Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இது வரலாற்று நடவடிக்கை... அரசியல் பயணத்தில் மீண்டும் இணைந்து கொண்டதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்... மஹிந்தவை நியமித்தமைக்காக என்னை பலர் எதிர்த்தனர்... மஹிந்தவை நியமித்த 6 மாதத்தில் என்னை துரத்திவிட்டார்... எனது மௌனமே கட்சியை நிலைகுலையச் செய்தது... 9 வருடங்கள் காத்திருந்தேன்... அதிகாரத்திலுள்ள தலைவர், பொறுக்கமுடியாதளவு கொடுமைகளைச் செய்தார்... எனது வரலாற்றுப் பதிவை எழுதி வருகிறேன்... யுத்த வெற்றியைப் பாராட்டுகிறேன்... யுத்தத்தை வென்றவரை சிறையில் அடைத்தனர்... அரச ஊழியர்களின் சம்பளம் உயரவில்லை... வாழ முடியவில்லை என மக்கள் வருந்துகின்றனர்... சட்டம் சீர்குலைந்துள்ளது... மனிதப் படுகொலை, மோசடிகளே ஆட்சியமைக்கின்றன... பொலிஸ் துறை கேவலப்படுத்தப்பட்டுள்ளது... இவை பயங்கரமானவை...…

  2. இலங்கையின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தீர்மானத்திற்கு அமைய சுகாதார அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன, கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பிரதி பௌத்த சாசன அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன உள்ளிட்டவர்களின் பதவிகள் இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளன. சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.பி. திஸாநாயக்க? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- …

  3. தமிழ் சிவில் சமூக அமையம் கடந்த 15ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அமையத்தின் பேச்சாளர் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இந்த தமிழ் சிவில் சமூக அமையமானது இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களையும் இணைக்கும் ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராகவும், அழைப்பாளராக மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப்பும், இணை செயலாளர்களாக பொ.ந.சிங்கம், தியாகராஜன் ராஜன் ஆகியோரும், பேச்சாளர்களாக குமாரவடிவேல் குருபரன், எழில் ராஜன் ஆகியோரும் பொருளாளராக பேராசிரியர் வி.பி.சிவநாதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அடையாளப்படுத்…

  4. ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடித்த பின்னர், புதிதாக அமையும் அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட முக்கிய அமைச்சுகள் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் தலைவர்களுக்டையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. சரத் பொன்சேகாவின் இராணுவ ஜெனரல் பட்டம், ஓய்வூதியம் உட்பட அவருக்கு இருந்த சகல கௌரவங்களையும் ராஜபக்ஷ அரசாங்கம் இரத்துச் செய்துள்ளது. அத்துடன் அவரது குடியுரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்து ஆட்சியமைக்கும் அரசாங்கம் 72 மணிநேரத்திற்குள் பொன்சேகா இழந்த சகலவற்றையும் அவருக்கு வழங்கும் என அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் க…

  5. ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி முதல் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். ஜே.வி.பி கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் 13ம் திகதி புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கு…

  6. மைத்திரிபால - ஜனாதிபதி அவசர சந்திப்பு? வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014 10:18 ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவுக்கும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், அலரி மாளிகையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்று வருவதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் மைத்திரிபால தலைமையில், பத்தரமுல்ல பிரதேசத்தில் நிகழ்வொன்று ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அந்நிகழ்வில் கலந்துகொள்ளாத அமைச்சர், ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஈடுபட்டு வருவதாக மேற்படி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/134204-2014-11-21-04-49-17.html

    • 2 replies
    • 528 views
  7. பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவான, 'விஸ்வ ஹிந்து பரிஷத்' புதுடில்லியில் நடத்தும் மிகப்பெரிய சர்வதேச மாநாடு ஒன்றின் அரசியல் அமர்வு ஒன்றுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமை வகிக்கவுள்ளார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் அந்த அமர்வில் விசேட உரையாற்றவுள்ளார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கீழ் இயங்கும் உலக இந்து காங்கிரஸ் இன்று தொடக்கம், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை புதுடில்லி அசோக் ஹோட்டலில் சர்வதேச இந்து மாநாட்டுத் தொடர் ஒன்றை நடத்தவுள்ளது. ஒரே கூரையின் கீழ், ஒரே சமயத்தில் ஏழு மாநாடுகள், 45 அமர்வுகளாக நடைபெறும். உலகெங்கும் இருந்தும், இந்தியாவில் இருந்தும் ஆயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமான பேராளர்கள் இந்த மாநாடுகளில் பங்குபற்றுகின்…

