ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத்திற்கான முன்னுதாரணம் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேகி பாராட்டியுள்ளார். இலங்கையின் சமீபத்தைய ஜனாதிபதி தேர்தல் அமைதியான ஜனநாயக ரீதியிலான அதிகார மாற்றத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயக கொள்கைகளிற்கு ஊக்கமளிக்கும் அர்ப்பணிப்பிற்காக இலங்கையின் அரசியல்வாதிகள் பொதுமக்களிற்கு ஜப்பான் தூதுவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சமீபத்தைய ஜனாதிபதி தேர்தல் உண்மையாகவே ஊக்கமளிக்கும் ஒன்று, ஜனநாயக ரீதியிலான அமைதியான அதிகார மாற்றத்திற்காக மக்களும் அரசியல்வாதிகளும் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கும் ஒன்று, என தெரிவித்துள்ள ஜப்பான் தூதுவர் நீங்க…
-
-
- 3 replies
- 222 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் உள்ள வட்டுவாகல் பாலம் மற்றும் புளியம்பக்கனை பாலம் ஆகிய இரு பாலங்களும் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாது ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான யுத்தம், 2004 ஆம் ஆண்டுக்கான ஆழிப்பேரலை அனர்த்தம் என்பவற்றால் கடுமையாக சேதத்துக்கு உள்ளாகியது. இந்த பாலத்தின் அவசியம் தற்போது குறித்த பாலத்தில் சிறுசிறு திருத்த வேலைகள் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த பாலத்தின் தொடர் பணிகளின் அவசியம் தொடர்பில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முல்…
-
- 0 replies
- 415 views
- 1 follower
-
-
தாம் நாடாளுமன்றத்தில் தேர்தலில் வென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வழமையான சலுகைகளை பெறப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் ரெஹான் ஜயவிக்ரம உறுதியளித்துள்ளார். மொரவக்க மற்றும் தெனியாயவில் நடைபெற்ற கூட்டங்களின் போது, அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அல்லது வாகன அனுமதிப்பத்திரத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், அரசியலில் புதிய முகங்களின் தேவையையும் வலியுறுத்தியுள்ளார். மக்கள் சேவை இந்தநிலையில், தனிப்பட்ட நன்மைகளைப் பெறாமல் மக்களுக்கு சேவை செய்வதில் தாம் உண்மையாக இருப்பதாகவும் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். https://tam…
-
- 0 replies
- 217 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் - வல்லைப் பாலத்தில் அண்மைக் காலங்களாக விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் “எங்கள் உயிர்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளுவோம்“ எனும் முயற்சியில் கோப்பாய் பிரதேச செயலகம் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. காலையிலும் மாலையிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் இருவர் சிவப்புக் கொடியுடன் நின்று அவ்வீதியால் பயணிக்கும் வாகன சாரதிகளிடம் மெதுவாகப் பயணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/196413 பாலத்தின் இருபுறமும் வேகத்தை குறைக்க படத்தில் உள்ளதுபோல மேடுகளை(road bump) அமைக்கலாமே?!
-
-
- 4 replies
- 509 views
- 1 follower
-
-
(எம்.மனோசித்ரா) பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைத்து மீன்பிடித்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 6 மாதங்களுக்கு மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (15) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் விலை மிகவும் பெருமளவில் அதிகரித்தமை காரணமாக மீன்பிடித்துறையில் ஏற்படும் பாதகமான தாக்கத்துக்கு தீர்வு வழங்குவதற்கு கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்ற அமைச்ச…
-
- 0 replies
- 158 views
- 1 follower
-
-
தெற்கின் மாற்றம் என்ற வரையறைக்குள் தமிழ்மக்களின் தேவைகளை அடகுவைக்காமல் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை மனதில் நிறுத்தி வாக்களிக்குமாறு முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடகக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தெற்கில் இன்று அரசியல் மாற்றம் ஒன்று உருவாகியுள்ளது. அந்த மக்கள் மாற்றம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்து அநுரவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். வடகிழக்கிலும் அவ்வாறான ஒரு மாற்றம் வரவேண்டும் என்று பலரும் சிந்திக்கின்றார்கள். அந்த மாற்றத்திற்குள் பலவிடயங்கள் இருக்கிறது. நாடு பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத…
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதை அமைச்சரவை தீர்மானம் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு அந்த அரசாங்கத்தின் காலத்திலும் நீதி கிடைக்கப்போவதில்லை உறுதியாகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவரும், யாழ்.மாவட்ட தலைமை வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்துள்ளது. அது மாற்றதினை ஏற்படுத்தப்போவதாக கூறுகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய மக்கள் அரசாங்கமும் அநீதியை இழைக்கப்போகின்றது என்ப…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
