ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
குளோபல் தமிழ்ச் செய்தியார் கொழும்பு:- நோர்வேயின் முன்னாள் அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு நிதிவழங்கியமை குறித்து விசாரணைகள் இடம்பெற வேண்டுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். குருணாகலயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்று அவர் இதனை தெரிவித்துள்ளார். நோர்வேயின் முன்னைய அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியதை உறுதிசெய்யக்கூடிய ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி இதன் காரணமாக நோர்வே அரசாங்கம் இது குறித்து விசாரணை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியாது என எரிக்சொல்ஹெய்ம் அரசாங்கத்திடம் தெரிவித்திருந்தார், எனினும் இது பிழையான கருத்து என்பதை அரசாங்கத்தால் நிரூபிக்க முடிந்தது என அவர் குறிப்…
-
- 2 replies
- 1k views
-
-
1995/1996ம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்களால் யாழ். வங்கிகளில் விட்டுச் செல்லப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபை கோரிக்கைவிடுத்துள்ளது. வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு காரணமாக அரச மற்றும் தனியார் வங்கிகளில் இருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்ட மக்களின் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் குறித்தே இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மக்களால் கைவிடப்பட்ட சொத்துக்களை வங்கிகள் தமதாக்கிக் கொள்வது நியாயமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.pathivu.com/…
-
- 1 reply
- 358 views
-
-
சிறிலங்கா தொடர்பில் இன்னர் சிட்டிபிரஸ் இணையத்தளம் வெளியிட்டிருந்த செய்தியை மாற்றி வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் ஊடகவியலாளர் ஒழுங்கமைப்பின் தலைவர் ஜியாம்போலா பியோலி வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் குரல் கொடுத்துவரும் இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளத்தை தடை செய்ய ஜியாம்போலா முயற்சித்து வருவதாக ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்னர்சிட்டிபிரஸ் இணைத்தளம் அவருக்கு, சிறிலங்காவின் வதிவிட பிரதிநிதி பாலித்த கோஹன்னவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த செய்திகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இவ்வாறு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றை மாற்றி அமைக்குமாறு ஜியாம்போலா இன்னர்சிட்டி பிரஸ் செய்தியாளர் மெத்தீவ் ரசலை எச…
-
- 0 replies
- 619 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான நகுலேஸ்வரன் தனது தனிப்பட்ட குடும்ப நலன்களை விடுத்து கிராம மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், ஊர் வளர்ச்சிக்காகவும் பலதரப்பட்ட பணிகளை செய்திருக்கிறார். பொதுப்பணிகளில் கூடியளவு அக்கறை காட்டியிருக்கிறார். சமுக பிரச்சினைகளுக்கு எதிராக அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுடன் தர்க்கத்திலும் ஈடுபட்டிருக்கிறார். என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு கூறியுள்ளார் குறிப்பாக காணி அபகரிப்புகள், வளப்பங்கீடுகளில் பாரபட்சம், குளறுபடி போன்ற விடையங்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். மாவட்ட - பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களில் கூட, அவர் தனது கிராம மக்கள் சார்பாக கலந்துகொண்டு பல்வேறு…
-
- 0 replies
- 337 views
-
-
யாழ் தீவகத்தின் சமகால நிலமைகள் குறித்து மாகாண சபை உறுப்பினர் விந்தனுடன் தீவக பிரதிநிதிகள் சந்திப்பு
-
- 0 replies
- 346 views
-
-
நாட்டைப் பாதுகாக்க இன்னொரு ஆயுதப் போராட்டம் அவசியம் அனுரகுமார திசாநாயக்க நாட்டில் தற்போது இன்னொரு ஆயுதப் போராட்டத்தின் அவசியம் எழுந்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம் நடத்திய காலங்களை விட நாடு இன்று பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு மொத்தமாக தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ராஜபக்ச குடும்பத்தினர் இன்னும் பல நூற்றாண்டுகள் அபிவிருத்தியில் பின்தங்கி இருக்கச் செய்யும் வகையில் நாட்டை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் பொறுப்பு எமக்குள்ளது. 1980 காலப்பகுதிய…
-
- 0 replies
- 324 views
-
-
