கூறிய, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்தப் போவதாக, சீன செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியில், குத்துக்கரணம் அடித்துள்ளார். சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்துள்ள செவ்வியில், சிறிலங்காவின் உண்மையான நண்பன் சீனா என்றும் தாம் ஆட்சிக்கு வந்தால் சீனாவுடனான உறவுகள் தொடர்ந்து பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். “சிறிலங்காவின் பிரதான அபிவிருத்திப் பங்காளராக சீனாவே உள்ளது. சீன ம…

  14. முஸ்லிம் காங்கிரசுக்குள் குழப்பம் – ஒப்புக்கொண்டார் ஹக்கீம் DEC 22, 2014 | 0:26 by மலையகச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக தமது கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒப்புக்கொண்டுள்ளார். கண்டியில் நேற்றுமாலை நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், “அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக, கட்சிக்குள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு இலகுவான விடயம் அல்ல. இதுபோன்ற நேரங்களில் எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்கொள்கின்ற சவால் தான். பிளவுகள் ஏற்படும். பலர் கட்சி தாவுவர். இதுபோன்றவற்றை நாம் தவிர்க்க வே…

  15. புலம்பெயர் தமிழர்களின் பணம் புரல்கிறது என்கிறார் விமல்:- எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் குறித்து, அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார். மைத்திரிபாலவின் புதல்வர் தஹாம் சிறிசேன தனது காதலியின் பெற்றோருக்கு பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளதாக, அமைச்சர் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். இன்றைய தினம் மொனராகல மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுவிஸ் பிராங்குகளும் அமெரிக்க டொலர்களும் தஹாம் சிறிசேன தனது காதலியின் பெற்றோருக்கு அண்மையில் வழங்கியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்களை தஹாம் சிறிசேனவ…

  16. ஐக்­கிய தேசிய கட்­சியின் மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­ன­ணியின் செய­லா­ள­ரு­மான எஸ். சதா­சிவம் எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு வழங்க தீர்­மா­னித்­துள்ளார்.அத்­துடன் அவ­ரது இலங்கை தொழி­லாளர் ஐக்­கிய முன்­ன­ணியும் ஜனா­தி­ப­தியின் வெற்­றிக்கு முழு­மை­யான அர்ப்­ப­ணிப்பை வழங்­கு­மெ­னவும் எஸ்.சதா­சிவம் தெரி­வித்தார். நேற்று கொழும்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பினால் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்ட எஸ்.சதா­சிவம் தனது இந்த முடிவை அறி­வித்தார். விசே­ட­மாக நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­கின்­ற­மையே பொது எதி­ர­ணி­யுடன் முரண்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­த…

  17. வவுனியா பாவற்குளம் வான் கதவுகள் இன்று திறக்கப்படவுள்ளதால் குளத்தின் கீழ் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்கும்படி வவுனியா அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்படி, கிறிஸ்தவகுளம், கந்தசாமிநகர், மீடியா பார்ம், மெனிக் பார்ம், யூனிற் நான்கு, பாவற்குளம் ஆகிய கிராமங்களுக்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி மக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில், இன்று குளத்தின் வான்கதவுகள் இரண்டு திறக்கப்படவுள்ளதால் மக்களை அவதானத்துடன் இருக்கும்படி மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. - http://www.malarum.com/article/tam/2014/12/21/7593/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A…

  18. எஸ்.சசிக்குமார்,முறாசில் வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப் பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேருவில பிரதேசத்திலுள்ள 'வெள்ளம் தாங்கி' என்னும் பகுதியிலேயே பாதுகாப்பு அணை நேற்றிரவு அல்லது இன்று அதிகாலைவேளையில் உடைப்பெடுத்துள்ளதாக தெரிய வருகிறது. 1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்பு மூதூர் மற்றும் சேருவில பிரதேசத்தின் சில பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பாரிய அணையொன்று சுமார் 60 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பாதுகாப்பு அணையே தற்போது உடைப்பெடுத்துள்ளது. இதனால் கங்குவேலி, படுகாடு. நிலாபொளை பிரதேச வயல் நிலங்கள்முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாவலி கங்கையில் இருந்து வர…

  19. அந்தரிக்கும் ஐந்தரை இலட்சம் அஞ்சல் வாக்காளர்கள் DEC 22, 2014by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் அதிபர் தேர்தல் வரலாற்றில், பிரதான வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதிகளை அறிந்து கொள்ளாமலேயே, வாக்களிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு உள்ளாகியுள்ளனர் சுமார் ஐந்தரை இலட்சம் வாக்காளர்கள். சிறிலங்கா அதிபர் தேர்தலின் ஒரு கட்டமாக, தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள அரச பணியாளர்கள் மற்றும் சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், நாளை முதல் அஞ்சல் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர். நாளை 23 மற்றும் 24ம் நாள்களில், அரச பணியகங்கள் மற்றும், படைமுகாம்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களிலும் அஞ்சல் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டம் தவிர்ந்த ஏனை…