நாடாளுமன்ற தேர்தல்; வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கல் இன்று! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (16) பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களினதும் விருப்பப் பட்டியல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாகவும், விருப்பப்பட்டியல்களை சரிபார்த்து மாவட்ட செயலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளருக்கு செலவிடப்படும் குறைந்தபட்ச தொகை இன்று வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளது. அதேநேரம், பொதுத் தேர்தல் தொடர்பான உத…
-
- 0 replies
- 308 views
-
-
வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும், அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என்பதுடன், பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. மொழி ரீதியான பிரச்சினை அங்கு உள்ளது. அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தாம் விரும்பும் மொழியில் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது. கொழும்பை மையப்படுத்தியுள்ள சில வசதி, வாய்ப்புகள் வடக்கிற்கு செல்வதில்லை. யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதி…
-
-
- 37 replies
- 2.5k views
- 2 followers
-
-
பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட ஐ.ம. ச. வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையும் இது தொடர்பில் தமது இணக்கத்தை வெளிப்படுத்தும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் திங்கட்கிழமை (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது: ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏழு மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் …
-
-
- 17 replies
- 668 views
- 1 follower
-
-
மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் 2ம் இடம் adminOctober 15, 2024 கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா அன்ரோனியோ குபேரக்குமார் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும், மகரகம ஜனாதிபதி கல்லூரியில் 3/8/2024 ல் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்று சாதனையினை படைத்துள்ளாா். இவர் 2018 ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற English Resitation போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமையும் கு…
-
- 0 replies
- 308 views
-
-
கடந்த கால தயக்கங்களை கடந்து பொதுவான இலக்குகளை அடைவதற்கு மனோநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான பங்காளித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் இருநாடுகளினதும் தலைவிதிகள் பின்னிப்பிணைந்தவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற பட்டயக்கணக்காளர்கள் சங்கத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இருநாடுகளையும் பிணைக்கும் பகிரப்பட்ட புவியியல், வரலாறு மற்றும் எதிர்காலம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். நாங்கள் இணைந்து வளரவேண்டும் செழிப்படைய வ…
-
- 1 reply
- 202 views
- 1 follower
-
-
காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினில் நேற்று திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை தீ மூட்டியதுடன், முச்சக்கர வண்டி மற்றும் பட்டா வாகனம் என்பவற்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் வசிக்கும் யுவதிக்கு இளைஞன்…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக இடம்பெற்றுள்ள 58 இலட்சத்து 5 ஆயிரத்து 853 ரூபா நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணை பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர். குறித்த கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகம் 2024 ம் ஆண்டு பெறுப்பேற்றதையடுத்து நிதி தொடர்பாக ஆராய்ந்த போது நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அப்போது சங்கத்தின் பொருளாராக இருந்தவருக்கு எதிராக மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணை பிரிவு பொலிஸாருக்கு புதிய நிர்வாகம் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்த சிக்கன நலன்புரி சங்கத்தில் வைத்தி…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 2 நாள்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மற்றும் எதிர்வரும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடல் சீற்றமாக இருக்கும் மற்றும் சூறைக் காற்று வீசும் என்பதாலும், கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாலும் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக…
-
- 0 replies
- 106 views
- 1 follower
-
-
இலங்கையுடன் இணைந்து மோசடி எதிர்ப்பு சட்டங்களை அமுலாக்குவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆழ்ந்த கரிசனைகளைக் கொண்டுள்ளதாக சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சீனத் தூதரகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சீனப் பிரஜைகள் உட்பட பல வெளிநாட்டு சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்ததாக அண்மையில் வெளியான செய்திகளை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இச்சம்பவங்கள் இரு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், சீனாவின் அபிமானத்தையும் கடுமையாக சேதப்படுத்துகிறது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பையும் பாதிப்பதாகவுள்ளது. சந்தேக நபர்களின் உரிமைகள் மற்றும் …