Published on November 10, 2014-4:58 pm · No Comments கடந்த 29.10.2014 அன்று மிகப் பெரும் செலவில், யாழ்ப்பாணத்தில் ரில்கோ உல்லாச விடுதியில் சிவாஜிலிங்கம் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில், வல்வெட்டித்துறை நெற் கொழு என்ற இடத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 238 பரப்புக் காணியும் தேசியத் தலைவரினதும்,அவரது தந்தையார் வேலுப்பிள்ளையினதும் பூர்வீகச் சொத்துக்கள் என்ற ஒரு பொய்யான தகவலைக் கூறி,அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய அவற்றை அரசுடைமையாக்க வேண்டும் என்ற ஆலோசனையை அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளார். அவருடன்,வல்வெட்டித்துறையின் நகர சபையின் உப தலைவர் கந்தசாமி சதீசும் பங்கெடுத்த இப்பத்திரிகையாளர் மகாநாட்டில்,பெருந்தொகையான ஊடகவியலாளர் களை அழைத்திருந்த போதே,அவர் இவ்வாற…
-
- 0 replies
- 847 views
-
-
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவு இன்னும் மூன்று நாளுக்குள் எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி மாதம் 8ம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானைத்துள்ளதாக தெரியவருகிறது. அதனை கருத்திற் கொண்டே தேர்தல் திணைக்களம் பணிகளை முன்னெடுக்குமாறு உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு தேர்த் திணைக்களத்திலிருந்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இரண்டாவது தவணைக்குரிய பதவிக் காலம் எதிர்வரும் 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி முடிவடைகிறது. ஆனாலும் நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தப்படலாம் என்பதன் அடிப்படையில் எதிர்வரும் 19ம் திகதியுடன் இரண்டாவது தவணைக் கா…
-
- 0 replies
- 299 views
-
-
-எம்.றொசாந்த் 25 வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன நிலையில், தற்போது ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் இருப்பதாக அறியப்பட்ட கே.வைரவநாதன், இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை என வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் இன்று வெள்ளிக்கிழமை (14) தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுகிர்தன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, கடந்த 25 வருடங்களிற்கு முன்னர் காணாமற்போயிருந்த சுன்னாகம் மத்தி தேவாலய வீதியை சேர்;ந்த கே.வைரவநாதன் (தற்போது வயது 53) ஹம்பாந்தோட்டையிலுள்ள தடுப்பு முகாமில் இருப்பதாக அவரது உறவினர்களுக்கு அம்பாந்தோட்டை நீதிமன்றத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை (11) கடிதம் அனுப்பப்பட்டுள்ள…
-
- 0 replies
- 346 views
-
-
அரசாங்கத்தை வீழ்த்தும் பொது எதிரணியில் சிங்கள மக்களை போல் தமிழ், முஸ்லிம் மக்களையும் நம்பியே களமிறங்குகின்றோம். பொதுஎதிரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி எமது அரசாங்கத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படும் எனவும் குறிப்பிட்டது. பொது எதிரணிக் கூட்டிற்காக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா? இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பொது எதிரணி என்ன செய்யப் போகின்றது என்பன தொடர்பில் வினவிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல மேற…
-
- 0 replies
- 710 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள வேட்பாளரை தெரிவு செய்வதற்கான அரசியல் காய்நகர்த்தல்கள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. முன் னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் பெயர்கள் பொது வேட்பாளர் பட்டியலில் தொடர்ந்து பரிசீலனையில் உள்ளன. அந்தவகையில் கருஜயசூரியவே பொது வேட்பாளராக போட்டியிடும் சாத்தியம் அதிகம் உள்ளதாகவும் எனினும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை பொது வேட்பாளராக போட்டியிட வைப்பதற்கான தீவிர முயற்சிகளும் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது…
-
- 0 replies
- 862 views
-
-
மன்னார், வெள்ளங்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோது மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- "மன்னார், வெள்ளங்குளத்தில் கடந்த 12ஆம் திகதி கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது - 40) என்ற முன்னாள் பேராளியான இரு பிள்ளைகளின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டார். அரசிடம் புனர்வாழ்வு பெற்ற இவர், இந்திய அரசின் வீடமைப்புத் திட்டத்தின்கீழ் தெரிவுசெய்யப்பட்டு வீட்டுக்காக கல் அரிந்து கொண்டிருக்கும் போத…
-
- 0 replies
- 713 views
-
-
வலிகாமம் வடக்கு பாதுகாப்பு வலயப்பகுதியில் படைத்தரப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலப்பரப்பினை நிரந்தமாக அரசுடைமையாக்கும் நடவடிக்கைகள் முடிவுக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கு ஏதுவாக குறித்த காணிகள் 2011 ம் ஆண்டின் ஒக்டோபர் மாதமளவில் முழுமையாக நில அளவீடு செய்யப்பட்டுவிட்டதாக அம்பலப்படுத்தியுள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்றக்குழுவின் தலைவர் ச.சஜீவன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் மேலும் இது பற்றி தெரிவிக்கையில் 2011 ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அளவீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நில அளவீட்டு படங்களை 2013 ம் ஆண்டின் மே 06ம் திகதி செய்யப்பட்ட அளவீடுகள் போன்று மாற்றியமைக்க அரச உயர்மட்ட உத்த…