  20. மகிந்த வெற்றிபெற்றால் பொருளாதாரத் தடை விதிக்கும் ஐ.நா – மிரட்டுகிறது எதிரணி DEC 22, 2014 | 0:18 by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்கு ஜெனிவாவில் எழுந்துள்ள நெருக்கடியை, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். “எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி, ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எழுப்பப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவும். மகிந்த ராஜபக்ச மூன்றாவது தடவையும் அதிபராகத் தெரிவு செய்யப்படுவது சிறிலங்காவின் நலன்களுக்கு விரோதமாக அமையும். தேர்தலில் ராஜபக்ச மீண்டும் வெற்றி பெற…

  21. மகிந்தவை பதவியில் இருந்து அகற்றும் மேற்குலக சூழ்ச்சிக்கு மைத்திரியும் உடந்தை DEC 22, 2014 | 0:06 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தற்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து அகற்றும் அனைத்துலக சூழ்ச்சியில் மைத்திரிபால சிறிசேன தரப்பும் தொடர்புபட்டுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குற்றம்சாட்டியுள்ளார். “சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறை அதிபராகத் தெரிவு செய்யப்படாமல், போனால் தான், ஐ.நாவின் தண்டனையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று ஐதேக கூறியுள்ளது. கொழும்பில் உள்ள மேற்குலக தூதரகங்களுடன் ஆலோசனை நடத்தாமல், எதிரணியினால் இத்தகையதொரு அறிவிப்பை வெளியிட முடியாது. தற்போது ஐ.நாவினால் முன்னெடுக்கப்படும் சிறிலங்கா…

  22. ஜாதிக ஹெல உறுமயவுடன் அரசை விட்டு எதிரணியில் இணைந்த போதும் ஹிருனிகா பிரேமசந்திர எதிரணியில் இணைந்த நிலையில் மீண்டும் அரசுடன் இணைந்து தற்போது புதிய கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கும் உதய கம்மன்பில முதுகெலும்பில்லாத மனிதன் என தெரிவித்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர, இவரை ஒரு ஆண்மகன் என்று சொல்லவும் வெட்கமாக இருக்கிறது என அக்குரணையில் வைத்து தெரிவித்துள்ளார். கொழும்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தான் முதலிடத்தைப் பெற்றிருக்காவிட்டால் கம்மன்பிலவால் கொழும்பு மக்கள் துன்பங்களுக்குள்ளாகியிருப்பார்கள் எனவும் தெரிவித்த அவர் தேர்தலுக்கு 100 ரூபாய் விகிதம் பிச்சையெடுத்ததும் வெட்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://a…

  23. மைத்திரிபால கூறுகின்ற விசாரணை என்பது எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கை! ஆனந்தி சசிதரன் மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற உள்ளூர் சுதந்திர விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பதும், எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கையுமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எல்.எல்.ஆர்.சி. ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற உள்ளூர் பொறிமுறையிலான விசாரணைகள் என்பவற்றில் எல்லாம் நம்பிக்கை இழந்த நிலையிலேயே சர்வதேச விசாரணையை நாங்கள் நாடியிருக்கின்றோம். இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற உள்ளூர் சுதந்திர விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பதும், எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கையுமாகும் என தமிழ் …

  24. முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை நாம் பாதுகாப்போம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், காத்தான்குடிப் பிரதேசம் எனக்கு புதிய இடமல்ல. நான் இங்கு பல தடவைகள் வந்துள்ளேன். உங்கள் பள்ளிவாயலுக்கு அத்திபாரம் போடுவதற்கு நான் இங்கு வந்தேன். அது நான் செய்த பாக்கியமாகும். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் எங்கள் வீட்டுப் பிள்ளை. இந்த தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப என்னை நீங்கள் பூரணமாக நம்பலாம். காத்தான்குடியில் நான் செய்த அனைத்து அபிவிருத்தி வேலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். பல கோடி ரூபா …

  25. -டி.ஷங்கீதன் 'நான் என்றுமே கட்சியின் முடிவுக்கு விரோதமாக செயற்படமாட்டேன். இது எனது தனிப்பட்ட முடிவு அல்ல. பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பது கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து எடுத்த முடிவு. அதுதான் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) ஹட்டன் கிருஷ்ண பவான் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டும் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'நான் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டவன் அல்ல. அதனால்தான அரசாங்கத்தில் இருந்து அமைச்சு பதவியையும் தூக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.