Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கையில் கிடைத்த ஆவணப்படம்:- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களோ அல்லது சர்வதேச சக்திகளோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தக் குற்றச்செயல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஜனாதிபதியையோ அல்லது படைவீரர்களையோ நிறுத்த இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். சரியான நல்லிணக்கத் திட்டமொன்று அமுல்படுத்தப்பட உள்ளதாகவும்,அனைத்து இனங்களுக்கு இடையிலும் நல்லுறவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.ne…

  2. அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். போர் இடம்பெற்ற காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவீன், அந்த கட்சியின் மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. http://virakesari.lk/articles/2014/11/28/%E0%AE%90%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF…

  3. பாதுகாப்பு விவகாரங்களில் பிராந்திய வலய நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு அவசியம் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தென் ஆசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய வலய நாடுகளுக்கு நிலவும் புரிந்துணர்வின்மையை களைய வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரியளவிலான குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்களின் ஊடாக பாரியளவில் ஆயுதக் கொள்வனவு உள்ளிட்ட குற்றச் செயல்களில் புலிகள் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்…

  4. இலங்கை உதவியுடன் தமிழகத்தை உளவு பார்த்ததாகவும், இந்திய இறையாண்மை, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் போலி நாணயத்தாள்களைப் புழக்கத்தில் விட்டதாகவும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஜாகீர் உசேன் நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டார். பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான ஜாகீர் உசேனை தேசிய புலனாய்வு பிரிவு பொலிஸார் கடந்த ஆண்டு கைது செய்தனர். மேலும் ஜாகீரின் கூட்டாளிகளான முகமது சலீம், சிவபாலன், ரபீக் ஆகிய 3 பேரையும் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாகீர்உசேன், சிவபாலன், முகமது சலீம் ஆகிய 3பேர் மீதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்கள் மீதான வழக்கு விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் நடைபெற்றது. உளவாளிக…

  5. பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர் 10ல்! பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இதில் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கைச்சாத்திடுவர்.” – இவ்வாறு மஹிந்த அரசிலிருந்து எதிரணியில் இணைந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் ஆட்சிமுறையை உருவாக்குதல்,தேர்தல் முறைகளில் மாற்றம் ஏற்படுத்தல் என்பன உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் அமைச…

  6. புகலிடக்கோரிக்கையாளர்களை பிடித்து இலங்கை கடற்படையிடம் கொடுத்தது இந்தோனேஷிய கடற்படை! இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர் என்றும், படகில் சிறுவர்கள் உள்ளிட்ட 37 பேர் இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிலாபம், மாரவில மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இலங்கைக் கடற்படையினரால் அழைத்துவரப்பட்ட இவர்கள், குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என…

  7. இன்று முள்ளிவாய்க்கல் நினைவு முற்றத்தில் மிகவும் சிறப்பாக நடை பெற்றது மாவீரர் நாள் நிகழ்வு . இவ் நிகழ்விற்கு உலத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழீழத்தில் இருந்தும் மாவீரர்கள் குடுபங்களும் தமிழ் உணர்வாளர்களும் சிறுவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். http://www.pathivu.com/news/35671/57//d,article_full.aspx

  8. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) ஊடாக மெளனிக்க வைத்து, தொடர்ந்தும் அரசாங்க்ததில் தக்கவைத்துக் கொள்ளும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக மூன்று கோப்புக்கள் (File) விசாரணைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதான காவல்துறை பரிசோதகர் இந்துநில் கண்காணிப்பில் காவல்துறை அதிகாரி பண்டார இந்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்துள்ள இந்த மூன்ற…

    • 0 replies
    • 533 views
  9. மீண்டும் அழைத்தார் மகிந்த – வாக்குறுதி வழங்காமல் நழுவினார் மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். நேற்றுப் பிற்பகல் காத்மண்டுவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய போதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேரடியாக விடுத்துள்ள மூன்றாவது அழைப்பு இதுவாகும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவின் போது புதுடெல்லியில் வைத்து முதல் முறையாகவும், நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் போது, இடம்பெற்ற சந்திப்பில் இரண்டாவது தடவையாகவும், சிறிலங்கா அதிபர் அழைப்…

  10. இலங்கையில் தமிழர் போராட்டம் முடிவுறவில்லை என்று கூறும் எழுத்தாளர் தமிழ்கவி, அதன் வடிவங்கள் மாற்றம்பெறலாம் என்கிறார். விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாகவும், போராளியின் தாயாகவும், ஊடகவியலாளராகவும் இறுதி யுத்தம் வரை, யுத்த மண்ணிலேயே இருந்த தமிழ்கவி அவர்கள், தனது போராட்ட அனுபவங்கள் குறித்து நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் ஒரு உண்மையான போராளி என்று கூறும் அவர், அந்த அமைப்பின் உள்ளே நடந்த காட்டிக்கொடுப்புகளே, உள்முரண்பாடுகளே போரின் தோல்விக்கு காரணம் என்று கூறுகிறார். விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் இறந்துவிட்டதாகக் கூறும் அவர், பிரபாகரன் இறக்கவில்லை என்று கூறுபவர்களை கடுமையாக விமர்சிக்கிறார். அதேவேளை, தற்போதைய நிலையி…