-
- 0 replies
- 622 views
-
-
நாட்டைப் பாதுகாப்பதற்கு ஆயுதம் எடுத்துப் போராட வேண்டிய அவசியம் தற்போது மீண்டும் எழுந்துள்ளது எனத் தெரிவித்திருக்கிறார் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க. ஜே.வி.பி போராளிகளை நினைவுகூரும் கார்த்திகை வீரர்கள் தினம் நேற்று கொழும்பு விகாரமகா தேவி பூங்காவின் திறந்த வெளி அரங்கில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு: ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம் நடத்திய காலங்களை விட நாடு இன்று பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு மொத்தமாக தாரை வார்க்கப்படுகிறது. ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டை இன்னும் பல நூற்றாண்டுகள் அபிவிருத்தியில் பின்தங்கி இருக்கச் செய்யும் வி…
-
- 0 replies
- 414 views
-
-
மன்னாரைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது. 15 நவம்பர் 2014 மன்னார் நீதிமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(14) வழக்கு விசாரனைகளுக்காக சென்று விட்டு வெளியில் வந்த மன்னார் பணங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை வவுனியாவில் இருந்து வருகை தந்த பயங்கரவாத புலனாய்வுத்துறையினர் கைது செய்து வவுனியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவரது மனைவி தெரிவித்தார். மன்னார் பணங்கட்டுக்கோட்டு கிராமத்தைச் சேந்த 5 பிள்ளைகளின் தந்தையான தங்கத்துரை ஜெயின்ஸ் (வயது-38) என்பவரே கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்தார். தனது கணவருக்கு மன்னார் நீதிமன்றத்தில் பிறிதொரு வழக்கு விசாரணை ஒன்று இடம் பெற்று வருகின்றது. குறித்த வழக்கு விசாரணைக்காக அவ…
-
- 0 replies
- 300 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்ட விதத்தில் நடைமுறை ரீதியான தவறுகள் நடந்திருப்பதாக ஐரோப்பிய நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேன்முறையீடு முன்வைத்தால், அது இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும், இலங்கையின் சட்டமா அதிபரோ, இராஜதந்திர துறை அதிகாரிகளோ அந்த வழக்கு விசாரணையில் இ…
-
- 0 replies
- 528 views
-
-
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து இலங்கை அதிபர் ராஜபட்சேவின் சமர்த்தியமான சகுனித்தன நாடகம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழகமீனவர் ஐவருக்கு இலங்கையின் உயர்நீதிமன்றம் மரணதண்டனை விதித்ததை மன்னித்து, ரத்து செய்து, விடுதலை செய்ய உத்தரவிட்டுவிட்டதாக செய்தி வந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. ஆனால் இதில் ஒரு சமர்த்தியமான சகுனித்தன நாடகம் இருப்பதை மக்களுக்கு விளக்க வேண்டியது எங்கள் கடமை எனக் கருதுகின்றேம். இலங்கையை பொறுத்தவரையில் 1976 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக்கூட மரணதண…
-
- 0 replies
- 406 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ இம்முறை மூன்று மில்லியன் மேலதிக வாக்குகளுடன் வெற்றி பெறுவார் என பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் யாரை களமிறக்கினாலும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகூடிய மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 27 ஆயிரம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருந்தார். இந்த மேலதிக ஒரு இலட்சத்து 27 ஆயிரம் வாக்குகள் 2010 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 1.8 மில்லியன் களாக அதிகரித்தது. இம்முறை நடத்தப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதியவர்கள் மூன்று மில்லியன் வாக்குகளால் வெற்றி பெறுவாரென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ள…
-
- 1 reply
- 283 views
-
-
எதிரணியின் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் (அதாவது பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்) அவர் ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தங்கள் எதிரணிக் கட்சிகளிடையே கைச்சாத்திடப்படவுள்ளன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக எதிரணியின் முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சமாதானத்துக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரருடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ள அரசியல் கட்சிகளும் குழுக்களும், இந்த ஒப்பந்தத்தில் அன்றைய தினம் வெவ்வோறு நேரங்களில் …