  8. எதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி என்றும் அவர் கூறினார். நாட்டின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில்... ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது அபாயமானது... சட்டம் சீர்குழைந்துள்ளது... யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் சென்றது... அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்... 2005இல் ஜனாதிபதி பதவிக்கு வந்தார்... ஒரு தசாப்தத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் யுத்தம் செய்ததில் முழு நாடே கடனாளியாகியுள்ளது... 2004ஆம் ஆண்டில் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தது... 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை…

  9. சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதி தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதி தூதுவர் மற்றும், ஐ.நா பாதுகாப்புச் சபைக்கான பிரதித் தூதுவர் பதவிக்கு, மிச்சேல் ஜே சிசனின் பெயரை அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஜூலை மாதம் முன்மொழிந்திருந்தார். இந்தநிலையில், அமெரிக்க செனட் வெளிவவிவகாரக் குழு அவரது நியமனத்துக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இதையடுத்து, மிச்சேல் ஜே சிசன் விரைவில் புதிய பதவியைப் பொறுப்பேற்பார் என்று தெரியவருகிறது. 2012ம் ஆண்டு முன்னர் சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராகப் பொறுப்பேற்ற மிச்சேல் ஜே சிசன், சிறிலங்கா அரசாங்கத்துடன் கடும் போக்கை கடைப்பிடித்து வந்தவர். இதனால் அவ்வப்போது சிறிலங்கா…

  10. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 7.30 மணியளவில் அதிபர் செயலகத்தில் இந்த அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளும்கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அவசர கூட்டத்தில் தவறாமல் பங்கு கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அழைப்பு எல்லா அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்குவார் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ள…

  11. யாழ்ப்பாணம், சாவகச்சேரி கல்வயல் பகுதியில் 15 வயது பாடசாலை மாணவியுடன் உல்லாசமாக இருந்த 60 வயது வயோதிபர் ஒருவரை புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் மாணவி, பாடசாலை சீருடையுடன் வயோதிபருடன் பாழடைந்த வீடொன்றில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை அவதானித்த அப்பகுதி மக்கள், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து, அவ்விடத்துக்குச் சென்ற, மாணவியை மீட்டதுடன் முதியவரை கைது செய்ததாக பொலிஸார் கூறினர். அத்துடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினார்கள். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/1339…

    • 20 replies
    • 2k views
  12. எமது இனத்தின் விடுதலைக்காக மாவீரர்களின் ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் தேசிய மாவீரர் நாளில் அனைத்து மக்களும் ஒன்று திரண்டு வணக்கம் செலுத்துவோம் . எமது மாவீரர்கள் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் தம் உயிருள்ளவரை போராடினார்கள். உலகின் பலம் பொருந்திய சக்திகள் யாவும் ஒன்று திரண்டு எதிரிக்குப்பலமாக நின்ற போதும் அஞ்சாது போராடினார்கள். உலகின் எப்பாகத்திலும் நிகழ்ந்திராத ஆச்சரியப்படத்தக்க வீரம்செறிந்த செயற்பாடுகளை அவர்கள் புரிந்தார்கள். இருப்பினும் அவர்கள் தமக்கென எதையும் வேண்டி நிற்கவில்லை. ஏன்? தமக்கென ஒரு புதை குழியைக் கூடத் தேடாதவர்களும் தம்முகம் காட்டாது மறைந்து போனவர்கள். அந்த மாவீரர்களின் மகத்தான தியாகங்களை போற்றி வணங்க ஒவ…

  13. எதிரணி பொது வேட்பாளராக போட்டியிடப்போவதாக சர்ச்சைக்குரிய வகையில் கூறப்பட்டுவருகின்ற சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நேற்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் பொது வேட்பாளர் விவகாரம் குறித்தும் சந்திரிகா பண்டாரநாயக்கவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்துரையாடியுள்ளதாக எதிரணி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை இன்றைய தினம் ஆளும் கட்சியின் சில உறுப்பினர்களுடன் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில தினங்களாகவே அமைச்சர…