  11. கடும் ராணுவ மற்றும் புலனாய்வாளர்களின் அழுத்தத்திற்கு மத்தியிலும் முல்லைத்தீவில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று மாலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 15 இற்கும் மேற்பட்ட மக்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வு உணர்வு பூர்வமாக,கண்ணீருடன் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மாவீரர் குடும்ப தாய் ஒருவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும். இது பற்றி ரவிகரன் கருத்து தெரிவிக்கையில் இன்றைய நாள் மாவீரர் நாள். தமிழ் இனத்தின் தேசிய வாழ்வுக்காக தமது வாழ்வின் சுகங்களை தியாகம் செய்து இந்த மண்ணில் விதையானவர்களே மாவீரர்கள்..அவர்கள் எங்கள் மக்களின் பிள்ளைகள்.. இந்நாளில் காலத்தால் சாகாத அந்த காவிய நாயகர்களை பூசித்து எம் நி…

  12. யாழ்ப்பாணத்தில் ஓர் இரகசிய இடத்தில் மாவீரர் நாளாகிய இன்று வீரப்புதல்வர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றி அமைதிவணக்கம் செலுத்தப்பட்டு சுடர்வணக்கமும் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் குறிப்பிட்டு பெயர் சொல்ல முடியாதவர்களும் மக்களும் கலந்துகொண்டுள்ளனர். http://www.pathivu.com/news/35667/57//d,article_full.aspx

  13. இலங்கையை உன்னிப்பாக கண்காணிக்கக் கோருகிறது மன்னிப்புச் சபை! இலங்கையில் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால் வன்முறைகள் வெடிக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ள பிரித்தானியாவை தளமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை, இதனால் இலங்கையை ஐக்கிய நாடுகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற சிறுபான்மை விவகாரங்களுக்கான அமர்வில் அறிக்கையொன்றை தாக்கல்செய்த நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இலங்கையில்; தேர்தல் காலங்களில் வன்முறைகள் தீவிரமடைவது வழமையானது என தெரிவித்துள்ள மன்னிப்புச் சபை, சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தேர்தலை அடிப்பட…

  14. தமிழீழத்தின் யாழ் பல்கலைக்கழகத்தில் சற்றுமுன்னால் மாவீரர் நாள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. காலையில் இருந்து சிங்கள ராணுவப் படையினர் குவிக்கப்பட்ட நிலையில் பாரிய கண்காணிப்பின் மத்தியில்,ஒவ்வொருவராக சோதனையிடப்பட்டே வளாகத்தில் அனுமதிக்கப்பட்டபோதும்,குறித்த நேரத்தில் மாணவர் கூடும் அறையில் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கூடி சுடரேற்றிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். சுதந்திர தாகம் தணியாது. ஆயுதம் கொண்டு எம்மை அடக்கவும் முடியாது.

  15. மரணித்தவர்கள் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே – பொ.ஐங்கரநேசன்! எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த ,இடங்களில் ,இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று மரங்களை நாட்டுகின்றோம். மரணித்தவர்களின் நினைவாக நடப்படும் மரங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயிருள்ள நினைவாலயமே என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வரணியில் ,ன்று புதன்கிழமை (27.11.2014) நடைபெற்ற மரநடுகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் …

  16. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்தது. ஆனால், தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் யாழ்.நகர் பகுதியில் ஊடகவியலாளர்களை நேரில் சந்தித்த அனந்தி சசிதரன், தன்னை கைது செய்ததாக வெளியான செய்தி உண்மையில்லை என மறுத்தார். நேற்று முன்தினம் தொடக்கம் தன்னுடைய வீடு மற்றும் அலுவலகம் தொடர்ச்சியான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் தன்னுடைய நடமாட்டம் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் தன்னை கைது செய்வதற்கு எவ்விதமான காரணங்களும் அரசாங்கத்திடம் இருக்க முடியாது என அவர் கூறியதுடன், தன்னை கைது செய்…

  17. யாழ்.குடாநாட்டில் தொடரும் கனமழையினால் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளதுடன் மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகியிருக்கின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியான உதவிகளை வழங்க மாவட்டச் செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.குடாநாட்டில் நேற்று மாலை தொடக்கம் இன்றைய தினம் பிற்பகல் வரையில் கனமழை பெய்துள்ளது. இதனால் நாவாந்துறை, சூரியவெளி அரியாலையின் சில பகுதிகள் என தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் மக்களின் குடிமனைகளுக்குள் புகுந்திருக்கும் நிலையில் சுமார் 200ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயரும் நிலையில் இருப்பதாக தெரியவருகின்றது. குறிப்பாக நாவாந்துறை, சூரியவெளி பகுதிகளில் மக்களின் குடியிருப்புக்களுக்குள்…