-
- 4 replies
- 724 views
-
-
மகிந்தவின் படத்தை அறையில் தொங்கவிடாத யாழ். ரயில் நிலைய அதிபருக்கு இடமாற்றம்! [Friday 2014-11-14 09:00] ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவப்படத்தை அலுவலக அறையில் தொங்க விடாததால், யாழ். ரயில் நிலைய பிரதான ரயில்வே அதிபர் நா.தபானந்தனுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகள் கடந்த மாதம் 13ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதிலிருந்து சிறிது காலம் யாழ். ரயில் நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தன் கடமையாற்றி வந்தார். அவருக்கு திடீரென வவுனியாவுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்திற்கு யாழ். ரயில் நிலைய பிரதான ரயில்வே அதிபர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக செயற்படுவ…
-
- 7 replies
- 823 views
-
-
வெள்ளி, நவம்பர் 14, 2014 - 18:03 மணி தமிழீழம் | யேசுதாசன், கொழும்பு சிறீலங்கா அரசாங்கம் விரைவில் போர்குற்றச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படும்!! உலக போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தும் ஐ.நா பிரிவு சிறிலங்கா அரசாங்கம் விரைவில் போர்க்குற்ற சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படும் என்று உலக போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரிவு தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு இந்த விடயத்தை கூறியுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளே தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சிறிலங்காவுக்கு எதிரான விசாரணைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இது போர்க்குற்ற சட்டத்தின் கீழ் எடுக்கப்படவுள்ள நடவட…
-
- 0 replies
- 441 views
-
-
பாப்பரசர் விஜயம்: நிகழ்ச்சி நிரல் வெளியீடு வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014 19:30 பாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் தொடர்பிலான உத்தியோகப்பூர்வமான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நிரலை, வத்திகானும் உறுதிப்படுத்தியுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/133356-2014-11-14-14-01-53.html
-
- 0 replies
- 546 views
-
-
புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு சமூகத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்ட முன்னாள் போராளிகளின் விபரங்கள் வீடு வீடாகச் சென்று மீண்டும் திரட்டப்பட்டு வருவதால் போராளிகள் மத்தியில் அச்ச நிலை ஏற்றபட்டிருக்கின்றது. மன்னார் துப்பாக்கி சூட்டையடுத்து அவர்களது அச்சம் உச்ச நிலையினை அடைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து சரணைடைந்த போராளிகளுக்கு அரசினால் புனர்வாழ்வழிக்கப்பட் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் தொடர்ந்தும் பல தரப்பினர்களினாலும் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் பல தரப்பினர்களினாலும் விபரங்கள் திரட்டப்பட்டு பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் அதே செ…
-
- 0 replies
- 285 views
-
-
பல்கலைக்கழக சூழலில் படைகுவிப்பு மீண்டும் மாணவர்களது கற்றல் செயற்பாடுகளை பாதிப்பதாக யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக பிரதான வாசலில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். மாவீரர் வாரம் நெருங்கும் வேளையில் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இராணுவம் நிலைகொண்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. இது மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல பல்கலைக்கழக சமூகத்திற்கும் பெரும் அச்சநிலையினை உருவாக்கி உள்ளது. பல்கலைக்கழக சூழலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்போதுதான் மாணவர்கள் சுதந்திரமாக கல்விகற்கும் வாய்ப்பு ஏற்படும். அண்மைக் காலங்களாக பல்கலைக்கழகத்தில் எந்தவிதமான குழப்பமான சூழ்நிலையும் நிலவவில்லை. அவ்வாறான ஒருநிலையில் பல்கலைக்கழக பகுதியில் இராணுவம் நிலை …
-
- 0 replies
- 457 views
-
-
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம் தள்ளி சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை ஆபத்தையே எதிர்கொள்ளும். இவ்வாறு எச்சரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நடைபெற்றது. இந்த விவாதத்தில் உரையாற்றும் போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு: இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. இதன்காரணமாக எதிர்காலத்தில் நாடு பெரும் விபரீதங்களையே சந்திக்க நேரிடும். ஆசியாவிலுள்ள எல்லா நாடுகளுடனும் இலங்கை உறவு வைத்துக் கொள்வது அவசிம்தான். எனினும் தொன்று தொட்டு …
-
- 1 reply
- 562 views
-