-
- 0 replies
- 136 views
- 1 follower
-
-
வலுசக்தி அமைச்சில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார். ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையிலும் வலுசக்தித் துறைக்கு முன்னணி இடம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வலுசக்தி அமைச்சு என்பது நிதி வருமானங்களைப் பெறும் அமைச்சு எனவும், அதிக வருமானம் கிடைக்கும் போது முறைகேடுகள் இடம்பெறலாம் என்ற கருத்து சமூகத்தில் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது விருப்பத்தை எதிர்பார்ப்புடன் பயன்படுத்தி யுள்ளதாகவும், அந்த ஆணைக்கு தான் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி …
-
- 0 replies
- 199 views
- 1 follower
-
-
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபவணி இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது. "விழியிலார்க்கு வழிகாட்டுவோம் வெள்ளைப் பிரம்புக்கு மதிப்பளிப்போம்" எனும் தொனிப்பொருளில் இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த நடைபவணி இடம்பெற்றது. யாழ்.வெலிங்டன் சந்தியில் இருந்து ஆரம்பமான நடைபவணி மத்திய பேருந்து நிலையம் வரை முன்னெடுக்கப்பட்டது. பேரணியில், இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தின் உறுப்பினர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/196346
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை, ரக்பி வீரர் வாசிம்தாஜூதீன் மரணம், பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏற்கனவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏழு சம்பவங்களிற்கு அப்பால் கடந்த காலத்தின் அனைத்து குற்றங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்படுபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடந்தகால குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதை அரசாங்கம் ஒருபோதும் தவிர்க்காது. அவ…
-
- 2 replies
- 232 views
- 1 follower
-
-
2024 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை எதிர்வரும் 17.01.2025 இல் முடிவடையவிருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் தவணை மற்றும் 2024 கல்வியாண்டு 24.01.2025 அன்று முடிவடையும். மூன்றாம் தவணைக்கான தேர்வு மற்றும் தேர்ச்சி அறிக்கைகளை மாணவர்களுக்கு வழங்குதல் தொடர்பில் அதிபர்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மூன்றாம் தவணை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தவணை முடிவடையும் 24 ஆம் திகதிக்குள் மூன்றாம் தவணைப் பரீட்சை…
-
- 0 replies
- 239 views
- 1 follower
-
-
பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானவை ஆனால் இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் சர்வதேச நாணயநிதியத்தின் சீர்திருத்தங்களின் பாதையில் செல்லவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் அமெரிக்க இலங்கை வர்த்தக பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. எதிர்காலத்தை கட்டியெழுப்புவது இலகுவான விடயமல்ல. சர்வதேச நாணயநிதியத்தின் ஈஎவ்எவ் திட்டம் பொருளாதார ஆட்சிமுறை சீர்திருத்தங்களையும் ஊழலிற்கு எதிரான போராட்ங்களையும் கோருகின்றது. பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானவை ஆனால் இலங்கை சரியான பாதையில் பய…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் … https://thinakkural.lk/article/310756
-
-
- 6 replies
- 488 views
- 1 follower
-
-
ரணில் விசேட உரை! முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக உரையாற்றுவது இதுவே முதல் தடவையாகும். இதன்போது, நாட்டின் தற்போதைய அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை குறித்து ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வருவதில்லை எனவும் தீர்மானித்துள்ள நிலையில், பொதுத் தேர்தலில் எரிவாயு சில…
-
-
- 7 replies
- 439 views
- 2 followers
-
-
யாழ்ப்பாணம், திருநெல்வேலி பால் தொழிற்சாலை கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி அன்று பரிசோதிக்கப்பட்டது. இதன்போது குறித்த தொழிற்சாலை சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவது அவதானிக்கப்பட்டது. தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகரால் இனங்காணப்பட்ட சுமார் 30ற்கும் மேற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டது. இவ் அறிவித்தல் பால் தொழிற்சாலை தலைவர், முகாமையாளர் மற்றும் பணிப்பாளர் சபையினருக்கு உரிய தெளிவுபடுத்தல்களுடன் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் குறைபாடுகள் நி…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
7 இலட்சத்து 50,000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். திங்கட்கிழமையாகும் போது கடவுச்சீட்டுகள் நாட்டில் இருப்பில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஒன்லைன் கடவுச் சீட்டு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/310747
-
-
- 23 replies
- 16.4k views
- 1 follower
-