    • 2 replies
    • 2.5k views
  14. எதிர்காலத்தில் என்னை நாட்டுக்காக அர்ப்பணித்து சேவையாற்றவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சினால் பத்தரமுல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சார் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஐந்து வருடங்கள் சுகாதார அமைச்சராக இருந்து சேவையாற்றிவிட்டேன். இனி என்னை நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து செயலாற்றவுள்ளேன் என தெரிவித்தார். http://virakesari.lk/articles/2014/11/21/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B…

  15. நேற்று 69வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பாரதீய ஜனதாக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஜே. அக்பர் , ஜனாதிபதியின் பிறந்த நாளுக்கான வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருப்பதாக லங்காபுவத் தெரிவித்துள்ளது. குறித்த வாழ்த்துச் செய்தியில் இலங்கை மக்களுக்கு சுபீட்சமான வாழ்க்கைத் தரத்தை அமைத்துக் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு நீண்ட, ஆயுள் தேகாரோக்கியம் கிடைக்க வாழ்த்துத் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய-இலங்கை உறவுகள் மென்மேலும் வலுப்பட வேண்டும் என்றும் வாழ்த்துச் செய்தியின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=121037&category=TamilNews&la…

    • 9 replies
    • 638 views
  16. புலிகள் கொன்று எரித்தவர்களின் எச்சத்தை தேடுகிறதாம் பொலிஸ் news தமிழீழ விடுதலைப் புலிகளால் கடந்த 10 வருடத்துக்கு முன்னர் சுட்டுக்கொள்ளப்பட்டு எரிக்கப்பட்டவர்களின் எச்சங்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வாளர் ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 பேர் இவ்வாறு எரிக்கப்பட்டனர் என்று கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்தத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்கிசை பொலிஸ்நிலைய புலனாய்வுப் பொறுப்பதிகாரியான ஆய்வாளர் பி.ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 அரச படையினர் மற்றும் பொலிஸார, ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் வைத்து, விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவர்களின் சடலங்கள் பழைய ரயர்கள் போட்டு எரிக்கப்பட்டதாக, விடுதலைப் பு…

  17. சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மகிந்தவிற்கு எதிரான அணியில் இணைந்து கொள்வார்கள் என பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் அந்தக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்கா சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

  18. ஏனைய மதங்களை அடக்கியாள்வதற்கும் அரசியலில் ஈடுபடவும் அரச நிர்வாகத்தில் ஈடுபடவும் பௌத்த பிக்குமாருக்கு உரிமை கிடையாது என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுமம் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் மதங்களுக்கு எதிராக ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை ஏற்கின்றேன். ஒரு சில விஷமிகள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அரச அமைப்பில் பௌத்த்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஏனைய மதங்களுக்கும் சுதந்திரமாக செயற்படக்கூடிய உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதர மதங்களை அடக்கியாளும் உரிமை பௌத்தர்களுக்குக் கிடையாது. அதேவேளை துறவிகளாக இருக்கும் பிக்குமார் இன்று துறவறத்தை மறந்து அரசியலில் ஈடுபடுகின்றனர்.…

  19. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு மாறுவார், பொதுவேட்பாளராக களமிறங்குவார் என கதைகப்படுகின்றது. தேர்தல் காலத்தில் இவ்வாறு கதைக்கப்படுவது சகஜமான விடயமே. அவ்வாறு பொதுவேட்பாளராக களமிறங்குவார் எனின் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பார். எனினும் அவர் அரசாங்கத்தை விட்டு விலகமாட்டார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், மைத்திரிபால சிறிசேன அமைச்சர் மைத்திரிபால சிறிசேன எதிரணிக்கு மாறுவார், பொதுவேட்பாளராக களமிறங்குவார் என கதைகப்படுகின்றது. தேர்தல் காலத்தில் இவ்வாறு கதைக்கப்படு…