  18. இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறினேன். நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கையைப் பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தை வென்றெடுப்பேன்.” – இவ்வாறு பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “ஜனாதிபதி மஹிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ, பண பலமோ என்னிடம் இல்லை. மக்களின் பலத்தை நம்பியே களத்தில் குதித்துள்ளேன். மக்கள் என்னை கைவிடவேண்டாம்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார். பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் மாவட்ட , மாகாண அமைப்பாளர்களை சந்தித்திருந்தார்.…

  19. அரசாங்கத்தின் பற்களை வ்வொன்றாக கழற்றி எடுப்போம் : ராஜித:- தனது புல­னாய்வு பிரி­வினர் சிறந்­த­வர்கள் என மார் தட்டும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பொது வேட்­பாளர் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போய்­விட்­டது. தனது போட்­டி­யா­ளரை தன்­னு­ட­னேயே வைத்­திருந்துள்ளார் என குறிப்­பிட்ட ராஜித சேனா­ரத்ன, அர­சாங்­கத்தின் மொத்த பற்­க­ளையும் ஒன்­றாக கழற்றாது ஒன்­றொன்­றாக கழற்றி எடுப்போம். மஹிந்­தவின் தூக்­கத்தை கெடுப்போம் எனவும் குறிப்­பிட்டார். பொது எதி­ர­ணி­யினர் நேற்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் மாகாண மாவட்ட உறுப்­பி­னர்­களை சந்­தித்த போது அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்; நாங்கள் அரசில் இருந்து வெளி­யே­றுவோம் என குறிப்­பிட்டோ…

  20. -ஜோசப் அன்டன் ஜோர்ஜ் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ அடகு நிலையங்களில் நகைகளை அடகுவைத்த 2,379பேர் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்ற நிலையில், நகைகளின் உரிமையாளர்கள் என அடையாளம் காணப்பட்ட 1,960பேரின் நகைகள், எதிர்வரும் டிசெம்பர் 4ஆம் திகதி ஒப்படைக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கொழும்பில் வைத்து, அந்நகைகளின் உரிமையாளர்களிடம் அவை கையளிக்கப்படவுள்ளன. இதற்காக, நகை உரிமையாளர்களை கொழும்புக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கா, நேற்று கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்தார். அடையாளம் காணப்படாத நிலையில் 2,379 பேரின் நகைகள் இராணுவத்தினர் வசம் உள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் தொடர்பில்…

  21. -ஜோசப் அன்டன் ஜோர்ஜ் தமிமீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாவதற்கோ அல்லது அவர்களின் செயற்பாடுகளை மீண்டும் மேற்கொள்ளதற்கோ ஒருபோதும் இடமில்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இராணுவ தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் உருவாக இடமளிக்க மாட்டோம். சர்வதேச ரீதியில் சில அமைப்பினர் இணைந்து இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகவோ அல்லது செயற்படவோ முயற்சி செய்தால் நாட்டின் சட்டம் மற்றும் நீதி மு…

  22. -க.ஆ.கோகிலவாணி யுத்தக் காலத்தில் கைதுசெய்யப்பட்ட மலையக இளைஞர் யுவதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்தக் காலத்தில் கைதுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளில் மலையக இளைஞர் யுவதிகளும் உள்ளடங்குகின்றனர். இவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்களின் விடுதலை விடயம் தாமதமாகி வருகிறது. கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோதும் இவ்விடயம் தொடர்பில் …

  23. யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. குறித்த இணையத்தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நேற்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த இணையத்தளம் செயலிழந்து போயுள்ளமையானது பிரபாகரனின் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவித்தமையால் அரசாங்கத்தினால் முடக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக யாழ். மாநகரசபையுடன் ஒன்லைன் உதயன் தொடர்பு கொண்டு கேட்டபோது :- குறித்த இணையத்தளம் மாநகரசபையின் முன்னால் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா பதவியில் இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சென்ற வருடம் இனந்தெரியாத நபர்கள் இணையத்தில் ஊடுருவி பிரபாகரனின…

  24. யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதயப்பெரேரா தீடீர் இடம்மாற்றத்தையடுத்து புதிய கட்டளைத் தளபதியாக ஜெகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கட்டளைத் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக கடந்த தை மாதம் பொறுப்பேற்ற உதயப்பெரேரா நேற்றிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கொழும்பு இராணுவ தலைமையகத்திற்கு திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய இடத்திற்கு ஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஜெகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் முதலாம் திகதி பதவியேற்பார் எனவும் மாவட்ட கட்டளைத் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. http://onlineuthayan.com/News_More.php?id=550423678627431306

  25. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் தமிழர் வாழும் தேசம் எங்கும் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு முழுவதும் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போர்க்காலங்கள் போல் வீதிகள் ஒழுங்களைகள் எங்கும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டு வீதிகளில் செல்வோர் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த ஒருவார காலமாக குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகம், நல்லூர், யாழ்.போதனாவைத்தியசாலை போன்ற முக்கிய இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை முதல் குறித்த பகுதிகளில் அதிகளவு இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். யாழில் உள்ள ஆலயங்களுக்கு சென்ற இராணுவத்தினர் ஆலயங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.