    • 2 replies
    • 1.2k views
  20. ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை எதிர்கொள்ளவுள்ள எதிரணிகளின் பொதுவேட்பாளர் யார் என்ற முடிவு இன்று எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய பொது எதிரணிகளின் கூட்டத்தில் பொதுவேட்பாளர் தெரிவு முடிந்துவிட்டது. ஆனால் நாளை தான் பொதுவேட்பாளரின் பெயர் வெளியிடப்படும் என ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.thinakkural.lk/article.php?local/tsprnxinoa1206144a3f71a08688kgzub3ab7c4f46f9656608efdb2un5xz#sthash.sE7pHN5r.dpuf

  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதியமைச்சர் பிரபா கணேசனுக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. நாடாளுமன்றில் இடம்பெற்ற தகவல் தொழில் நுட்ப அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தின்போதே இந்தத் தர்க்கம் ஏற்பட்டது. இந்த விவாதத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர் பிரபா கணேசன், தான் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்ததாகவும், அங்கு மட்டக் களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆயிரம் ரூபாவைக்கூட ஒதுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து எழுந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோர் நாம் நிதி ஒதுக்கவில்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா என சவால் விட்…

  22. குளோபல் தமிழ்ச் செய்திகள்:- ராஜபக்ஸ சாம்ராச்சியத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டதா? என்ற கேள்வி தென்னிலங்கையில் பரவத் தொடங்கியிருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. அரசாங்கத்தின் வீழ்ச்சியின் கட்டியங் கூறலை ஜாதிக ஹெலஉறுமயவின் அத்துரலியே ரத்தனதேரர் ஆரம்பித்து வைத்தார்... அவரின் பின்னால் அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக இருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் மேல்மாகாண அமைச்சர் உதயகம்மன்பில பதவிகளையும் சலுகைகளையும் தூக்கி எறிந்து சென்றனர். ஏற்கனவே களுத்துறையில் ஜேவிபியின் முக்கியஸ்தராக இருந்த நந்தன குணத்திலக (விமல் வீரவன்சவுடன் பிரிந்து சென்று அரசாங்கத்துடன் இணைந்திருந்தவர்) தனது நகரசபைத் தலைவர் பதவியைத் துறந்து எதிரணியில் இணைந்தார். ஐக்கிய மக்கள் சுத…

  23. ஐ.நா மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் என்பன இலங்கையில் மேற்கொள்ளும் தலையீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் இன்று ஒன்று இடம்பெற்றது.தேசாபிமான தேசிய முன்னணி (தேசமாமக ஜாதிக பெரமுன) இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. குறித்த அமைப்பின் தலைவர் அகுலுகல்லே ஜினாநந்தே தேரர் தலைமையில் விகாரமஹா தேவி விகாரையின் புத்தர் சிலை அருகே இன்று காலை ஆரம்பமான பேரணி ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் முடிவுற்றது. பெருந்தொகையான பொலிசார் ஊர்வலத்துக்குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தனர். இதன் காரணமாக ஹவ்லொக் வீதி, கொழும்பு கறுவாத்தோட்டப் பகுதிகளில் நண்பகல் வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருந்தது. …

  24. யாழ்ப்பாணம் – மாதகல் திருவடிநிலை மற்றும் கிளிநொச்சி – ஆனையிறவு பகுதிகளில் நில அளவீடுகளை முன்னெடுப்பதற்கு இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. யாழ். மாதல் திருவடிநிலைப் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியாருக்குச் சொந்தமான 27 ஏக்கர் காணியை அளவீடு செய்ய நில அளவை திணைக்கள அதிகாரிகள் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நில அளவை நடவடிக்கையை தடுக்கும் நோக்கில் சிவில் அமைப்புக்கள். அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் மாதகல் திருவடிநிலைப் பகுதியில் பிரசன்னமாகியிருந்தனர். எனினும் நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அளவீடு மேற்கொள்ளவதற்கு அங்கு வருகைத்தரவில்லை எனவும், மறுஅறிவித்தல் வரை நில அளவீடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். …

  25. முல்லைத்தீவு, பனிக்கங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் அங்கு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் செல்வரெத்தினம் (வயது - 49) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார்.நேற்று அதிகாலை மூன்று மணியளவில் இவர் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த போது, டிப்பர் வாகனம் இவரை மோதி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. அவ்வீதியூடாக வந்தவர்கள் குறித்த நபரை மீட்டு மாங்குளம் வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும் சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://seithy.com/breifNews.php?news…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.